பாரதி யை ‘அம்பலப்படுத்தி’ எழுதியதற்குப் பதில், பெரியாரை ‘அவதூறு’ செய்து எழுதியிருந்தால், ஊடகங்களால் மாபெரும் எழுத்தாளனாகக் கொண்டாடப்பட்டிருபாய்.
ஆனந்த விகடனில் ‘அட்டகாச’ தொடர்களும் ஜுனியர் விகடனில் ‘அதிரடி’ தொடர்களும் எழுதியிருக்கலாம். குமுதமும் கொண்டாடி இருக்கும். கல்கி உன்னை கண்ணியமிக்க அறிவாளியா அடையாளப்படுத்தியிருக்கும்.
ஜெயகாந்தனிலிருந்து ஜெயமோகன் வரைக்கும் பெரிய ஆளா ஆனாங்க என்றால் சும்மாவா? வேணுன்னா ரவிக்குமாரைக் கேட்டுப் பாரு.
குறைந்தபட்சம் பாரதி யை விமர்சித்து எழுதாமலாவது இருக்கக் கூடாதா? இது போதாதற்கு டாக்டர் அம்பேத்கரைக் கொண்டாடியும், அவரைப் புறக்கணிக்கிற ‘முற்போக்காளரை’ அம்பலப்படுத்தியும் எழுதினால்…
பார்ப்பன – சூத்திரப் பத்திரிகையாளர்கள் உன்ன வெத்தலப் பாக்கு வைச்சுக் கூப்பிடுவாங்களா?
8 May at 08:05
அபசகுனம்; தினமணி தினத்தந்தி ஜுனியர் விகடன்
ஜெனியூனானவர்கள் என்றால் சுயஜாதி அபிமானம் இல்லாதவர்கள்தான்
தி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை
‘புரட்சிகர மாற்றம்! தி இந்து’ வில். ஆச்சரியம் ஆனால் உண்மை; அதே விலை!
