யுவராஜின் டேப்பும் கோகுல் ராஜ் கொலையும் விஷ்ணுப்பிரிய மரணமும்
யுவராஜின் டேப், ‘கோகுல் ராஜ் கொலை வழக்கில் காவல்துறை நேர்மையாக நடந்து கொள்கிறது’ என்பதை தான் வலியுறுத்துகிறது.
காவல் துறையின் ஆதரவுடன் தான் அந்த டேப் வெளியிடப் பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
பத்திரிகைகள் தான் போலிசை காப்பாற்றுகிறது.
தோழர் வணக்கம்,
உங்கள் விடியோ பதிவுகளை தனி பக்கத்தில் குடுத்தால் நன்றாக இருக்கம்.
ஆ.இளஞ்செழியன்
இளவரசனைத் தொடர்ந்து கோகுல்ராஜ் ஜாதி ஆணவக் கொலை: கழகம் கடும் கண்டனம்:
‘கவுரவக் கொலை’ என்ற பெயரில் ஜாதி வெறிக் கொலை சம்பவங்கள் தமிழகத்தில் தலைதூக்கி வருவது தமிழ்நாட்டுக்கே தலைகுனி வாகும். 2013ஆம் ஆண்டு இளவரசன் என்ற தலித் இளைஞர், திவ்யா என்ற வன்னியப் பெண்ணை காதலித்து திருமணம் செய்த ‘குற்றத்துக்காக’ அவர்களை ஜாதி வெறியர்கள் கட்டாயப்படுத்தி அச்சுறுத்திப் பிரித்தனர். கடைசியில் இளவரசன் உடல் தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தது. இப்போது பொறியியல் பட்டதாரியான தலித் இளைஞர் கோகுல் ராஜ், அதே ‘கதிக்கு’ ஆளாகியுள்ளார். ‘உயர்ஜாதி’ என்று சொல்லிக் கொள்ளும் ‘கவுண்டர்’ ஜாதிப் பெண்ணை காதலித்து, திருமணம் செய்ததால் அவர் ஜாதி வெறியர்களால் கடந்த 23ஆம் தேதி கடத்தப்பட் டுள்ளார். 24ஆம் தேதி தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் பள்ளிப்பாளையம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே இரயில் தண்டவாளத்தில் அவர் பிணமாகக் கிடந்தார்.
திருச்செங்கோடு மலைக் கோயிலுக்கு கோகுல் ராஜ், ஒரு மாணவியுடன் சென்று சாமி கும்பிடுவது கண்காணிப்புக் காமிராவில் பதிவாகியுள்ளது. கடைசியாக 7 பேர் கொண்ட ஒரு கும்பல், கோகுல் ராஜை கடத்திச் செல்வதும் காமிராவில் பதிவாகி யுள்ளது. கவுண்டர் ஜாதியைச் சார்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக ‘தினத்தந்தி’ நாளேடு செய்தி கூறு கிறது. கோகுல்ராஜ் தலை மட்டும் துண்டிக்கப்பட் டுள்ளது. உடலில் எவ்வித காயங்களும் இல்லை. எனவே, இரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை. இது திட்டமிட்ட படுகொலையே ஆகும். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி, சி.பி.அய். (எம்.எல்.) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், சேலம் உயர் சிகிச்சை சிறப்புப் பிரிவு மருத்துவமனைக்கு எதிரே தொடர்ந்து போராடி வருகின்றன. ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ இந்த ஜாதி வெறிக் கொலையை வன்மையாகக் கண்டிக்கிறது. கொலைக்கு திட்டமிட்டு நடத்தி முடித்த ஜாதிவெறிக் கும்பலைக் கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வழக்கை சி.பி.இ.அய்.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் வற்புறுத்துகிறது.
– கொளத்தூர் மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
என்னை சுட்டுக் கொல்ல சதி: யுவராஜ் வெளியிட்ட பரபரப்பு கடிதம்:
தன் மீது தொடர்ச்சியாக எண்ணிடலங்காத பொய் வழக்குகள் போடப்பட்டு தன்னை சுட்டுக் கொன்றுவிட்டு ஏதோ ஒரு கதையை கட்டும் சூழ்நிலை உள்ளதாக கோகுல் ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் யுவராஜ் தன்னுடைய வாக்குமூல கடிதத்தில் கூறியுள்ளார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் யுவராஜ் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வருமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு சம்மன் சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள யுவராஜ் குடும்பத்தினரிடம் தரப்பட்டது. இந்த நிலையில் யுவராஜ் வாக்குமூலம் என்ற பெயரில் 15 பக்க கடிதத்தை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி, மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரெண்டு நாகஜோதி ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் என் மீதும் எனது பேரவையின் ஆட்கள் மற்றும் ஏகப்பட்ட நபர்கள் மீதும் பல்வேறு காவல்நிலையங்களில் பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பல வழக்குகள் திருச்செங்கோடு, நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.
இந்த சட்ட விரோத தொடர் டார்ச்சர்களினாலேயே திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா அவர்கள் மனம் உடைந்து போனார். நேர்மையாக பணியாற்ற வந்த அவர் இவர்கள் செய்த தவறுகளால் பலிகடாவாக மாறி அவமானப்பட போகிறோம் என்ற நிலையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுவிட்டார்.
விஷ்ணுபிரியா சாவுக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறிய அவர் சட்டவிரோத செயல்பாடுகளே விஷ்ணுபிரியா தற்கொலை செய்ய காரணம் என்பதையும் என்னால் நிரூபிக்க முடியும் என்றார்.
என் மீது தொடர்ச்சியாக எண்ணிடலங்காத பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. என்னை சுட்டுக் கொன்றுவிட்டு ஏதோ ஒரு கதையை கட்டமாட்டார்கள் என்பதற்கும், அப்படி எண்ணாமல் இருப்பதற்கு யாரேனும் உத்தரவாதம் தர இயலும் சூழ்நிலை உள்ளதா? என அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
— From net
அதாவது கோகுல்ராஜ் எனும் தலித் இளைஞர் கவுண்டர் ஜாதியை சேர்ந்த பெண்ணை காதலித்த குற்றத்துக்காக, கவுண்டர் அய்யாக்காளால் தலை துண்டிக்கப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டார். அதை விசாரிக்க சென்ற தலித் டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவும், சில நாள் கழித்து மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார்.
———–
திரு.மதிமாறன் மிகச்சிறந்த பேச்சாளர். தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பார். ஆனால், இந்த விவாதத்தில் அவருடைய கண்களில் ஒரு வித பயமும் மிரட்சியும் தெரிகிறது. அவரை வெளிப்படையாக பேசவிடாமல், ஆதிக்கஜாதி போலீஸ் அதிகாரியும் தராசு பத்திரிக்கை அறிவுஜீவியும் மாற்றி மாற்றி சாட்டையை சொடுக்குவது கண்கூடு.
இது ஒரு சீரியஸான விவாதம். ஏனோ தெரியவில்லை, தராசு பத்திரிக்கை அறிவுஜீவி தொடக்கம் முதல் முடிவு வரை வாயெல்லாம் பல்லாக, ஏதோ எஸ்.வி.சேகர் காமெடி ட்ராமா பார்ப்பதைப்போல் செம ஜாலி மூடில் இருக்கிறார்.
“ஆதிக்கஜாதிக்கெதிராக போலீசும் சட்டமும் இயங்காது. கைகட்டி வேடிக்கை பார்க்கும். தலித்துக்கு எந்த ஜென்மத்திலும் நீதி கிடைக்காது” என மிக விரக்தியுடன் திரு.மதிமாறன் தனது விவாதத்தை முடிக்கிறார்.
———–
தலித்துக்களிடம் நான் சொல்ல விரும்புவது:
5000 வருடஙகளாக உதைவாங்கியும் இன்னமும் ஏன் அந்த ஹிந்துமத ஜாதிசாக்கடையை விட்டு வெளியேற மறுக்கிறாய்?. இட ஒதுக்கீட்டுக்காக தன்மானத்தை அடகு வைத்துவிட்டாயா?
முஸ்லிம்கள் 30 சதவீதம். தலித் 40 சதவீதம். நீங்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால், இந்தியா இஸ்லாமிஸ்தானாகி விடும். அவர்களும் இஸ்லாத்துக்கு வந்துவிடுவர். ஜாதிகள் மறைந்துவிடும். எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழும் இந்தியாவை நம்மால் உருவாக்கமுடியும். நன்றி.
மிக மிக சிறந்த பதிவு நண்பரே. உங்களின் இந்த பதிவை தமிழ் திரட்டியிலும் (http://tamilthiratti.com) இணைத்து இன்னும் பல நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.