காந்தி…?

gandhi

இரண்டாம் பதிப்பு

*

முதல் பதிப்பு சென்ற ஆண்டு புத்தகக் காட்சி முடிவதற்கு மூன்று நாட்களுக்கு முன் வந்தது. மூன்றே மாதத்தில் முதல் பதிப்பு விற்றும் தீர்ந்தது.

என்னுடைய இணைய பக்கதில் தோழர்கள் எழுதிய விமர்சனத்தை தவிர வேறு எதிலும் நூல் அறிமுகம் கூட வராமலேயே, புத்தகத்தைப் படித்த தோழர்களின் பரிந்துரையினாலேயே சாத்தியமானது.

 அதன் பிறகு  இனிய தோழர் அமரசேன் முயற்சியில் ஆரணியில் அறிமுக விழா நடந்தது. சிந்தனையாளன் இதழில் நூல் அறிமுகம் பகுதியில் இடம்பெற்றது. இனிய தம்பி கார்ட்டூனிஸ்ட் பாலா அவருடைய Facebook ல்  அறிமுகம் செய்து எழுதினார்.

என் அன்பிற்கினிய தோழர் அரசெழிலன் என் இணையத்தில் இந்தப் புத்தகத்திற்கு தோழர்கள் எழுதிய விமர்சனத்தை தொகுத்து ‘நாளை விடியம்’ சிறப்பிதழாகவே போன மாதம்  கொண்டுவந்தார்.

தோழர்கள் அனைவருக்கும்  நன்றியை என் சார்பாகவும் வெளியீட்டாளர் தோழர் டார்வின் தாசன் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனாலும் காந்திய அபிமானிகள் காந்தி குறித்த என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கள்ள மவுனம் காக்கிறார்கள்.

இத்தனைக்கும்,

‘காந்தியை சாட்சியாக வைத்தே,காந்தியின் அடிப்படையையே கேள்விக்கு உட்படுத்தி இருக்கிறேன்.

இரண்டில் ஒன்று முடிவு காண வேண்டும்.

ஒன்று என் கேள்விகளுக்குரிய பதில்களைச் சொல்லி, என்னை காந்தியவாதியாக மாற்ற வேண்டும்.

முடியவில்லை என்றால், அவர்கள் காந்தியை விட்டொழிக்க வேண்டும்.

தமிழ்த் தேசியம், இந்திய தேசியம், இந்து தேசியம், பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம் இவைகளோடு காந்தியத்தையும் கலந்து பேசுபவர்களில் இருந்து, கதை எழுதும் காந்திய இலக்கியவாதிகள், காங்கிரஸ்காரர்கள் உட்பட,

கதர் காந்தியவாதிகள் முதல், கார்ப்பரேட் காந்தியவாதிகள் வரை சகலவிதமான காந்தியவாதிகளுக்கும் இதை சவாலாக சொல்கிறேன்.

ஆட்டத்திற்கு நான் ரெடி.

 நீங்க ரெடியா?’ என்று வெளிப்படையாக எழுதியிருந்தேன். இன்றுவரை சத்தமில்லை.

*

புத்தகத் தொடர்புக்கு: ஞா. டார்வின் தாசன் 9444 337384

தொடர்புடையது:

இரண்டு புத்தகங்கள் மூன்றாம் பதிப்பாக வந்திருக்கிறது..

14 thoughts on “காந்தி…?

  1. காந்தியின் மாயபிம்பத்தை தோலுரிக்கத் தயாராகும் நண்பர் மதிமாறனின் இரண்டாம் பதிப்பான காந்தி ஒரு துரோகி நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துகள்! இந்நூல் பல புதியவர்களை, இளைஞர்களைச் சென்று சேருமாறு இருப்பதற்கு போதிய கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டு, நம் தமிழ் உறவுகளுக்கு, இணைய நட்புகளுக்கு தை முதல்நாள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளையும், தமிழர் திருநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். காசிமேடுமன்னாரு.

  2. ஐயா அறிவாளி இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள் .. 🙂

    தென்னாப்பிரிக்காவில் ‘மாரிட்ஷ்பர்க்’ ரயில் நிலையத்தில் அவருக்கு ஏற்பட்ட அவமரியாதை, நிற வேறுபாட்டினால் அல்ல; ரயிலில் டிக்கெட் எடுக்காத காரணத்தால்தான் என்று காந்தியின் எழுத்துக்களில் இருந்தே நான் நிரூபித்திருக்கிறேன் ………. ///

    சத்திய சோதனை >> 8. பிரிட்டோரியாவுக்குப் போகும் வழியில் >> http://218.248.16.19/slet/lA100/lA100pd1.jsp?bookid=221&pno=133

    வ.உ.சியின் குடும்ப வறுமையைப் போக்க தென்னாப்பரிக்க தமிழர்கள் ரூ.5000 ம் நிதியை திரட்டி அதை வ.உ.சியிடம் ஒப்படைக்குபடி காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள்.
    வ.உ.சி கடிதம் மூலமும் நேரிலும் பலமுறை கேட்டும் உத்தமர் அகிம்சாமூர்த்தி மகாத்துமாக அநதப் பணத்தை வ.உ.சியிடம் தரவே இல்லை. இதுதான் தேசப்பிதாவின் வண்டவாளம்

    On February 4, 1916, VOC wrote to a friend, in Tamil, “Rs. 347-12-0 has come from Sriman Gandhi … http://www.hindu.com/mag/2003/01/26/stories/2003012600160200.htm

  3. மண்குதிரை
    என் புத்தகத்தில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை படித்துவிட்டு, பிறகு ஆற்றில் இறங்கவும்

  4. No one is perfect. We should try to combine the good things from each one.
    Kunam nadi kutramum nadi ……….. even thiruvalluvar may not be perfect.
    N.S.Krishnan seems to have said that we need Gandhi to save India and Periyar to save Tamil Nadu. In my opininon, Gandhian economics and Periyar’s politics should be fruitfully combined to save the whole world.
    T.Sengadir

Leave a Reply

%d bloggers like this: