Site icon வே. மதிமாறன்

தூக்கு ரத்து நிச்சயம் விடுதலையே லட்சியம்

FL26_PROFILE_SATHA_1512111m

தமிழர்கள் நெஞ்சில் நம்பிக்கை விதைத்ததற்கு நன்றி.
தமிழர்கள் கண்ணீர் மல்க, கரம் குவித்த ஆனந்த நன்றி அடுத்த சில மணிகளில்..

காலை 9.30 மணிக்கு face book ல் எழுதியது.

*

ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரின் தூக்கு தண்டனை ரத்து. மகிழ்ச்சி. நன்றி.

3 வரின் விடுதலைக்காக உழைப்போம்.

நீதிபதிகளும் 3 பேர் விடுதலை குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளனர் என்பது இந்த தீர்ப்பைப்போலவே மிக மிக முக்கியமானது.

இன்று 12 மணியளவில்  face book ல் எழுதியது.

Do Anything என்ற இளையராஜாவின் உலகப் புகழ் பெற்ற உன்னத இசை மூலமாக, மூவர் தூக்கு ரத்தான மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.
http://www.tamilv2.com/Download%20SPL%20Collections/How%20To%20Name%20It/10%20-%20Do%20Anything%20-%20Www.TamilKey.Com.mp3

மதியம் 1 மணிக்கு face book ல் பதிவிட்டது.

தமிழக நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி யாருக்கு ?

மந்திய காங்கிரஸ் அரசை நிர்பந்த்தித்து, வேண்டிக் கேட்டுக் கொண்டு அல்லது கூட்டணி நிபந்தனையாக ‘ராஜிவ் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் மத்திய அரசு விடுதலை செய்ய வேண்டும்’ என்று கலைஞரின் முயற்சியால் விடுதலையும் செய்யப்பட்ட பிறகு 39+1=40 தொகுதிகளிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுமா?

இல்லை,
மத்திய அரசை முந்திக் கொண்டு தமிழக முதல்வர் ராஜிவ் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து 39+1=40 தொகுதிகளிலும் வெற்றியை அள்ளிச் செல்வாரா?
பார்ப்போம்.

மதியம் 2 மணிக்கு face book ல் எழுதியது.

மரியாதைக்குரிய நீதிபதி சதாசிவம் தலைமையிலான நீதிபதிகள், மூவர் உயிர்களை மட்டும் காக்கவில்லை; இந்தத் தீர்ப்பு மாறாக இருந்திருந்தால் செங்கோடி, முத்துக்குமார் போல், பலர் தங்கள் உயிர்களை தியாகம் செய்திருப்பார்கள்.

அந்த உயிர்களையும் காத்த நம் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நீதிபதிகளுக்கு நம் நன்றியை மீண்டும் மீண்டும் தெரிவிப்பதின் மூலம் நம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம்.

மாலை 6 மணிக்கு face book ல் எழுதியது.

தொடர்புடையவை:

மூன்று தமிழர்களை தூக்கிலிட துடிக்கும் ‘தினகரன்’

அப்சல் குருவுக்கு தூக்கு; காங்கிரசின் விஸ்வரூபம்!

முல்லைப் பெரியாறு, மூவர் தூக்கு: மரியாதைக்குரிய நீதிபதி தாமஸ்

மூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை

அன்னா அசாரேவிற்கு வாழ்த்து தமிழனுக்கு தூக்கு; இது தாண்டா இளைய தளபதி விஜய் ஸ்டைல்

‘தினகரன்’ மாற்றம், நம்ப முடியாத அளவிற்கு உண்மையாக இருக்கிறது

Exit mobile version