Site icon வே. மதிமாறன்

‘ஒரு வௌம்பரம்..’ – ‘என்னடா வௌம்பரம்…’

அந்த சினிமாக்காரங்கதான் அப்படி செய்யிறாங்க..’
*
‘நாளை மற்றுமொரு நாளே’ என்றுதான் என் பிறந்தநாளை கடந்து செல்வேன். நானாக யாரிடமும் ‘எனக்கு அன்று பிறந்தநாள்’என்று சொன்னதுமில்லை. அதன் காரணத்திற்காகவே facebook ல் என் பிறந்த தேதியை நான் குறிப்பிட்டவும் இல்லை.

ஆனாலும் என் பிறந்த தேதியை எப்போதோ என்னிடம் தற்செயலாகக் கேட்டறிந்த நண்பர்கள், தோழர்கள் இந்த ஆண்டு அதை நினைவில் வைத்திருந்து facebook ல் தங்கள் பக்கத்தில் வாழ்த்து சொல்லி நேற்று (17) பதிவிட்டிருந்தார்கள்.

சில மணிநேரங்களில் பல தோழர்கள் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி facebook முழுவதும் வாழ்த்துகளால் நிரப்பி விட்டார்கள். பிறகு அது வாட்ஸ் அப், தொலைபேசி என்று நேற்று ஆரம்பித்த வாழ்த்து மழை இன்றுவரை முடிந்தபாடில்லை.

பழகிய தோழர்கள் மட்டுமல்ல, நான் இதுவரை பார்த்திராத பல தோழர்கள் ஏதோ பெரிய தலைவர், பிரமுகரைப் போல் என் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொன்னது, எனக்குக் கூச்சமாகப் போய் விட்டது.

இந்த வாழ்த்துகள் என் பிறந்தநாள் சார்ததுதான் என்றாலும் அது என் ஜாதி, மதம் என்ற பிறப்பு சார்ந்து வந்த வாழ்த்தல்ல, என் அரசியல் நிலைபாடு காரணமாகக் கிடைத்த வாழ்த்து.
இதை இப்படிப் புரிந்து கொள்கிறேன். ஜாதி, மதத்திற்கு வெளியிலிருந்து ஜாதி பின்னணியில்லாமல் ஜாதி எதிர்ப்பை பேசியதால் எனக்குக் கிடைத்த அங்கீகாரம்.

எதையும் யாரையும் ஆதரிப்பது எதிர்ப்பது என்பதை ஜாதிய பின்புலத்தோடே பார்க்கிற இன்றைய சூழலில்,
‘ஜாதிக்கு வெளியில் செயல்பட்டாலும் தோழர்களின் ஆதரவு பெருமளவில் கிடைக்கும்’ என்று எனக்கு உணர்த்திய, புரிய வைத்த, உற்சாகப்படுத்திய தோழர்களுக்குத் தனித் தனியாக நன்றி சொல்லவதானால் ஒரு வாரம் தாண்டி விடும் என்பதால்,

என் இனிய தோழர்கள் அனைவருக்கும் இதன் மூலம் ஓரே நன்றியாகச் சொல்லி விடுகிறேன். நன்றி.

Exit mobile version