துறவிகள்
யாகவாவிற்கும் சிவசங்கர் பாபாவிற்கும் நடந்த சண்டையை ஒட்டி, பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆசிரியராக இருந்த ‘நந்தன்’ இதழக்கு (1998 செப்டம்பர்) நான் அளித்தப் பேட்டி….
‘புதுக்கோட்டையில் போலி சாமியார் கைது’
‘மார்த்தாண்டத்தில் போலி சாமியார் கைது’
போலி சாமியார் அப்படிங்கற வார்த்தைப் பிரயோகமே தவறானது.
மாட்டுறவரைக்கும் சாமியார் – மாட்டிக்கிட்டா போலிச் சாமியாரா?
1994க்கு முன்னால் பிரேமானந்தாவும் சாமியார்தான்.
சாமியாரே போலிதான்.
வேணும்னா, சாமியார்களை போலி மனிதர்கள்னு சொல்லலாம்.
சாமியார்களின் பின்னணியில் தொழில் அதிபர்கள் நிச்சயம் இருப்பார்கள். சில சாமியார்களே தொழில் அதிபர்களாகவும் இருப்பார்கள். சிலபேருக்கு சாமியார் வேலையே பெரும் வருமானம் வரும் தொழிலாகவும் இருக்கும்.
இதில்… யாகவா, அவரே ஒரு தொழில் அதிபர்தான்.
சிவ சங்கர் பாபா – இவரோட பின்னணியில் அனுபவ் பவுண்டேஷன்.
ஆன்மீகம், மதம்னு சொன்னாலே மக்கள் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள் – சந்தேகப்படறதே பாவம் அப்படிங்கற மனநிலை.
இதுவே சாமியார்களுக்கான வெற்றி.
ஒரு சாமியாரை உருவாக்கி – மீடியாக்கள் மூலமா அவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கி, அவரோட ஆசியால், அருளால் இந்த நிறுவனம் இருப்பதால், இது நாணயமானது. நேர்மையானது என்கிற நம்பகத் தன்மையை உருவாக்கி தன்னோட தயாரிப்புகளை விற்றுக்கொள்வது – பங்குகளை வாங்கிக் குவிப்பது.
அனுபவ் நிறுவனங்களுக்கு ஒரு சங்கர் பாபா.
பாலு ஜுவல்லர்ஸ்க்கு ஒரு பாம்பன் சுவாமி.
இன்னும் கள்ள நோட்டு அடிக்கிற, என்ஜினியரிங் கல்லூரி நடத்துகிற துறவிகளும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வெறும் உள்ளூர் வஸ்தாதுகள்தான்.
இந்திய – சர்வதேச சாமியார்கள் இன்னொரு வகை – சங்கராச்சாரி, சாய்பாபா போன்றவர்கள். இதில் சங்கராச்சாரி சாய்பாபா போன்றவர்ளைப் பற்றி எப்போதுமே எதிரான செய்திகள் வெளிவராது. தவறி வந்தாலும் அது மறுநாளே அமுக்கப்படும்.
ஒரு நாத்திகனுக்குரிய ஆவேசத்தோடு பார்ப்பனரல்லாத சாமியார்களைப் பற்றி செய்திகள் வெளியிடுகிற ஜுனியர் விகடன், சங்கராச்சாரியர்களைப் பற்றிய சர்ச்சையில் இறங்கவே இறங்காது.
பார்ப்பன நலன், தீண்டாமை கடைபிடிப்பு, பெண்களுக்கு எதிரான கருத்து, பிரதமர்கள், ஜனாதிபதிகள் தொடர்பு இது பற்றி எந்தக் கேள்வியும் எழுப்பாது.
ஏன்… துறவு வாழ்க்கையில் தண்டத்தை வைத்து விட்டு ஓடிப்போய்விட்ட ஜெயேந்திரனைப் பற்றி ஒருவரிகூட எதிராக எழுதியதில்லை.
யாகவா முனிவர் – சிவ சங்கர் பாபா, இந்த இரண்டு கடவுள்களின் ‘பேட்டை ரவுடி’ சண்டையை முதலில் வெளியிட்ட பத்திரிகை துக்ளக்தான். அதன் நோக்கம்,
சங்கராச்சாரியாரைத் தவிர வேறு சாமியார்கள் இல்லை என்பதே.
அதுவே இப்போது இந்த பிஸ்தாக்களின் தகராறில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
ஒரு மனிதனை விட இன்னொரு மனிதனுக்கு அதீத சக்திகள் இருப்பதாக சொல்லுகிற அநாகரிகத்தை, மோசடியை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்ய வேண்டும்.
சமீபத்தில் சென்னை ராயபுரத்தில் 117 ஆண்டுகளுக்கு முன்னால் புதைக்கப்பட்ட கிறிஸ்த்துவ சாமியாரின் எலும்பு அப்படியே இருப்பதாக அதிசயப்பட்டார்கள்.
117 ஆண்டுகள் என்ன? 2017 ஆண்டுகள்கூட ஆகட்டும், அந்த எலும்பே ஏசு கிறிஸ்துவாகக்கூட உயிர்தெழுந்து வரட்டும், அதனால் மக்களுக்கு என்ன நன்மை? குறைந்தபட்சம் அந்தப் பகுதி மக்களுக்காவது என்ன நன்மை?
பல்வேறு பிரச்சினைகளின் அழுத்தத்தால் எதைத் தின்றால் பித்தம் தௌயும் என்று புரியாமல் முழிக்கும் மக்களின் பலவீனம் பயன்படுத்தி அவர்களை கேலிக்குரியவர்களாக்கி, அவமானப்படுத்தி, சுய சிந்தனையற்றவர்களாக மாற்றி சுரண்டுபவன் – பார்ப்பானோ, பார்ப்பனரல்லாதவனோ, அற்புத சுகமளிப்பதாக சொல்லும் கிறிஸ்த்தவனோ, பில்லி-சூன்யம்-ஏவல் என்று பிதற்றும் இஸ்லாமியனோ-எவனாக இருந்தால் என்ன? அவன் விரட்டியடிக்கப்பட வேண்டியவனே.
சங்கராச்சரியாரைப் பற்றி ஒரு சம்பவம்.
செத்துப்போன பெரியவாளுக்குக் கண்ணில் குறைபாடு. கண் மருத்துவர் அறுவை சிகிச்சை முடித்து – சுவாமிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.
ஒருவாரம் தலைக்குக் குளிக்காதீர்கள் – குளித்தால் கண்ணுக்கு ஆப்த்து’ என்றார். அதையும் மீறி அவர் தலைக்கு ஸ்நானம் செய்ய கண் குருடானது.
அந்தக் கண்ணைப் பார்த்துதான் ‘ஒளி தெரிகிறது, ஜோதி தெரிகிறது, அருள் வழிகிறது’ என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.
அவர் நினைத்துக் கொண்டிருப்பார்,
‘உங்களுக்கு என் கண்ணில் ஒளி தெரியுது, ஜோதி தெரியுது. அடபாவிகளா, எனக்கு கண்ணே தெரியலடா’
இதுதான் அதீத சக்தி.
‘நந்தன்’ மாத இதழ் 1998 செப்டம்பர்.
நண்பர் மதிமாறன் அவர்களுக்கு….
சாமியான்களுக்கும், தொழில் அதிபன்களுக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி குறிப்பிட்டுள்ள நீங்கள், ஏன் அரசியல் வாதிகளை சீண்டவில்லை? இப்போதெல்லாம் சாமியார்களுக்கு ரொம்ப வேண்டியவர்களே அரசியல்வாதிகள்தான். நீங்கள் சொல்லுகிற அதே ஜெயேந்திரன் காலில் வந்து விழுந்து எத்தனையோ அரசியல்வாதிகள் ஆசி பெற்று, மக்கள் வரிப்பணத்தை காணிக்கையாக செலுத்தியிருக்கிறார்கள். தங்களது அடுத்தடுத்த படைப்புகளில் அரசியல்வாதிகளுக்கும், சாமியார் என்று சொல்லிக்கொள்ளும் சாமியான்களுக்கும் இடையே உள்ள நெருக்கத்தையும், கிறக்கத்தையும் விளக்குவீர்கள் என்று நம்புகிறேன். மிக்க நன்றி.
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
திருக்குறள் எண் 262.
நன்றியுடன்
நாஞ்சில் பீற்றர்
மெரிலாண்ட்
கூறை ஏறி கோழி பிடிக்க தெம்பில்லாத கபோதிங்க எல்லாம் வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்பட்டா… இப்படித்தானுங்க முடியும்.
மணிக்கட்டில் விலங்கு போட்டு நாய் மாதிரி தெருத்தெருவாக சேற்றிலும் மண்ணிலும் தவழ அடித்து இழுத்து கொண்டு போக வேண்டும். அப்போதாவது இந்த மண்ணின், அதில் வாழும் எளிய மக்களின் மனிதம் இவன் போன்ற மிருகங்களின் மூர்க்க குணத்தை மாற்றி சாதாரண மனிதனாக வாழ வழி வகுக்கும் என நம்புவோம்.
இவர்கள் விஷயத்தில், அ.தி.மு.க அரசு முக்கியமான சங்கர ராமன் கொலை வழக்கை விட்டு விட்டு, மற்ற “மசாலா ” விஷயங்களில் கவனம் செலுத்தியது. அதே நேரம் ஆதரவுப்பத்திரிகை, எதிர்ப்பு பத்திரிகை இவை இரண்டும், நாலொரு செய்தியும், பொழுதொரு பரபரப்பும் ஆக வெளிய்யிட்டனா. அதையே இவர்கள் தங்களுக்கு சாதகமாக ஆக்கி, தாங்கள் பழி வாங்கப் படுவதாக, வழக்கு இட மாற்றம்…., வாதி மாற்றம்… என்று ஜவ்வு போல ஆகி விட்டது! அவர்கள் மீது வழக்கு உள்ளது. சட்டம் தன் கடமையச் செய்யட்டும். இப்போது சமுதாயத்துக்கு முக்கியமான விஷயம் என்ன என்றால், சமூகத்தில் உண்மையான துறவிகள் பின்னுக்கு தள்ளப்பட்டு, பணக்கார, அரசியல் செல்வாக்கு உள்ள சிலர் மதத் தலைவர் போல செயல்படுவது தான். இதனால் இந்திய நாட்டின் பெருவாரியான மக்கள் பின் பற்றும் இந்து மதம், ஆபத்தில் ஸிக்கியுள்ளது. ஏன் எனில் இந்து மதத்தின் நோக்கமே, இயற்கை அல்லது விதியின் கையில் சிக்கி, பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி தவிக்கும், இயற்கையின் கையில் அடிமையாக வாழும் உயிரை – சுதந்திரமான, துன்பம் இல்லாத, விடுதலை பெற்ற வாழ்க்கைக்கு அழைத்து செல்வதுதான். இந்து மதத்தின் உயிர், ‘உண்மையை ஆராய்வது, உண்மையை அறிவது, உண்மையாகவே மாறுவது என்பதுதான். உண்மையாக மாறும்போது, அழியும் நிலையில் இருந்து, அழிவற்ற நிலையில் விடுதலை பெறுவது” என்பதுதான். ஆனால், இப்போது செல்வாக்கும், பண பலமும் உடைய நபர்கள், ஆன்மீக விஷயத்தைப் பற்றி சிந்தனையே இல்லாமல் சொத்து குவிப்பதில் ஈடுபட்டு உள்ளவர்கள்,
வெறுமனே காவித் துணியைக் கட்டிக் கொண்டு பெரிய ஞானிகள் போல வேடம் இடுவதும், மற்றவர் அவர் காலில் விழுந்து, பல்லைக் காட்டி விட்டு வருவதுமாக, இந்து மதத்தை கெடுத்து, குட்டிச் சுவர் ஆக்கும் செயல் நடக்கிறது. தமிழ் நாட்டில் மக்கள், ஆன்மீக ஆராய்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள். ஆன்மீக விஷயத்தைப் பற்றி பேசுவது என்றால் வேம்பாகக் கசக்கிறது மக்களுக்கு. ஆனால் tooth paste விற்க்கலாமா, Share வாங்கலாமா, கிரிக்கெட் பற்றி பேசலாமா என்றால் உடனே தயார்!
பூசை செய்யும் போது கூட, என்னைக் காப்பாற்று, எனக்கு இதைக் குடு, அதைக் குடு என்று கேட்கிறார்களே தவிர, எந்தப் பலனும் எதிர் பார்க்காமல் அன்புக்கு ஆக கடவுளை வணங்குவது அபூர்வம் ஆகி விட்டது. இப்படிப்பட்ட மக்கள் கூட்டத்தில் இருந்து, சந்திரசேகரெந்திரர், ஜெயேந்திர, விஜெயெந்திரர் போன்றவர்தான் வரமுடியுமே தவிர, விவேகானந்தர், ஆதி சங்கரர், புத்தர், தியாகராசர் போன்ற, தியாக துறவிகள் உருவாக முடியுமா?
When Jeyendra wa arrested, no one in Kanchipuram got shocked. Infact I could see a feeling like this should have happend much earlier. I was living in Kanchipuram in that period – very close to this mat.
We all were doing our regular work very usually. Only the english news channels madee this news very big.
People in Kanchipuram are not really interested to go to this mat. Who ever iss benefitted by mat (may be Brahmins or non-brahmins) are only going.
I myself seen so many people keep the currency bundles in a plate and submit it to Jeyendra. One more ric man gave a breifcase which was full of gold jewels. These fellows for sure have given these things not to show their “Bhakthi” – but to get some benefit out of mat.
If Hindus really beleive that their religion is a good one, they have to avoid Jeyendra & co.