வைகுண்ட பதவியை அடைய பெரியார் பாணி்;ஜுனியர் விகடன் அழைக்கிறது

Vaikunda Ekadasi

ந்தை பெரியார் திராவிடர் கழகம், பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் கருவறை நுழைவுப் போராட்டதை அறிவத்துள்ளது.

‘இந்து மக்கள் கட்சி’ என்ற ஒன்று, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘கோயில் கருவறையில் நுழையும் நீ உன் தாயின் கருவறையில் நுழைவாயா?’       ‘கருவறைக்குள் நுழைந்தால் கல்லறைக்குள் செல்வாய்’ என்று ‘பஞ்ச்’ டயலாக்கோடு சென்னை நகரமெங்கும் சுவரொட்டி ஒட்டி உள்ளது.

தினமும் கோயில் கருவறைக்குள் பலமுறை சென்று வருகிறார்களே அர்ச்சகர்கள், குருக்கள், பட்டாச்சாரிகள், தீட்சிதர்கள் அவர்கள் எல்லாம் தங்கள் தாயின் கருவறைக்குள் சென்று வருகிறார்கள் என்று அர்த்தமாகாதா?

இப்படி அர்ச்சகர்கள், குருக்கள், பட்டாச்சாரியார்கள், தீட்சிதர்களை இந்து மக்கள் கட்சி அவமானப்படுத்தலாமா?

அது மட்டுமல்ல, ‘கருவறைக்குள் நுழைந்தால் கல்லறைக்குள் செல்வாய்’ என்பது அர்ச்சகர்கள், குருக்கள், பட்டாச்சாரிகள், தீட்சிதர்களை கொலைகாரர்கள் போல் சித்தரிப்பது முறையா?

பெரியார் தொண்டர்களை கேவலப்படுத்த நினைத்து ஆத்திரத்தில், இப்படி அறிவிழக்கலாமா? அதனால்தான் பெரியார் ‘கடவுளை மற; மனிதனை நினை’ என்றார்.

*

இன்று (22-12-2012) காலை தோழர் ஆறுமுகம் (பி.எஸ்.என்.எல்) தொலைபேசியில் அழைத்தார். பெரியா் நினைவு நாளன்று வைத்திருக்கும் தன் மகளின் திருமணத்திற்கு மறந்துவிடாமல் வரவேண்டும் என்று நினைவூட்டினார். முன்பே நேரிலும் தன் துணைவியாரோடு வந்து அழைத்திருந்தார்; இருந்தாலும் அவருக்கு ஒரு சந்தேகம்; நான் வாரமல் போய்விடுவேனோ என்று.

அப்போது அவர்தான் சொன்னார், ‘ஜுனியர் விகடனில் கருவறை நுழைவுப் போரட்டத்தைப் பற்றி செய்தி வந்திருக்கிறது. அதில் பெரியார் பற்றி  ஏடாகூடமான ஒரு குறிப்பும் வந்திருக்கிறது. அதை பாருங்கள்.’  என்று அந்தப் பக்கங்களை ஸ்கேன் செய்து அனுப்பியும் வைத்தார்.

கோயில் கருவறை நுழைவுப் போராட்டதைப் பற்றிய செய்தி வெளிட்ட ஜுனியர் விகடன், ‘கபாலீ்ஸ்வரர் கோயில் கலாட்டா!’ என்று தலைப்பிட்டு,  அதற்குள் பெட்டி செய்தியாக ஒரு குட்டி செய்தியை வெளியிட்டிருக்கிறது:

பெரியாரும் வைகுண்ட ஏகாதசியும்!

மூடநம்பிக்கை ஒழிப்பு, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, கடவுள் மறுப்பு என்று தனது வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிட்ட பெரியார் 1973-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி காலமானார். அன்று வைகுண்ட ஏகாதசி. அதற்குப் பிறகு 39 ஆண்டுகள் கழித்து, இந்த ஆண்டுதான் பெரியார் நினைவு நாளும் வைகுண்ட ஏகாதசியும் ஓரே நாளில் வருகிறதாம்.’

இப்படி ஒரு கண்டுபிடிப்பின் மூலம் தன் வாசகர்களுக்கு என்ன சொல்லவருகிறது என்பதையும் ஜுனியர் விகடன் தெளிவாக சொல்லியிருந்தால், நாம் அதைப் பற்றி விளக்கி எழுத வேண்டிய தேவை எழுந்திருக்காது.

அநேகமாக தன் வாசகர்களுக்கு குறிப்பாக வைணவ வாசகர்களுக்கு, ‘நீங்கள் வைகுண்ட பதவியை அடைய வேண்டுமானால், இனி பெருமாளை வணங்குவது, திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு அடிக்கடி செல்வது, விரதம் இருப்பது; குறிப்பாக வைகுண்ட ஏகாதசி அன்று கண்முழித்து விரதம் இருப்பது இதெல்லாம் தேவையில்லை.

பெரியார் வழியில் கடவுளை எதிர்த்து திவீரமாக பிரச்சாரம் செய்யுங்கள். குறிப்பாக ராமன் படத்தை செருப்பால் அடியுங்கள். நீங்கள் வைகுண்ட பதவிக்கு செல்லலாம்.

வாருங்கள் வைணவர்களே, பக்தர்களே; பெரியார் போல் ராமன் படத்தைச் செருப்பால் அடித்து, வைகுண்ட பதவியை அடைவோம்.

என்று அறிவிப்பதாக இருக்கிறது ஜுனியர் விகடனின் ‘அரிய’ பெரியார் பற்றிய புதிய தகவல்.

தொடர்புடையவை:

இலக்கியத்தில், அரசியலில் உடன் பிறந்த வியாதிகள்

கம்பராமாயணத்தில் அறிவியல்!

பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

18 thoughts on “வைகுண்ட பதவியை அடைய பெரியார் பாணி்;ஜுனியர் விகடன் அழைக்கிறது

  1. எப்படி உங்களுக்கு ஒரு நம்பிக்கை உள்ளதோ, அதுபோல் இறை நம்பிக்கையாளர்களுக்கும் ஒரு நம்பிக்கை உள்ளது.
    எல்லாமே அவரவர் நம்பிக்கையைச் சார்ந்தது.

  2. உளறலின் உச்சக்கட்டமாக ‘இந்து மக்கள் கட்சி’ என்ற ஒன்று இயங்குகிறது. நம் மக்கள் விழிப்படைய வேண்டும். எங்கெங்கும் சமத்துவம் வேண்டும். அது கோயிலாக இருந்தால் என்ன? சுடுகாடாக இருந்தால் என்ன? ஜூவிக்கு சரியான விடை அளித்தீர்கள் தோழர். தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மக்கள் போரட்டம் வெல்லட்டும். களப்பணியாற்றும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

  3. வைகுண்ட ஏகாதசி அன்று காலமான பெரியார் இப்போது வைகுண்டத்தில் தான் இருக்கிறாரோ என்னவோ, நாம் என்ன கண்டோம்!

  4. உனக்குத்தான் கடவுள் நம்பிக்கையே இல்லையே பின்ன என்னத்துக்கு கோயில் நுழைவு போராட்டம்?

    சிவலோக பதவி அடைந்தவரை சிவன் ரூபத்தில் தரிசிக்கவா?

    கோயிலுக்கு போறவனை பெரியார் திடலுக்கு அழைத்துச் செல்ல முயன்றால் உனக்கு என்று ஒரு நோக்கம் உண்டு என்று புரிந்து கொள்ளலாம், ஆனால் பெரியார் திடலில் இருப்பவர்கள் எல்லாம் கோயிலுக்கு கிளம்பினால்………….. என்னதான்டா உங்க கொள்கை? அங்க போயி நீ மணியாட்ட போறீயா?

