ஒர் ஆண்டில் 3 விரிவான சொற்பொழிவுகளைப் பேசியிருக்கிறேன் பெரியார் நூலக வாசகர் வட்டத்தில். 3 முறையும் மிக அதிகமான தோழர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
நேற்று தமுஎச தோழர்களின் முயற்சியில் ‘சரிநிகர்’ என்ற அமைப்பின் துவக்க விழாவில் பிரபலமானர்கள் பலரும் கலந்து கொள்வதால், பெரியார் திடலுக்கு வழக்கமாக வருகிறவர்கள் கூட வர வாய்ப்பில்லை என்று கருதினேன்.
எப்போதும் வருகிற பலர் வராதபோதும்.. அதையும் தாண்டி வழக்கத்தை விட அதிகமான தோழர்கள், நிறைய புதியத் தோழர்களும் என்னுடைய நான்காவது நிகழ்ச்சியில்(‘காந்தி கொலையும் கோட்சே சிலையும்) கலந்துகொண்டு உற்சாகப்படுத்தினார்கள். மரியாதைக்குரியத் தோழர்களுக்கு என் அன்பான நன்றி.
*

