‘அழுகிய முட்டையே அதிகபயன் தரும்’ அல்லது ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்.. இவன் ரொம்ப… நல்லவன்’

egg-on-face

ழத்தமிழர்கள் துயரத்திற்காக, நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள் வழக்கறிஞர்கள். அப்படியிருந்தும் நேற்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், ஒரு முக்கியப் பிரமுகரின்மேல் கொண்ட பேர் ஆர்வத்தால், அவர்மேல் கொண்ட அளவற்ற அன்பால், அந்த முக்கியப் பிரமுகரின் ‘வழக்கை’ மிகச்சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.


முக்கி, முக்கி தமிழ்ப் பேசுகிற தமிழ்க் கடவுள் பெயரை தன் பெயராக வைத்திருக்கிற, அந்த முக்கியப் பிரமுகருக்கு, வழக்கமாக பக்தர்கள் கனவில் வருவதே தன் கடமையாக கொண்ட சிதம்பரம் நடராஜனே, கனவில் வந்து சொல்லியிருப்பான் போல,

‘பக்தா, தீட்சிதர்கள் சார்பாக நீ போய் சென்னை உயர்நீதிமன்றத்திலே ஆஜர் ஆகு, மீதிய அங்கிருக்கிற வக்கீல்கள் பாத்துப்பாங்கனு’ அதனால் அவராகவே வசமாக வந்திருக்கிறார் ‘வழக்கிற்கு’.


இந்த வழக்கின் புதுமை, ஒரு நபருக்காக பல வழக்கறிஞர்கள் ஒரே சமயத்தில் ஒன்றுசேர்ந்து ஆஜராகியதுதான்.

எல்லா வழக்கிற்கும் நீதிபதிகள்தான் தீர்ப்பளிப்பார்கள், ஆனால் இந்த வழக்கின் இன்னொரு புதுமை, வழக்கறிஞர்களே ‘தீர்ப்பு’ வழங்கவில்லை, ‘தீர்ப்பை’ அடித்திருக்கிறார்கள். அந்த முக்கிய நபர் ‘போதும்,போதும்’ என்று சொல்ல சொல்ல திருப்தியாக வழங்கியிருக்கிறார்கள் தீர்ப்பை.


தமிழறிஞர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள், முற்போக்காளர்கள், தமிழ் உணர்வாளர்கள் எல்லோரும் ஒருசேர, வழக்கறிஞர்கள் வழங்கியத் தீர்ப்பை இப்படி பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்:

 

“இதுதாண்டா தீர்ப்பு” என்று.

 

hands-egg

அந்தப் புகழ்பெற்றத் தீர்ப்பு இதுதான் ‘நல்ல முட்டையைவிட, அழுகிய முட்டையே அதிக பயன்தரும்’.

இந்தத் தீர்ப்பின் சிறப்பு, இதை வழக்கறிஞர்கள், செய்முறை விளக்கம் காட்டி நிரூபித்ததுதான்.


மிகிச் சிறந்த புரதச்சத்தான, நல்ல முட்டையை வீணாக்காததற்கும், அழுகிய முட்டையை எவ்வாறு வீணாக்காமல் ‘முறையாக’ பயன்டுத்துவது என்பதை தமிழக மக்களுக்குச் சொல்லிக் கொடுத்ததற்கும், நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


வாழ்க வழக்கறிஞர்கள். அவர்களின் சமூக அக்கறைக்கு நமது மரியாதைக்குரிய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.


இவ்வளவு வாங்கியப் பிறகும் அந்த முக்கியப் பிரமுகர்,

“டேபிள் மேலே முட்டையை அடிச்சுட்டா, டாக்குமண்ட் மேலே முட்டையை அடிச்சுட்டா.” என்று அதைத்தான் சொல்கிறாரே தவிர, தன் மீது விழுந்த முட்டைகளின் கணக்கையோ, முட்டைகள் விழுவதற்கு முன் விழுந்ததையோ சொல்லவில்லை. என்ன அவருடைய பெருந்தன்மை.


அவர் பேட்டியைப் பார்த்தபோது, நடிகர் வடிவேலுவின், இந்த வசனமே ஞாபகம் வந்தது:


‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்… இவன் ரொம்ப…. நல்லவன்’

28 thoughts on “‘அழுகிய முட்டையே அதிகபயன் தரும்’ அல்லது ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்.. இவன் ரொம்ப… நல்லவன்’

 1. தேசத்துக்காகவே உழச்ச அந்த மனுசாள,

  குழந்த முகத்த எப்படியா அடிக்க மனசு வந்துச்சு?

  எல்லாத்துக்கும் ஆண்டன் கூலி கொடுப்பான்.
  (ஏழைகளோட கூலி உயர்வ பத்தி பேச மாட்டான்)
  இந்த சுட்டிய பாருங்கள் மாமா சாமி முட்டாபிசேகத்தோட(பட்டாபிசேகம்னா பல்ல காட்டுவேளே) நிக்குறாரு

  http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=3037&cls=row4

 2. இது ஒரு மாதிரி(sample) தாக்குதல் மட்டும்தான். இதனினும் கூடுதலான நியாயமான தண்டனைகளை இனி தொடர்ச்சியாக மக்கள் வழங்குவார்கள். சு.சாமியை அவமானப்படுத்துவதும் எச்சரிப்பதும் தான் இத்தாக்குதலின் நோக்கமாக இருந்திருக்கிறது. மாறாக நையப் புடைக்க வேண்டும் என்கிற நியாயமான எண்ணத்தின் அடிப்படையில் இன்னும் சற்று கூடுதலாக தாக்குவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தபோதிலும், வழக்கறிஞர்கள் இத்தோடு நிறுத்தியிருப்பதிலிருந்து நாம் இதனை யூகிக்க முடிகிறது.

  இது சு.சாமியின் மீதான தாக்குதல் மட்டுமன்று. பார்பன திமிரெடுத்து பிறரை இழிவுபடுத்தும் கொழுப்போடு செயல்பட்டுவரும் ‘ஹிந்து’ராம், சோ, ஜெயலலிதா போன்ற பயங்கரவாதிகளின் மீதான மக்களின் தீர்ப்பின் துவக்கமே இத்தாக்குதல் நடவடிக்கை.

  நீதிபதிகளால் விற்கப்படும் நீதியும் சட்டமும், நேற்றையதினம் வழக்கறிஞர்களால் நேர்மையாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இத்தாக்குதல் நடவடிக்கை நீதிபதிகளுக்கும் ஒரு சரியான பாடத்தை வழங்கியிருக்கிறது.

  நீதி மன்றத்துக்குள் நுழைந்து அதிரடியாக மக்கள் தீர்ப்பை வழங்கிய அந்த நேர்மையான வழக்கறிஞர்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவண்,
  ஏகலைவன்.

 3. நிச்சயம் இது ஏகலைவன் சொன்னது மாதிரி ‘தேவைதான்’ அவாளுக்கு! இம்மாதிரி அபிஷேகங்களுக்குப் பிறகாவது அவாளுக்கு புத்தி வந்தா சரிதான்.!

 4. வன்மையாக கண்டிக்கிறேன்…. அழுகிய முட்டையை அசிங்கப்படுத்திய நிகழ்வு … இது

 5. நல்லதொரு தீர்ப்பை வழங்கியிருக்கும் வழக்’அறிஞர்களுக்கு’ வாழ்த்துக்கள்!

  ச.திரு, மலேசியா

 6. இந்த நாசூக்கான மரியாதைகளெல்லாம் உரைக்காது அவாளுக்கு.
  கடுமையான எச்சரிக்கைகளும், நேரடியான தண்டனைகளும் தரப்பட வேண்டும்.தமிழனை சுரண்டி பிழைப்பு நடத்திக்கொண்டு, தமிழர்க்கெதிரான நிலைபாடுகளையும் பெருமிதமாக கைக்கொண்டு எப்படி இவாள்லாம் தைரியமாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். காலில் விழுந்து பிச்சையெடுக்கும் கும்பல் முதலில் திருந்த வேண்டும்.

 7. இதை கொண்டாடுவது சரியானதுதான் ஆனால் நாம் வலுவாக இருக்கிற இடத்தில் இப்படி நாம் நடந்துகொள்லாம் பார்ப்பனகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் அவன் செய்கிற பதிலடியை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை வரும் எனவே என்னுடைய தனிப்பட்ட கருத்து வன்முறை சரியானது அல்ல. நமது கொள்கைகளே சரியான ஆயுதம். புஷ்மீது எரியப்பட்ட செருப்பு சரியானது .அதேபோல் சாமி மீது எரியப்பட்ட முட்டையும் சரியானதுதான் அதற்குமேல்போய் அவனை தாக்குவது சரியானது அல்ல

 8. வன்மையாக கண்டிக்கிறேன்…. அழுகிய முட்டையை அசிங்கப்படுத்திய நிகழ்வு …

  Ha ha ha…..

  அப்பிடியே சாணாபிஷேகமும் செய்திருக்க வேண்ண்டும்.

 9. முக்கி முக்கி தமிழ் பேசுறதுனால தான் அவர் “முக்கி”ய பிரமுகரா??? 🙂

 10. //ஆதிக்கம் நிறைந்த பகுதியில் அவன் செய்கிற பதிலடியை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை வரும் எனவே//
  //அதற்குமேல்போய் அவனை தாக்குவது சரியானது அல்ல//

  ஜெயா மாமி கூட்டனில புட்போர்ட் அடிக்கும் உங்கள் கவலை எங்களுக்கு நன்றாக புரிகிறது விடுதலை.

 11. ஒட்டுமொத்த சமூகத்தின்மேல் அக்கறையும் ஈடுபாடும் கொண்டவர்களை கவலை கொள்ளவைக்கும் ஒரு தாலிபானிஸ போக்கு இது.

  வன்மையாக கண்டிக்கக்கூடிய கேவலமானதும் ஆபாசமானதுமானதொரு நிகழ்வு.

  தமிழகம் இன்னுமொறுமுறை வெட்கித்தலைகுனிய வேண்டும்.

  இதை போற்றிப்பாடும் “கற்றவர்கள்” எண்ணிக்கை அபாயகரமானதும் கூட.

  வேதனையுடன்
  பொன்.முத்துக்குமார்

 12. அவைகளா அழுகிய முட்டைகள்?
  யார் சொன்னது….
  திருத்திக்கொள்ளுங்கள் நண்பர்களே!

  அவை ‘அழகிய’ முட்டைகள்…

 13. பொன் முத்துக்குமார் என்கிற அனானி, ஆறுமுகசாமி என்ற கிழவனார் தாக்கப்பட்ட போது “வெட்கித் தலைகுனிய வேண்டிய தாலிபானிச போக்கு” என்று யாரும் சொல்லவில்லை. அது விளைவு என்றால் இது எதிர்விளைவு. அடிச்சவன் வாங்குறான். போங்க சார் பேசாம…

 14. வன்மையாக கண்டிக்கிறேன்…. அழுகிய முட்டையை அசிங்கப்படுத்திய நிகழ்வு …

  Ha ha ha…..

  அப்பிடியே சாணாபிஷேகமும் செய்திருக்க வேண்ண்டும்.

 15. நணபர்களே
  கீழே காண்பது கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர் திரு பத்ரி என்பரின் பதிவும். அதற்கு நான் இட்ட பின்னூட்டமும். அந்த பின்னூட்டம் ஆர்.விக்கும பொருந்தும்
  நன்றி
  ++++++++++++++++++++++++++
  சுப்ரமணியம் சுவாமி மீதான தாக்குதல்
  கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது இந்தச் செயல். நீதிமன்றத்தில் புகுந்து வக்கீல்களே அடாவடியாக இதுபோன்ற ரகளைகளில் ஈடுபட்டுள்ளது குடியாட்சி முறை மீது நம்பிக்கையுள்ள அனைவராலும் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டிய செயல். இந்த ரவுடிச் செயலுக்கும் மங்களூரில் மதுவகங்களில் பெண்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
  ஆனால், இணைய பெரியாரிய, திராவிட, மார்க்ஸிய, லெனினிய வஸ்தாதுகள் மதிமாறன், வினவு போன்றோர் கைகொட்டி இதனைக் கொண்டாடுவது அவர்களது முதிர்ச்சியின்மையையும் அவர்கள் பின்பற்றிவரும் பாதையின் அரைவேக்காட்டுத் தன்மையையும் மட்டுமே காட்டுகிறது.
  ஒருவருடைய கருத்துகள் ஏற்கமுடியாதவையாக இருந்தாலும், அதைச் சொல்ல அவருக்கு முழு உரிமை உண்டு என்பதையும், வன்முறையைத் தம் கையில் எடுத்துக்கொண்டு அடுத்தவருக்குத் தீர்ப்பு வழங்க நமக்கு எந்தக் கட்டத்திலும் அதிகாரம் இல்லை என்பதையும் ஏற்காத கருத்துத் தீவிரவாதிகள், இடதாக இருந்தாலும் சரி, வலதாக இருந்தாலும் சரி, நம் நாட்டுக்கு மிகவும் கேடு செய்யக்கூடியவர்கள். இந்த ஒரு விஷயத்தில் ஸ்ரீராம சேனையும் வினவும் மதிமாறனும் ஒன்றுசேர்ந்து ஓரணியில் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.
  +++++++++++++++++++++++++++++++++
  எனது மறுமொழி
  +++++++++++++++++++++++++++++++++
  பத்ரி உங்களிடம் சில கேள்விகள் +++++++++++++++++++++++++++++++
  தீட்சிதர்களிடம் தமிழில் பாடும் உரிமைக்காக போராடிய 70 வயது கிழடான சிவனடியார் ஆறுமுகசாமியின் கருத்துரிமையை மதிக்காத தீட்சிதர்கள் அவரை உதைத்து கையை உடைத்து வெளியேற்றிவிட்டார்கள். அவர்கள் மேல் வழக்கு தொடுத்து அந்த வழக்குக்குக்காக நீதி மன்றத்தில் ஆஜரான சிவனடியார் தனியாக சிக்க பயந்து தனது ஆதரவாளர்களுடன் சென்றார். தீட்சிதர் தரப்பில் சு.சாமியும் வந்தார், தீட்சிதரை அடித்த சம்பவத்துகாக பழி தீர்க்கும் வகையில் அவர்களுடன் வந்த சு.சாமியை அடித்த்தில் என்ன தவறு. (இதோடு இலங்கை பிரச்சனையில் சு.சாமியின் தமிழர் விரோத போக்கு ஒரு கிளை கதை) வழக்குறைஞர்கள் அடிக்கலாமா என விவாதித்தால் அரசியல்வாதிக்கு தீட்சிதர்களுடன் என்ன வேலை என்பதையும் சேர்த்து விவாதிக்க வேண்டும். தீட்சிதருக்கு துணை அரசியல்வாதியென்றால் சிவனடியாருக்கு துணை வக்கீல்கள். நீதிபதி முன்னிலையில் நடந்த்து என்றால் அன்று போலிசு முன்னிலையில் தீட்சிதர் தாக்கப்பட்டார். அடிக்கு பதில் அடியா என்றால் கருத்துக்கு பதில் கருத்து எனும்போது அடிக்கு பதில் அடிதானே.
  +++++++++++++++++++++++++++++++
  இன்று வினவு மற்றும் மதிமாறன் சு.சாமியை அடித்த சம்பவத்தை கண்டித்து எழுதும் நீங்கள் ஏன் தீட்சிதர்களை கண்டித்து எழுதவில்லை சு.சாமியின் கருத்துரிமைக்காக குரல் கொடுக்கும் நீங்கள் ஏன் ஆறுமுகசாமியின் கருத்துரிமைக்காக குரல் கொடுக்கவில்லை. சு.சாமியை அடித்த்து உங்களுக்கு மங்களூரை நினைவு படுத்தும் அதே நேரத்தில் அவர் ஆதரவு பெற்ற தீட்சிதர்கள், ஆறுமுகசாமியின் கையை உடைத்த்து ஏன் நினைவுக்கு வரவில்லை ஏன் எழுதுவில்லை என கேட்பது தவறு என்றால் ஏன் எழுதுகிறார்கள் என்று நீங்கள் கேட்பதும் தவறாகிவிடும்
  +++++++++++++++++++++++++++++++
  ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்களின் கருத்துரிமைக்காக குரல் கொடுக்கும் நீங்கள் நடந்த வழக்கு அதன் பிண்ணனி ஆகியவையை திட்டமிட்டு மறைத்து எழுதுவது கருத்து தீவிரவாதமில்லையா? +++++++++++++++++++++++++++++++
  வினவு மற்றும் மதிமாறன் பின்பற்றி வரும் பாதை அரை வேகாட்டுதனமானது என்றால் இந்த அரைவேக்காட்டு த்ததுவங்களாகிய மார்க்சிய, பெரியாரிய கருத்துக்களையும், அதன் தலைவர்களையும் புத்தகமாக நீங்கள் போட்டு பணம் சம்பாதிப்பது ஏன். அதை பிழைப்புவாதம் என நான் கருதுவது தவறா? தவறென்றால் விளக்கவும்
  +++++++++++++++++++++++++++++++
  உங்கள் பதிவையும் எனது கருத்தையும் நான் வினவு தளத்திலும் பின்னூட்டமாக வெளியிடுகிறேன். நன்றி
  http://thoughtsintamil.blogspot.com/2009/02/blog-post_19.html

 16. சு சாமி போன்ற மக்கள் விரோதிகளுக்கு முட்டை அடி தந்த அந்த வீரவேங்கைகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். ’சார்ச் புச்’சுக்கு செருப்படி , சு சாமிக்கு முட்டை அடி. வாழ்க வளர்க .இந்த திருப்பணி . முண்டை முழியன் ‘சோ’ சாமிக்கு எப்போது?

 17. Hight of barbarism.
  At the abode of justice itself, such low grade acts happen!

  It indicates the deteriorating social consciousness.
  Part of the reasons could be the increasing proportion of quota based crap into various professions.

 18. >> பொன் முத்துக்குமார் என்கிற அனானி, ஆறுமுகசாமி என்ற கிழவனார் தாக்கப்பட்ட போது “வெட்கித் தலைகுனிய வேண்டிய தாலிபானிச போக்கு” என்று யாரும் சொல்லவில்லை. அது விளைவு என்றால் இது எதிர்விளைவு. அடிச்சவன் வாங்குறான். போங்க சார் பேசாம…<<

  “பொன்.முத்துக்குமார் என்கிற அனானி” Just because, I don’t have something like “http://www.ponmuthukumar.wordpress.com/” ? Though, thanks for the comic relief my friend !

  திரு.ஆறுமுகசாமி தாக்கப்பட்டபோது கொழுப்பெடுத்த தீட்சிதர் கும்பலை பதிவுலகிலும் வெளியிலும் நிறைய பேர் ‘தாலிபானிஸ போக்கு’ என்பதற்கிணையாக கடுமையாக கண்டித்திருந்தார்கள். நானும்கூட. எல்லாவற்றையும் திரட்டியெடுத்து உங்கள் முன் காட்டி சான்றிதழ் வாங்க எனக்கு நேரமுமில்லை, பொறுமையுமில்லை. உங்களுக்கிருப்பின் தேடிப்பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

  உங்களுக்குத் தெரியவில்லை என்பதால் ‘யாருமே’ என்று பொதுமைப்படுத்திவிடவேண்டாம்.

  இங்கே “அடிச்சவன்” வாங்கவில்லை அன்பரே. திரு.ஆறுமுகசாமி தாக்கப்பட்டபோது அங்கே தீட்சித கும்பல் பதிலுக்குத்தாக்கப்பட்டிருப்பின் உங்கள் வாதம் சரியாகக்கூட இருந்திருக்கும் (சட்டரீதியாக தவறெனினும்)

  ஆனால் இங்கு தாக்கப்பட்டது, சு.சாமி என்ற தனி மனிதர், அரசின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தன்னையும் மனுதாரராக இணைத்துக்கொள்ள.

  ஐயா, இவ்வழக்கில் தீட்சித கும்பலுக்கெதிராகவும் திரு.ஆறுமுகசாமிக்கு ஆதரவாகவும் வாதாடி வென்ற அரசுத்தரப்பு இருக்கையில், நீதிபதிகளுக்கெதிரேயே, அவர்களது அறையிலேயே – காவலர்களை வெளியேற்றிவிட்டு, துரத்தித்துரத்தி தாக்குமளவுக்கு வக்கீலகளே சென்றதுதான் கலவரம் தரும் ‘தாலிபானிஸ போக்கு’ !

  துரதிர்ஷ்டவசமாக தாக்குதலுக்கு பதில் தாக்குதல் என்பது நமது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்படாதது. சட்டபூர்வமாக எதிர்கொள்வதுதான் நமக்கு உள்ள வாய்ப்பு, அதில் ஆயிரம் குறைபாடுகள் இருப்பினும்.

  இது திரு.ஆறுமுகசாமிக்கு மட்டுமல்ல, என் மற்றும் உங்கள் தகப்பனாருக்கும் பொருந்தும்.

  அன்புடன்
  பொன்.முத்துக்குமார் [என்கிற அனானி :))]

 19. சு.சாமி மீது அழுகிய முட்டை வீசிய செயல் கண்டிக்கத்தக்கது. பல அழுகிய முட்டைகள் அவர் முகத்தில் படாமல் வீணாகி இருக்கிறது. குறிப்பார்த்து சரியாக அவர் மீது முட்டை வீசாததைக் கடுமையாக கண்டிக்கிறேன். செய்வதைத் திருந்த செய்யவில்லை!

 20. ‘கவனித்துப் பார்த்து முட்டை வீசுகிற அளவுக்கு சு.சுவாமி முக்கி(?)யஸ்தர் அல்ல’ என்பது என் கருத்து.

  கவனிக்காமலே விட்டால் காணாமலே போய்விடுகிற மனிதர்தான் அவர்.

  ஜெயலலிதா மாதிரியான ஆட்களால்தான் அவர் பெரிய மனிதர் ஆனார்.

  சு.சாமி விஷயத்தில் வக்கில்கள் பெயர் கெட்டயதுதான் மிச்சம்.

Leave a Reply

%d bloggers like this: