“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்
*
“பெரியாரின்
முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
இதுமுடி
வெட்டும் தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.
*
“என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
பிராமணனும் மனுசந்தாங்க.
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?”
இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக்க
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.
ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?
-வே. மதிமாறன்
***
பேராசரியர் சுபவீ நடத்திய ‘இனி’ மாத இதழுக்காக
1993 அக்டோபரில் எழுதியது.
தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தக் கவிதை மறுபிரசுரம் செய்யப்படுகிறது
தொடர்புடையவை:
‘பெரியாரை புரிந்து கொள்வோம்’-கலந்துரையாடல்
பெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்யார் தமிழனவிரோதி? அல்லது, கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?
தமிழ்த்தேசியம்+இந்திய தேசியம் =பெரியார் எதிர்ப்பு * தேசியத் தலைவர்கள் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர் மீது பாசம் -டாக்டர் அம்பேத்கர் மீது காழ்ப்புணர்ச்சி -இதுதாண்டா தமிழ்த்தேசியம்

