
காவி வேட்டி கட்டுனவன் ஜட்டி போடாததினால் வேட்டியோட நிப்பாட்டி இருக்கு போலீஸ்.
ஜட்டி வாங்க துப்பில்லாவனுக்கு ஜாதித் திமிர பாத்தீயா? இதுதான் ஜாதி. இதுதான் வர்க்க உணர்வைத் தாண்டிய ஜாதி வெறி.
இத புரிஞ்சிக்கிட்டு மார்க்சை பேசுங்க. அதுதான் அந்த மாமேதைக்குச் செய்யும் மரியாதை.
15 March at 22:22
உடுமைலையில்.. சங்கரை கொன்றது கூலிப் படையல்ல, அது தலித் விரோத ஜாதிப் படை. கொலைக்குக் கூலியே, தலித் உயிர் தான்.
தலித் மக்கள்; ஜாதி இந்துக்களை விடப் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் கூட, ஜாதி இந்துக்கள் மீது, ஜாதி ரீதியான தாக்குதலை எப்போதும் நடத்தியது இல்லை.
அவ்வளவு ஏன்? தன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துகிற ஜாதி வெறியர்களுக்கே எதிராகக் கூட அவர்கள், ஜாதி ரீதியாகக் கிளர்ந்து ஒன்று சேர்ந்து, பதிலடிக்கூடக் கொடுத்ததில்லை.
அவர்கள் மற்றவர்களைப்போல், இந்த மண்ணில் வாழ்வதற்காகக் கூட அல்ல, நடமாடுவதற்கு முயற்சிக்கும்போதுான் கொலை செய்யப்படுகிறார்கள்.
இது ஒரு நாடா? மானங்கெட்ட தலித் விரோத ஜனநாயக முறைக்குத் தேர்தல் ஒரு கேடா?
‘தண்ணீ சரியா வரல, ரோடு இல்ல’ என்பது போன்ற காரணங்களுக்காகவே பல ஊர்களில் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் மக்கள்.
அவர்களுக்கு இருக்கிற அரசியல் அறிவுகூட ஜாதி ஒழிப்புப் பேசுகிற நம்மிடம் இல்லை. நான் எப்போதுமே வாக்களித்தவன் இல்லை. இதுவரை நான் தேர்தலை புறக்கணித்தற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அதில் தலித் விரோத ஜாதி எதிர்ப்பு அரசியலும் ஒன்று.
இந்தமுறை நான் தேர்தலை, ஒரே ஒரு ஒற்றைக் காரணத்தை மட்டும் தீவிரமாக முன்வைத்துப் புறக்கணிக்கிறேன்.
இந்த நாடு மிகத் தீவிரமான தலித் விரோத நாடாக மாறிவருவதைக் கண்டித்துத் தேர்தலை புறக்கணிக்கிறேன்.
‘இந்தச் சாவுக்கு நம்ம அட்டன்டன்ஸ்’ என்ற பாணியில் ‘சாதி வெறி’ என்று சாதாரணமாக முடித்துக் கொள்கிறார்கள், ‘ஜாதி ஒழிப்பாளர்கள்’.
‘அடுத்தச் சாவு வருகிற வரை நமக்கு இது ஒரு சடங்கு’ என்று அலுத்துக்கொள்கிறவர்கள் கூட, ரொம்பப் புத்திசாலித்தனமாக தலித் மீது வன்முறை செய்த ஜாதியை கண்டிக்காமல், கண்டிப்பவர்களைக் கண்டித்து விட்டு, தன் தலித் ஆதரவு கணக்கில் வரவு வைத்து விடுகிறார்கள்.
எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் வன்முறை நிகழ்த்துகிறார்களோ, அந்த ஜாதியின் பெயரை சொல்லி கண்டிப்பது தானே, ஜாதி ஒழிப்பு படிநிலை.
உடுமலையில் சங்கரை படுகொலை செய்தது‘தேவர் ஜாதி வெறி’ என்று சொல்ல முடியாத பலர், ‘அவர்கள் இதைக் கண்டிக்கவில்லை’ என்று குற்றம் சாட்டுகிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
இது இவர்களின் இயலாமை, ஓட்டரசியல், சந்தர்ப்பவாதம், பயம், ஜாதி உணர்வு, அந்த ஜாதியைச் சேர்ந்த தன் நலம் விரும்பிகளின் நட்பு நாடுதல்.
இதுவே தான் கொஞ்சம் கூடுதலாக அவர்களுக்கும். இந்த இரண்டே நிலைதான் ஜாதி ஒழிப்பு அரசியலாக இங்கு இருக்கிறது. இன்னும் சாதி ஒழிப்பிலும் யாரை ஆதரிப்பது, எதிர்ப்பது – கூட்டணியை வைத்து முடிவாகிறது.
இப்படியிருந்தால்.. ஜாதி ஒழிப்பல்ல, ஜாதி மயிரைக்கூடப் புடுங்க முடியாது.
15 March at 22:22
தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?
இளவரசன் மரணம்: சோக ரசம் சொட்டும் காதல் கதையா?
யுவராஜின் டேப்பும் கோகுல் ராஜ் கொலையும் விஷ்ணுப்பிரிய மரணமும்
