ஐ.டி. கம்பெனி ஊழியர்களும் டீக் கடை ஊழியர்களும்
ஐ.டி. கம்பெனிகளின் சம்பளத்தைப் பார்த்த பிறகு தான் தெரிகிறது, இவ்வளவு நாள் இந்திய முதலாளிகள் நம் தொழிலாளர்களுக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு குறைவானது என்று?
-க.சத்தியமூர்த்தி, சேலம்.
உண்மையில் ஐ.டி கம்பெனிகள் தருகிற சம்பளம் குறைவானது. ஒப்பிட்டளவில் இதே வேலையை பார்க்கிற அமெரிக்கர், ஐரோப்பியர்களுக்குத் தருகிற சம்பளத்தில் பாதிதான் இந்தியர்களுக்குத் தரப்படுகிறது. இந்த குறைந்த சம்பளத்திற்காகத்தான் இந்தியர்களுக்கு அன்னிய நிறுவனங்கள் வேலை வாய்ப்பில் முன்னுரிமை தந்தது கோடி கோடியாய் கொள்ளை அடிக்கின்றன.
கிராமப்புறத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவருக்கு, சென்னை துணிக்கடை ஒன்றில் வேலை கிடைத்தால், அது சிரமமான வேலையாய் இருந்தாலும் மாதச் சம்பளமும் நகர வாழ்க்கையும் அவருக்கு ஒரு அந்தஸ்தையும் மயக்கத்தையம் தரும் அல்லவா? அதுபோல் ஒரு மயக்கத்தில் இருக்கிறார்கள் ஐ.டி.கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள்.
உலக தொழிலாளர்கள் அனைவருக்காகவும் எட்டு மணி நேர வேலை திட்டத்தை, எந்த அமெரிக்க தொழிலாளர்கள் தங்கள் ரத்தத்தையும் உயிரையும் சிந்தி பெற்றுத் தந்தார்களோ? அதே அமெரிக்காவில் இருந்துதான் 12 மணி நேர வேலைத் திட்டம் உலகம் முழக்க பரவிக் கொண்டிருக்கிறது.
டீக் கடையில் வேலை செய்கிற தோழர், எட்டு மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய சொன்னால், முடியாது என்று மறுத்துவிடுவார். முடியுமா, ஐ.டி. கம்பெனி ஊழியர்களால்? (ஐ.டி. கம்பெனில வேலை பாக்குற தீவிர கம்யுனிஸ்ட்டால் கூட முடியது. அவரு கம்யுனிஸ்ட் என்பதை காட்டிக்கொண்டால் வேலையில இருக்கவே முடியாது. அப்புறம்..)
*
வழக்குரைஞர் கு. காமராஜ் நடத்திய ‘சமூக விழிப்புணர்வு’ – 2007 செப்டம்பர் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து…
‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.
பேச: 9444 337384
தொடர்புடையவை:
அவுங்க வரலாம்.. இவுங்க வரக்கூடாதா?
துணிக்கடைகளை, நகைக்கடைகளை நகருக்கு அப்பால் மாற்ற வேண்டும்!
தமிழ் முதலாளிகளின் தாக்குதல்களும், தமிழர்களின் படுகொலைகளும்
‘இந்திக்காரனையும் உன்னையும் விரட்டுவோம்’: என்ன உன் பிரச்சினை.. உனக்குத் தேவை அல்வாவா?
உண்மை தான் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோர் அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஒரு மணிக் கூறுக்கு 2000 ரூ. முதல் 6000 ரூ. வரைப் பெறுகின்றனர், அப்போ இந்தியாவில் ?! அதுவும் 12 – 16 மணி நேரம் ஒரு நாள் பணியாற்றுகின்றனர், மருத்துவக் காப்பீடுகள், பிரசவ விடுப்பு, தொழிற்சங்கம் எவையும் இந்திய ஐ.டி ஊழியர்களுக்கு இல்லை. நவீனக் கொத்தடிமை போன்றதே..
unmayaa sonninga…eppa irukira IT employees ellam naveena kottadimai thaan