பார்ப்பனக் கை கூலி ஏ.ஆர். ரகுமானும் `ரீமிக்சும்`

இன்றைய திரைப்பட இசையமைப்பாளர்கள் பழைய பாடல்களையே ‘ரீமிக்ஸ்’ என்ற பெயரில் தருகிறார்களே? இது என்ன முறை?
சிவகுமார்.

 arrahman.jpg

கதையின் படி, பழைய காலத்தை நினைவூட்டுவதற்காக அல்லது கதாபாத்திரம் நினைத்துப் பார்ப்பதாக ஒரு பழையப் பாடலை கொஞ்சம் மாற்றி பாடுவதில் தவறில்லை.

அப்படிதான் தியாகராஜ பாகவதர் பாடிய “ராதே உனக்கு கோபம் ஆகாதடி” என்று ‘செஞ்சுருட்டி’ ராகத்தில அமைந்தப் பாடலை, அதற்கு பின் வந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் கொஞ்சம் வேகம் கூட்டி டி.எம். சவுந்ரராஜனை வைத்துப் பாட வைத்தார்.

msv_and_ilaya.jpg‘புதிய பறவை’ படத்தில் “உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்” என்று ‘ஹரிகாம்போதியில்’ மெல்லிசை மன்னர் இசையமைத்தப் பாடலை, இசைஞானி இளையராஜா ‘தாய்க்கு ஒரு தாலாட்டு’ என்ற படத்தில், பழைய பாடலின் பின்னணி இசையை மட்டும் கொஞ்சம் மாற்றி, “பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை” என்று மெல்லிசை மன்னருக்கு மரியாதை செய்திருப்பார்.
இது முன்னர் இருந்த மேதைகளுக்கு, அதே துறையைச் சார்ந்த மேதைகள் செய்த கவுரம்.

ஆனால் இப்போது நடப்பதோ களவானித்தனம்.

பழைய பாடல்களை மறைமுகமாக திருடி  இசையமைத்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது நேரடியாக பகிரங்கமாக வழிப்பறி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த இசையமைப்பாளர்களை விட கல்யாண வீடுகளில் பாடுகிறவர்கள் நிரம்ப நேர்மையோடு இருக்கிறார்கள்.
“இந்தப் பட பாடல், இவர் இசையமைத்தது” என்று சொல்லிவிட்டு பாடுகிறார்கள். ஆனால் இவர்களோ, கொஞ்சமும் வெட்கமில்லாமல் அடுத்தவர் பாடல்களை தன் பாடல்கள், என்றே அறிவித்துக் கொள்கிறார்கள்.

இந்த மோசடியை ஆரம்பித்து வைத்தது, பார்ப்பனக் கைகூலியான ஏ.ஆர். ரகுமான்.

‘படகோட்டி’ படத்திற்கு மெல்லிசை மன்னர் அமைத்த ‘தொட்டால் பூ மலரும்’ என்ற அருமையான கற்பனைகள் கொண்ட பாடலை, ‘பாவம் கொடூரன்’ எஸ்.ஜே. சூர்யா என்பவருக்காக களவாடியிருந்தார் ரகுமான்.

கே. பாலசந்தரும், மணிரத்தினமும் இணைந்து இஸ்லாமியருக்கு எதிராக ‘ரோஜா’  என்ற திரைப்படத்தை மட்டும் தரவில்லை.  இசைஞானி இளையராஜாவிற்கு எதிராக ஏ.ஆர். ரகுமான் என்பவரையும் திட்டமிட்டு தயாரித்தார்கள்.
கே.ஆர். நாராயணனுக்கு எதிராக அப்துல்கலாமை பா.ஜ.க., தயாரித்ததைப் போல்.

அந்த விசுவாசம் ரகுமானுக்கு இருந்ததால்தான், ‘ரோஜா’ ‘பம்பாய்’ போன்ற இஸ்லாமிய எதிர்ப்புத் திரைப்படங்களில் அவருடைய இசையும் இஸ்லாமிய எதிர்ப்புக் குறியீடுகளாகவும், `இஸ்லாமிய இசை` தீவிரவாத  அடையாளமாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

dr_abdul_kalam.jpg இன்று கூட இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்களும், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கிட்டை எதிர்க்கிற பார்ப்பனர்களும், உயர்ஜாதிக்காரர்களும், பா.ஜ.க., வை சேர்ந்த பலரும் – ஏ.ஆர். ரகுமான் மற்றும் அப்துல் கலாமின் ஆதரவாளர்கள்தான்.

இவர்களை ஆதரிப்பதின் மூலமாக, தங்களின் இஸ்லாமிய எதிர்ப்பை மறைத்துக் கொள்கிறார்கள் அல்லது இஸ்லாமிய ஆதரவாளர்களாக சித்தரித்துக் கொள்கிறார்கள்.
     

-வே. மதிமாறன்

21 thoughts on “பார்ப்பனக் கை கூலி ஏ.ஆர். ரகுமானும் `ரீமிக்சும்`”

 1. ஏ. ஆர். ரகுமான் என்பதே ‘அர்ரகுமான்’ என்று அல்லாஹ்வின் பெயரைக்குரிப்பதே ஆகும். மேலும் இப்பெயர் அல்லாஹ்விற்கென்றே உரிய பெயராகும். மனிதர்களை இப்பெயர் கொண்டு அழைப்பது இஸ்லாத்தின் படி தவறு ஆகும்.

  முதல் கோணல், முற்றிலும் கோணல் இதுதான் அந்த இசை அமைப்பாளருக்கு பொருத்தமான அடைமொழியாகும்.

 2. //கே. பாலசந்தரும், மணிரத்தினமும் இணைந்து இஸ்லாமியருக்கு எதிராக ‘ரோஜா’ என்ற திரைப்படத்தை மட்டும் தரவில்லை. இசைஞானி இளையராஜாவிற்கு எதிராக ஏ.ஆர். ரகுமான் என்பவரையும் திட்டமிட்டு தயாரித்தார்கள்.
  கே.ஆர். நாராயணனுக்கு எதிராக அப்துல்கலாமை பா.ஜ.க., தயாரித்ததைப் போல்.//

  சரியாகச் சொன்னீர்கள். பாராட்டுக்கள்.
  -ஜமாலன்.

 3. ஆகா,
  உங்க புத்தி கூர்மைய நினைச்சா அப்படியே புல்லரிக்குது.

  ரோஜா படத்த போன வாரம் மீண்டும் பார்த்தேன், இசுலாமியர்களுக்கு எதிராக அதில் எதுவும் சொல்லப் படவில்லை. ஏ.ஆர்.ரகுமான் ரோஜா படத்தில் அறிமுகப் படுத்தப் பட்டதற்கு காரணம் அவரது திறமை.

  இதுக்கும் மேல ரீமிக்ஸ் பாட்ட பத்தி சொன்னீங்களே.
  முடியல. . . . .

 4. பன்னாடை பாலசந்தர்,மாமேதை மனிரத்னம் போன்ற கழிசடைகளோடு G.V என்று ஒரு ஜென்மமும் இந்த லிஸ்டில்…

  அந்த காலத்தில் உடன் பணி புரிவோர் கலாமை “கலாம் ஐயர்” என்று தான் அழைப்பர்களாம் …

 5. என்னத்தை சொல்றது, மேடை கிடைத்துவிட்டது என்று மீட்டிங்கில் உளறும் மடப்பய அரசியல்வாதிக்கும் உங்களுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. ஏதேனும் நீங்கள் கேட்டு ரகுமான் மறுத்துவிட்டாரா..>? கஷ்டம்பா..?

 6. மணிரத்தினம் போன்ற ஒரு கேவலமான வியாபாரியை பார்க்க முடியாது…பிரச்சினைகளை படமாக்கி அதில் துட்டு பார்ப்பது தான் மணிரத்தினத்தின் பாணி…

  காஷ்மீர் பிரச்சினை – ரோஜா
  இந்து முஸ்லிம் பிரச்சினை – பம்பாய்
  ஈழப்பிரச்சினை – கண்ணத்தில் முத்தமிட்டால்
  சாதிப்பிரச்சினை – டும்டும்டும்

  என்று சொல்லிக்கொண்டே போகலாம்…

  இப்போது கூட கண்ணில் விளக்கெண்ணை விட்டு பார்த்துக்கொண்டிருப்பார்…எங்கே என்ன பிரச்சினை, அதை வைத்து படம் எடுத்து எப்படி துட்டு சம்பாதிக்கலாம் என்று…

  கட்டாயமாக படங்களில் தன்னுடைய சாதியை நுழைத்துவிடுவது மணிரத்தினம், ஷங்கர், பாலசந்தர் போன்ற இயக்குனர்களுக்கு கை-வந்த கலை…

  இப்போது “எவனோ ஒருவன்” கூட கிளம்பிவிட்டான்…இது போன்ற படங்களுக்கு “துட்டுக்காக” சீமான் போன்றவர்கள் துணை நிற்பது தான் வேதனை தருகிறது…

  நல்ல சாட்டையடியான பதிவு….

 7. சரியாக சொல்லி இருக்கிறீர்கள்..

  @வெங்கட்ராமன், ரோஜா படத்தில் இசுலாமியர்களுக்கு எதிராக எதுவும் சொல்லவில்லையா? உங்க கண்ணு என்ன நொல்லையா? அதில் காசுமீர் போராளிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கவில்லையா? அங்கே நிலை கொண்டு இருக்கும் இந்திய ராணுவத்தினரை புனிதர்களைப் போல் காட்ட வில்லையா? அங்கே ராணுவத்தாரால் கணக்குக் காட்டுவதற்காக தினசரி கொல்லப்பட்டு வரும் அப்பாவிகள் பற்றிய செய்திகள் உங்கள் காதுகளில் விழுந்ததில்லையா?

  அதிலும் இந்திய கொடி எரிக்கப்படுவதாகவும் பின்னனியில் ஒருவர் நமாஸ் செய்வதைப் போலவும் காட்டி இசுலாமியம் இந்திய நாட்டுக்கே எதிரானது போல சித்தரிக்கவில்லையா?

  ரோஜா திரைப்படம் பற்றி நிறைய சொல்லலாம்..

  போங்க சார்.. போய் ஒழுங்கா செய்தித் தாள் வாசிக்கும் பழக்கத்தையாவது வளர்த்துக் கொள்ளுங்கள்

 8. ரோஜா படதில் சிறையில் இருக்கும் கைதியை “உங்க ஊருக்கு போகவேண்டியது தானே” என்று சுகாசினி ஸொரி…மதுபாலா சொல்லும்…

  எந்த ஊரு ? கைபர் போலனா?இசுலாமியர்கலும்,கிருத்துவர்கலும் சாதி கொடுமை தீர மதம் மாறியவர்கள்…இந்த சின்ன உண்மை கூட வா மேதைக்கு தெரியாம இருந்துருக்கும் ?

  முதலில் என் பெயரை மாற்றி தொலைக்கவேண்டும்…

  @ வெங்கட்ராமன்… ஒ அவனா நீ ??

 9. சாட்டையடி……………..அது சரி கொஞ்ச நாள் இல்லாம லண்டன்ல பெரிய பிசின்னு சொல்லிட்டிருந்த இவர் ஏன் மறுபடியும் இங்கேயே வந்துட்டார்…………

  வந்ததும் வந்தார் விஜய காலி பண்ணிட்டார்…….எங்கேயோ குத்தாட்டம் போட்டுட்டு இருந்த அவருக்கு குத்தாட்டம் போட வாய்ப்பு கொடுக்காம படமும் ஓட பண்ணினது இவர் வேலை தான்.

  காபி அடிக்க எந்த பாட்டும் கிடைக்கல போல அவருக்கு……..

 10. //கே. பாலசந்தரும், மணிரத்தினமும் இணைந்து இஸ்லாமியருக்கு எதிராக ‘ரோஜா’ என்ற திரைப்படத்தை மட்டும் தரவில்லை. இசைஞானி இளையராஜாவிற்கு எதிராக ஏ.ஆர். ரகுமான் என்பவரையும் திட்டமிட்டு தயாரித்தார்கள்.
  //

  செம காமடி இது 🙂

 11. //இன்று கூட இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவர்களும், இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கிட்டை எதிர்க்கிற பார்ப்பனர்களும், உயர்ஜாதிக்காரர்களும், பா.ஜ.க., வை சேர்ந்த பலரும் – ஏ.ஆர். ரகுமான் மற்றும் அப்துல் கலாமின் ஆதரவாளர்கள்தான்//

  I don’t belong to BJP or any other party. I don’t beleive in caste system of this country. But i am a strong supporter of Abdul Kalam. I don’t bother whatever you write about AR Rahman. But why did you drag in Abdul Kalam. He deserves highest respect from every Indian.

 12. கழுதைகளா ஏ.ஆர்.ரகுமான் ஒரு தமிழ் முதலியார் வகுப்பைச் சார்ந்தவர். அவரது பூர்வீகம் சென்னை ரெட்ஹில்ஸுக்கும் திருவள்ளுருக்கும் அருகில் உள்ள கீழானூர் என்னும் கிராமம். அவர் தந்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றினார். இசை மீது கொண்ட ஆர்வத்தால் பணியை ராஜினாமா செய்து விட்டு இசைத்துறைக்கு திரும்பினார். அவர் தாத்தா பெயர் ராஜகோபால முதலியார். அவர் கோயிலில் பஜனை பாடி வந்தார். வரலாறு தெரியாமல் எதையும் உளரக்கூடாது.

 13. மலேசியா வானொலி ( அரசு ) மின்னல் பண்பலையில் மாலை பொழுதில் ஆனந்த தேன் காற்று நிகழ்வில் 99 % இசைஞானி பாடல்கள் தான் இந்த வானொலிக்கு போட்டியாக தனியார் நிறுவன வானொலி குறித்த நேரத்தில் மக்களை கவர எதோ எதோ செய்து பார்த்தார்கள் கடைசியில் இசைஞானி தான் உதவி செய்தார் .இவரின் இசையை தவிர்த்தல் வானொலிக்கு வாழ்வில்லை .

Leave a Reply