‘விசாரணை படம் பார்த்தீர்களா?’ என்று நிறையத் தோழர்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். பார்த்த எல்லோருமே பாராட்டுகிறார்கள். பார்த்துப் படம் புடிச்சிருந்தா சந்தோசம். பிடிக்காமல் போனாதான் சிக்கல்.
பிறகு அதுகுறித்து எழுதினால் ‘இவுனுக்கு இதான் வேலை..’ என்பார்கள் எப்போதும் என்னை எதிர்ப்பவர்கள். நெருக்கமான தோழர்களும் கூட வருத்தப்படுவார்கள்.
அப்படிதான் ‘காக்க முட்டை’ யை எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்று பார்த்தேன். எனக்கு அந்தப் படம் சுத்தமா பிடிக்கல. சென்னை வாழ் தலித் மக்களை மோசமான குறியீடாகவே படம் முழுக்கக் காட்டப்பட்டிருந்தது.
அதை உடனே எழுதினால் பாராட்டி எழுதிய பல தோழர்களையும் விமர்சிப்பதுபோல் ஆகிவிடும் என்பதால் பிறகு எழுதலாம் என்றிருந்தேன்… அப்படியே போயிடிச்சி..
‘விசாரணை’ படம் பார்ப்பது குறித்தும் அந்தத் தயக்கம் இருக்கிறது.. பார்த்தப் பிறகு படத்தை நம்ம விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிவருமோ..
இன்றைய சூழலில் தேர்தல் கூட்டணி உட்பட கும்பலாகப் பலர் சொல்கிற கருத்து தவறாக இருந்து அதற்கு மாற்றோ விமர்சனமோ சொன்னால், சொல்வர் மீது எவ்வளவு கேவலமான அவதூறு சொல்வதற்கும், தயராக இருக்கிறார்கள்.
இதில் தன் ஜாதிக்காரர்களுக்கு மட்டும் விதிவிலக்கு வைத்து விட்டு, மற்றபடி மற்றவரை வெளுக்கிறார்கள்.
அதையெல்லாம் பார்த்த வேலை நடக்குமா? விசாரணை பார்த்திட வேண்டியதுதான்.
10 February at 20:39
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர்களில் யதார்த்தமாகக் கதாபாத்திரங்களை உருவாக்கியதில் வெற்றிமாறன் முதன்மையானவர். இன்னும் நெருக்கிச் சொன்னால் பாலுமகேந்திராவை விடச் சிறப்பாகச் செய்தவர்.
இரண்டு படங்கள் பார்த்திருக்கிறேன். இரண்டு படங்களிலும் எனக்கு விமர்சனம் இருந்தாலும் பாத்திரப் படைப்பு குறிப்பிடத் தக்கதாக இருந்தது.
எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால்.. அவர் குறித்து எனக்குத் தீவிரமான எதிர்மறையான கருத்துக்கள் இல்லை. அதனால் எந்த முன் முடிவுகளும் இல்லாமல் தான் ‘விசாரணை’ பார்க்கப் போகிறேன்.
12 February at 21:20
