உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடும் வீரர்களின் படங்களுக்குப் பதில், அதில் வேடிக்கை பார்க்கும் பெண்களின் அதுவும் தங்களின் சவுகரியத்திற்காக குறைந்த உடை உடுத்திய பெண்களின் படங்களை பெரியதாக பிரசுரித்து, தங்களின் ‘தொழிலை’ சர்வேதச தரத்துடன் செய்து வருகிறார்கள்.
இப்படி ஆண்களை புறக்கணித்து, அதற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் ஆண்களுக்காகத் தான்.
நடிகைகளின் கவர்ச்சிப் படங்களை பிரசுரித்து அந்த நடிகைகளின் மீது, தன் வாசக ஆண்களுக்கு ‘ஆசை’ யை தூண்ட முயற்சிக்கிற இவர்களிடம்; நடிகைகளையும் பெண்களாக பாருங்கள் என்றால்;
இவர்கள் விளையாட்டு வீராங்கனைகளை மட்டுமல்ல, விளையாட்டை வேடிக்கை பார்க்கும் பெண்களையும் நடிகைகளாகவே பார்க்கிறார்கள்.
பொதுவாக ஆண்கள் ஒரு பெண்ணுக்கு முக்கியத்துவம் தருவது பெண்ணின் திறமையை விடவும் அவரின் உருவத்திற்குத் தான்.
ஏதோ ஒரு வகையில் தன்னை ஈர்க்கும் அளவிற்கு உருவம் கொண்ட பெண்களிடமே ஆண்கள் அதிகம் அக்கறை காட்டுகிறார்கள். முக்கியத்துவம் தருகிறார்கள்.
இந்தியாவிற்கு சர்வதேச அளவில் முதலில் தங்கம் வாங்கித் தந்தவர் பி.டி. உஷா. பத்திரிகையாளர்கள், தங்க மங்கையான உஷாவுக்கு தராத முக்கியத்துவத்தை சானிய மிர்சாவிற்கு தந்தார்கள் என்றால், அதற்குக் காரணம் விளையாட்டல்ல.
செய்திகளில் உண்மை என்பதை விடவும் செய்திகளில் கவர்ச்சி என்பது தான் அவர்களுக்கு முக்கியம்.
கொலையுண்டு இறந்தப் பெண்ணை யார் கொலை செய்திருப்பார்கள் என்று துப்பறிவதை விடவும், அவசர அவசராக அதை கள்ளக் காதலாக அறிவித்து, ‘அழகி’ என்று இவர்களால் கூச்சமில்லாமல் வர்ணிக்க முடிகிறது.
பெண் பிணத்தின் மீதும் கவர்ச்சி.
June 27 அன்று facebook ல் எழுதியது
பாலியல் வன்முறைக்கு தண்டனை தூக்கு! அப்போ..‘மாமா வேலை’க்கு..?

