வ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம் – ராஜாஜியின் பச்சைத் துரோகம்

ுதேசிப் ோர் கப்பல்தளபதி-3

ன்றைய சென்னை மாகாண காங்கிரசில் ..சிக்கு இணையான தியாகியோ, போர்க்குணமுள்ள தலைவரோ கிடையாது. எனினும் ..சி க்கு உரிய மரியாதையை காங்கிரஸ் தரவில்லை. அது மட்டுமல்ல, காங்கிரசிலிருந்து வெளியேறிய பின், கேரளத்தின் மாப்ளா எழுச்சியை ஆதரித்து கோவையில் பேசியதற்காக ..சி மீது அரசதுரோக வழக்கு தொடுத்தது பிரிட்டிஷ் அரசு.

ந்த வழக்கை எதிர்கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை. ..சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த இந்த வெறுப்பிற்கு வேறொரு வலுவான காரணம் உண்டு.

1925 ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், தமிழக அரசியலை இரண்டாகப் பிளக்கிறது.

19.6.27 அன்று கோவில்பட்டியில் நடந்த ஒரு கூட்டத் தில் பெரியாருடன் வ..சியும் கலந்து கொள்கிறார். எனது தலைவர்என்று பெரியாரை பெருமையுடன் குறிப்பிட்டுப் பேசுகிறார். பின்னர் பேசிய பெரியார், தனக்கேயுரிய பண்போடு அதை மறுக்கிறார். (குடி அரசு, 26.6.27)

பின்னர் காங்கிரசில் மீண்டும் இணைந்த ..சி, 1927 சேலம் காங்கிரஸ் மாநாட்டில்இம்மகாநாட்டில் குழுமியுள்ளோரில் பெரும்பாலோர் பிராமணரல்லாதோர். நானும் பிராமணரல்லாதார்தான்என்று பேசுகிறார்.

1928 இல் காரைக்குடியில் சைவ சமயத்தோர் மத்தியில் பேசும்போது அவருடைய பேச்சில் பெரியாரின் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது.

பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பதையும் மனுஸ்மிருதியையும் கண்டிக்கிறார். சிரார்த்தம் செய்வதைக் கேலி செய்கிறார். பார்ப்பான் என்ற சொல்லை எதிர்ப்பாகவே பயன்படுத்துகிறார். பெண்களின் உரிமை பற்றிப் பேசுகிறார். “தவறு என்று தெரிந்தால் வள்ளுவரென்ன, சிவபெருமானே ஆனாலும் தள்ளி வைக்க வேண்டியதுதான்என்று பேசுகிறார்.

சிறையில் இருந்த போது அவரிடம் நிலவிய சாதி மனோபாவத்தை அவரது குறிப்புகளே கூறுகின்றன. “”பார்ப்பான் அல்லது பாண்டிய வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால்தான் உண்பேன்என்று ஜெயிலரிடம் போராடிய ..சி, பெரியாரின் தாக்கத்தால் பெருமளவு உருமாறியிருக்கிறார் என்பதை மேற்சொன்ன நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

..சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த வெறுப்புக்கான காரணத்தை இனிமேலும் விளக்கத் தேவையில்லை. 1936இல் ..சி இறந்த பிறகும் அவர் மீதான வெறுப்பை காங்கிரஸ் கைவிடவில்லை.

திராவிட இயக்கத்தின் மீதும் பெரியார் மீதும் கட்டுக்கடங்காத காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தவரான .பொ.சி தன் அனுபவத்தை எழுதுகிறார்.

1939 இல் ..சிக்கு ஒரு சிலை வைக்க ம.பொ.சி முயன்றபோது காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுக்கிறார் சத்தியமூர்த்தி. “வகுப்புவாத உணர்ச்சி காரணமாகத்தான் நான் ஜஸ்டிஸ் கட்சிக்காரரான வ..சிக்கு காங்கிரஸ் மாளிகை முன்பு சிலை வைக்க முயல்கிறேன் என்று (என் மீது) பழி சுமத்தினார் சத்தியமூர்த்திஎன்று எழுதுகிறார் .பொ.சி.

பிறகு, வேறு வழியில்லாமல் ..சியை காங்கிரஸ் கவுரவிக்கமுயன்றபோது அது அவரை மிகக் கேவலமாக இழிவுபடுத்துவதாக அமைந்தது.

1949இல் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே ..சி யின் பெயரில் கப்பல் விடப்படுகிறது. துவக்க விழாவில் பேசினார் அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி:

கோரல் மில்ஸ், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி இவற்றின் ஒத்துழைப்புடனும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனும்இந்தக் கப்பல் போக்குவரத்தை இன்று நான் ஆரம்பித்து வைக்கிறேன்…. நம் நாடு முழு விடுதலை பெற்று விட்டது. ஹார்வி கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் இன்று நான் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறேன்சிதம்பரம் பிள்ளை ஆனந்தக் கண்ணீர் ததும்பத் தம் பெரிய கண்களை அகல விரித்து இந்த விழாவையும் என்னையும் பார்த்துக் கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறதுஎன்று கொஞ்சமும் வெட்கமில்லாமல் இந்த பச்சைத் துரோகத்தை பெருமை பொங்க விவரித்தார்.

இறந்தவர் மீண்டும் வரக் கூடுமென்றால், ..சி தனது பெரிய கண்கள் சிவக்க இந்தப் பச்சைத் துரோகத்துக்காக ராஜாஜியின் குரல் வளையைக் கடித்துக் குதறியிருப்பார்.

