கலைஞரும் – ஸ்ரீராமனும் – சில இலக்கிய வானரங்களும்’

ஒரு சமயம் “காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார்” அவர்கள் திருவாரூர் ‘விஜயம்’ செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரை எதிர்ப்பது என்று எங்கள் கட்சியின் (திராவிடர் கழகம்) பெரியவர்கள் திரு. சிங்கராயர், ‘தண்டவாளம்’ ரங்கராஜு ஆகியோர் முடிவு செய்து விட்டார்கள்.………………………………………………………………………
ஒட்டகம், யானை, பதாகை ஏந்திய சிலவீரர்கள், இந்த வரிசைகளுக்குப் பிறகு ஒரு பல்லக்கில் சங்கராச்சாரியார் பவனி வருவது வாடிக்கை! அதே போல பவனி வந்து கொண்டிருக்கிறார்.
திடீரென ஒரு குரல், “மானங்கெட்ட பசங்களா! இந்த ஆசாமியைத் தூக்க நீங்கதான் கிடைச்சிங்களா? ஏன்! பாப்பான்க தூக்கினாலென்ன?”, என்று கேட்டது. …………………………………………………………………………..
இந்த நிலையில் திடீரெனக் கூச்சல் எழும்பியது மட்டுமல்ல, கட்டையால் அடிப்பது போல ஒரு ஒலி!
“இறக்கி வைச்சிட்டு எல்லாப் பசங்களும் ஓடுறீங்களா? இல்லே இந்தச் சாட்டையால் வெளுக்கட்டுமா?” என்று ஏதோ ஒரு அடியாட்கள் கும்பலோடு நிற்பது போல ‘தண்டவாளம்’ நினறு கொண்டு ‘பாவ்லா’ காட்டலானார்! அவ்வளவுதான் பல்லக்கை வைத்து விட்டுப் பல்லக்குத் தூக்கிகள் இங்கொருவர் அங்கொருவராகப் பாய்ந்து ஓடிவிட்டனர்
.…………………………………………………………………………..
எங்கள் கூட்டங்களுக்குத் தலைமை வகிப்பது, நன்கொடையெல்லாம் வழங்குவது முதலிய காரியங்களைச் செய்த ‘ஜஸ்டிஸ்’ கட்சிப் பிரமுகர் இராமானுஜ முதலியார் வீட்டில்தான் சங்கராச்சாரியார் “காம்ப்” போட்டிருந்தார். அவரைப் போய்ப் பார்ப்பதென்றால் சட்டை போட்டிருக்கக் கூடாது!
‘தண்டவாளம்’ ஒரு நோட்டீஸ அடித்தார். “சங்கராச்சாரியார் சுவாமிகளைப் பார்க்கச் சட்டை போட்டிருக்கக் கூடாது, ஆண்கள்! ரொம்பச் சரி! பெண்கள் மட்டும் இரவிக்கை போட்டுக் கொண்டு போகலாமா? அதென்ன நியாயம்?” என்கிற வாசகங்களோடு.
யார் எழுதிக் கொடுத்திருப்பார்கள் என்று சொல்லவா வேண்டும்? (கலைஞர்)
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள், “தமிழ்நாட்டில் பெரியார் என்கிற நச்சாறு ஓடுகிறது” என்று சொல்லிவிட்டார். ………………………………………………………. இந்தச் சமயம் பாரத்துத் திருவாரூர் தியாகாஜப் பெருமாள் கோயிலில் (1-4-44 என்று நினைவு) அவருடைய “உபன்யாசகங்ள்” நடைபெறும் என்று அறிவித்திருந்தார்கள்
. ………………………………………………………………………………….
கருணாநிதி சும்மா இருப்பாரா? அவருடைய கைவண்ணத்தில் “கிருபானந்த வாரியாருக்குச் சில கேள்விகள்” என்கிற தலைப்பில் துண்டு நோட்டீஸ் தயாராகியிருந்தது.
“அன்பே சிவம் என்கிறீர்களே! 6000 சமணர்களைக் கழுவிலேற்றிச் சித்திரவதை செய்தது உங்கள் சிவ மதமல்லவா?” “முற்றுந்துறந்தவராகக் காட்டிக் கொள்ளும் உமக்கு, கழுத்திலே தங்கம் போட்ட கொட்டை ஏன்? மார்பெல்லாம் ஆபரணாதிகள் ஏன்? காய்ச்சிய பாலும் கற்கண்டும் ஏன்? கார் ஏன்? இரயில் ஏன்?” இப்படிக் கேள்விகள். வாரியார் சுவாமிகள் சுவாரஸ்யமாகப் பேச ஆரம்பித்தார்.
“அன்புதான் சிவம். சிவம்தான் அன்பு. எங்கும் அன்பு தழைக்க வேண்டும் என்பதுதான் எம்பெருமானின் கருணை உள்ளம். பாருங்கள்! என்னென்னவோ உண்டாக்கியிருக்கலாம் அல்லவா எம்பெருமான்? மனிதன் சாப்பிடுவதற்கு எதை உண்டாக்கினார் பாருங்கள்! காய்கறிகளை!! …. கத்தரிக்காய்..வெண்டைக்காய்…”
“அதுசரி, சுவாமிகளே! அதே எம்பெருமான் சிங்கத்திற்காக எந்த உணவை உண்டுபண்ணினார்?”- கணீரென்று கேள்வி எழும்பியது! யாருடைய குரல் என்று கூறவேண்டுமா?(கலைஞர்)
வாரியார் கொஞ்ச நேரம் திகைத்துப் பேச்சை நிறுத்தினார். முன் கூட்டியே ஏற்பாடு செய்தபடி, நாங்கள், “பதில் சொல்! பதில் சொல்!” என்று கத்தலானோம். எங்களை எல்லாம் போலீஸ் துரத்தியது. எங்கள் வேலை முடிந்தது என்று எடுத்தோம் ஓட்டம்! அது முதல் பந்தோபஸ்து இல்லாமல் கோயிலில், உபன்யாசங்கள்’ நடப்பது இல்லை.
(இராம. அரங்கண்ணலின் ‘நினைவுகள்’ என்ற புத்தகத்திலிருந்து….)
இந்த பரம்பரையில் அல்லது இந்த வழியில் வந்த கலைஞர், ‘பேடி ராமனை’ (‘பேடி’ பட்டம் உபயம் திருமதி சீதா ராமன்) பற்றி சொன்ன கருத்துக்கு ‘வேதாந்தி’ என்கிற ஒரு வாந்திபேதி சொன்னான்; “கருணாநிதியின் தலையை கொண்டு வருவோர்க்கு தக்க சன்மானம்” என்று.
அதைக் கேட்டு கோபமுற்ற திமுக தொண்டர்கள், தங்களின் முறையான எதிர்ப்பை பதிவு செய்ததைப் பார்த்து, ‘தங்கள் தலை போய்விடுமோ’ என்று தேவையற்ற பயம் கொண்டு பாஜகவின் எச். ராஜாவும், குமாரவேலும் அலறினார்கள், ஆனான வஸ்தாதுகளே இப்படி அரண்டு போய் கிடக்க, இந்த இலக்கியத் ‘தறுதலைகள்’ சிலது “ஏய், எங்க ராமனை பத்தியே தப்பாவாடா பேசுறீங்க” என்கிற ரீதியில் ரவுண்டு கட்டியிருக்கிறார்கள்.
அதில் குறிப்பிடத்தக்கவர்கள் இலக்கிய உலகின் இல. கணேசனான மாலனும், இலக்கிய உலகின் புரட்சித் தலைவி ஜெயலலிதாவுமான வாஸந்தியும்.
‘புதியபார்வை’ என்ற பத்திரிகையில் ரொம்பா புதிய்ய்ய பார்வைய்ய்யா, ‘ராமர் பாலம்; கலைஞர் பேசியது சரிதானா?’ ன்னு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறாரு மாலன். வேதாந்தியோட செய்தியையே வேறு வார்த்தைகளில்… இது மாமாவோட வெர்ஷன்.
‘தீராநதி’ என்ற பத்திரிகையில் ‘இராமனுக்கான போர்’ என்ற தலைப்பில் ஒரு பொம்பள வேதாந்தியைப் போல், கலைஞரின் முன் கத்தியோடு குதித்திருக்கிறார், வாஸந்தி. இது மாமியோட வெர்ஷன்.
நமக்கோ, வேதாந்தி என்கிறவன் இப்படி அநாகிரீகமாக, ஒரு மாநில முதல்வரின் தலையை வெட்டிக்கிட்டுவான்னு சொன்னானேன்னு கோபாமா வருது. ஆனால் இவுங்களுக்கு, ‘ராமரை கருணாநிதி திட்டிட்டாரே’ ன்னு ஆத்திரம் வருது.
‘பெருவாரியான இந்துக்களின் உணர்வை….’ என்று திரும்ப திரும்ப ‘செட்டு’ சேர்க்கிறார்கள்.
நம்மதான் நாத்திகர். ஆனால் திமுகவை சேர்ந்தவர்கள் எல்லோரும் நாத்திகர்கள் இல்லை. அதில் பெருபான்மையானவர்கள் இந்துக்கள். அவர்களுக்கு ராமனை பற்றி சொன்னால் கோபம் வருவதில்லை. கலைஞரை பற்றி சொன்னால்தான் கோபம் வருகிறது.
ராமர் வழிபாடு என்பது தமிழ்நாட்டில் கிடையாது. பெருமாள் வழிபாடுதான் இருக்கிறது. ஐயங்கார்கள் கூட பெருமாளைத்தான் வழிபடுகிறார்கள். அதனால்தான் தமிழ்நாட்டில் ராமனுக்கு குறிப்பிடும்படியாக கோயிலே இல்லை. (தமிழ்நாட்டில் ராமனுக்கு ஆதரவாக ஒரு பத்துபேர் இருப்பாங்க. அதுல இரண்டு பேர இவுங்க.)
-தொடரும்
சரியான சுவுக்கடி
ஜெயலலிதா – ஆமாம் அண்ணா பெயரில் கட்சி வைத்திருக்கிற அதே ஜெயலலிதா – காவிநாயகன் இராமன் எனவும் கருணாநிதி இராவணன் எனவும் பேசியிருக்கிறாரே? தெரியாமல்தான் கேட்கிறேன் அதிமுகவில் இருக்கிறத இரண்டாம் கட்டத்தலைவர்களது உடலில் என்ன சாக்கடைத் தண்ணீரா ஓடுகிறது? பண்டைய காலங்களில் தமிழ் மன்னர்களுக்கு வைகுண்டம் சிவலோகம் போகலாம் என ஆதச வார்த்தை காட்டி ஏமாற்றி யாகத்திலும் பூசையிலும் கோயில் கட்டுவதிலும் கருவூலத்தைக் கொள்ளை அடித்தார்கள். இப்போது ஒரு பாப்பாத்தி அண்ணா பெயரைக் கொண்ட கட்சியை தனது சொந்த சொத்துப் போலக் கருதி நடக்கிறாரே அது எப்படி சாத்தியமாகிறது?
kural sariyaahave olitthirukkirathu
தமிழ்நாட்டில் ராமனுக்கு ஆதரவாக ஒரு பத்துபேர் இருப்பாங்க. அதுல இரண்டு பேர் இவுங்க —– மிக சரியான வார்த்தைகள்