நடிகர்களின் உண்ணாவிரத நாடகமும் கமலின் வசனமும்

trick

இலங்கை அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் பற்றி கமல் எதுவுமே சொல்லவில்லை என்று எழுதியிருந்தாயே? விஜய் டி.வி. நிகழ்ச்சியில் எவ்வளவு தெளிவாக பேசியிருக்கிறார் பார்த்தாயா? இனியாவது அவரை குற்றம் சொல்வதை நிறுத்து.

-ரகு

‘மாணவர் போராட்டத்தைப் பற்றி ஆதரவாக ஏன் கருத்து சொல்லவில்லை’ என்று கமல் ‘ஆதரவாக’ பேசியதைப் பார்த்தேன்.

இந்த தந்திரமான விளக்கத்தைக் கூட குறைந்த பட்சம் நம்மை போன்றவர்கள் கேட்பதற்கு முன்னால் கொடுத்திருக்கலாம்.

‘தந்திரமான‘ என்று நான் சொல்வதற்கு காரணம் அவரின் ‘தெளிவான’ கருத்தே.

மாணவர் போராட்டம் வெறுமனே ஈழத்தமிழர்களுக்காக பரிதாபப் படுகிற போராட்டம் அல்ல; தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவை கொலைக் குற்றவாளியாகவும், ராஜபக்சே மீதும் இலங்கை அரசின் மீதும் இனப் படுகொலை செய்வதவர்கள் என்று அறிவிக்க வேண்டும் என்பதற்கான போராட்டம்தான் அது.

மாணவர்கள் அதற்காகத்தான் மக்களை போராட அழைத்தார்கள். அவர்கள் அழைப்பின் பொருட்டே கோயம்பேடு காய்கறி வியாபாரிகள், தமிழகம் முழுக்க உள்ள கூலித் தொழிலாளர்கள், ஜ.டி கம்பெனி ஊழியர்கள் வரை ராஜபக்சேவிற்கு எதிரான முழக்கங்களோடு களம் இறங்கினார்கள்.

அமீர் தலைமையில் திரைப்பட இயக்குநர்கள் அதை வலியுறுத்திய ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்கள்.

கமல் மாணவர் போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை? அல்லது ஆதரிக்கவில்லை? என்பதல்ல கேள்வி.

தன் படத்தின் திருட்டு விசி.டி க்கு எதிராக தன் ரசிகர்களை உசுப்பி விடும் கமல், ரஜினி போன்ற நடிகர்கள், ராஜபக்சே – இலங்கை அரசின் கொலைவெறிக்கு எதிராக ரசிகர்களிடம்கூட கருத்து சொல்லாதது ஏன்?

இலங்கை அரசுக்கு எதிராக வணிகர்கள் முதல் கமல் சார்ந்த திரைத்துறையினர் வரை போராடினார்கள், உண்ணாவிரதம் இருந்தார்கள். எல்லாவற்றையும் பற்றி கருத்து சொல்கிற கமல், இந்த விசயத்தில் ஏன் அமைதி காக்கிறார்? (‘அவர் இலங்கை தமிழர்களுக்காக மவுனம் விரதம் இருந்தார்’ என்று எந்த ‘ஞாநி’யும் விளக்கம் கொடுக்காமல் இருந்தால் சரி.)

கமல் அந்தப் பேட்டியில் மாணவர்கள் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தியதாக சொல்லியிருக்கிறார். அரசியில்வாதிகளையே தூக்கி சாப்பிடுகிற அளவிற்கு அரசியல் செய்கிற கமல் போன்ற நடிகர்களையும் மாணவர்கள் அம்பலப்படுத்தினார்கள் என்பதும் உண்மை.

அந்த ‘தந்திரமான’ Attendance போடும் பேட்டியில் கமல், பாலஸ்தீன போராட்டத்தைப் பற்றி பேசுகிறார். பிரபாகரன் மகன் கொலை செய்யப்பட்டதற்காக வருத்தப்படுகிறார். இதைக் கண்டிப்பதற்கு நாம் தமிழனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை மனிதனாக இருந்தாலே போதும் என்கிறார். ‘அமீர் முயற்சியில் நடந்த உண்ணாவிரத்தில் ஏன் பங்கெடுக்கவில்லை’ என்று கேட்க போகிறார்கள் என்பதற்காக உண்ணாவிரதத்தையே கேள்விக்குட்படுத்துகிறார்,

சிங்களவர்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டாலும் கண்டிப்பேன் என்கிறார். ஆனால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டிக்க மறுக்கிறார். பிரபாகரனின் மகனை எவன் கொன்றான்? என்பதை சொல்ல மறுக்கிறார்.

‘ராஜபக்சே’ என்கிற வார்ததை வர மறுக்கிறது உலக நாயகன் வாயிலிருந்து.