அவர் உயிருடன் இருந்த போதே அவர் துவங்கிய கப்பல் கம்பெனி நலிவுற்றது. “”நான் தோற்றுவித்த கப்பல் கம்பெனி நசித்தபின் எங்கள் கம்பெனியைச் சேர்ந்த ஒரு கப்பலை எங்கள் எதிரியான பி..எஸ்.என் கம்பெனியாரிடமே அப்போதிருந்த சுதேசிக் கப்பல் அதிகாரிகள் விற்று விட்டது எனது உடைந்த மனதில் உதிரம் பெருகச் செய்தது என்று குமுறினார் ..சி.

எந்த எதிரிகளை எதிர்த்து ..சி கப்பல் விட்டாரோ, அந்த எதிரியின் தயவிலேயே கப்பல் விட்டு அதற்கு அவரது பெயரையும் சூட்டிக் களங்கப் படுத்தியது சுதந்திரஇந்தியா. தன்னுடைய சித்திரவதைகள் மூலம் ..சியின் உடலிலிருந்துதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ரத்தம் குடிக்க முடிந்தது. காங்கிரஸ் துரோகிகளோ, தேச விடுதலைக்காகத் துடித்து அடங்கிய அந்த உள்ளத்தையும் உடைத்து ரத்தம் குடித்துவிட்டார்கள்.

வே. மதிமாறன்

புதிய கலாச்சாரம் 2006

5 thoughts on “வ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம் – ராஜாஜியின் பச்சைத் துரோகம்

  1. பார்ப்பான் அன்றிலிருந்து இன்று வரை திருந்தவே இல்லை. தங்களின் கட்டுரையில் சரியான சான்றுகளை அழகாக ஒரு மாலை போல் கோர்த்துத் தந்தமைக்கு மிக்க நன்றி.

  2. தமிழ்ப் பெருமகன்கள் வ.வு.சி, திரு.வி.க. இருவருக்கும் இழைத்த துரோகத்திற்குக்
    காங்கிரசும்,காங்கிரசில் ஆளுமையில் இருந்த பார்ப்பனக் கூட்டமும் வெட்கித்
    தலை குனிய வேண்டும்.
    பெரியார்,வரதராஜலு,திரு.வி.க மூவர் பெய்ரிலே தான் நாயுடு,நாயக்கர்,முதலியார்
    பார்ட்டி என்று தான் அன்றைய காங்கிரசு வளர்ந்தது.காங்கிரசால் அவர்களுக்குக் கிடைத்தது பட்டை நாமம்.பார்ப்பனர்களுக்கு சத்திய மூர்த்தி பவன்,ராஜாஜிக்குக் கவர்னர் ஜென்ரல்.ராஜாஜி கவர்னர் ஜென்ரலாக இருந்ததற்குச் சென்னை ராஜ்பவனையேக் கேட்டாராம்.எப்படி?
    அனைத்தையும் இழந்த வ.வு.சி.யைக் காப்பாற்றியது ஒரு வெள்ளைக் காரர்!
    என்ன அநியாயம்.

  3. Hi diwakar,
    I read your post. Accept your points like 1,2,3,5 and also your note to mr.mathimaran.I am a dalit.I was born in a village. My family is well educated and economically independent. Thanks to comrade Ambedhkar and Periyar.I never had any major problem other than few irritating looks on me when they came to know my caste.99% of the looks are from the non brahmins.In my village though my family and my relations didn’t faced any problem, people who belongs to our community are still facing the atrocities of the fucken non-Brahmin upper caste. For additional information there is no single Brahmin in my village and around. I don’t know about southern tamilnadu.but I have lived 3 years each in salem,erode,namakkal,trichengode,kumbakonam,pudukottai and kallakurichi.other than kumbakonam honestly I couldn’t see anything like the Brahmins are strong enough to exhibit their Braminism.let me ask the non Brahmin upper caste people if in case mr.thiruma or mr.raja or mr.krishnaswamy is contesting in Coimbatore against a person who is a kaunder,or in Madurai against a thevar,or in kadaloor against a vanniyar whom do you think will win?.I have to say that in all the 3 districts the Brahmin population will be too weak to decide the victory. I don’t know about any other community. As for as I am concerned as a dalit yes the ideology of “Brahmanism” is a complete bullshit and I would fight against it in all the aspect till my death for my people to get their rights. It is important in achieving political and diplomatic right. But when it comes to the day today life to achieve basic equality i have to fight with all the other caste people. I am not happy about the non Brahmin upper caste people who are blaming the Brahmins for the caste system and not worried about what’s going on within their family. I would say any non Brahmin who is really pissed off with caste system and who wants to break it should first blame their ancestors, relations, their community political leaders, their fake freedom fighters, their “Kula deiva valibadu”and their sadangu sambrithayangal because all the above points uplifts the castism.

    I would say the upper caste people use the anti-Brahmin ideology as a mask to hide their own guiltiness or their own caste feelings.
    As a dalit I feel like the non Brahmin upper caste ideology is not less dangerous or less important than that of the ideology of the Brahmanism to fight. Example Uthamapuram (I really liked the article written by mathimaran on this), Thinniam, keela venmani.

    CHEERS

  4. வேளாள இனத்தவரின் பார்ப்பன பகமை உணர்வுக்கு விடுதலை போராட்ட வீரர் சிதம்பரனாரை சாட்சிக்கு அழைத்தல் கொடுமையிலும் கொடுமை

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading