எது அநாகரீகம்?
எவ்வளவோ நாகரீகம் வந்து விட்டது. ஆனால் இன்னும் அரசியல் கட்சி மேடைகளில் துண்டு போர்த்துவதும், அரசியல்வாதிகள் தோளில் துண்டு போட்டுக் கொள்வதுமாக இருக்கிறார்களே, இந்த அநாகரீகமான துண்டுக் கலாச்சாரம் ஒழியவே ஒழியாதா?
எஸ்.என்.சிவசைலம், சேலம்.
தோளில் துண்டு போடுகிற கலாச்சாரம், இடுப்பில் துண்டு கட்டுகிற கலாச்சாரத்திற்கு எதிராக வந்தது.
பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத உயர்ஜாதிக்காரர்களைத் தவிர, வேறு யாரும் சட்டை அணியக் கூடாது. தோளில் துண்டுப் போடக்கூடாது, அப்படியே போட்டாலும் ‘உயர் ஜாதி’க்காரர்களை கண்டால் அந்தத் துண்டை எடுத்து இடுப்பில் கட்ட வேண்டும் என்று இருந்த அநீதியை எதிர்த்து பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம் கடுமையாக போராடியது.
ஒடுக்கப்பட்ட இசை வேளாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த – நாதஸ்வரம், தவில் வாசிக்கிற கலைஞர்கள், தோளில் துண்டுபோடக்கூடாது, என்று இருந்த ஜாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து, பெரியாரின் போர்வாளான பட்டுக்கோட்டை அழகிரி தொடர்ந்து போராடி, அவர்களுக்கு அந்த உரிமையை பெற்றுத் தந்தார்.
இன்று கூட தோளில் துண்டு போடுகிற பழக்கம் அரசியல் கட்சிகளில் அதிகம் இருப்பது திமுகவிடம்தான். அதற்குக் காரணம் பெரியார் மூலம் ஏற்பட்ட பழக்கமே.
தோளில் துண்டு போடுகிற இந்தப் பழக்கம், திராவிட இயக்கங்களின் பழக்கம் என்பதினால்தான் பார்ப்பன பத்திரிகைகள் – அரசியல்வாதிகள் பற்றியான நகைச்சுவைகளில், கார்ட்டூன்களில் தோளில் துண்டுப் போட்ட உருவங்களையே வெளியிடுவார்கள்.
அரசியல்வாதிகள் தோளில் துண்டுப் போட்டுக் கொள்வது உங்களுக்கு எந்த வகையில் இடைஞ்சலாக இருக்கிறது? நீங்கள் ஏன் எரிச்சல் அடைகிறீர்கள்?
தோளில் துண்டுப் போடுவது அநாகரிகமல்ல, சுயமரியாதை. தோளில் பூணூல் போடுவதுதான் அநாகரீகம்
வே. மதிமாறன் பதில்கள்
பக்கங்கள் 88. விலை ரூ. 35.
அங்குசம் வெளியீடு
தொடர்புக்கு;
‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.
பேச; 9444 337384
தோளில் துண்டு போடுவது ஒருவர் தனது சுயமரியாதை எடுத்துக் காட்டும் செயலாகும்… அதே போல் தான் நெஞ்சு நிமிர்த்தி வணக்கம் சொல்வதும்… ஆனால் இன்றோ தோளில் துண்டு போட்டால் .. “நீ என்ன பெரிய அரசியல்வாதியா?” என்கிறார்கள்.. இவர்களுக்கு தெரியுமா இந்த உரிமையே எவ்வளவு கடினப்பட்டு வாங்கினார்கள் என்பது
தோளில் துண்டுபோடும் பழக்கம் தன்மானம் உள்ள தமிழர்களின் குறியீடு. அது தமிழனின் அடையாளம், அநாகரீகம் அல்ல.
முண்டம் மதிமாறன்,
ஏன் கருப்பு சட்டை முண்டங்கள் தலையில் துண்டு போட்டூக் கொண்டு நடமாடக்கூடாது?வெறி நாய்களா.
sivagurunv@hotmail.com | 124.125.105.44
நீங்கள் சொல்வது சரி தான் மதிமாறன்.
ஆனால் மேடைகளில் கைத்தறித் துண்டைப் போர்த்திவிட்டு, பில்டப்பாக பொன்னாடை போர்த்துவதாக சொல்வதைத்தான் சகிக்க முடியவில்லை.
4,5 ஆண்டுகளுக்கு முன்பு, கைத்தறி நெசவு அதிகம் உள்ள பகுதி அது. சிபிஎம் கூட்டம் நடத்திய பொழுது, கைத்தறியை பொன்னாடையாக போர்த்தினார்கள்.
கோபம் வந்து, ஒரு துண்டுச் சீட்டில் பின்வருமாறு எழுதிக்கொடுத்தேன்.
“கைத்தறித் துண்டு பனியிலிருந்து காக்கும். குளித்தப் பிறகு துவட்டிக் கொள்ளலாம். தரையில் விரித்து அமரலாம். இப்படி பல்வேறு உருப்படியான பயன்பாடுகள்.
பொன்னாடை எதற்கும் பயன்படாது. பெட்டியில் தூங்கும். ”
படித்தப் பின்பு, அறிவிப்பை மாற்றி கொண்டார்கள்.
kumar (06:24:20) :
முண்டம் மதிமாறன்,
ஏன் கருப்பு சட்டை முண்டங்கள் தலையில் துண்டு போட்டூக் கொண்டு நடமாடக்கூடாது?வெறி நாய்களா.///
Dai lingam unakku yen da vilikithu….
Porombokku payala…….