பட்டேல் பாலிடிக்ஸ்

கிரிக்கெட்டில் பட்டேல்.*
மும்பையை கைப்பற்ற நினைத்த பட்டேல்கள். தகர்த்த டாக்டர் அம்பேத்கர்.
இடஒதுக்கீடு குறித்து தெளிவாகவும் ஆழமாகவும் பேச வைத்த தோழர் சுதிதாவிற்கும் கலைஞர் டிவிக்கும் நன்றி. (facebook.com/sugitha.sugi)
பதிவு செய்து வெளியிட்ட facebook.com/palani.kumar. அருமைத் தம்பி பழனிக்குமாருக்கும் நன்றி

Forward caste முற்போக்கும் Backward caste பிற்போக்கும்

தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா Vs படிக்காத தாத்தாக்கள்

20 thoughts on “பட்டேல் பாலிடிக்ஸ்

  1. 5000 வருடங்களாக எந்த கொம்பனாலும் அசைக்க முடியாத ஆதிக்கஜாதியை எப்படி மண்டியிட வைத்தார் அம்பேத்கர்?:

    “இட ஒதுக்கீடு தராவிட்டால், ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவிவிடுவோம்” என காந்தியை பயமுறுத்தி 1932ல் பூனா ஒப்பந்தம் மூலம் தலித்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் வென்றார். அதற்கு பகிரமாக “நான் இஸ்லாத்தை தழுவமாட்டேன்” என பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

    ஆக ஆதிக்கஜாதியை மண்டியிட வைத்தது இஸ்லாம்தான் என்றால் மிகையாகாது.
    ————————–

    ஆனால், “இப்படி தலித்துக்களை ஒட்டுமொத்தமாக ஜாதிவாரிய இட ஒதுக்கீடு எனும் பாதாளசாக்கடையில் அடைத்துவிட்டேனே. இனி எந்த ஜென்மத்தில் இவர்கள் வர்ணதர்ம ஜாதிசாக்கடையை விட்டு வெளியேறுவர்?” எனும் குற்ற உணர்வு அம்பேத்கருக்கு இருந்தது.

    1940ல் தந்தை பெரியாரும் அண்ணாத்துரையும் திராவிட நாடு பற்றி ஆலோசிக்க பாரிஸ்டர் ஜின்னாவை சந்தித்தனர். அப்பொழுது அம்பேத்கரும் அவர்களுடன் சென்று இஸ்லாத்தை தழுவுவது பற்றி ஜின்னாவின் ஆலோசனையை கேட்டார்.
    ——————-

    ஜின்னா: எதற்காக இஸ்லாத்தை தழுவுகிறீர்?

    அம்பேத்கர்: சூத்திரன் எனும் இன இழிவு நீங்க. வறுமை ஒழிய.

    ஜின்னா: இஸ்லாத்தை தழுவினால் உங்களுடைய இன இழிவு நீங்கும், சமத்துவம் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வறுமை ஒழியுமென யார் சொன்னது?.

    அம்பேத்கர்: ??????

    ஜின்னா: 800 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்தும் முஸ்லிம்களின் வறுமை ஒழியவில்லை. இஸ்லாத்துக்கு வந்த ஏழைகள் எல்லாம் எழையாகத்தான் இருக்கின்றனர். ஆனால் நிலங்களும் பொருளாதாரமும் ஆதிக்கஜாதியின் கட்டுப்பாட்டில் அப்படியே இருக்கிறது. பாபரும் அவ்ரங்சீப்பும் சாதிக்கமுடியாததை உங்களால் சாதிக்கமுடியுமா?.

    அம்பேத்கர்: ??????

    ஜின்னா: உங்களுக்கு இன்றைய உடனடி தேவை வறுமை ஒழிப்பும், பொருளாதார மேம்பாட்டும். அதற்கு உங்களுடைய ஜாதிவாரிய இடஒதுக்கீடு வழிவகுக்கிறது. இது தவிர, நீங்கள் சான்றிதழில் ஹிந்து தலித்தாக இருந்துகொண்டே கிருத்துவத்தை தழுவினால், உங்களுக்கு சர்ச்சின் முழு ஆதரவும் மிகப்பெரிய கிருத்துவ வல்லரசுகளின் ஆதரவும் கிட்டும். இஸ்லாத்தில் இதெல்லாம் நடக்குமா என்பது சந்தேகமே. இனி முடிவு உங்கள் கையில்.
    ————————

    ஜின்னாவை அம்பேத்கர் சந்தித்ததை கேள்விப்பட்ட காந்தி அலறியடித்துக் கொண்டு ஜின்னாவிடம் ஓடி வந்து விசாரித்தார்.

