‘கல்லால் அடித்தாலும் கல்வித் தருவேன்’

இறை நம்பிக்கையாளர்கள் இவரை இப்படியும் சொல்லலாம், ‘அசலான கல்விக் கடவுள் அன்னை சாவித்திரி பாய் பூலே’ என.
கல்வி மறுக்கப்பட்டது மட்டுமல்ல, மனிதர்களாகக்கூட நடத்தப்படாமல், ஆதிக்கவாதிகளாலும் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களாலும்கூட ஒதுக்கப்பட்ட பெண்களுக்குக் கல்வித் தந்தவர்.
ஆதிக்க ஆரிய சமூகப் பெண்கள் படிப்பதற்கு முன்பே தலித் பெண்களைப் படிக்க வைத்தவர்.
தன் சமூகப் பெண்களை விடவும் தலித் பெண்கள் நிலைதான் பரிதாபம் என ஜாதி அமைப்பைச் சரியாகப் புரிந்துகொண்ட புரட்சியாளர்.
அதற்காக இந்தக் ‘கல்விக்கடவுளுக்கு’ பாலாபிஷேகத்தை இந்தச் சமூகம் செய்துவிடவில்லை. சாணி அபிஷேகம்தான் தந்தது.
‘கல்லால் அடித்தாலும் கல்வித் தருவேன்’ எனத் தன் மான அவமானத்தைப் பொருட்படுத்தாமல் உயிரைப் பணயம் வைத்துப் போதித்தவர் ஆசிரியர் சாவித்திரி பாய் பூலே.
அவர் தாமரை மலரில் அமரவில்லை. சகதியில் அமர்ந்தார். அவர் கைகளில் வீணை இல்லை. தன் மீது வீசப்பட்ட மலத்தால் பாழாய்போன புடவைக்கு மாற்றுப் புடவைதான் இருந்தது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு Anbil Mahesh Poyyamozhi அவர்கள்
‘சாவித்திரி பாய் புலே பெயரில் பெண் ஆசிரியர்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில விருது வழங்க நடவடிக்கை மேற்கோள்வோம்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் சொல்வோம் என உறுதியளிக்கிறேன்’ என அறிவித்திருக்கிறார். மகிழ்ச்சி. நன்றி.
அடுத்த ஆண்டு இரண்டாவது முறையாக பதவியேற்ற உடன் இதை அறிவிப்பார் திராவிட மாடல் முதல்வர் தளபதி M. K. Stalin அவர்கள்-வே. மதிமாறன்.