சென்னை மக்களைப் பாதுகாப்பான இடத்திற்குப் போகச் சொல்கிறார்கள். போயஸ் தோட்டத்திற்குதான் போகனும்.
18 November
நடிகர் அஜித், விளம்பரமில்லாமல் பல பத்திரிகைளாயர்களுக்குப் பிரியாணி வழங்கியிருக்கிறார். அவரே பரிமாறியும் இருக்கிறார், என்று விளம்பரம் செய்தார்கள் பத்திரிகையாளர்கள்;
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குறிப்பாகக் கடலூர் மாவட்ட மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்?
அதுகூட வேண்டாம், இந்த மழையிலும் வேதாளத்திற்கு வசூலை அள்ளிக் குவித்திருக்கிற, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தன் ரசிகர்களின் குடும்பங்களுக்குத் தக்காளி சோறாவது கொடுத்திருக்கிறாரா?
19 November
பாசமிகு தலைவர்கள், மழையால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்ப்பதற்குத் தக்காளி சோறு பார்சல் கட்டுவதற்கு முன் பத்திரிகையாளர்களுக்குப் போன் போட்டு சொல்லிட்டு, கேமராவுடன் கௌம்பிடுவாங்க போல..
பஞ்சத்திற்கு சோறு கொடுப்பதைப் படம் எடுத்து பப்ளிசிட்டி தேடுகிறார்கள். மக்களின் துயரத்திலும் ஒரு விளம்பர இடைவேளை.
‘எளிய மக்கள் பட்டினியால் தவிப்பதால், இவர்களுக்கு எவ்வளவு புகழ் – அன்னதான பிரபுக்கள்’
உழைப்பும் உடைமைகளுமாக வாழ்ந்த உழைப்பாளிகளை, பிச்சைக்காரர்கள் போல் உணவுக்குக் கையேந்தும் அவலநிலையைப் படம் பிடித்து, விளம்பரம் தேடுகிற இவர்களுக்கு,
காரில் இருந்தபடியே கையசைக்கிற தமிழக முதல்வரே பரவாயில்லை.
20 November