  5. இல்லாத கடவுளை இருப்பதாக நம்பிக்கொண்டு, கடவுளுக்குரிய குணங்கள் இன்ன.. இன்ன.. என்று இவனே எழுதி வைத்துக் கொண்டு… அந்த குணத்திற்கு இவனே அஞ்சி நடுங்கும் கோமாளித்தனத்தை என்னவென்று சொல்ல? இவனே செய்த செங்கல் மூன்றை கிணற்றடியில் இவனே நட்டுவைத்து விட்டு, அதன் காலடியில் (???) இவனே விழுந்து வணங்கும் கிறுக்குத்தனத்தை என்னவென்று சொல்ல? இதனால்தான் தந்தை பெரியார் அன்றைக்கே கடவுளை வணங்குபவன் முட்டாள், காட்டுமிராண்டி.. என்று அழுத்தம் திருத்தமாக பொட்டிலடித்த மாதிரி சொன்னார். வேடிக்கை என்னவென்றால், இந்த கடவுளை நம்பும் அறிவுக் கபோதிக் கூட்டத்தாருக்கு, மனித நாகரீகம், பண்பு என்பதை இன்னும் கற்கும் நிலையில்தான் உள்ளனர். இவர்களின் அறிவுக்குருடின் வெளிப்பாடே, இவர்கள் மற்றவர்களை ஒருமையில் அழைத்து, மனித மரியாதைக்கும் எங்களுக்கும் வெகுதூரம் என்பதைத்தான் நமக்கு அறிவுறுத்துகிறார்கள். கடவுளை நம்பும் முழுமுட்டாள், கடவுள் என்ற பீ யை விட்டு விலகினால் மட்டுமே அவன் மனித நாகரிகம் தெரிந்த மனிதனாவான். காசிமேடுமன்னாரு.

  6. ஏம்பா மண்னாரு,

    கேள்விய புரிஞ்சிக்காம மனிதம் அப்படி இப்படின்னு , ஏன் மண்ணு மாதிரி பேசுற?

    கடவுள் என்னும் பீயை, எல்லா சாதிக்காரனும் நக்கனும்ன்னு நீதானே சொல்லுற, பீன்னு தெரிஞ்சும் அதை நக்கச்சொல்லுற கருப்பு கூட்டம்தான் உலகின் ஒரே ஒரு அறிவாளி கூட்டம்.

    ஆட்டு மந்தை போல கூட்டமா கோயிலுக்கு போனீங்களே, பொங்கல் தின்னீங்களா? இல்ல பீயை தின்னீங்களா? (இங்கு பீ என்பது உன் பாஷையில்)

  7. //இந்த கடவுளை நம்பும் அறிவுக் கபோதிக் கூட்டத்தாருக்கு, மனித நாகரீகம், பண்பு என்பதை இன்னும் கற்கும் நிலையில்தான் உள்ளனர். இவர்களின் அறிவுக்குருடின் வெளிப்பாடே, இவர்கள் மற்றவர்களை ஒருமையில் அழைத்து, மனித மரியாதைக்கும் எங்களுக்கும் வெகுதூரம் என்பதைத்தான் நமக்கு அறிவுறுத்துகிறார்கள். //
    காசிமேடுமன்னாரு.

  8. இருக்குற தலித்துகள் எல்லாறையும் கூட்டிகிட்டு நம்ம தலைவர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்வீரமனி (சவுண்ட் கொறைஞ்சிடுச்சு அதான் சின்ன -னி-) வீட்டுக்குபோயி ஒங்க இய்க்கத்துல உள்ள அறக்கட்டளையில ஒங்க பொண்டாட்டி,மகன்,மருமகன்,மருமக,மாமியாரு இவங்கள போடுறதுக்கு பதிலா எங்களை போடனணும்ன்னு ஆர்ப்பாட்டம் பண்ணபோறோங்க…அதுக்கு நீங்கதான் தலீவரு, நான் செயலாளர்.ஹீ..ஹீ.செக் புக்குலயெல்லாம் நாந்தான் கையெழுத்துப்போடுவேன்…ஆமாம் முன்னாடியே சொல்லீட்டேன்

  9. இன்றைய திகவினர் கோழைகள் சுய நலக்காரர்கள் இவனுங்க ஈனம் மானம் சூடு சொரனை இருக்கிரவங்களாக இருந்தா நாகூர் தர்காவுலயும் வேலாங்கன்னி சர்சிலையும் போய் போராட்டம் பன்னட்டுமே அங்க போனா மத கலவரம் வரும் இந்துன்னா இலிச்சவாயனுங்க அப்படித்தானே. இன்னிக்கு திராவிட கழகத்தில இருக்கிறவனுங்க எல்லாம் தர்ம பிரபுவா இருக்கானுங்களா இவனுங்க கபாலீஸ்வரர் கோயில் கருவரையில நுழையரதால என்னத்த மாத்திட முடியும் இதனால ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் உண்டா?

  10. சி.சிங்காரம், மிகச்சரியாகச் சொன்னீர்கள்.

    தலீவரு பதவிக்கு மதிமாரன்தான் கரெக்கிட்டூ, ஏன்னா சம்பாதிக்கிறத எல்லாம் கஷ்ட்டப்படுற பறையனுக்கும், பள்ளனுக்கும் கொடுத்துட்டு, நம்ம மதி சோத்துக்கே ஜிங்கி அடிக்கிறாருன்னா பாத்துக்கோங்களேன்.
    பாவம் இன்னிக்கு கபாலி கோயில்ல பசிக்கு உண்ட கட்டி வாங்கின்னு வரச்சொல பாத்துட்டு எனக்கே கண்ணுல தண்ணி வந்துச்சுன்னா பாத்துக்கோங்களேன்.

    மதிதான் தன்னலமற்ற, சமூக நீதி காத்த மாவீரன்.
    மதிக்குத்தான் தலீவரா வரத்தகுதி இருக்கு,
    மண்னாருக்கு பொருளாளர் பொறுப்பு.

    அப்படி நடந்தால், பசிக்கு உண்ட கட்டிவாங்க கபாலி கோயிலுக்கு வரத்தேவல, அல்லாமே பெரியார் திடலில் கிடைக்கும்.

    திடலே திருக்கோயில்
    பெரியாரே பெருமாள்

  11. Kadavul nambikkai mooda nambikkaiyaaka maarum bothu thaan prachanai. Makkalai moodarkalaakki kaasu paarkum koottathai ozhikka vendum.

  12. பெரியார் தொண்டர்கள் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்துவது தமிழனை கடவுளிடம் கொண்டு போவதல்ல! (கடவுளை நம்பும் அறிவுக் கபோதிகளுக்கு அ ன்னா ஆ வன்னா விலிருந்துதான் மறுபடியும் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது) தமிழனுக்குள்ள உரிமையை அவனுக்குப் பெற்றுத்தர வேண்டுமென்பதற்காகவே. தமிழன் கட்டிய கோயிலில் அவன் நுழைந்தால் (மட)சாமி தீட்டாகிவிடுமென்று தமிழனை பார்ப்பான் தடுத்து வைப்பதை, கூடாது என்றும், உள்ளே சென்று சாமி கும்பிடுவது அவனது உரிமை.. அதைப் தமிழனுக்குப் பெற்றுக் கொடுக்கவே போராட்டம்.
    உரிமையைப் பெறுவது வேறு, பகுத்தறிவுப் பரப்புரை செய்வது வேறு. முதலில்.. தமிழன் உரிமையோடு வாழவேண்டும் என்பதே பெரியார் தொண்டர்களின் அவா. அதற்கு குறை ஏற்படின் பெரியார் தொண்டன்தான் அதற்காகப் போராட வரவேண்டியிருக்கிறது.
    வீரமணியை பெரியார் தொண்டர்கள் ஒரு பொருட்டாக எண்ணுவதேயில்லை. கடவுளை நம்பும் அறிவுக் கபோதிக் கூட்டத்துக்கு வீரமணி முக்கியமாகத் தெரிந்தால், அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?
    நாகூர் தர்காவில் ஒரு தமிழன் இமாமாகவோ முல்லாவாகவோ வரலாம். வேளாங்கண்ணி கோயில் கண்டிப்பாக ஒரு தமிழன்தான் பாதிரியாக இருப்பான், கிறித்தவ தலைமைப் பீடத்தில், மாவட்டத்துக்கு ஆயனாகவோ, பேராயனாகவோ தமிழன்தான் இருப்பான். ஆனால் இந்து மதம் என்ற மூடத்தனமான மதத்தில் ஒரு தமிழன் அர்ச்சகனாக வரமுடியுமா? ஒரு சங்கராச்சாரியாக வர முடியுமா? என்னதான் வேத ஆகமங்களை வேதாகமக் கல்லூரியில் படித்தாலும் தமிழன் அர்ச்சனை செய்ய பார்ப்பான் சம்மதிப்பானா? நுழைய அனுமதிப்பானா? மூடக் கடவுளை நம்பும் குருட்டு மூடர்களே, முட்டாள்களே.. உங்களால் பதில் சொல்ல முடியுமா?
    மனித நாகரிகமற்ற வந்தேறி பார்ப்பனர்களே… மதிமாறனை, காசிமேடுமன்னாரை வசை பாடத்தான் முடியும் உங்களால்!
    மனிதப் பண்பு என்றால் என்ன என்பதை அறிந்த்ருக்கிறீர்களா? நாகரீகம் என்பதை அறிந்திருக்கிறீர்களா? கடவுள் கடவுள் என்று எங்கள் தமிழர்களிடம் ஏமாற்றி காசு பறிக்கும் கூட்டமாகிய நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கள்!
    தமிழனைப் போல் உடலை வருத்தி வேலைசெய்து சாப்பிட்டால் மனித நாகரீகத்தை அறிந்திருப்பீர்கள்.
    எங்கள் கிராமத்துக்குப் போய் பாருங்கள். எங்கள் தமிழர்களை.. உழைத்து உண்ணும் நாங்கள் மனிதனை நேசிப்பவர்கள். உங்களைப் போல் ஏமாற்றும் கூட்டமல்ல.. சாஸ்திரம், சம்பிரதாயம், ஜோசியம், கடவுள், சாதி இப்படி ஏகப்பட்ட சாக்கடை சமாச்சாரங்களை எங்கள் தமிழர்களீடம் திணீத்து எங்கள் மக்களைச் சுரண்டி சொகுசு வாழ்க்கை நடத்தும் நீங்களா எங்களை எள்ளி நகையாடுகிறீர்கள்? வெட்கமாக இல்லை உங்களூக்கு? உப்பு போட்டு தின்றால்.. தமிழ் நாட்டை விட்டு வெளியேறுங்கள்?
    தொடர்ந்து எங்கள் மக்கள் உங்களை சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
    எங்கள் மக்கள் உங்களைப் பற்றி என்றைக்கு உணர்கிறார்களோ… அன்று உங்கள் கதி அதோ கதிதான்..! நினைவில் வைத்திருங்கள் ஏமாற்றுப் பார்ப்பனர்களே..
    காசிமேடுமன்னாரு.

  13. உரிமைக்காக கோவிலுக்குள் (சர்ச்க்குள்ளும்) நுழைவோம்!
    பகுத்தறிவிற்காக கடவுள் இல்லை என்போம்!

    இப்படி முரண்பாடுகளின் மூட்டையாக இருப்பதால்தான் உன்னை எவனுமே மதிக்காமல் மிதிக்கிறார்கள்.

    உழைத்து உண்ணும் ஒரு கிராமத்து மனிதர்களின் கோவில்களில் பள்ளன், பறையன் இருவரையும் அனுமதிக்கனும், அனுமதித்து உரிமையை நிலை நாட்டிய பின்னர் கோவிலே வேண்டாம் என்று சொல்லிப்பாரு; செருப்பால அடிச்சு உன்னை ஊரைவிட்டே துரத்துவானுக . யார் உன்னை செருப்பால அடிப்பா? அனைத்து சாதியினரும் அர்ச்சகராகனும் என்று போராடுறீயே அதுல ஒருத்தன். அந்த கிராமத்து மனிதன் தமிழன் இல்லையா? அவனும் பார்ப்பானா?

    பிள்ளைமார் மட்டும்தான் ஆதீனமாக வரமுடியும் எப்படி முதலியாரை ஆதினமாக்கலாம் என்று பிள்ளைமார்கள் எல்லாம் மதுரை ஆதினத்து எதிராக போராடினார்களே, அப்போ நீ போயி ப&ப வையும் சேத்துக்க சொல்லி நீ போராடியிருக்கனுமா இல்லியா? அந்த பிள்ளைமாரும் தமிழன் இல்லையா? அவனும் பார்ப்பானா?

    தென்மாவட்டங்களில் நாடார்களுக்கு என்று தனி சர்ச் இருக்கே அங்க போயி போராடு, எத்தனை சர்க்குள்ள ப&ப அனுமதிக்க மறுக்கப்படுகிறது என்பது தெரியுமா? அங்க போயி உரிமையை நிலைநாட்டு, காயடிச்சிடுவானுக. அந்த நாடாரும் தமிழன் இல்லையா? அவனும் பார்ப்பானா?

    பள்ளன் பறையன் சக்கிலியன் தோட்டி இவனுகளில் ஒருத்தன ஒருத்தன் எப்படி மதிக்கிறானுக உரிமையை வாரி வழங்குறானுகன்னும் தெரியும்.

    இப்படி ஒவ்வொரு சாதித்தமிழனுக்கும் உதாரணம் சொல்லலாம். அப்படி பார்த்தா பார்ப்பானோடு சேர்த்து எல்லா தமிழர்களையும் தமிழ்நாட்டைவிட்டு வெளியேற்றனும். கடைசியில் இங்கு எச்சமாய் மிச்சமாய் இருப்பது பெரியாரின் விசிலடிச்சான் குஞ்சுகள்தான்.

    அதனால என்ன செய்யலாம் என்றால் பெரியாரின் விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம், ஆப்பிரிக்காவுல உள்ள ஏதாவது தனித்தீவுக்கு போய்விட்டால், உரிமையை நிலைநாட்ட அவசியமில்லை, பகுத்தறிவு பரப்புரை தேவையில்லை, கோயில் வாசலில் உண்ட கட்டிக்கு நிற்க தேவையில்லை.

    என்ன ஒன்னு, இதெல்லாம் கனவுலதான் வரும்.
    மதுரை ஆதீனம் “மதிமாரன்”
    காஞ்சி காமகோடி “காசிமேடு”

  14. //வீரமணியை பெரியார் தொண்டர்கள் ஒரு பொருட்டாக எண்ணுவதேயில்லை.//

    ஏம்பா மண்னாரு,

    வீரமணியை பொருட்டாக நினைக்காதது போல கடவுளையும் அதை நம்புவர்களையும் பொருட்டாக நினைக்காதே! கடவுளையே நம்பாத கபோதி கருப்பு கூட்டமும் கடவுளை பெரிதாக என்னி என்னி பயந்தால் நாங்கள் என்ன செய்வது.

    முதலில் பெரியார் திடலில் (வீரமணியிடம்) உன்னுடைய உரிமையை நிலைநாட்டிவிட்டு, கோயிலில் உன்னுடைய உரிமைக்காக போராடு.

    உழைத்து உண்ணும் எங்கள் கிராமத்தில், மரியாதை மதிக்கும் கிராமத்தார் ஒரு பழமொழி சொல்லுவாங்க “மொதல்ல ஓன் குண்டிய கழுவு அப்புறம் அடுத்தவன் குண்டிய மோந்து பாக்கலாம்” . இப்படி பழமொழி சொன்னவனையும் பார்ப்பான் என்று தமிழ்நாட்டை விட்டு விரட்டிவிட உன்னால் முடியாது.

  15. த பெ.க வின் போராட்ட அறிவிப்பு நல்லது. ஆனால் பெரும் அணி திரட்டல் தேவைப்படும் இது போன்ற முயற்சியை தமது ஒற்றை பலம் கொண்டு மட்டும் சாதித்து விட முடியுமா? அந்த பக்கம் அனைத்து வானரப் பிரிவுகளும் ஓன்று சேர்ந்து நிற்க கோவை ராம கிருஷ்ணன் இருநூறு பேருடன் சென்று தொலைவிலே கைதானார். எப்படி அவர்கள் ஒன்று சேர்கிறார்களோ அது போல பெரியாரிய, ஜனநாயக மற்றும் புரட்சிகர சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இருந்தால் இப்போராட்டத்திற்கு செலவிடப்பட்ட உழைப்புக்கு பலன் கிடைத்திருக்கும். அடுத்த பெரியார் பிறந்த நாளில் அது நடக்கட்டும் என்று நம்புவோம்.

Leave a Reply

%d bloggers like this: