Site icon வே. மதிமாறன்

அப்படியானால் நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்

கம்மவர் நாயுடு சங்கம் சார்பில் நேற்று (23-01-2016) தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கட் அவுட் வைத்திருந்தனர். காரணம், ‘திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்படும்’ என்று முதல்வர் அறிவித்திருந்ததால்.

அப்படியானால், நாயுடுகளைத் ‘தெலுங்கர்கள்’ என்று தமிழனவாதிகள் சொன்னால், ஏன் கோபித்துக் கொள்கிறார்கள்?

‘நாயுடு, நாயக்கர்’ என்று அடையாளப் படுத்துவதை விட ‘தெலுங்கர்கள்’ என்று அழைப்பது இழிவானதல்ல.
தெலுங்கு பேசுவது தவறில்லை. அது மொழி சிறுபான்மையினர் உரிமை. ஆனால், ஜாதி உணர்வோடு இருப்பதும் அதைப் பகிரங்கமாக அறிவிப்பதும் தான் தவறு. அதுவும் பெரியார் பிறந்த மண்ணில் ஜாதிய உணர்வு ஒரு குற்றம்.

ஜாதி படிநிலையில் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் ஆதிக்க ஜாதியாக இருக்கிற நாயுடு, நாயக்கர் ஜாதிகளுக்கு எந்தப் பெருமையும் இல்லை. பெரியார் வார்த்தையில் சொல்வதானால், அது சூத்திர பட்டம்.

பார்ப்பன அடிமைத்தனமும் தலித் விரோதத்தையும் தவிர இடைநிலை ஜாதிகளுக்கு எந்தச் சிறப்பும் நிச்சயம் இல்லை.
‘நாயுடு, நாயக்கர்’ என்பதற்காகவே ஒரு நபரை குறித்து நீங்கள் பெருமை கொள்வதாக இருந்தால்,

19 குழந்தைகள் உட்பட 44 தலித் மக்களை எரித்துக் கொன்ற கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

‘மாமன்னன் ’

தெனாலிராமனா-வடிவேலா?; கிருஷ்ணதேவராயனை கூ முட்டையாக்கியது

Exit mobile version