சிவன் சொத்து குலநாசம் பக்தர்களுக்கு- சிவன் சொத்து கொள்ளை லாபம் தீட்சிதர்களுக்கு
சிவன் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் ரவி வர்மா வரைந்த ஒவியங்கள்தான். சிவன் கோயில் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் சிவலிங்கம். சிவலிங்கம் என்பது உருவம் அல்ல, அது அருஉரூபம்.
அதாவது உருவமாகவும் இருப்பது, அதே நேரத்தில் உருவம் இல்லாமலும் இருப்பது. சரியாக சொன்னால், ‘குறி’யீடாக இருப்பது. இப்படித்தான் எல்லா கோயில்களிலும் லிங்கமாக காட்சி தருகிறார், சிவன். அதுதான் சிவலிங்கம்.
குனித்த புருவமும் கொவ்வைச்
செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம்போல்
மேனியற் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த
பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே.
இந்தப் பாட்டு ‘தளபதி’ படத்துல நடிகை ஷோபனா வாயசச்சப் பாட்டுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனால் இதை எழுதுனது, வயித்துவலி தாங்காமல், சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மதம் மாறுன சைவ சமயத்தின் ஆன்மீக ஒளி, அப்பர் அலய்ஸ் திருநாவுக்கரசர். (வயித்துவலிக்கெல்லாம் மதம் மாறுன ஆளுக்கிட்ட அப்படி என்னதான் ஆன்மீக ஒளியோ?)
தேவாரத்தில் அப்பர் அடிகள் இப்படி வர்ணித்தது போல்தான், சிதம்பரத்தில் முழுஉருவமாக, நடராஜ பெருமானாக காட்சி தருக்கிறார், சிவன்.
இந்த வித்தியாசம் சிவனின் உருவத்தில் மட்டுமல்ல, சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் முன்குடுமி மயிரில் இருக்கிறது. காவல் துறை அதிகாரியை அடிப்பதற்கு உயர்த்திய அந்தக் கரத்தில் இருந்தது. நந்தானரையும், ராமலிங்க அடிகளையும் கொளுத்திய அந்த நெருப்பில் இருந்தது. தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் தீட்சிதர்கள் கொண்ட அந்த வெறுப்பில் இருக்கிறது.
‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பார்கள், சைவ அன்பர்கள்.
“உன் திருவாசகத்தை கொண்டுபோய் தெருவுல பாடு. கோயில் உள்ள சிற்றம்பல மேடையில் ஏறி பாடுன வாயில குத்துவேன்’ என்றார்கள் தீட்சிதர்கள்.
“குத்துங்கடா அப்பவும் பாடுவேன்” என்றார் வீரமிக்க சிவனடியார் ஆறுமுகசாமி.
திருநாவுக்கரசர், ஞானசம்பந்தன், மாணிக்கவாசகர், சுந்தரர் – தேவாரம், திருவாசகத்தின் மூலவர்களான நால்வர்களுக்கும் இல்லாத ‘தில்’லு ஆறுமுகசாமி என்கிற இந்த சிவனடியாருக்கு இருந்தது.
(சிதம்பரம் சிற்றம்பல மேடையில் ஏற முயற்சித்த வள்ளலாரையும் அடித்து வீதியில் வீசியிருக்கிறார்கள் தீட்சிதர்கள். அதன்பிறகுதான் கோபத்தில் அவர் வடலுரில் ஒரு போட்டி சிற்றம்பல மேடையை உருவாக்கினார். அதிலும் ஊடுறுவி அதை சீர்குலைத்தார்கள் தீட்சிதர்கள்)
63 நாயன்மார்களில் நந்தனைத் தவிர மற்ற எல்லோருக்கும் பல்வேறு சோதனைகளுக்குப் பின், பார்ப்பன உருவத்தில் காட்சி தந்தான் சிவன். நந்தன் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவரை சிவனின் ஆலோசனையின் பேரில் ‘ஜோதி’யில் அய்க்கியமாக்கினார்கள் பார்ப்பனர்கள்.
அதுபோல், நமது சிவனடியார் ஆறுமுகசாமியை, பல்வேறு சோதனைக்களுக்கு உட்படுத்தியப் பிறகும் காட்சித் தர மறுத்த நடராஜனை இழுத்து வந்து, சிவனடியார் முன் நிறுத்தியிருக்கிறார்கள் தோழர்கள்.
நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் இன்னும் திட்சிதர்களிடம் இருக்கிறது. ஆனால் அதை 64 நாயன்மாரான ஆறுமுகசாமியின் மேல் கொளுத்திப்போடத்தான் தீட்சிதர்களால் முடியவில்லை.
காரணம், நந்தனின் காலம் தந்தை பெரியருக்கு முந்தைய காலம்.
பெரியவர் ஆறுமுகசாமியின் காலமோ தந்தை பெரியருக்கு பிந்தைய காலம்.
‘சிற்றம்பல மேடையில் ஏறி யாரும் பக்திப் பாடல்களை தமிழில் பாடலாம்’ என்ற தமிழக அரசின் உறுதியான உத்தரவை அடுத்து 4.3.2008அன்று சிவனடியார் ஆறுமுகசாமியை யானை மேல் அமரவைத்து, ஊர்வலமாக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அழைத்து சென்றார்கள், மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர்களும், நண்பர் ராஜு தலைமையிலான மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும்.
அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேவாரம் பாடச் சென்ற சிவனடியாரையும் மற்ற தோழர்களையும் பாடவிடாமல் தாக்கி, சட்டம் ஒழுங்கை சீர் குலைத்தார்கள் தீட்சிதர்கள். தீட்சிதர்களிடம் அடிவாங்கிய காவல் துறை, அவர்களை ஒன்றும் செய்யமுடியாத நிலையில், அரசின் உத்தரவை அமல்படுத்த தேவாரம் பாடச் சென்ற தோழர்களை வால்டர் தேவவரம் போல் பாய்ந்து தாக்கியது. சிவனடியார் உட்பட தோழர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
‘சிற்றம்பல மேடையில் ஏறி பாடச் செல்வோரை தாக்குகிற, தடுக்கிற தீட்சிதர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தமிழக அரசு எச்சரித்தது.
சிவனடியார் சிறையில் இருக்க, அடுத்தநாள் மேடை ஏறி பாடுவதற்கு எந்த சிவபக்தர்களும் முன்வராததால், நாத்திகர்களான மக்கள் கலை இலக்கிய கழக தோழர்களே, சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம், திருவாசகத்தை பாடினார்கள்.
இப்படியாக அந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் நடேந்தேறியது.
சிதம்பரம் கோயில் விவகாரத்தில், பல ஆண்டுகளாக பல அமைப்புகள் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் அதற்காக 2000ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பொதுகூட்டங்கள், போராட்டம், ஆர்பாட்டம் என்றும் வழக்குமன்றத்திலும் போராடி அரசு இப்படி ஒரு உத்தரவு போடுவதற்கு காரணமாக இருந்த பெரியவர் ஆறுமுகசாமிக்கும், மனித உரிமை பாதுகாப்பு மையத்திற்கும், மக்கள் கலை இலக்கிய கழகத்திற்கும் நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை பிறப்பித்த தமிழக முதல்வருக்கும் நம் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
இதுவே, ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால் தீட்சிதர்களுக்கு எதிராக போராடியவர்கள், பொடாவில் உள்ள போய் இருக்க வேண்டியதுதான்.
எல்லா விஷயங்களிலும் சீறுகிற ஜெயலலிதா, சிதம்பரம் நடராஜன் விஷயத்தில காட்டிய மவுனம் அதைதான் உணர்த்தியது. (நமது போர்வாள் வைகோவோ, ‘சிதம்பரம் நடராஜனோ, சசிகலா நடராஜனோ எல்லோரும் ஒண்ணுதான்’ என்கிற அத்துவைத நிலையில இருந்துவிட்டர்.)
“தேவாரம், திருவாசகத்திற்கு அவமானம் ஏற்பட்டால் கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவாளர்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் என்ன வந்ததது?” என்று கேட்கிறார்கள், இல. கணேசன்கள்.
அவமானம் தேவாரம், திருவாசகத்திற்கு அல்ல. தமிழக்கு. அதன் வழியாக தமிழர்களுக்கு.
ஒரு மொழியை தனியாக அவமானப்படுத்தமுடியாது. அந்த மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களை அவமானப்படுத்துவது அல்லது அந்த மக்களுக்கு என்ன ‘மரியாதை’ இருக்கிறதோ அதுவே அந்த மொழிக்கும் நேரும்.
அதுதான் தேவாரம், திருவாசகத்திற்கும் நேர்ந்தது.
ஆக நாத்திகர்கள் தேவாரம், திருவாசகத்திற்கு ஆதரவாக வரவில்லை. தமிழர்களுக்கு ஆதராவக வந்தார்கள்.
“சரி, நாத்திகர்களாக இருக்கிறவர்கள், கோயில் உள்ளே நுழைந்து சிற்றம்பல மேடையில் ஏறி பக்திபாடல்களை பாடறாங்களே, இது என்ன நியாயம்?” கேட்கிறார்கள், இராம. கோபாலன்கள்.
நீ போய் பாட வேண்டியதுதானே? நாத்திகர்கள் என்ன சிதம்பரம் கோயில் உள்ளே பெரியார் சிலையையா வைக்கச் சொன்னார்கள்? உன்னுடைய பக்தி பாடல்களைத்தானே பாடினார்கள்.
தமிழா? சமஸ்கிருதமான்னு நெருக்கடி வரும்போது, உன் பார்ப்பன யோக்கியதை எப்படி பல்ல காட்டுதுன்னு பாத்தீயா? (ஜெயேந்திரன் பல்லு மாதிரி)
உன் யோக்கியதை சரியல்லை. பக்தர்களுக்கு சுயமரியாதை இல்லை. அதனால்தான், அந்த கர்மம் புடிச்ச தேவாரம், திருவாசகத்தை நாத்திகர்கள் பாடி தொலைச்சாங்க.
மற்றபடி நாத்திகர்களின் ஜென்ம விரோதிகள் சைவ சமயத்தை சேர்ந்தவர்கள்தான். சைவ சமயத்தை பற்றி தந்தை பெரியார் தன்னுடைய இறுதி சொற்பொழிவில்,
“சைவக் கூட்டம் அயோக்கியப் பயல்கள் கூட்டம். அவர்கள், கடவுள் இல்லை என்று சொன்னவனையெல்லாம் கழுவெற்றினார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
காதலாகிக் கசிந்து கண்ணீர்
மல்கி ஓதுவார் தமை
நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்
பொருளாவது நாதன்
நாமம் நமச்சிவாய வே.
என்று ரொம்ப நல்லவன் மாதிரி தேவாரம் பாடியிருக்கானே பார்ப்பனப் பிஞ்சு ஞானசம்பந்தன், அவன் நாத்திகர்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக பாடியிருக்கிறான் தெரியுமா?
இதோ தந்தை பெரியார் சொல்கிறார்:
“சம்பந்தர் என்கிற ஒரு பக்தன் – பக்தனாம் அந்த அயோக்கியப் பயல்! அவன் சொல்லி இருக்கிறான், ‘கடவுள் இல்லை என்கிறவன் பெண்டாட்டிக் கிட்டே யெல்லாம் நான் படுக்கணும்’ என்று; கடவுளைக் கேட்கிறான்: ‘இசைத்துவை’ என்று” இப்படி பெரியார் காறிதுப்புகிற, இந்த ஞானசம்பந்தனைத்தான் சைவக் கூட்டம் ‘குழந்தை’ என்கிறது.
இப்படி பிஞ்சிலேயே பழுத்தவன், எழுதிய தேவாரத்தை நாத்திகர்கள் பாடுகிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம், பார்ப்பன மேல்ஜாதி திமிரை எதிர்க்க, அம்பலப்படுத்த கிடைத்த வாய்ப்பாக கருதிதான்.
நடிகவேள் எம்.ஆர்.ராதா வாழ்க்கையில் ஒரு சம்பவம். நடிகவேள் சிறையில் இருந்தபோது, ஒரு பார்ப்பனர் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு வந்திருக்கிறார். ‘பார்ப்பனர்களை அய்யர் என்று அழைக்கக்கூடாது’ என்கிற பெரியார் கருத்தில் ஊறிய நடிகவேள், அந்தக் கைதியை ‘அய்யிரே.. அய்யிரே..’ என்று உரக்கக் கூவி அடிக்கடி அழைக்கிறார்.
உடன் இருந்தவர் நடிகவேளிடம்,”நீங்கதான் அய்யர்ன்னு சொல்லமாட்டிங்களே, அப்புறம் எதுக்கு அவரை அய்யர் அய்யர்ன்னு கூப்படுறீங்க?” என்று கேட்டாரம்.
அதற்கு நடிகவேள், “அய்யர்ன்னா யோக்கியமானவன்னு ரொம்ப பயலுங்க நினைச்சிக்கிட்டு இருக்கான். திருட்டு வழக்கில வந்திருக்கிறவன் ஒரு அய்யர்ன்னு மத்த கைதிக்கெல்லாம் தெரியுட்டுமேன்னுதாய்யா அப்படி கூப்பிடுரேன்” என்றாராம்.
அதுபோல்தான் நாத்திகர்கள் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்த தேவராம் பாடினார்கள். ‘தீட்சிதர்கள்’ என்கிற பார்ப்பன ஜாதிபெயரையும் அதன்பொருட்டே அடிக்கடி பயன்படுத்துகிறார்கள்.
கோயில் நுழைவுப் போராட்டம், கருவறைப் நுழைவு போராட்டம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் இப்படி பல நேரங்களில் பக்தர்களின் சுயமரியாதைக்காக நாத்திகர்கள்தான் போராட வேண்டியதா இருக்கு. எப்படி சாமி கும்பிடறதுன்னுகூட நாத்திகர்கள்தான் சொல்லிக் கொடுக்க வேண்டி இருக்கு. என்ன பண்றது, அந்த லட்சணத்துல இருக்கு பக்தர்களோட பக்தி.
***
`அனைத்து ஜாதியினரும் ஆதினங்கள் ஆகலாம்`
பார்ப்பனர்கள் இதை எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தேவாரம், திருவாசகத்தை பாடுவதையே தன் தொழிலாக கொண்ட – திருநாவுக்கரசு, ஞானசம்பந்தனோட வாரிசு என்று சொல்லிக் கொள்கிற பார்ப்பனரல்லாத ஆதினங்கள் இதை குறித்து வாய் திறக்கவில்லையே?
ஆதினங்களின் மவுனத்திற்கு பின் இருக்கிறது பேரிரைச்சல் கொண்ட ஒரு அரசியல். சிவன் சொத்து குலநாசம் என்பது மக்கள் நம்பிக்கை. ஆனால் சிவன் சொத்து தன் சொத்து என்பது தீட்சிதர்கள், ஆதினங்களின் வாழ்க்கை.
ஆதினங்களாக வரவேண்டும் என்றால், சைவப் பிள்ளையாகவோ, அல்லது சைவ முதலியாராகவோ இருக்க வேண்டும். வேறு ஜாதிக்காரர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் நம் சிவனடியார் ஆறுமுகசாமியோ, மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.
இன்று அவரை வைத்து சிற்றம்பல மேடையில் பாடச் சொல்வார்கள். பிறகு கருவரைக்குள் நுழைந்து தமிழ் பாட வைப்பார்கள். அதன்பிறகு “அண்ணாச்சி கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி ஒக்காருங்க. நம்ம ஆளு கொஞ்சம் அதுல ஒக்காரட்டும்” என்று ஆதினங்கள் பதிவிக்கும் பங்கு கேட்பார்கள், என்கிற முன்எச்சரிக்கை உணர்வுதான், ஆதினங்களின் மவுனத்திற்கு காரணம்.
‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்கிற சட்டத்தைக் கலைஞர் அரசு கொண்டு வந்தபோது ‘விஷ்வ இந்து பரிஷத்தோடு’ சேர்ந்து திருச்சியில் கண்டன மாநாடு நடத்தியவர்கள்தான் இந்த ஆதினங்கள். அதற்கும் இதுவேதான் நோக்கம். சங்கராச்சாரியார்களோடு, சைவ மட ஆதினங்கள் சந்திக்கிற புள்ளி இதுதான்.
தீட்சிதர்களின் திமிரை அடக்கவும், ஆதினங்களின் கள்ள மவுனத்தை குலைக்கவும் -சிதம்பரம் கோயிலை அரசுடமை ஆக்கவேண்டும். சைவ மடங்களின் சொத்தை அரசு கைப்பற்றி, ‘அனைத்து ஜாதியினரும் ஆதினங்கள் ஆகலாம்’ என்று சட்டம் இயற்ற வேண்டும். சிதம்பரம் கோயிலில் நந்தன் நுழைந்த பகுதி என்பதற்காக ‘தீண்டாமை’யின் அடையாளமாக இருக்கிற தெற்கு வாசல் சுவரை இடித்து அதை திறக்க வேண்டும்.
இதற்கெல்லாம் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், வரலாற்றை கொஞ்சம் திருப்பிப் போடுவோம்.
இந்த முறை ‘ஜோதி’யில் கலப்பது தீட்சிதர்களாக இருக்கட்டும்.
***
பேராசிரியர் சுபவீரபாண்டியன் அவர்கள் கேட்டுக் கொண்டுதற்காக, ‘கருஞ்சட்டை தமிழர்‘ இதழக்கு 2008 மார்ச் 24 அன்று எழுதப்பட்ட கட்டுரை. ஏப்ரல் மற்றும் மே மாத இதழ்கள் வெளிவராததால், கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
attakaasam…nethiyadi…M.R.Radha paguthi super…
//நமது சிவனடியார் ஆறுமுகசாமியை, பல்வேறு சோதனைக்களுக்கு உட்படுத்தியப் பிறகும் காட்சித் தர மறுத்த நடராஜனை இழுத்து வந்து, சிவனடியார் முன் நிறுத்தியிருக்கிறார்கள் தோழர்கள்//.
மிக மிக நன்று.
//அதுபோல்தான் நாத்திகர்கள் பார்ப்பனியத்தை அம்பலப்படுத்த தேவராம் பாடினார்கள். ‘தீட்சிதர்கள்’ என்கிற பார்ப்பன ஜாதிபெயரையும் அதன்பொருட்டே அடிக்கடி பயன்படுத்துகிறார்கள்//
மிக சரியான விளக்கம்.
அருமை.. இந்த எழுத்து நடை நரம்புகளை முறுக்கேறச்செய்யும் படி இருக்கிறது.
//அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்கிற சட்டத்தைக் கலைஞர் அரசு கொண்டு வந்தபோது ‘விஷ்வ இந்து பரிஷத்தோடு’ சேர்ந்து திருச்சியில் கண்டன மாநாடு நடத்தியவர்கள்தான் இந்த ஆதினங்கள். அதற்கும் இதுவேதான் நோக்கம். சங்கராச்சாரியார்களோடு, சைவ மட ஆதினங்கள் சந்திக்கிற புள்ளி இதுதான்.//
தமிழால் தொந்தி வளர்த்த சைவ மடங்களின் யோக்கியதை இது தான் என்பது தெரிந்ததே.. “தென்னாடுடைய சிவனே..” என்று புலம்பும் அதே வாயோடு ஆர்.எஸ்.எஸ் முகாம்களுக்கு சென்று அங்கே சமஸ்கிருத கட்டளைகளோடு நடக்கும் அணிவகுப்பு ( பதசஞ்சலன்) மரியாதையை ஏற்றுக் கொண்டு பல்லிளித்துக் கொண்டு வருவது தானே இவர்கள் மரபு??
இன்னைக்கு சேது சமுத்திரம் திட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ் எந்த அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்கிறதோ அதே அடிப்படையில் தானே பேரூர் பாலம் கட்ட அரசு முடிவெடுத்த போது பேரூர் மடச் சாமி மருதாச்சலம் அடிகள் எதிர்ப்பு தெரிவித்தான்? அன்னைக்கு அவனுக்கு ஆதரவா நின்னது இதே ஆர்.எஸ்.எஸ் தான். ஆரிய ஆர்.எஸ்.எஸ் கேம்புகள் நடக்க இடம் கொடுப்பது இந்த தமிழ் சைவ மடங்கள் தானே?
இவன்களின் கள்ளத்தனத்தை மூடி மறைக்க தேவையான ஒரு அரசியல் கருவி இந்துத்துவ அமைப்புகள்; அவன்களுக்கோ இங்கே காலூன்ற மக்கள் மத்தியில் தமிழ் பேர் சொல்லி வளர்ந்து நிற்கும் இவன்கள் – இந்த ஒட்டுண்ணி உறவு தான் இவர்களுக்குள் இருப்பது..
நாளைக்கு இந்த மடச் சொத்துக்களெல்லாம் அரசுடைமையாக்கப்பட்டு இந்த மடச் சாமிகளின் பீஸைப் புடுங்கி விட்டால் அடங்கிக் கிடப்பான்கள்.. உடனடியாக அரசு செய்யவேண்டியது –
1) எல்லா மடங்களும் – அதன் சொத்துக்களும் அரசுடைமையாக்க வேண்டும்
2) மடத்தின் கணக்கு வழக்குகளை அறநிலையத்துறை நேரடியாக தமது பொறுப்புக்குள் கொண்டு வர வேண்டும்.
3) மட கணக்குகளுக்கு வருடாந்திர ஆடிட் நடக்க வேண்டும்.
4) எல்லா மடங்களின் நிர்வாக பொருப்புகளிலும் ஒரு அரசு அதிகாரியை நியமிக்க வேண்டும் ( அந்த அதிகாரி கட்டாயம் ஒரு தலித்தாகவோ முசுலிமாகவோ கிருத்துவராகவோ இருத்தல் அவசியம்)
5) மடத்திற்கு உட்பட்ட பள்ளிகளிலோ மற்ற இடங்களிலோ ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளின் முகாம்கள் நடத்த அனுமதிக்கக் கூடாது.
vanakkam….
mele sonna karuththu miga arumai…
m.khathiravan
09321454425
Dear Sir,
Very sorry for writing in English. Your views are really great thinking, People like you still spreading philosaphy of our great PERIYAR, it is a fantastic job… Your writing are like archer’s sharp… keep it up…
”சைவ மடங்களின் சொத்தை அரசு கைப்பற்றி, ‘அனைத்து ஜாதியினரும் ஆதினங்கள் ஆகலாம்’ என்று சட்டம் இயற்ற வேண்டும். ”
அறிவாயலத்தையும்,பெரியார் திடலையும்,தி.கவின் நிறுவனங்கள்,
சொத்துக்களை அரசு கைப்பற்றினால் எப்படி இருக்கும்.
அது போல் இந்து அல்லாத பிற மத நிறுவனங்களின் சொத்துக்களையும் அரசு எடுத்துக்கொள்ளலாம். அதைச் செய்தபின் இதைச் செய்யலாம்.
ராஜ்வனஜ்,மதிமாறன் போன்ற இந்து-இந்திய விரோதிகளுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். பத்து பெரியார் பத்து தசாவதாரம் எடுத்து வந்தாலும் உங்களின் சில ஆசைகள் நிறைவேறா.நீங்கள் எழுதிப் பார்த்து திருப்தி அடையவேண்டியதுதான்.
டேய் பன்னாடை ரவி ஸ்ரீநிவாஸ்
நீ இப்படி எழுதிப் பார்த்து திருப்தி அடையவேண்டியதுதான்.
ரவி
சிதம்பரத்தில் தமிழ் முழங்கிய போராட்டம் – Youtube காட்சி பதிவுகள்
தில்லை1 – http://www.youtube.com/watch?v=mP_DIrhA18Y
தில்லை2 – http://www.youtube.com/watch?v=72lHGaaHYjg
தில்லை3 – http://www.youtube.com/watch?v=qIal4-Zplfo
தில்லை4 – http://www.youtube.com/watch?v=BoTJFbA7IdI
நந்தன் முதல் வள்ளலார் வரை அனைவரையும் தீக்கிரையாக்கிய கும்பல், வீழ்த்தப்படும் காட்சியை விவரிக்கும் வரலாற்று ஆவணம்.
ரவி ஸ்ரீனிவாஸ்.. நீங்கள் ஒரு நூறாண்டுகளுக்கு முன்னே உங்களவாளை இப்படி என்னைப் மாறி ரோட்டில் போற பொறுக்கி ராஸ்கலெல்லாம் சொக்காயப் புடிச்சிக் கேள்வி கேட்பான்னு நினைச்சுப் பார்த்திருப்பீங்களா?
எம்பூட்டு ரீஜெண்டா இருந்திங்க?
அன்னிக்கெல்லாம் ஜெயேந்திர கருமாந்திரங்களெல்லாம் இப்படி சீப்பட்டு சின்னப்படுவார்கள் என்று கற்பனை செதிருப்பீர்களா?
அந்தாளு பேண்டது மோண்டது வரைக்குள் ஊரே நாறிச்சே இதெல்லாம் நடக்கும்னு நீங்கள் நெனைச்சீங்களா?
ரவிண்ணா…. பொச்சில சூடு ஏறும்போது ஆரம்பத்தில ஒண்ணுமே நடக்காத மாறி தான் இருக்கும்.. அந்தக் கடேசி செகண்டுல சுள்ளீர்ர்ர்னு தூக்கும் பாருங்க..
மாற்றம் கூட அப்படித்தான் – அது வரைக்கும் இப்படிப் பேசி மனச ஆத்திக்கங்க
//வயித்துவலிக்கெல்லாம் மதம் மாறுன ஆளுக்கிட்ட அப்படி என்னதான் ஆன்மீக ஒளியோ//
###################################
வீடு விக்கமுடியலனு மதம் மாறவங்களாம் நம் நாட்டில் இருக்கிறார்கள்.உங்களுக்கு உலகம் தெரிந்தது அவ்வளவுதான்….
திருஞான சம்பந்த பெருமான் “கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் பெண்டாட்டியிடம் நான் படுக்க வேண்டும்” என்று ஏதோ பாடலில் கூறியதாக (பெரியார் சொன்னதாகவும்) எழுதியிருக்கிறார். நானும் அது எந்த பாடல் என்று பின்னூட்டமிட்டேன், மின்னஞ்சல் அனுப்பினேன். பதில் ஒன்றும் இல்லை. யார் வேண்டுமானாலும் இதுபோன்று அசிங்கமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் எழுதலாம். இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஆனால் இப்படியெல்லாம் பிறர் விலகி, அரண்டு ஓடும் வண்ணம் அருவருக்கத்தக்க வகையில் பெரியாரும், அவரை பின்பற்றும் கூட்டமும் தான் பேசும், எழுதும். உதாரணத்திற்கு “கருணாநிதியின் சிறுகதைகள்” கிடைத்தால் வாங்கிப்படியுங்கள். அதில் ஓய்வு பெற்ற ஒரு காவல்துறை பணியாளர் தன் மகளுக்கு திருமணம் செய்ய இயலாத வறுமையை சொல்லும் ஒரு கதை வரும். அதை மட்டும் படித்து பாருங்கள். பின்னர் விளங்கும் இவர்கள் எண்ணங்களும், செயல்களும் எத்தகையது என்று. எந்த ஒரு எழுத்தும் மனிதனை மனிதனாக்க வேண்டும். இவர்களது எழுத்துக்களெல்லாம் மனிதனை மிருகமாக்கும் சாக்கடை எழுத்துக்கள். வள்ளுவர் பெருமான் கூறியது போல
களைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடாது.
இவர்களையெல்லாம் களைய இனிமேல் இயலுமா?
என்ன ரவி உங்களுக்கு மட்டும்தான் பன்னாடை என்றெல்லாம் திட்ட தெரியுமா?
என்ன ரவி உங்களுக்கு மட்டும்தான் பன்னாடை என்றெல்லாம் திட்ட தெரியுமா?
என்னய்யா என் விமர்சனத்துக்கு பதில் இல்லாத பயமா? என் பின்னுட்டத்தை எல்லாம் தானாகவே “Discard” ஆகும்படி செய்து விட்டீர்களோ?
குனித்த புருவமும் கொவ்வைச்
செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம்போல்
மேனியற் பால் வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த
பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே.
அருமையான பாடல் + விளக்கம்.
சிவமயம்!.
சிவன் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் ரவி வர்மா வரைந்த ஒவியங்கள்தான். சிவன் கோயில் என்றால் நமக்கு நினைவுக்கு வருகிற உருவம் சிவலிங்கம். சிவலிங்கம் என்பது உருவம் அல்ல, அது அருஉரூபம்.
அதாவது உருவமாகவும் இருப்பது, அதே நேரத்தில் உருவம் இல்லாமலும் இருப்பது. சரியாக சொன்னால், ‘குறி’யீடாக இருப்பது. இப்படித்தான் எல்லா கோயில்களிலும் லிங்கமாக காட்சி தருகிறார், சிவன். அதுதான் சிவலிங்கம்.
அருமையான விமர்சனம். லிங்கம் எது என்பது பற்றி http://lordeswaran.wordpress.com/2010/05/03/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
sariyakach sonneergal .sirappaanakaruththu
santhegi.blogspot.com
மூன்று வயதில் தேவாரம் பாடினாரா?
at 8/09/2010 12:33:00 AM 4 comments மூன்று வயதில் தேவாரம் பாடினாரா? எவ்வண்ணம் சாத்தியம் இது? நம்பக்கூடிய கதையா இது? இவ்வண்ணம் கேள்விக் கணைகளை தொடுப்பர் அறிவுக் கோளாறுடையோர்! சரி பாடினது உண்மையென்றால் அதற்கு என்ன ஆதாரம்? என்று ஏளனச் சிரிப்பை பூப்பர் இக்கூட்டத்தார்!
திருஞானசம்பந்தப் பெருமானின் திருக்கதையை அறிந்துகொள்ள இக்காணொளிகளை இணைத்துள்ளேன். ஒன்று திரைப்படத்தில் இருந்து தொகுக்கப்பட்ட காட்சி. மற்றையது நாயனாரின் திருவரலாற்றுக் கதையை அன்பர் ஒருவர் எடுத்துச் சொல்லும் காணொளியாகும்.
ஞானப்பால் அருந்திய மூன்று வயதுக் குழந்தை பாடிய திருப்பதிகதில் முதலாவது பாடல் “தோடுடைய செவியன்” ஆகும்.
திருச்சிற்றம்பலம்
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
திருச்சிற்றம்பலம்
மொஸார்ட் என்பவர் மேலைத்தேய இசையில் மிகச்சிறந்த இசையமைப்பாளராக மிளிர்ந்தவர். ஐந்து வயதிலேயே இசையமைக்கத் தொடங்கியவர்.
http://en.wikipedia.org/wiki/Wolfgang_Amadeus_Mozart
அதிதி கௌதம் கேசி என்ற மூன்று வயது நேபாளச்சிறுமி அதிதி என்னும் பெயரில் இசைத்தொகுப்பு வெளியீட்டை செய்து எல்லோரையும் அதிசயிக்க வைத்துள்ளார். உலகிலேயே மிகச்சிறிய வயதில் இசைத்தொகுப்பு மேற்கொண்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளார் இந்த மூன்று வயதுச் சிறுமி!அதிதி இரண்டு வயதிலேயே பாடத்தொடங்கிவிட்டதாக அவரது அப்பா கூறியுள்ளார்.
ஏற்கனவே மூன்று வயதில் இசைத்தொகுப்பை கிளியோப்பட்ரா என்பவர் வெளியிட்டுள்ளார்.
http://blog.xnepali.com/music-video-of-atithi-kc-the-youngest-singer-in-the-world/
இந்தியாவின் இமாச்சல்ப் பிரதேசத்தைச் சேர்ந்த அக்ரிட் ஜஸ்வால் என்னும் சிறுவன் ஏழுவயதில் அறுவைசிகிச்சையையை இன்னொரு சிறுமிக்கு வெற்றிகரமாக மேற்கொண்டு மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளான். இச்சிறுவனின் தாயாரின் கூற்றுப்படி, இச்சிறுவன் ஐந்து வயதிலேயே சேக்ஸ்பியரின் கதையை வாசிக்கத்தொடங்கிவிட்டான். சிறுபிராயத்திலேயே மருத்துவநூல்கள் படிக்கத் தொடங்கி மருத்துகளையும் ஊர்மக்களுக்கு சொல்லி உதவிசெய்யத் தொடங்கியதும், ஏழைப் பெற்றோர் தமது பெண்பிள்ளைக்கு அறுவைசிகிச்சையை இலவசமாக மேற்கொள்ளும்படி வேண்டிநிற்க இச்சிறுவனும் அறுவைசிகிச்சையை மேற்கொண்டுள்ளான்.
http://en.wikipedia.org/wiki/Akrit_Jaswal
முருகேசன் என்னும் தமிழ்நாட்டு மருத்துவர் தனது பதினைந்து வயது மகனைக் கொண்டு தனது மருத்துவமனையில் பிரசவ அறுவைசிகிச்சையை மேற்கொண்டமை மருத்துவ உலகை அதிர வைத்து பெரும் சர்ச்சைகளை உருவாக்கியிருந்தது.
http://news.softpedia.com/news/The-World-039-s-Youngest-Surgeon-15-Years-Old-58171.shtml
செல்வி பாக்கியசிறி என்னும் சிறுமி ஏழுவயதில் மருத்துகள் பலவற்றை மிகச்சரியாக எடுத்துரைத்து மருத்துவர்களை மயக்கத்தில் வீழ்த்தினார்.
பாலமுரள் அம்பாதி தனது 17ஆவது வயதில் 1995இல் அமெரிக்காவில் மருத்துவப்பட்டத்தைப் பெற்று உலகில் மிகச்சிறிய வயதில் மருத்துவரானவர் என்ற பெருமையை கொண்டவராக உள்ளார். 1995இல் மருத்துவப்பட்டத்தைப் பெறும்போது 17 வயது என்றால் மருத்துவக் கல்லூரியில் சேரும் போது பாலமுரளியின் வயது 11 அன்றி 12 வயதாகவே பொதுவில் அமைந்திருக்க வேண்டும்.
http://www.metro.co.uk/news/world/765610-worlds-youngest-doctor-set-to-be-seven-year-old-selvi
அதுசரி……..என்ன சிற்றார்கள் நிகழ்த்தியுள்ள ஆச்சரியமான விடயங்களை தரவுபடுத்தியுள்ளேன் என்று தோன்றுகின்றதா? சைவப்பாரம்பரியத்தில் திருஞானசம்பந்த நாயனார் வரலாறு மேன்மை மிகுந்தது. சிவனடியார்களில் ஞானசம்பந்தரை முருகனின் திருவடிவமாக போற்றுவர். ஆனால் “மூன்று வயதில் தேவாரம் பாடினாரா?” என்று நாத்தீகவாதிகளும் சைவநெறியை உணரும் நல்லூழ் வாய்க்கப்பெறாத பிறசமயத்தவரும் கேளிசெய்த காலமுண்டு! சிலர் அறிவுக்குறைவால் இன்னும் தமது கேளிக்கூத்தை தொடருகின்றனர். அவர்களின் அறிவுக்குறைவை இங்கு எடுத்துக்காட்டவே சிற்றார் நிகழ்த்தியுள்ள ஆச்சரியமான விடயங்களை தொகுக்க ஊந்திற்று!
தேவாரம் மின்னம்பலத்திலிருந்து “தோடுடைய செவியன்” திருப்பாடலுக்குரிய பொருளையும் குறிப்புரையையும் இங்கு தந்துள்ளேன். குறிப்புரையை சிரத்தையுடன் படிக்க.நன்றி:-http://www.thevaaram.org/
பொழிப்புரை:-
தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!
குறிப்புரை:-
தோடுடையசெவியன் என்பது முதலாக உள்ளங்கவர்ந்தகள்வனுடைய சிறப்பியல்புகள் தெரிவிக்கப்பெறுகின்றன. பிள்ளையாருடைய அழுகைக் குரல் சென்று பரந்து திருமுலைப்பால் அருளச் செய்தது திருச்செவியாதலின் அதனை முதற்கண் தெரிவிக்கிறார். உலகுயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் அடைதலே பொருளாக, பாடல் பரமனார் திருச்செவியில் சென்று சேர, திருச்செவியை முதற்கண் சிறப்பித்தார் என்பது, `பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர்பால் செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து` என்ற சேக்கிழார் வாக்கால் தெரியலாகும். தோடுடையசெவி என்றதால் இடப்பாகத்துச் செவி என்பது குறிக்கப்பெறுகின்றது. கருணைக்கேற்றது, தாய்தழீஇய இடப்பக்கமாதலின், அதனை முற்கூறினார். `தோடு கூற்று பித்தா மூன்றும் பீடுடைத்தேசிகன் பேரருள் ஆகும்` என்பதால் இது ஞானதேசிகனது திருவருட்டிறத்தை விளக்குவதாகும். சொரூபசிவம் மூவகை ஆன்மாக்களுக்கும் மூவகையால் அநுக்கிரகித்து மும்மலங்களையும் போக்கி அருளாரமுதத்தை உண்பித்தருளும் முறையில், சகலான்மாக்களுக்குப் படர்க்கையில் தோன்றிப்புரியும் குருவருளைக் குறிப்பதாகுமென்று `குரு அருளும்` (அகத்தியர் தேவாரத் திரட்டு) என்ற பாடலும் குறிக்கிறது.
மூன்றுவயதுக் குழந்தையாகிய ஞானசம்பந்தப்பிள்ளையார் தீவிரதர அன்புகொண்டு சன்மார்க்க நெறியாகிய நாயக நாயகித் தன்மையில் எடுத்த எடுப்பிலேயே ஈடுபடுகின்றார். உமையொருபாகனாக ஒரு பெண்ணோடு இருந்த பயில்வால் என்னுள்ளங்கவர்கின்றார் என நயந்தோன்றக் கூறியவாறு. விடையேறி-தாம் கண்ட காட்சி இடபாரூடராதலின் அதனைக் குறித்தபடி. தூவெண்மதி-தூய்மையான வெண்ணிறம் பொருந்திய மதி. மதிக்குத் தூய்மை களங்கமின்மை, இருள் ஒளியைச் சாராதவாறு போலக் களங்கம் இறைவனையும், அவனருள் பெற்றாரையும் சாராது. தூய்மை மனத்திலும் வெண்மை புறத்திலும் நிகழ்வது ஆதலின், இங்கே குறிப்பிடும் மதி நாம் காணும் சந்திரன் போன்று பிராகிருத சந்திரன் அல்லன் என்பது தெளியத்தக்கது. அன்றியும் ஒரு கலைப் பிறையாதலின் களங்கத்திற்கு இடமில்லை என்பதுமாம். இறைவன் சுடலைப் பொடி பூசுதல்: சர்வசங்கார காலத்து எல்லாவுலகமும் தத்தங் காரணத்துள் முறையே ஒடுங்க-காரணங்கள் யாவும் இறுதியாக இறைவனிடம் ஒடுக்கப் பெறும்போது நிகழ்வது. மகாசங்காரமாவது, நிவர்த்தியாதி பஞ்ச கலைகளிலும் அடங்கிய எல்லாப் புவனங்களையும் சங்கரிக்கின்ற நிலை. அப்போதுதான் எல்லாம் சுடலைக் காடாகும்.
உள்ளங்கவர்தலாவது அவனையன்றி உளங்கள் அறியாவாறு ஆட்கொள்ளுதல். ஏடு-இதழ். மலரான்-பிரமன். பிரமன் வழிபாடு செய்த தலமாதலின் இறைவற்குப் பிரமபுரீசர் என்பதும் தலத்திற்குப் பிரமபுரம் என்பதும் பெயராயிற்று. பிரமாபுரம் எனவே பிரமன் வழிபட்ட தலம் என்பது விளங்குதலின் மலரான் என்பது பிரமனைக் குறியாது என்றும், இந்நாயனாரே முற்காலத்து ஏடுடைய மலரால் பூசித்த காரணம் பற்றி இங்ஙனம் கூறினார் என்றும் சதாசிவச் செட்டியாரவர்கள் கருதினார்கள். பீடு-பெருமை. மேவிய-தாமே விரும்பி எழுந்தருளியுள்ள. இறைவன் நித்யசுதந்திரன் ஆதலின் இங்ஙனம் கூறப் பெற்றது. பெம்மான்-பெருமான் என்பதன் திரிபு. கள்வன் பெருமானாகிய இவன் அன்றே எனக் கூட்டுக. ஏறி, பூசி என்பன பெயர்ச்சொற்கள். வினையெச்சமாக்கி, கவர்கள்வன் என்ற வினைத்தொகையின் நிலைமொழியோடு முடிப்பாரும் உண்டு.
இத் திருப்பாடலுக்கு உரை எழுதிய கயப்பாக்கம் திரு.சதாசிவச்செட்டியார் அவர்கள் `விடையேறி` என்பது நித்யத் தன்மையை வேண்டிய அறக்கடவுளை வெள்விடையாகப் படைத்து ஊர்தியாகக் கொண்டதால் சிருஷ்டியும், `மதிசூடி` என்பது சந்திரனுக்கு அபயம் தந்து திருமுடியில் ஏற்றிக் காத்ததால் திதியும், `பொடிபூசி` என்பது சர்வசங்காரகாலத்து நிகழ்ச்சியை அறிவித்தலால் சங்காரமும், `கள்வன்` என்பது இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருந்தும் அவைகள் வினைப்போகங்களை நுகர ஒளித்து நிற்பதால் திரோபவமும், `அருள்செய்த` என்பது அனைவருக்கும் அருள் செய்யும் அநுக்கிரகமும் ஆகிய ஐந்தொழிலையும் விளக்கும் குறிப்பு என்பார்கள்.
ஸ்ரீமத் செப்பறைச் சுவாமிகள் அவர்கள், `தோடுடைய செவியன்` முதலாயின இறைவனது எண்குணங்களாகிய சிறப்பு இயல்புகளை உணர்த்துவன என்றும், `பிரமாபுரம்` `விடையேறி` முதலியன இறைவனது தசாங்கங்களைக் குறிப்பால் உணர்த்தி நிற்பன என்றும், `விடையேறி` `பொடிபூசி` `உள்ளங்கவர்கள்வன்` என்பன முறையே இறைவனுடைய மூன்று திருமேனிகளாகிய உருவம் அருஉருவம் அருவம் என்ற மூன்றையும் குறித்து நிற்பன என்றும், எழுதியுள்ளார்கள். சேக்கிழார் சுவாமிகள் `மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுதுமறை` என்பதால் பிரணவத்தின் முதலாகிய ஓங்காரத்தைச் சிவசக்தியின் உண்மைச்சொரூபமாகிய தகரவித்தையின் அடையாளமாகிய `த்` என்பதோடு சேர்த்து `தோ` என்று தொடங்கியதாகக் குறிப்பிடுவார்கள். பன்னிரண்டாம் திருமுறையில் `உலகெலாம்` என்று முடிவதனையும் இதனோடு சேர்த்துத் திருமுறை முழுவதுமே வேத மூலமாகிய பிரணவத்துள் அடங்கியது என்பது குறிப்பு.
தேவாரத்திற்கும் வேதத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்த, வேதம் பயின்ற மரபில் வந்து தமிழ்வேதம் தந்த இவர்கள், தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோ தயாத் என்ற காயத்திரி மந்திரத்தின் முதலெழுத்தாகிய தகரத்தின் மீது பிரணவத்தின் முதலெழுத்தாகிய ஓகாரத்தைச் சேர்த்துத் தொடங்கியிருப்பது அறிந்து இன்புறற்குரியது.
குருவருள்: `தோடுடைய செவியன்` என்றமையால் அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்பதை முதலில் உணர்த்தி, அதனால் ஒருதெய்வ வழிபாட்டை நிலைநிறுத்துகிறார் ஞானசம்பந்தர். தோடுடைய செவியே `ஓம்` என்ற பிரணவ சொரூபமாய் உள்ளதையும் காட்டி அருளுகிறார்.
`ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம்` என்பது பிரமன் பூசித்தமைக்கு இரங்கிய பெருமான் அருள் செய்ததையே குறிக்கும். இதை வலியுறுத்துவார் போன்று `சேவுயரும் திண்கொடியான் திருவடியே சரண் என்று சிறந்த அன்பால் நாவியலும் மங்கையொடு நான்முகன்தான் வழிபட்ட நலங்கொள் கோயில்` எனப் பிள்ளையார் மேகராகக் குறிஞ்சிப் பண் பாடலிலும் விளக்கியுள்ளார். இதனால் `ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த` என்பது ஞானசம்பந்தர் ஏடுடைய மலரால் தான் வழிபட்டு அருள்பெற்றதாகக் கூறல் முறையாகாது என்பதை உணரலாம்.
சத்திரசிகிச்சை செய்தல் என்பது சிரமமான வேலை என்றாலும் அனுபவப் பயிற்சியில் யாரும் இலகுவில் பழகக்கூடிய ஒன்றே! அனுபவப் பயிற்சி ஒன்றே முதன்மையானது! மருந்துகளின் பெயர்களை பாடமாக்கும் நினைவாற்றல் திறன் இருந்தால் படித்து ஒப்புவிப்பதில் சிரமம் ஏதுமில்லை. ஆனால் இதை சிறுவர்கள் செய்யும்போது ஆச்சரியமான விடயமாகின்றது! நினைவாற்றலும் அனுபவப்பயிற்சியும் இருப்பின் இச்சாதனைகளை பொதுவாக அரங்கேற்றமுடியும்! நினைவாற்றல் இச்சிறுவயதில் அமைவதும் அனுபவப்பயிற்சியை எளிதாகக் கற்றுக்கொள்வதும் முற்பிறவியின் கல்விஞானத்தின் விளைவே !
ஆனால் சைவநெறியின் முழுமையையும் உணர்த்தும் திருப்பாடல் “தோடுடையசெவியன் “என்னும் தேவாரம் என்பதை குறிப்புரையைக் கொண்டே உய்த்துணரலாம். எனவே இப்பாடலை முதற்பாடலாகக் கொண்டு மூன்றுவயதில் பதிகம் பாடினார் என்றால் அது அம்மையின் திருமுலைப்பாலால் விளைந்த சிவஞானமே என்றால் மிகையில்லை!
தோடுடைய செவியனில் தொடங்கிய திருஞானசம்பந்தரின் தேவாரம் எந்தகு சிவானந்தத் திருவருளைக் கொண்டிருந்தது என்பதற்கு, தேவாரங்களால் அவர் ஆற்றிய பணிகளும் அதிசயங்களுமே சாட்சி! எனவே மூன்று வயதில் உலகத்தாரால் உய்த்துணர்வதற்கு கடினமான பொருட்செறிவு கொண்ட தேவாரத்தைப் பாடினார் என்றால் அதில் ஐயம் கொள்ளத்தேவையில்லை! மூன்று வயதில் பாடுதல் என்பது இன்றைய பல்வேறு சிற்றார் நிகழ்த்தும் நிகழ்த்தியுள்ள ஆச்சரியங்கள் வாயிலாக உண்மைத்தன்மை உடையதே என்று துணிபு கொள்ளலாம். உலகத்தாரால் உய்த்துணர்வதற்கு அரிதான பொருட்செறிவு கொண்ட திருப்பாடலாக அது அமைந்திருப்பது சிவஞானப்பாலை பருகியமையால் சாத்தியமாயிற்று! இத்தகைய உலகத்தாரால் இலகுவில் உய்த்துணர முடியாத பொருட்செறிவோடு பாடியமையே அவர்பெற்ற சிவஞானத்தை உணர்த்துவதோடு, முற்பிறவிக் கல்வியறிவால் ஏனைய சிறுவர்கள் ஆற்றும் ஆச்சரியங்களிலிருந்து ஞானசம்பந்தக் குழந்தையை தனியாகப்பிரித்து உயர்த்திக் காட்டுகின்றது எனலாம்!
எனவே “மூன்று வயதில் பாடினாரா?” என்ற ஒருசிலரின் ஏளனக் கேள்விக்கு கடந்தகாலத் தரவுகளும் நிகழ்கால ஆச்சரியங்களுமே விடை!
ENDU ENDRALE
முன்பு ஜெயலலிதா காஞ்சி சங்கரர் மடத்தில் கைவைத்தங்க,பிறகு 3 தேர்தல்களில் வெற்றி பெறமுடியவில்லை(பக்தியா இருந்தே இந்த நிலைமை).இப்பொழுது கருணாநிதி சிதம்பரத்தில் கைவைத்தார் அவரு குடும்பமே ஆட்டம் போடுது பார் ஆட்சியும் போச்சி சிறை சாலையே காட்சி இதுவே கடவுள் இருப்பதுக்கு சாட்சி.இனி நாத்திக கருணாநிதி ஆட்சி போயே போச்சி.
குமரன் சரியான சாட்டை அடி கொடுத்தீர்கள் பலே சபாஷ்,இப்பொழுதாவது நாத்திகபசங்க திருந்துவாங்களா ?
ராஜாத்தி அம்மாள் யேன் சனிஸ்வரர் கோயிலுக்கு போனாங்க இப்ப யென்ன பண்ணாரு அந்த நாத்திக கருணாநிதி ஊருக்குத்தான் உபதேசம் தனக்கு இல்ல சிதம்பர நடராஜரையும்,ஸ்ரீரங்க நாதரையும் பிளக்க வேண்டும்ன் னு ராமசாமி நாய்க்கர் சொன்னாரே இப்ப செய்து பாருங்க என்ன ஆகுதுனு,ஆந்திராவில் காளஸ்திரி கோபுரம் இடிந்து விழுந்தது ஆந்திர முதல்வர் செத்தாரு, கருணாநிதி பெரிய கோயிலுக்கு போனாரு,கோபுர கலசத்தின் மேல் இடி விழுந்தது அவர் குடும்பமே நாசம் ………………….இதுவே கடவுள் இருப்பதுக்கு சாட்சி. இன்னும் சொல்ல வேணுமா போதுமா?
//63 நாயன்மார்களில் நந்தனைத் தவிர மற்ற எல்லோருக்கும் பல்வேறு சோதனைகளுக்குப் பின், பார்ப்பன உருவத்தில் காட்சி தந்தான் சிவன். நந்தன் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவரை சிவனின் ஆலோசனையின் பேரில் ‘ஜோதி’யில் அய்க்கியமாக்கினார்கள் பார்ப்பனர்கள்.//
கண்ணப்பர் என்ன குலம் ,அவருக்கு சிவன் காட்சி தரவில்லையா?
Dear contributors & atheists,
appreciate your concern on Saivaites and your courage to enter the place unfit for your conscience in order to help the faith of a believer in Sithambaram. Wish you can do the same to the Parliament of politicians who are cheating and violating the faith of all citizens in the name of helping the public. As long as Saivam has survived, aprt from its pros & cons, its damage can be fingered to one or two individual devotees. What about the number of innocent people who are killed daily by poor decisions by government leaders?
Thanks
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் – valluvar
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)
திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.
Please follow
(First 2 mins audio may not be clear… sorry for that)
(First 2 mins audio may not be clear… sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo
Online Books
http://www.vallalyaar.com/?p=409
Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454
My blog:
http://sagakalvi.blogspot.com/
>>> (வயித்துவலிக்கெல்லாம் மதம் மாறுன ஆளுக்கிட்ட அப்படி என்னதான் ஆன்மீக ஒளியோ?)
வயித்த வலி உங்களுக்கு முன்ன பின்ன வந்திருக்கா ? வலி உயிரே போகும் சார். தூங்க முடியாது. எந்த வேலையும் செய்ய முடியாது. சூலை வியாதி என்று இதற்கு பெயர். எங்க சொந்தகார பாட்டி ஒருத்தி வயிறு வலி தாங்க முடியாமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாள். வலியின் உக்கிரத்தை அறிந்திருந்தால் இப்படி ஒரு கேள்வி உங்களுக்கு வந்திருக்கவே வந்திருக்காது. இன்றைய உலகில் உங்களுக்கு கேன்சர் வந்திருக்கிறது. இன்னும் 22 நாளில் நீங்கள் இறந்து போக போகிறீர்கள் என்று ஆங்கில மருத்துவர் கூறினால் அதில் சிறிதளவு வலியை நீங்கள் உணரலாம். இந்த வலியின் உக்கிரத்தை அறியாமல் வாய்க்கு வந்த படி பேசுவதுதான் பகுத்தறிவா ? பகுத்தறிவு என்பது யாவற்றையும் புரிந்து கொள்வது. அதற்கு முதலில் முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து முழுமையான அறிவை பெறாமல் பேச முயற்சிப்பது, கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வேகாத வடையை கையால் எடுத்து உண்ண முயற்சிப்பதற்கு சமமாகும்.
https://d2zcpk7yfyf2dq.cloudfront.net/milaap/image/upload/v1481903099/production/images/campaign/9497/Adiyogi_1481903097.jpg
உலகிலேயே மிகப்பெரிய ஆதியோகி எனும் சிவன் சிலையை கோவையில் உருவாக்கியுள்ளார் சத்குரு. பார்ப்பன ஹிந்து கடவுள்கள் பொதுவாக கர்ப்பக்கிருஹத்தில் இருக்கும். பார்ப்பன பூசாரிகளுக்கும், அதிகமாக நன்கொடை தரும் பெரும் பணக்காரர்களுக்கும் மட்டுமே கடவுள் தரிசனம் கிட்டும்.
இப்பொழுது சிவனை வெளியே கொண்டு வந்து யார் வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம் எனும் புரட்சியை செய்துள்ளார் சத்குரு ஜக்கி. இதன் மூலம் மிகப்பெரிய இந்துத்வ எழுச்சி தமிழகத்தில் வருமென்பதை மறுக்கமுடியாது. இந்துக்களின் புண்ணிய ஸ்தலமாக கோவை மாறுமென்றால் மிகையாகாது.
இதன் மூலம் மூடநம்பிக்கைகள் தலைவிரித்தாடும். பார்ப்பனீயம் தமிழகத்தில் ருத்ரதாண்டவமாடும்.
———————-
தந்தை பெரியாரால், தமிழகம் பார்ப்பனீயத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஆட்சியை பிடிக்க, பார்ப்பன அடிமை ஆதிக்க ஜாதியும் பாப்பானும் கூட்டு சேர்ந்து விட்டது கண்கூடு. அடுத்த கட்டமாக, இஸ்லாமியருக்கெதிராக முஸ்லிம்களை உசுப்பி விடுவான். குஜராத் கோத்ரா போல், ரயில் பெட்டியை எரித்து, வெடிகுண்டு வைத்து முஸ்லிம்கள் மீது பழி போடுவான்.
பார்ப்பனீய எழுச்சிக்கெதிராக, பெரியாரிஸ்டுக்களும் இஸ்லாமியரும் ஒடுக்கப்பட்ட மக்களும் இணைவர். இஸ்லாத்தை தைரியமாக இஸ்லாமியர் பிரச்சாரம் செய்வர். இஸ்லாம் காட்டுத்தீ போல் தமிழகத்தில் பரவும்.
// அடுத்த கட்டமாக, இஸ்லாமியருக்கெதிராக முஸ்லிம்களை உசுப்பி விடுவான். //
—————–
திருத்தம். அடுத்த கட்டமாக, இஸ்லாமியருக்கெதிராக இந்துக்களை உசுப்பி விடுவான்.
துபாயிலும், இதே போல் ஒரு ஆதியோகி சிலையை பாப்பான் கட்டவேண்டும். இது இஸ்லாமிய எழுச்சிக்கு வழிவகுக்கும்.