Site icon வே. மதிமாறன்

கோமாதா Vs மாட்டுக்கறி – நிலநடுக்கம்

1000 கணக்கான மக்கள், நேபாளத்தில் நிலநடுக்கத்தால் மரணமடைந்திருக்கிறார்கள். அவர்களை அவமானப்படுத்துவது போல் ‘மாட்டுக்கறிச் சாப்பிட்டதினால் பூகம்பம் வந்தது’ என்கிறார் ஒரு இந்து தலைவர்.
உலகின் ஒரே இந்து நாடு நேபாளம். பதிலுக்கு ‘இந்து நாடாக இருப்பதினால்தான் நிலநடுக்கம் வந்தது’ என்றால்… இந்து தலைவர்கள் என்ன விளக்கம் தருவார்கள்?

அது சரி. இந்து நாடாக அறிவித்திருக்கிற அங்கேயே மாட்டுக்கறிச் சாப்பிடுகிறார்கள். அப்புறம் இங்க.. மதசார்பற்ற நாட்ல மாட்டுக்கறிக்குத் தடை விதிப்பதுதான் இந்து தர்மமா?
*
‘மாட்டுக்கறி’ நில நடுக்கத்தைக் கொடுக்கல… இந்து அமைப்புகளுக்குத்தான் ‘நடுக்க’த்தைக் கொடுக்குது. ஆட்சியில் இன்னைக்குப் பில்டிங் ஸ்ட்ராங்கா இருந்தாலும்… பேஸ்மெண்ட் ஆட்டக் காணுதில்ல..
இது ‘கோமாதா’விற்கும் ‘மாட்டுக்கறி’க்கும் நடக்குற யுத்தம்.
10 hrs · Edited ·

மாட்டுக்கறியே இந்திய வரலாறு;அண்ணல் பிறந்த நாளில் பெரியார் திடலில் திரளுவோம்

வாஞ்சிநாதன்; தேசப்பற்றால் மூடப்பட்ட ஜாதிவெறி

Exit mobile version