‘இலங்கை அதிபர்’ ‘ராஜபக்சே’ ‘இனப் படுகொலை’ போர் குற்றவாளி’ போன்ற வார்தைகளை அவர் உச்சரிக்காமல் இருப்பதில் மிக ‘தெளிவாக’ இருந்தார்.

கோயம்பேடு மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளர்களிடமிருந்த அரசியல் நேர்மையில் ஒரு சதவீதம்கூட ஞானப்பழம் சாப்பிட்ட உலக நாயகனிடமில்லை.

**

நாளை (2-02-2013) நடைபெற இருக்கும் நடிகர்களின் உண்ணாவிரத்தில் ஹாலிவுட்டிற்கே சவால் விடும் நடிப்புத் திறமையை தமிழக மக்கள் கண்டு களிக்கலாம்.

நடிகர்கள், மக்கள் மத்தியில் பொதுமேடையில் நடிப்பதற்கு ‘ஆஸ்கர் அவார்டு’ கொடுத்தால், இந்நேரம் தமிழ் சினிமா நடிப்பிற்காக ஆயிரம் ஆஸ்கர் அவார்டு வாங்கியிருக்கும்.

பஞ்ச் டயலாக் பேசியவர்கள், எப்படி பம்முறாங்க..

குட்டிகள் கதையும் புட்டிகள் கதையும் பேசி மகிழ்கிறவர்கள்; மேடையில் எப்படி குட்டிக் கதை சொல்லி பல்டி அடிக்கிறார்கள் என்பதை எல்லாம் கண்டு கை தட்டி மகிழலாம்.

**

நாங்க சூட்டிங் போறது மட்டும் இல்ல லேட்டு

தமிழனுக்காக போராடுனா நீ குடுப்பியா துட்டு

ரொம்ப பேசுனா income tax ல வைப்பாண்டா வேட்டு

**

ராஜபக்சேவை திட்டுனா ரிலீஸ் ஆகாதுடா எங்க படம் இலங்கையில…

அட்டென்டென்ஸ் போட்டா போதும் தமிழன் அடிப்பாண்டா விசிலு தியேட்டரில..

தொடர்புடையவை:

மாணவர் போராட்டம்: காணாமல் போன கமல், நாட் ரீச்சபுள் ரஜினி

இலங்கை ராஜபக்சேவுக்கு ‘எதிராக’ சர்வதேச ராஜபக்சே !

மாணவர் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு..?

14 thoughts on “நடிகர்களின் உண்ணாவிரத நாடகமும் கமலின் வசனமும்

 1. (ஆஸ்கர் மட்டும் சிங்களர்களால் கொடுக்கப்பட்டால் என்ன நடக்கும்..?? )

  விஸ்வரூபம் 2 கதை : அணைத்து (இந்திய)தமிழர்களும் பெருமை படுகிற
  தேசப்பற்று கொண்ட மெய்சிலிர்க்கும் கதை….அதாகப்பட்டது , ஒரு இந்திய தமிழன் எப்படி இலங்கை தமிழர்களை நம்பவைத்து வேரறுத்து சிங்கள ராஜபக்சே ஆட்சியை நிலை நிறுத்துகிறான் என்பதே..!

  அதில் ஒரு போர் நடைபெறும் சமயம் நமது கமல் பேசுவார் பாருங்கள் ஒரு டையலாக் .. ” ராஜபக்சே பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல மாட்டார்… ” அந்த இடத்தில அப்ளாஸ் அள்ளும் !! முக்கிய கதாப்பாத்திரத்தில் சுப்பிரமணிய சாமி நடிக்கிறார்..!

  யாரும் படத்தை தடை செய்யனும்னு போராட்டம்னா நடத்திராதிங்கப்பு !!!!!! தேசப்பற்று கொண்ட படமப்பு !!! அவரு வீட்டை அடமானம் வச்சிருக்காரு …பின்ன அவரு ” இனவாதம் ” இல்லாத இன்னொரு தேசத்தை தேடி போயிருவாரு …!! நாம எல்லோரும் சோறு கிடைக்காம சாக வேண்டியது தான் …!! :-))

  (இலங்கையால் ஆஸ்கர் தரப்படவில்லை ……தமிழன் தப்பிவிட்டான் !!

  அமெரிக்காவில் ஆஸ்கர் தரப்படுகிறது …….இஸ்லாமியர்கள் மாட்டிகொண்டனர் !!!)

 2. கமல், ரஜினி தங்கள் படத்தின் மூலம் வரும் வசூல் பாதிக்காமல் இருக்க என்ன வேசம் வேண்டுமானாலும் போடுவார்கள்,ஆனால் பொது மக்களின் நலன்களுக்காக போராட்டக்களத்திற்கு நம்முடன் வரமாட்டார்கள்.அவ்ர்களை விட்டுவிடுங்கள்

 3. “நடிகர்களின் உண்ணாவிரத நாடகமும் கமலின் வசனமும்”
  கமல்,ரஜினி போன்றவர்கள் தங்கள் படங்களின் மூலம் வரும் வசூலில் கருத்தாகயிருந்து , அதற்காக மட்டுமே சவுண்டு விடுவார்கள். மற்றபடி அவற்களால் ஒரு பயனும் இல்லை.

 4. very true. i am kamal fan. but i am not happy with this speech. he was very cautious that he should not say anything against SL Govt & Raja bakse.. i felt bad about my ulaga nayagan..

  I was worried when he said he is going to lose all his money. but once he got his money, went back to his old form.. i didnt expect this from him

 5. குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவரோ நீங்கள்..
  எதையாவது எழுதி பெயர் பெற வேண்டும் என்ற ரீதியில் சினிமா, ரஜினி, கமல் என்று எதிர்மறையாக எழுதுகிறீர்கள் என்றே தோன்றுகிறது. அறிவிஜீவி என்ற வட்டத்தினுள் வர இப்படி குதர்க்கமாக மட்டுமே எழுத வேண்டுமோ? அப்படியெனில் வாழ்த்துகள்..சார்.

 6. அடிக்கடி கமல் பற்றி எழுதி, கமலின் படங்களுக்கு உங்களால் இயன்ற விளம்பரம் தருகிறீர்கள். நன்றி.

 7. இங்க கமலையும் ரஜினியையும் அவரவர் அயோக்கியத் தனத்துக்குத் தகுந்த படி கழு ஊத்துவாங்கன்னு தெரிஞ்சும் “உனக்கு கமல் ஃபோபியா” “நீ குற்றம் கண்டுபிடிச்சு பேர் வாங்குறவன்” போன்ற அரிய கண்டுபிடிப்புகளை இங்கு வந்து உலகுக்கு வெளிப்படுத்துகிறவர்களே, உங்கள் முதுகு அக்குள், கவட்டை உள்ளிட்ட இடங்களை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவுங்கள். ஏனெனில் உங்கள் அறிப்புக்குச் சொறிந்து கொள்கிற இடம் இது கெடையாது. போய் வேற வேலை இருந்தா பாருங்க.

 8. டே டே…தெரிய்ம்டா.
  இப்படித்தான் ராஜீவ் காந்திகிட்டே போய் கெஞ்சி, எங்க நாட்டுக்கு வா வான்னு கால்ல விழுந்தீங்க…
  கடைசியில மாலைக்கு தலையகாட்டினவரே அங்கேயே போட்டு தள்ளிட்டீங்க ..
  சூப்பர் தமிழ்ப் பண்பாடு.
  இப்ப கூத்தாடிங்க பின்னாடி எங்களுக்கு கொரலு கொடுன்னு அலையிறீங்க..அவனுங்களும் தமிழ்பற்று வியாபாரம் பண்ணனும்..அவனும் நடிக்கிறான்..
  இப்ப அவனையும் திட்டுறீங்க…

  விடுதலைப்புலி இந்தியாவுல தடை செய்யப்பட ஒரு பயங்கரவாத இயக்கம்..பிரபாகரன் தேடப்படும் ஒரு பயங்கரவாதி இன்னும் அவன் படத்தைபோட்டு அரசியல் தமிழ்பற்று வியாபாரம் செய்துகொண்டிருப்பது தேச துரோகம்..
  தமிழ்பற்று வியாபாரத்தின் ஒரு பகுதி தேச துரோகம் என்றாகிவிட்டது..
  நல்லா கொரைச்ச்க்கிட்டு இருங்கட..
  வாழ்க டாஸ்மாக் தமிழ்பற்று வியாபாரம்…

 9. இந்தியாவின் முழு ஒத்துழைப்போடு சோனியாவின் சூழ்ச்சிக்கு இலங்கையில் உள்ள தமிழ் இனமே அழித்து ஒழிக்கப்பட்டது, அதற்கு இப்போது உண்ணாவிரதம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?

 10. vgs nna… muthalla kamala paththi pesaratha nirutha sol.. naanum nirunthareen (nayagan paaniyil padi)

 11. muthalla kamala paththi pesaratha nirutha sol.. naanum nirunthareen (nayagan paaniyil padi)

  முதல்ல தமிழ்ல எழுதித் தொலை. சகிக்கல. இங்க இப்படித் தான் எழுதுவாங்க. வந்து கத்திக்கிட்டே இருப்பீன்னா கத்து. சொறிய சொறிய சுகமாத்தான் இருக்கும். அப்படியே சொறிஞ்சிகினே இரு, கோடு கோடா ரத்தம் ஒழுகும். அப்பயும் அனுபவிச்சு சொறி போ.

Leave a Reply

%d bloggers like this: