Site icon வே. மதிமாறன்

நிச்சயம் நடக்கும் ஜல்லிக்கட்டு; தடையைத் தகர்க்கும் பா.ஜ.க

தென் மாவட்டங்களில் மிகப் பெரிய எண்ணிக்கைக் கொண்ட ஜாதிகள் நாடார், முக்குலத்தோர்.
தமிழகப் பா.ஜ.க. வில் இந்தியளவில் செல்வாக்குப் பெற்ற இல. கணேசன், எச். ராஜா போன்ற பார்ப்பனர்கள் இருந்தும் தமிழகத் தலைமைப் பதவியை நாடார் சமூகத்தைச் சேர்ந்த தமிழசை சவுந்தர ராஜனுக்கும், மந்திரி பதவியைப் பொன்.ராதகிருஷ்ணனுக்கும் வழங்கியது பா.ஜ.க.

காரணம், நாடார்கள் மீது கொண்ட பாசமல்ல; எண்ணிக்கையிலும் வணிகத்திலும் அதிகம் கொண்ட நாடார்களைத் தங்கள் கட்சியின் பக்கம் திருப்பும் முயற்சியே.

அதிமுக அலைவரிசையில் இருக்கும் முக்குலத்தோர் ஓட்டுக்களைத் தன் பக்கம் இழுக்கும் பெரும் முயற்சியைவிட, எந்தத் தனிக் கட்சியிலும் தங்கிவிடாத, ஜாதிக்கட்சியின் கீழும் சுருங்கி விடாத நாடார் ஜாதி ஓட்டுக்களைச் சில ஆண்டுகளில் தன் பக்கம் சாய்த்துக் கொள்ளலாம் என்கிற திட்டம்.

எந்த ஜாதி தலைமையாக இருந்தால் என்ன? இல. கணேசன் என்ன செய்வாரோ அதைதான் தமிழிசை செய்கிறார். பா.ஜ.க விற்கு ஆளா முக்கியம்? அய்டியாலஜி தானே. மோடி என்ன பார்ப்பனரா? பார்ப்பனர்கள் கொண்டாடி மகிழ்கிற இதிகாச, புராணா காலக் கிருஷ்ணபரமாத்மா அல்லது கண்ணன் என்ன பார்ப்பனரா?

சரி, ‘நாடார்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி’ என்று முக்குலத்தோர் மத்தியில் அடையாளம் ஆகிவிட்டால் கட்சியின் வளர்ச்சிக்குப் பாதிப்பு. அந்தப் பாதிப்பை நீக்குவதற்கு, இது ஒரு நல்வாய்ப்பு.

ஜல்லிக்கட்டில் அதிகம் பங்கெடுப்பவர்கள் முக்குலத்தோர். அதிலும் கள்ளர் சமூக மக்களே. ஜல்லிக்கட்டின் மீது நீதி மன்றம் விதித்திருக்கிற தடையை நீக்குவதன் மூலம்;
முக்குலத்தோர், ஜல்லிக்கட்டை ஆதரிக்ககிற பிற ஜாதியினர் மத்தியில் பா.ஜ.க. விற்குச் செல்வாக்கு அல்லது அறிமுகம் கிடைக்கும்.

இக்கட்டில் மாட்டியிருக்கிற நாயகியை கடைசி நேரத்தில் காப்பாற்றுகிற நாயகனை போல், ஜல்லிக்கட்டு நெருக்கடி தீவிரமடையும்போது தடையைத் தகர்க்கும் அவதாரம் எடுக்கும் பா.ஜ.க.
வரும் தேர்தலில் இதை மய்யமாக்கி பிரச்சாரம் செய்வதற்கும், தென்மாவட்டத்தில் இன்னும் ஆழமாகக் கால்பதிப்பதற்கும் பா.ஜ.க விற்குப் பெரிய வாய்ப்பு.

அதனால் ஜல்லிக்கட்டிற்கான தடையைப் பா.ஜ.க நீக்கும் என்றே நினைக்கிறேன். பார்ப்போம் 10 நாட்களில்.

(05-01-2015 இரவு 10 மணியளவில் facebook ல் எழுதியது. இதே கருத்தை 8 மாதத்திற்கு முன் கலைஞர் செய்திகளில் தோழர் சுகிதா வின் கேள்விக்குப் பதிலாக பதிவு செய்தேன்.) https://www.facebook.com/sugitha.sugi?fref=ts

மாட்டுக் கொம்பில் மல்லுக்கட்டும் மனிதம்

‘ஜல்லிக்கட்டு தடை’ வரவேற்போம்; யானைகளை பாதுகாப்போம்!

சீமானின் ‘மக்கள் முன்னால்’ ;ஜல்லிக் கட்டு

Exit mobile version