………………தோழர் கொளத்தூர் மணியின் விடுதலையும்

ஓவியம் : மணிவர்மா

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டு, இன்றோடு 63 நாட்கள் ஆகிறது.

முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்கும் நெடுமாறன் கைதுக்கும் கண்டனம் தெரிவித்தவர்கள், அதுபோன்ற தீவிரமான எதிர்ப்பை தோழர் கொளத்தூர் மணி கைதுக்கு தெரிவிக்கவில்லை.

தோழமையானவர்கள் கூட அடையாள போராட்டத்தோடு நிறுத்திக் கொண்டார்கள். அதிமுக அரசின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கிற பிற அமைப்புகளும் தோழர் கொளத்தூர் மணியின் கைது குறித்து அமைதி காக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்கும் நெடுமாறன் கைதுக்கும், ‘தங்களை அழைக்கவில்லை’ என்பதையும் தாண்டி, நெடுமாறனுக்கு ஆதரவாகவும் தமிழக அரசை கடுமையாக எச்சரித்தும் பேசியவர்கள், தோழர் கொளத்தூர் மணி கைதுக்கும் அதே முக்கியத்துவம் தந்திருக்க வேண்டும்.

ஈழப் பிரச்சினையோடு தமிழ்த் தேசியமும், இஸ்லாமியர் எதிர்ப்பு இந்துத்துவ சக்திகளை எதிர்ப்தையும், ஜாதி ஒழிப்புப் போராட்டங்களையும், டாக்டர் அம்பேத்கரை முன்னிறுத்தி தலித் ஆதரவு நிலையையும் எடுக்கும் இயக்கங்கள், பெரியார் இயக்கங்கள் மட்டுமே.

பெரியார் எதிர்ப்பாளர்கள், ஜாதிய கண்ணோட்டம் கொண்ட தமிழ்த் தேசியவாதிகள், ஜாதிக் கட்சிகள் தோழர் கொளத்தூர் மணியின் விடுதலையில் ஆர்வம் காட்டாமல் இருந்தால் ஆச்சரியமில்லை; அவர்கள் விடுதலையை வெறுக்கவும் செய்யலாம்.

ஆனால், ஜாதி ஒழிப்பும், தலித் விடுதலையோடு தமிழ்த் தேசியமும் பேசுகிறவர்கள் கூட அடையாளப் போராட்டங்களோடு அமைதிகாப்பது, ‘ஜாதி ஆதரவு அல்லது இடைநிலை ஜாதி தமிழ்த் தேசியம்’ பேசுகிறவர்களே புத்திசாலிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

ஏனென்றால் அவர்களை ஜாதி கட்சிகளும் ஆதரிக்கின்றன, ஜாதி ஒழிப்பு பேசுகிறவர்களும் ஆதரிக்கிறார்கள்.

தோழர் கொளத்தூர் மணியின் விடுதலை தள்ளி போய்கொண்டே இருப்பது, ஈழ ஆதரவு பேசுகிறவர்களின் கையாளாகாதனம் மட்டுமல்ல, முற்போக்காளர்களின் நிலையையும் அதுவே.

ஓவியம் : மணிவர்மா

தொடர்புடையவை:

கொளத்தூர் மணியை காட்டிக் கொடுக்கும் ‘ஞாநி’ -இதுதான் ஞானமா?

கொளத்தூர் மணி-சீமான் மீது அவதூறு அல்லது ஏன் விமர்சனங்களுக்கு பதில் சொல்வதில்லை

Leave a Reply

%d bloggers like this: