ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO

ஸ்பௌண்டர் அய்யர்

‘தன் பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை போட்டுக் கொள்கிற இழிவான பழகத்தை தமிழகத்தலிருந்து ஒழித்தவர் தந்தை பெரியார். ஜாதி உணர்வாளர்களிலிருந்து ஜாதி சங்கத் தலைவர்கள் வரை அப்படி போட்டுக் கொள்வதற்கு வெட்கப்படும் சூழ்நிலையை அவரே உருவாக்கினார்.

இந்த அதிசயம் இந்தியாவில் வெறெங்கும் நிகழாதது. கேரளா, மேற்கு வங்கத்தில் உள்ள கம்யுனிஸ்டுகள்கூட நம்புதிரி, சட்டர்ஜி, பட்டாச்சாரியா என்று ‘பெருமை’யோடு அலைந்து கொண்டு இருக்கிறார்கள்..

என்று கடந்த ஆறு ஆண்டுகளாக பெருமையோடு நான் எழுதியும் பேசியும் வருகிறேன்.

‘என்னடா பெரிய பெரியார் பெருமை? வெங்காயம்‘ என்ற சொல்வது போல்,

வெளிநாட்டிற்கு சென்று நன்கு படித்து, நிறைய சம்பாதித்து, அமெரிக்கக்காரர்களே வியக்கும் அளவிற்கு இங்கிலிஷ் பேசி, வெள்ளைக்கார பெண்களே மிரளும் அளவிற்கு உடை உடுத்தி, நவீன நாகரிகத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டு, தங்கள் ஆச்சாரத்திற்கு எதிராக புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள்,

திரும்ப இந்தியாவிற்கு வரும்போது, ஜனனி அய்யராக, லட்சுமி அய்யங்கராக, அவதாரம் எடுத்து வருகிறார்கள்.

‘என்னங்க இது, பெண்கள்கூட ஜாதி பெயர் போட்டுக்கிறீங்க?‘ என்று கேட்டால்,

‘ஏன் ஜாதி ஆண்களுக்கு மட்டும்தான் சொந்தமானதா? பெண்கள் போட்டுக் கொள்ளக்கூடாதா?‘ என்று ஆணாதிக்க எதிர்ப்பு, புரட்சிகர வசனம் பேசுவாங்க போல…

அண்ணல் அம்பேத்கர் அமெரிக்காவில் இருக்கும்போதுதான் ‘ஜாதி ஒழிப்பு’ என்ற நூலை எழுதினார். அதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் அக்கிரகாரத்து பொண்ணு அமெரிக்காவிலிருந்து வரும்போது ஜாதியின் புத்தம் புதிய பதிப்பாக ஜாதி பட்டத்தோடு வருகிறார்.

ஆண்கள் மட்டுமே ஜாதி பெயர் போட்டுக் கொண்ட இந்தியாவின் இழிவான செயலை, அயல்நாடுகளுக்குப் போய் வந்த சில அக்கிரகாரத்து பெண்களும் செய்தததைப்போல்,

ஜாதி ஒழிக்க வந்ததாக சொல்லிக் கொண்ட கிறித்துவ நிறுவனங்கள், தன் பிரசங்கி பத்மா என்ற பெண்ணுக்கு, முதலியார் என்று இழிவான பட்டம் கொடுத்து, பத்மா முதலியார் என்று இந்து சமூகமே கேவலமாக பேசும் அளவிற்கு கொஞ்சமும் வெட்கமில்லாமல் நடந்து கொண்டன.

இவைகளை எல்லாம் தூக்கி சாப்பிடுகிற அளவிற்கு, பெரிய புரட்சி இன்று(08-11-2012) நடந்திருக்கிறது.

இன்றைய நாளிதழ்களில் HERO கம்பனியின் Splendor மோட்டர் பைக்கிற்கான விளம்பரம்,

‘ஷிவ்ராம் அய்யர் – சௌம்யா அய்யர் – ஸ்பௌண்டர்அய்யர்’

‘தந்திடுமே ஒரு குடும்பத்தின் உணர்வை’ என்று அறிவிக்கிறது.

மோட்டர் பைக்கிற்கே பூணூல் போட்டு அய்யர் ஆக்கிட்டாங்க.

நிச்சயமா, இப்படி ஒரு விளம்பர யோசனை ஒரு அய்யருக்குத்தான் வந்திருக்கும்.

மிக நிச்சயமாக அந்த அய்யர் அமெரிக்கா, அஸ்திரேலியா, அய்ரோப்பாவில் ‘டிரைனிங்’ எடுத்த அய்யராத்தான் இருப்பாரு.

ஆனால், அந்த அதிகாரி அய்யர், ஆண் அய்யரா? பெண் அய்யரா? தெரியலை.

தகுதியானவர்கள் விரும்புவதினால், அது தரமான பொருளாக இருக்கும்’ என்ற நோக்கத்தில், இந்த விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதை இப்படியும் புரிந்து கொள்ளலாம்,

‘HERO கம்பனியோட Splendor மோட்டர் பைக் அய்யர் குடும்பத்திற்கு மட்டும்தான்’

*

இந்த விளம்பரம் பார்ப்பன கண்ணோட்டம் கொண்டதாக இருக்கிறது என்று நான் கண்டித்து எழுதுகிறேன்.

வேற யாராவது வந்து, இதுக்கு பதில் எழுதுறேன் என்று,

“HERO கம்பெனி ஒரு நவீன பாரதியாக அவதாரம் எடுத்திருக்கிறது. அன்று ஜாதி ஒழிப்பிற்காக தன் வாழ்கையையே அர்பணித்துக்கொண்ட மகாகவி பாரதி, ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு பூணூல் அணிவித்தான்.

அவனின் வாரிசாக பார்ப்பனியத்திற்கு எதிராக மோட்டர் பைக்கிற்கே ‘அய்யர்’ என்று பெயர் வைத்து, ஒரு இயந்திரத்தையே பிராமணர் ஆக்கியிருக்கிறது HERO நிறுவனம்.” என்று ஒரு அத்துவைத விளக்கம் கொடுக்காமல் இருந்தால் சரி.

தொடர்புடையது:

உள்ளே-வெளியே ‘பிராமின்ஸ் ஒன்லி’ வாடகை விருந்தாளி

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?

விஸ்வரூபம் படத்தின் டிரைலரும் கவுண்டமணி வசனமும்

Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்

19 thoughts on “ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO

 1. காலையில் பேப்பர் பார்க்கும் போதே எனக்கு இந்த விளம்பரம் ஒரு அறுவறுப்பாக இருந்தது. அதை தாங்கள் அழகான கட்டுரை மூலம் சொல்லி இருக்கின்றீர்கள், இவனுங்க எப்போதான் திருந்துவானுகளோ தெரியவில்லை

 2. அதெல்லாம் சரிண்ணே….splendor ஆணா பொண்ணான்னு கேட்டு சொல்லுங்க…..தெரிஞ்சிகிட்டா நமக்குஓட்டும்போது குஜாலா இருக்கும்ல…..

 3. மிகவும் அருமையான் பதிவு. உங்கள் கருத்தோடு நான் உடன்படுகிறேன்.
  இதற்குத் தான் நான்
  ஜாதியை ஒழிப்பது எப்படி?
  http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2012_10_01_archive.html
  என்று பதிவிட்டேன். தற்பொழுது இட ஒதுக்கீட்டில் ஜாதியை விட முடியாது இருப்பினும் எதிர்காலத்தில் விட்டு விட வேண்டும்.
  சிலர் தலீத் என்று தங்கள் பெயரில் செர்த்துக்கொள்கிரர்களே இது சரியா தவறா?
  நன்றி

 4. நீங்கள் பாரதியார் ரசிகரா?
  பாரதி சாதி வெறி பிடித்து அலைந்தவன். வாராவாரம் திருவல்லிக்கேணியில் நடைபெறும் பிராமணர் ஜாதி சங்கத்தினர் நடத்தும் கூட்டத்திற்கு சென்று தவறாமல் கலந்து கொள்வான்.
  தன் பிள்ளைகளை முழு ஜாதி உணர்வில் வளர்த்தவன்.
  இந்தியாவை ஆரிய நாடு என்றவன்.
  என்றைக்கு தமிழன் ‘பாரதி’யின் அசல் முகத்தை புரிந்து கொள்கிறானோ, அன்றுதான் இங்குள்ள ஜாதிவெறிக்கு விடிவு பிறக்கும்.

 5. ஐயரை விட புதிதாக முளைத்துள்ள ஹையங்கார்தான் உயர்ந்த ஜாதி. அடுத்த வருடம் ஸ்ப்லென்டர் ஹையங்கார் ரிலீஸ் ஆகிவிடும்.

 6. Nan suthiran endru perumiyaka solikolpavarkal erukum varai- Parpana thimir avarkalaivittu pokathu……..

 7. தமிழர்களுக்குள் சாதியைப் புகுத்திக் கூறுபோட்ட பார்ப்பனரகளை பின்னர் பார்ப்போம்… தமிழன், இவன் தன்னுடைய இல்லாத சாதியை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டு, அக்கேவலமான சாதியைக் காப்பாற்றவேண்டும் என்று வெட்கமின்றிக் கூவுகிறானே…! பமக வின் காடுவெட்டி குரு, நொங்கு.. மன்னிக்க.. கொங்கு பேரவை என்ற சாதி வெறி மிருகங்கள் எல்லாம் பகிரங்கமாக தன்னுடைய சாதிக்குள்தான் எல்லோரும் திருமணம் செய்ய வேண்டும் என்றும், காதல் திருமணம் என்கின்ற பெயரில் சாதிவிட்டு சாதி திருமணம் செய்யவே கூடாது என்று மேடை போட்டு பேசுவதைப் பார்த்தால் இவர்களை மனிதர்கள் பட்டியலில் சேர்க்க இயலுமா? காட்டு மிருகங்கள் கூட தனக்குள் சாதி என்ற மலத்தைக் கட்டி அழுவதில்லை! நாட்டிலுள்ள இந்த மனித மிருகங்கள் சாதி வேண்டும் என்றும், கலப்புத்திருமணம் செய்ததினால் தருமபுரி மாவட்டத்தில் ஆறு கிராமம் முழுமையாக தீயிட்டுக் கொழுத்தி அவர்கள் பொருட்களை களவாடி, அவர்களை நடுத்தெருவில் நிற்கவைக்கும் அளவுக்கு இவர்கள் மிருகங்களாக அலைகிறார்கள் என்றால் இவர்கள் சாதி என்கின்ற பீ யை எவ்வளவு காலம்தான் தின்று கொண்டிருப்பார்கள்? இவர்களின் வாயில் இந்தப் பீ&யைத் திணித்து தின்க வைத்த அசிங்கத்தைச் செய்தது இந்து மதம்! இந்த நாற்றமெடுத்த மதத்தால் கிறித்தவமதத்தினரும் சாதிப்பீ&யைத் தின்கிறார்கள், இசுலாமியர்களும் ஆரம்பித்து விட்டார்கள்! இந்தக் கேடுகெட்ட ப்ராடு மதங்களெல்லாம் ஒழியும் வரை இந்த அசிங்கம் தொடரவே செய்யும்! இந்த மதங்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஏமாற்றுப் பார்ப்பனர்கள், காமவெறிப் பாதிரிகள், முல்லாக்கள் போன்ற ஊழைச்சதைகள் ஒழிந்தால்தான் மதங்களை ஒழிக்க முடியும்! காசிமேடுமன்னாரு.

 8. ஆமாம், இந்த அறுவெருக்கத்தக்க விளம்பரத்தின் பிண்ணனியில் நிச்ச்யமாக இருப்பது அந்த அக்கிரகாரர்கள்தான். தங்கள் குரலை தெய்வத்தின் குரல் என்று கூறிக் கொண்டு வர்ணாஸ்ரம தர்மத்தைத் தாங்கிப் பிடித்தவர்கள். ஒன்றாம் வகுப்பில் ஜாதியினைக் கேட்பதாக மாய்மாலம் பண்ணும் இந்த நபர்கள் ஜனனி அய்யராகவும், அய்யங்காராகவும் மனதளவில் என்றும் இருப்பதுதான் வெளியில் சொல்லாத வெட்கங்கெட்ட உண்மை. இந்த விளம்பரமானது முகவும் தந்திரமாக தங்கள் ஜாதியின் உயர் நிலையை மக்கள் மத்தியில் பரப்புவதுதான். ஜாதியில் உயர்ந்தது “அய்யர்”, வண்டியில் உயர்ந்தது ஸ்ப்லெண்டர்” என்பதுதான். அய்யங்காராத்து அம்பிகளும், வீட்டில் இருந்து கொண்டு நாட்டைக் கெடுக்க, சமூக நீதியைக் கேள்விக் குறியாக்க பல அமைப்புகளை நிறுவி நிறுவனமாகச் செயல்படும் முன்னால் தேர்தல் ஆணையர்களும் இந்த வெட்கங்கெட்ட செயலை இன்னும் நியாயப் படுத்த எந்த தெய்வத்தினைக் குரல் கொடுக்கச் செய்யப் போகின்றனர்.

 9. yes adding caste names along with your names is to be condemned
  but naidus yadavs chettiars konars…nadars and many add caste names with them…
  probably you are afraid to criticisise them…

Leave a Reply

%d bloggers like this: