Site icon வே. மதிமாறன்

‘தமிழர் பண்பாடு’ தகர்ந்தது தடை

‘இந்துத்துவச் சதி – பா.ஜ.க வின் தமிழர் விரோதப் போக்கு – பார்ப்பன சதி’ என்றெல்லம் ஜல்லிக்கட்டுக்கு முற்போக்கு முலாம் பூசியவர்கள்
இப்போ பா.ஜ.க. வை புரட்சிகரக் கட்சி என்பார்களோ?
*

நான் கணிச்சது மாதிரியே ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கியாச்சி. அப்புறம் என்ன முக்குலத்தோர் சமூகத்திலிருந்து ஒருவரை பி.ஜே.பி. யின் தலைமை பொறுப்புக்கு தேர்ந்தெடுக்க வேண்டியதுதான்.
‘யாரங்கே.. அடுத்தக் கட்ட வேலை ஆரம்பம் ஆகட்டும். தேர்தல் நெருங்குதுல்ல.’
*
எல்லாத் தொலைக்காட்சிகளிலும் ஜல்லிக்கட்டுத் தடை நீக்கம் பற்றிய விவாதம்.
தடை நீக்கம் குறித்து நான் முன் கூட்டி எழுதியதை அநேகம் பேர் அறிவர்.
குறிப்பாக ஊடக நண்பர்கள். நிகழ்ச்சி நெறியாளுகை செய்பவர்கள், கலந்து கொள்பவர்கள் யாராவது அதை குறிப்பிட்டு சொல்கிறார்களா,
இல்லை திட்டுமிட்டு மறந்து விடுகிறார்களா? பார்த்தவர்கள் சொல்லுங்கள்.
*
புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழ்ப் பெண்ணால், கேவலம் மாட்டை அடக்க முடியாதா?
ஆமாம். ஜல்லிக்கட்டில் ஏன் பெண்கள் பங்கெடுப்பதில்லை?

‘தமிழர் பண்பாடு’ நாளை (09-01-2016) காலை 11 மணி முதல் 12 மணி வரை news7 tamil சேனல் நேரலையில் கலந்து கொள்கிறேன். நான் மட்டும்தான்.

நிச்சயம் நடக்கும் ஜல்லிக்கட்டு; தடையைத் தகர்க்கும் பா.ஜ.க

Exit mobile version