    காந்தி: ஜின்னா சாஹப், அந்த சூத்திரன் ஏனிங்கு வந்தான்?. என்ன சொன்னான்?

    ஜின்னா: அவர் தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவுவது பற்றி எனது ஆலோசனையை கேட்டார்.

    காந்தி: ராம் ராம்.. அப்படியா… நீங்கள் என்ன சொன்னீர்?

    ஜின்னா: (நடந்ததை ஜின்னா விவரிக்கிறார்)

    காந்தி: ஹாய் அல்லா … ஜின்னா சாஹப், நீங்கள் எங்களுடைய ஹிந்து ராஷ்டிரத்தை காப்பாற்றிவிட்டீர். மிக்க நன்றி.

    ஜின்னா: இப்போதைக்கு உஙளுடைய ஹிந்து ராஷ்டிரத்தை காப்பாற்றிவிட்டேன். ஆனால் அம்பேத்கர் நான் சொன்னதை முழுமையாக ஏற்றதாக எனக்குப் படவில்லை. அவர் மற்ற இஸ்லாமிய தலைவர்களையும் சந்தித்து பேசுகிறார். தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால் இந்தியா இஸ்லாமிஸ்தானாகிவிடும். உங்களுடைய ஹிந்துமதம் அட்ரஸ் இல்லாமல் போய்விடும். என்ன செய்வதாக உத்தேசம்?

    காந்தி: ஹாய் ராம்… ஜின்னா சாஹப், அந்த சூத்திரன் நிச்சயமாக செய்வான். எனக்கு அவனைப் பற்றி நன்றாகத் தெரியும். எங்களுடைய ஹிந்து தர்மத்தை காப்பாற்ற நாங்கள் என்ன செய்யவேண்டும்?. தயவு செய்து எங்களுக்கு ஒரு வழி காட்டுங்கள்.

    ஜின்னா: உங்களுடைய ஹிந்து மதத்தை காப்பாற்ற ஒரே வழி “இந்தியா பாக்கிஸ்தான்” பிரிவினை. முஸ்லிம்கள் இருக்கும் வரை, உங்களால் நிம்மதியாக வாழமுடியாது. காலந்தாழ்த்தாமல், பிரிட்டீஷ் மஹாராணியிடம் “இந்தியா பாக்கிஸ்தான்” பிரிவினைக்கான உங்களுடைய ஒப்புதலை தாருங்கள். உங்களுக்கு உங்கள் வழி, எங்களுக்கு எங்கள் வழி.
    ———————

    அம்பேத்கருக்கும் காந்திக்கும் ஜின்னா சொன்ன ஆலோசனையை கேள்விப்பட்ட விக்டோரியா மஹாராணி, மிக்க மகிழ்ந்து அவரை உடனடியாக பக்கிங்ஹாம் அரண்மணைக்கு அழைத்து ஆரத்தழுவி “பாக்கிஸ்தானுக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள். 5 வருடங்களில் உங்களுக்கு பாக்கிஸ்தான் கிடைக்கும்” என உறுதியளித்தார்.

    ஒரே சமயத்தில், கத்தோலிக்க வாட்டிகனையும் ஹிந்துத்வா RSS தலைவர்களையும் சந்தோஷப்படுத்தி கால் மேல் கால் போட்டுக்கொண்டு சுருட்டை ஊதிய வண்ணம் பாக்கிஸ்தானை உருவாக்கிய ஜின்னா எனும் மாமேதையை பாராட்ட வார்த்தைகளில்லை.

  2. அம்பேத்கர் செய்ததை உயர்ஜாதி ஹிந்துக்கள் செய்யவேண்டும்:

    “எங்கள் பங்கை தராவிட்டால் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவி விடுவோம்” என பயமுறுத்தி அம்பேத்கர் தலித்துக்களின் பங்கை வென்றார்.

    ஆனால் இன்று உயர்ஜாதி ஹிந்துவாக பிறந்து விட்டதால், எவ்வளவுதான் கஷ்டப்பட்டு படித்து 90, 95 சதவீத மார்க் வாங்கினாலும், ப்ராஹ்மணருக்கும் பட்டேல் பனியா போன்ற உயர்ஜாதி ஹிந்துக்களுக்கும் உயர்கல்வி வாய்ப்பும் வேலை வாய்ப்பும் மறுக்கப்படுகிறது. எவ்வளவு ப்ராஹ்மின்ஸால் அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஓடமுடியும்?.

    “உயர்ஜாதி ஹிந்துவாக பிறந்தது எங்கள் குற்றமா?. எங்களுடைய நாட்டில் எங்களுக்கு பிழைக்க வழியில்லவிட்டால், நாங்கள் எங்கே போவது?. தற்கொலை செய்வதைவிட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை” என உயர்ஜாதி இளைஞர்களும் குழந்தைகளும் கண்ணீர்விட்டு கதறுகின்றனர். அவர்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது.

    “எங்கள் பங்கை தராவிட்டால் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவி விடுவோம்” என பயமுறுத்தி ப்ராஹ்மின்ஸும் உயர்ஜாதி ஹிந்துக்களும் தங்களுடைய நியாயமான பங்கை வாங்குவதை விட்டால் வேறு வழியில்லை.

    முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும்.

  3. “தலித்துக்களின் உரிமைகளை பாதுகாக்க போராடுகிறோம்” என முதலைக்கண்ணீர் வடித்து, தலித் ஒட்டுவங்கியை வைத்து அம்மாக்களிடமும் அய்யாக்களிடமும் தலித் தலைவர்கள் பேரம் பேசுவதற்கான ஒரு புரோக்கர் வேலையைத்தான் மதிமாறன் செய்கிறார்.

    மற்றபடி, தலித்துக்கள் இஸ்லாத்தை தழுவினால் தங்கள் பிழைப்பு நாறிவிடுமென்பதில் தெளிவாக இருக்கிறார்.

  4. ஜின்னாவை ஏன் அத்வானி புகழ்ந்தார்?:

    “இஸ்லாத்தை ஏற்பதால் உங்கள் வறுமை ஒழியப்போவதில்லை” என அம்பேத்கரை தடுத்து நிறுத்தி, ஹிந்து மதத்தை ஜின்னா காப்பாற்றினார். இந்தியா இஸ்லாமிஸ்தான் ஆவதை தடுத்து நிறுத்தினார்.

    ஆகையால்தான் பாபரி மஸ்ஜிதை உடைத்த அத்வானியும், RSS மூத்த தலைவர் ஜஸ்வந்சிங்கும், ஜின்னாவை ஒரு மிகச்சிறந்த “மதச்சார்பற்ற தலைவர் – செக்யூலரிஸ்ட்” என பாக்கிஸ்தானில் போய் புகழ்ந்தனர்.

  5. வே மதிமாறனின் பொன்மொழிகள்:

    1. // எந்தக் காலத்திலுமே ஆசிரியர்களை விட மாணவர்கள் முற்போக்கானவர்கள் தான். மாணவர்களிடம் மதம், ஜாதி உணர்வு கிடையாது. //

    2. // மும்பையை கைப்பற்ற நினைத்த பட்டேல்கள். தகர்த்த டாக்டர் அம்பேத்கர். இடஒதுக்கீடு குறித்து தெளிவாகவும் ஆழமாகவும் பேச வைத்த தோழர் சுதிதாவிற்கும் கலைஞர் டிவிக்கும் நன்றி. //
    ———————-

    மதிமாறா, “மாணவர்களுக்குள் ஜாதிகள் இல்லையடி பாப்பா” என போன பதிவில் பெரிய அறிவுஜீவி போல் பேசிவிட்டு, இங்கே கலைஞர் டிவியில் “தலித்துக்களின் ஜாதிவாரிய இடஒதுக்கீட்டில் கைவைக்காதே” என உயர்ஜாதி ஹிந்துக்களை மிரட்டுகிறாய்.

    நீ ஒரு ரெண்டுங்கெட்டான் என நினைத்தேன். அய்யாக்களை உதைக்கச்சொல்லி தலித்துக்களுக்கு ஒத்தடம் கொடுக்கும் கடைந்தெடுத்த காரியவாதி என்பதை நிரூபித்துவிட்டாய்.

  6. மதிமாறன் சாரே.. இங்க என்ன தான் நடக்குது… தல சுத்துது…

  7. எனக்கு வே மதிமாறன் மீது தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்பும் விருப்பும் கிடையாது. அவருடைய கருத்துக்களையெல்லாம் நான் ஏற்க வேண்டிய அவசியமில்லை, என்னுடைய கருத்துக்களையெல்லாம் அவர் ஏற்க வேண்டிய அவசியமுமில்லை .

    அதே சமயம், ஒரு இஸ்லாமியன் எனும் அடிப்படையில் எனது கருத்துக்களை எந்த தடையுமின்றி இணையத்தில் வெளிப்படுத்த எனக்கு வாய்ப்பளித்த ஒரே மனிதர் மதிமாறனென்றால் மிகையாகாது.

    இன்று எனது கருத்துக்களை படிக்க பார்ப்பன ஜெயா, கலைஞர், முக ஸ்டாலின், சு.சுவாமி, கமல், ஹிந்துத்வா வெறிக்கும்பல் ஆகிய அனைவரும் மதிமாறன் தளத்துக்கு வருகின்றனர். முஸ்லிம்களின் வேதனைகளையும் குமுறல்களையும் இந்த செவிடர்களுக்கு எடுத்துச்சொல்லும் வாய்ப்பு கிட்டியது. முழுமையாக மண்டையில் ஏறாவிட்டாலும், ஓரளவு இந்த அயோக்கியரின் மனசாட்சியை எனது எழுத்துக்கள் உலுக்கியிருக்கும் என நம்புகிறேன்.

    மதிமாறனுடைய சில கருத்துக்களை எதிர்த்தாலும், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் பாராட்டும் உண்டு. ஒரு அயோக்கிய நன்பனாக இருப்பதைவிட நேர்மையான எதிரியாக இருப்பது மேல். நன்றி.

  8. முஹம்மத் அலி ஜின்னா, இனிமேல் உங்கள் இஷ்டபடி பொறுக்கித் தனமாக என் பக்கத்தில் வந்து எழுதாதீர்கள்.

  9. // முஹம்மத் அலி ஜின்னா, இனிமேல் உங்கள் இஷ்டபடி பொறுக்கித் தனமாக என் பக்கத்தில் வந்து எழுதாதீர்கள். //
    —————-

    எனது பதிவுகள் அனைத்தையும் நீங்கள் டெலிட் செய்யலாம். எந்த மனக்கசப்பும் கிடையாது. நன்றி.

  10. படேல் சமுகம் நல்ல வசதியான சமுகம் தான். நம்ம ஊரில் எப்படி முதலியாரோ அந்த மாதிரி அவர்களும் கெட்டிகாரர்கள் தான்
    இடஒதுக்கீடு அளவை குறைத்து தாழ்த்தப்பட்டவர்கள் குறிப்பாக அருந்ததி இன மக்களுக்கு கொடுக்க வேண்டும். பறையரும்,பள்ளரும்
    மற்ற தாழ்தபட்டவரும் அவர்களை முன்னேற்ற உதவ வேண்டும். தாழ்தபட்டவர்களில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களை நீக்கி விட வேண்டும்..
    மேல் ஜாதி, பிராமணர் பிற்பட்ட ஜாதியிலும் உள்ள ஏழைகளுக்கு அரசாங்கம் இட ஒதுக்கீடு அளிக்க முன் வரவேண்டும். சமுக அளவு கோலும்
    பொருளாதார அளவு கோலும் தான் இந்த பிரச்னையை தீர்க்கும். இல்லை என்றால் எதிர்காலத்தில் மேல்ஜாதிகாரர்கள் போராட்டம் நடத்துவார்கள் அதன் ஆரம்பம் தான் படேல் ஜாதி போராட்டம்.

  11. சந்திப் பாட்டில் மராட்டியர் தான் ஆனால் ஒருநாள் போட்டிக்கு தான் லாயக்கு அவர் காடா பிளேயர்
    அவரை போய் 82-83 பாகிஸ்தான் டூருக்கு தண்டமாய் டீமில் எடுத்தார்கள். எல்லாம் அரசியல் மற்றும் அவர் அப்பாவும்
    முன்னாள் வீரர்கள். கீர்த்தி ஆசாத்தும் அதே ரகம் தான்

  12. //The Indian government’s decision to promote the moderate school of Islam has been gaining dividends. The fatwa that was issued by over 1,000 muftis and imams from across the country against the ISIS today is the biggest. A fatwa against the ISIS was issued today by Indian Islamic scholars, muftis and imans numbering over a 1,000

    Read more at: http://tamil.oneindia.com/news/india/india-roping-moderate-muslims-the-results-are-showing-235388.html?utm_source=vuukle&utm_medium=referral//

    இது வரவேற்க பட வேண்டியது இந்திய அரசாங்கத்தையும் இமாம்களையும் பாராட்டுகிறேன்

  13. நன்றி தோழர். மதிமாறன்!!

    எந்த ‘தேசிய’ ஊடகமும் சொல்லாத பல கருத்துக்களை, துணிச்சலுடன் பேசிய உங்களுக்கு பாராட்டுக்கள்.

    இட ஒதுக்கீடு தொடர்பான பல கேள்விகளை வரலாற்று பின்னணியோடு சீராக கேட்ட தோழர். சுகிதாவுக்கும் வாழ்த்துக்கள்.

    உங்கள் பணி மென்மேலும் வளரட்டும்…

Leave a Reply

%d bloggers like this: