Site icon வே. மதிமாறன்

வெற்றி.. வெற்றி.. மாபெரும் வெற்றி

volkswagen-logo-evolution
போக்ஸ் வேகன் கார் கம்பெனியின் முகப்பில் ‘நமஸ்தே மதுரை’ என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டித்து மதுரையில் அந்த அலுவலகத்திற்கு சென்று தோழர்களுடன் எதிர்ப்பை பதிவு செய்தோம். அதை என் பக்கத்திலும் எழுதியிருந்தேன். (ஜுலை 23)

பிறகு கோவையில் தோழர் பாலசந்தர், கோவை போக்ஸ் வேகன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரிடம் நமஸ்தேவிற்கு எதிரான கண்டனத்தைப் பதிவு செய்தார். நமஸ்தே வை மறுநாளே நீக்கினர். அதையும் எழுதியிருந்தேன்.

அதன் பிறகு மதுரையிலும் நீக்கப்பட்டது. இப்போது அநேகமாகத் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் போக்ஸ் வேகன் நிறுவனம் ‘நமஸ்தே’ வை நீக்கியிருக்கிறது. காஞ்சிபுரத்தில் ‘வணக்கம் காஞ்சிபுரம்’ என்று பார்த்ததாக நினைவு.

நன்றி இனிய தோழர்களுக்கு. குறிப்பாக தம்பி அமர்நாத் (Amarnath Pitchaimani) அவர்தான் இதைக் கவனத்திற்குக் கொண்டு வந்து மதுரையில் நமஸ்தே வை கண்டிப்பதற்குக் காரணமாக இருந்தவர்.

‘Volkswagen’ என்றால் மக்களின் வாகனமாம். மக்களின் உணர்வுக்கு மரியாதை கொடுத்த அந்த நிறுவனத்திற்கு தோழர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
18 October

நமஸ்தே மதுரை

‘நமஸ்தே கோவை’ யை மாற்றிய பெரியார் தொண்டர்

ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO

Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்

Exit mobile version