காமவெறிக்கும்பலும் காதலர் தினமும்

valentiesday

மது கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல காதலர் தினம்’ என்று காதலர் தினத்தன்று காதலர்களிடம் மிக மோசமான முறையில், நடந்து கொண்டது, இந்து மதவெறி கும்பல். ‘காதலர் தினம் இந்து மதத்தின் புனிதத்திற்கு உகந்ததல்ல ‘என்று சொல்கிறது இந்த சமூக விரோத கும்பல்.

அப்படி என்ன இவர்களுடைய இந்து மத புனிதம்?

பத்துப் பெண்களை பாலியல் வல்லுறவு கொண்டு கொலை செய்தவன், ஒழுக்கம் மனிதாபிமானம் பற்றி பேசுவதுபோல், ஒழுக்கம் குறித்து பேசுகிறது, குஜராத்தில் பல இஸ்லாமியப் பெண்களை பலாத்காரம் செய்த இந்தக் கொலைகார கும்பல்.

உண்மையில் இவர்களுடைய இந்து மத புனிதம், ஜெயேந்திரனின் கோவணத்தில் இருக்கிறது. ‘பிறர் மனைவிகளோடு கள்ளக் காதல், வரைமுறையற்ற பால் உறவு, என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்’ என்று எழுத்தாளர் அனுராதா ரமணன் ஜெயேந்திரன் மீது சரமாரியாக குற்றம் சுமத்தினார். அப்போது எங்கிருந்தது இந்தக் கலாச்சார காவல் கும்பல். காதலர் தினத்தன்று, இப்போது ஒரு அப்பாவி இளைஞனின் மயிரை புடுங்கிய இந்தக் கும்பல், அப்போது போய் ஜெயேந்திரன் மயிரை புடுங்கி இருக்க வேண்டியதுதானே?

பிரேமானந்தா என்கிற இன்னொரு இந்துமத துறவி, பல பெண்களிடம் பாலியல் வல்லுறுவு, கொலை, கொள்ளை என்று இருந்தான். இப்போது ஆயுள் கைதியாக சிறையில் இருக்கிறான். இவர்களுடைய இந்து மத பண்பாடு சிறையில் ஆயுள் கைதியாய் இருக்கிறது.

இந்து மத்தின் கோயில்களில் உள்ள சிற்பங்கள் பூராவும், அந்தக் காலத்து நீலப்படங்களாக இருக்கிறது. பலனா லாட்ஜிகளில் கூட அந்த மாதிரி படங்கள் இருக்க வாய்ப்பில்லை. கோயில்கள் முழுவதும் அந்தக் காலத்து பலான லாட்ஜ் மாதிரிதான் இருந்திருக்கு. இவனுங்க, உண்மையிலேயே யோக்கியனா இருந்தா, கோயிலில் இருக்கிற ஆபாச சிற்பங்களை இடிக்கட்டும்.

வர்த்தகம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, பல பன்னாட்டுக் கம்பெனிகள், தங்கள் பொருள்களை விற்பதற்கு, வருடத்தில் பலநாட்களுக்கு, ‘அம்மா தினம், அப்பா தினம், நண்பர்கள் தினம்’  என்று பெயர் வைத்து, அந்த நாட்களில் பரிசுகள் வாங்கித் தருகிற பழக்கங்களை ஏற்படுத்தி, அமோகமாக வியாபாரம் செய்கிறர்கள். இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு மட்டும் 1.47 பில்லியன் டாலர்கள் (ஏறக்குறைய 8 ஆயிரம் கோடி) வர்த்தகமாகியிருக்கிறது என்கிறது NRF Report. அந்த முதலாளிகளை எதிர்ப்பதற்கு வக்கற்ற, இந்தக் கூலிகும்பல் அப்பாவிகளிடம் போய் ரவுடித்தனம் செய்கிறது.

இந்த இந்துமத்தின் கடவுள்களே ஒழுக்கக் கேடர்களாகவும், ஊதாரிகளாகவும் இருந்திருக்கிறார்கள். அப்படியிருக்கையில் ஒழுக்கம் குறித்து, பேசுவதற்கு எந்த யோக்கியதையும் ‘இந்து’ என்று சொல்லிக் கொள்கிறவனுக்குக் கிடையாது.

இந்து மதத்தின், கடவுள்களின், வேதத்தின் ஒழுக்கக் கேடுகளையும் ஊதாரித்தனத்தையும் டாக்டர் அம்பேத்கர் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இன்றைய சூழல் கருதி, எனது ‘நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை’ என்ற புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை எடுத்து பிரசுரித்திருக்கிறேன்.

***

ளவாணித்தனம் மற்றும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டாலும், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக்கொ யாத தொல்லை’ என்று கடவுள் கண்ணனின் பொறுக்கித் தனத்தை பாடல் எழுதி பெருமைப்பட்டுக் கொண்ட பாரதி போன்ற பக்தர்களுக்கு பச்சைக் குழந்தையாகவே காட்சியளிக்கிற,  பார்ப்பனர் பார்ப்பனரல்லாதவர்களின் கவர்ச்சிகக் கடவுளான கிருஷ்ணனை பற்றி டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார்:

“கிருஷ்ணனுடைய அநாகரிகமான அநேக காரியங்களுள் மிகக் கேவலமானது என்னவெனில் அவன் இராதா என்ற கோபியருடன் கொண்ட முறைகெட்ட வாழ்க்கையாகும். கிருஷ்ணன் இராதாவுடன் கொண்டிருந்த தொடர்பினைப் பற்றிப் பிரம்ம வர்த்த புராணத்தில் வருணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.”

“இராதாவோ ஏற்கனவே மணமானவள். முறைப்படி மணந்த ருக்மணியை கைவிட்டுவிட்டு  வேறொருத்தன் மனைவியான இராதாவுடன் கிருஷ்ணன் வாழ்க்கை நடத்துகிறான்.”

………………………………………..

பிறகு கம்சனுக்கு வாசனைத் திரவியங்களைப் பூசும் குப்ஜா என்ற பெண்ணைச் சந்திக்கின்றனர். குப்ஜா ஒரு கூனி. அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க அவள் மணங்கமழும் சந்தனக் குழம்பைப் பூசி விட்டாள். பதிலுக்கு கிருஷ்ணன் கூன் விழுந்த குப்ஜாவின் முதுகை குணப்படுத்தினானாம்.

வேறோர் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணன் குப்ஜாவைச் சந்திக்க நேர்ந்தபோது வழக்கம் போல தகாத முறையில் குப்ஜாவுடன் உடலுறவு கொண்டதாகப் பாகவதம் சொல்கிறது. (பன்னிரெண்டு வயசு பையன் பண்ணற வேலையப் பாத்திங்களா?- மதிமாறன்) இருப்பினும் இந்தச் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் குப்ஜா வாசனைத் திரவியங்களைப் பூசினாள்.”

“ருக்மணியைத் தொடர்ந்து பெரும் மந்தையே கிருஷணனின் மனைவிக் கூட்டமானது. கிருஷ்ணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை பதினாறாயிரத்து ஒரு நூற்றெட்டு பேர்கள். அவனுடைய குழந்தைகளின் எண்ணிக்கையோ ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேர்கள்.”

நிர்வாணமாக்கி ஊர்ப் பெண்கள் மானத்தை எல்லாம் வாங்கிய கிருஷ்ணன், மகாபாரதத்தில் பாஞ்சாலியின் மானம் காக்க உடைகொடுத்ததானம்! பாஞ்சாலியின் மானம் காத்தது இருக்கட்டும், இங்கே டாக்டர் அம்பேத்கரின்  வாதத்திறமையின் முன்னால் அவன் மானம் போகிறேதே,  என்ன அவதாரம் எடுத்து ‘தன்மானத்தை’ காப்பாற்ற முயற்சிப்பான், கிருஷ்ணன். என்ன பதில் சொல்லி கிருஷ்ணனின் ‘மானம்’ காப்பார்கள் பக்தர்கள்.

ambedkar-wrapper6

விசித்திரமானது இந்து மதம். வேடிக்கையாக இருக்கிறது இந்துக்களின் இறை நம்பிக்கை. ‘ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுக்கமாக வாழ்ந்தான் ராமன். அதற்காகத்தான் அவனை வணங்குகிறோம்’ என்கிறார்கள் இந்துக்கள். அவர்களேதான்,  பாலியல் நோய் வந்து பாதிக்கப்பட்டிருக்க வேண்டிய அளவிற்கு சகமேட்டுமேனிக்கு பல பெண்களோடு உறவு கொண்ட, கொலைபோன்ற கிரிமினல் குற்றங்களுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்ந்து படித்திருக்க வேண்டிய கிருஷ்ணனையும் தெய்வமாகத் தொழுகிறார்கள்.

ஒழுக்கம் குறித்து தனிவாழ்க்கையில் அதிகம் பேசுகிற இந்துக்கள், தங்களின் கடவுள் பொறுக்கியாக இருந்தாலும் அதனை பூரிப்போடு ஏற்றுக் கொள்கிறார்கள். இந்துக்களின் இறைவழிபாட்டில் இருக்கிற இந்த முரண்பாடை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை. டாக்டர் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் புரியவைத்தால் அதை புரிந்து கொண்ட பின் அதற்காக அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை. இந்து மதம் இந்துக்களை சுயமரியாதையும், சுயஅறிவற்றவர்களாகவே உருவாக்கிற வைத்திருக்கிறது.

***

ராவணன் பெண் பித்தன், ராமன்தான் ஒருவனுக்கு ஒருத்தி என்று உயிராக வாழ்ந்தவன்’ என்று மூணு பொண்டாட்டிக்காரன் கதாகாலட்சேபம் செய்வதுபோல், பல பெண்பித்தர்களும், பக்தர்களும் ராமனுடைய சிறப்பு ‘ஏக பத்தினி விரதன்’ என்று சொல்கிறார்கள். ஆனால் டாக்டர் அம்பேத்கர் வால்மீகி ராமாயணத்தில் இருந்து ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகளோடு, ‘ராமன் ஒரு ஸ்திரீலோலன்’ என்று நிரூபித்திருக்கிறார்:

“ராமன் ‘ஏக பத்தினி விரதன்’ என்பது ஒரு சிறப்பாகக் கூறப்படுகின்றது. இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாததாக உள்ளது. வால்மீகியே கூட தன் ராமாயணத்தில் ராமன் அனேக மனைவியரை மணந்து கொண்டதைக் குறிப்பிடுகிறார். மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் ராமன் வைத்திருந்தான்.”

“ராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்குப் பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. …………………….

காலை முதல் நண்பகல் வரை ராமன் மத ஆசாரங்கள் மற்றும் சடங்குகளை நிறை வேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தை கழித்தான்.

அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் களிப்பான். கோமாளிகளுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான். ராமன் அந்தப்புரப் பெண்களோடு அனுபவித்த களியாட்டங்களை வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறார். ………………………………

ராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாடடத்தில் சீதையையும் கலந்துகொள்ளச் செய்தான், என வால்மீகி குறிப்பிடுகிறார். ………………………..

அழகிகளின் மத்தியில் ராமன் குடித்துக் கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்பெண்களெல்லாம் ராமனை மகிழ்விக்கப் பெரும்பாடு பட்டனர்.”

‘ராமன் ஏக பத்தினி விரதன் அல்ல, ஏகப்பட்ட பத்தினிகள் விரகன்’ என்று அம்பலப்படுத்துகிறார் டாக்டர் அம்பேத்கர். இந்த ராமனின் ராஜ்ஜியம் வரவேண்டும் என்பதுதான் காந்தியின் கனவாக இருந்தது. காந்தியின் கனவு நினைவாகி இருந்தால்.. நினைக்கவே கூசுகிறது. உண்மையில் ராம ராஜ்ஜியம் என்பது, காம ராஜ்ஜியம்தான்.

***

வேத காலத்தில் ஆரியர்களிடம் அல்லது இந்து சமூகத்திடம் குடி, சூது, வரைமுறையற்ற பால் உறவு, விபச்சாரம், விவசாய வேலைகளுக்குக்கூட மிச்சம் வைக்காமல் மாமிசத்திற்காக விலங்குகளை யாகத்தில் பலியிட்டு தின்பது என்கிற பழக்கங்கள் ஓங்கி இருந்தது. அதை எதிர்த்துதான் புத்தர் – மது குடிப்பது, விபச்சாரம் செய்வது, பிறன்மனை நோக்குவது, விலங்குகளை பலியிடுவது போன்றவற்றை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இந்தப் பிரச்சாரம் இந்தியா முழுக்க அலையாக அடித்தது. அதன் தாக்கத்தில்தான் தமிழகத்து திருவள்ளுவரும், பிறன்மனை நோக்காமை, கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமை போன்றவற்றை எழுதினார். புத்தரின் தாக்கத்தினால்தான், வேதக் கடவுள்களான தேவர்களை திருடர்களோடு ஒப்பிட்டும் எழுதினர் வள்ளுவர்.

“தேவர் அணையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்.”

‘கயவரும் தேவரைப்போல் தாம் விரும்புகின்றவைகளைச் செய்து மனம்போன போக்கில் நடந்தலால், கயவர் தேவரைப் போன்றவர்‘ என்று எழுதினார்.

டாக்டர் அம்பேத்கர் இதை தன் ஆய்வின் மூலமாக நிரூபிக்கிறார்;

“ஆரியர்கள் சூதாடும் இனத்தினர். ஆரிய நாகரிகத்தின் மிக ஆரம்ப காலத்திலேயே சூதாட்டம் ஒரு விஞ்ஞானமாகவே வளர்க்கப்பட்டு, அதற்கெனத் தனியாகத் தொழில்நுட்பச் சொற்கள் கூட உருவாக்கபட்டிருந்தன. இந்துக்களின் வரலாற்றுக் காலத்தை நான்கு யுகங்களாகப் பிரித்து அவற்றுக்குக் கிரேதா, திரேத, துவாபர, கலி என்று பெயர் வைத்திருந்தார்கள். உண்மையில் இந்தப் பெயர்கள் ஆரியர்கள் சூதாட்டத்தில் பயன்படுத்திய பகடைகளின் பெயர்களாகும். மிக அதிர்ஷ்டமான பகடை கிரேதா என்றும் மிகவும் துரதிர்ஷ்டமான பகடை கலி என்றும் குறிப்பிடப்பட்டது. திரேதா, துவாபர என்பவை இந்த இரண்டுக்கும் இடைப்பட்டவையாகும்.”

ராஜ்யங்களும், மனைவியரும் கூடச் சூதாட்டங்களில் பந்தயமாக வைக்கப்பட்டனர். ………………………………..

ஆரியர்களிடம் சூதாட்டம் பணக்காரர்களின் விளையாட்டாக இருக்கவில்லை. அது பலரிடமும் உள்ள கெட்ட பழக்கமாகவே இருந்தது. ஆரியர்களிடம் ஆண்-,பெண் உறவுகள் தளர்த்தியான முறையில் இருந்தன. ……………………………………………..

விபச்சாரம் தாராளமாகவும் மிக மோசமான முறையிலும் நடைபெற்று வந்தது. விலங்குகளிடம் உறவு கொள்ளும் வழக்கமும் அவர்களிடம் காணப்பட்டது. இதைச் செய்தவர்களில் மிகவும் மரியாதைக்குரிய ரிஷிகளும் இருந்தார்கள்.

புராதான ஆரியர்கள் குடிகார இனமாகவும் இருந்தார்கள். அவர்களுடைய மதத்தில் மது ஒரு இன்றியமையாத பகுதியாக இருந்தது.”

ஊதாரித்தனமும் ஒழுக்கக் கேடுமே புராதன இந்துக்களின் முறையாக இருந்திருக்கிறது. இது இப்போது இருப்பது போல் தனிநபரின் பழக்கமாக இல்லாமல், மதத்தின் பேரில் ஒட்டுமொத்த சமூகத்தின் பழக்கமாகவே இருந்திருக்கிறது, என்பது வெட்கக் கேடானது. இப்படி பின்நவீனத்துவ தத்துவவாதிகளைப்போல் வாழ்ந்திருக்கிறார்கள் வேதகாலத்து இந்துக்கள்.

ஆனால் இன்று “குடிப்பதும், கூத்தடிப்பதும் ஒருவர் பலரோடு உறவு வைத்துக் கொள்வதும் நமது பாரம்பரிய இந்துப் பண்பாட்டுக்கு உகந்ததல்ல.” என்று கொஞ்சமும் கூச்சம் இல்லாமல், பொய் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துமதவெறி அமைப்புகள். காதலர் தினம் போன்ற வர்த்தக நோக்கம் கொண்ட சாதாரண மேற்கத்திய கலாச்சாரத்தைக்கூட இந்து மதத்தின் பேரால் எதிர்ப்பது எவ்வளவு கேலிக்குரியது.

நூல் வௌயீடு: அங்குசம்

தொடர்புக்கு:

ஞா. டார்வின் தாசன்

எண் 15, எழுத்துக்காரன் தெரு,

திருவெற்றியூர், சென்னை – 600 0 19

பேசி : 94443 37384

விலை: 45

9 thoughts on “காமவெறிக்கும்பலும் காதலர் தினமும்

 1. மிகச்சிறப்பான தொரு கட்டுரை. இந்து மதத்தின் (காதல்) புனிதத்தை அம்பேத்தரின் மேற்கோளுடன் நீங்கள் சொல்லியிருக்கும் செய்தி அருமை.

 2. சிறீ ராம் சேனா ,இந்து முன்னணி போன்ற பண்டார பார்ப்பனீயங்கள் மற்றும் மூற்போக்கு பா.ம.க காதலர் தினத்தை எதிர்ப்பதாக கூறுகின்றன,இவர்கள் எதிர்ப்பது ஏகாதிபத்திய காதல்களைஅல்ல .காதலால் வர்ணாசிரமத்தில் சிதைவு ஏற்படும் என்பதே இவர்களின் கவலை.

  அந்தகவலை தான் வெறியாக வெளிப்படுகின்றது. நேற்று தின மணியில் வந்த கார்டூனைப்பாருங்கள் இரு கல்லூரிபெண்கள் பேசிக்கொள்கிறார்கள்”எனக்கு யார் காஸ்ட்லியான பரிசு தராங்களோ அவனத்தான் நான் காதலிப்பேன்” விபச்சாரத்தியே காதலாக பார்ப்பன மீடியாக்கள் வர்ணிக்கின்றன.

  தெருவில் பெண் ஆனோடு திரிந்தால் கல்யாணம் செய்து வைக்க போவதாய் அறிக்கைவிடும் காலிகள் தான் காதலித்ததால் கல்யாணம் செய்ததால் தீயை வைத்தார்கள் விசத்தை கொடுத்தார்கள், இந்த நாட்டு மக்களுக்கு மறுகாலனியும் பார்ப்பனீயமும் முக்கிய எதிரி என்றால் காதலுக்கும் அதுதான் எதிரி.பார்ப்பனீயமோ பெண்ணை கட்டற்ற வரைமுறையற்ற சுரண்டலுக்கான பொருளாக பெண்ணை மாறக்கோருகிறது ,அதையேத்தான் மறுகாலனியும் கூறுகிறது,இது காதலில் மட்டுமல்ல எந்த ஒரு உரிமைக்கும் சரி பிரச்சினைக்கும் சரி பார்ப்பனீயமும் உலகமயமும் ஒன்றையேதான் கூறுகிறார்கள் . ஏனெனில் உரிமைகளை பெற வேண்டுமெனில் இவை இரண்டையும் எதிர்க்காது தீர்வு இல்லை. காதலர்களே காதலை உரிமையாக கருதுவீர்களானால் போரிடுங்கள் நீங்களும் மக்கள் தானே

 3. தோழருக்கு வணக்கம்
  காமவெறிக்கும்பலும் காதலர் தினமும் சிறப்பான கட்டுரை.
  காவிக்கும்பலுக்குச்சரியான பதிலடி.
  இராமாயண ஆபாசங்களை விளக்குகிறபோது காண்டம், சருக்கம், சுலோகம் ஆகியவற்றை எண்களோடு குறிப்பிட்டிருந்தால் மிகச்சிறப்பாக இருந்திருக்கும். அம்பேத்கர் தன்னுடைய இராமனும் கிருஷ்ணனும் புதிர்கள் நூலிலும், பெரியார் தன்னுடைய இராமாயணக்குறிப்புகள், இராமாயண ஆராய்ச்சி ஆகிய நூல்களிலும் வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்களோடு மேற்கோள் காட்டி எழுதியிருந்ததாகத்தான் நினைவு.
  தோழமையுடன்
  பி. இரெ. அரசெழிலன்
  திருச்சி

 4. வெட்கங்கெட்டவன், மானங்கெட்டவன் தான் தன்னை இந்து என்று சொல்லிக்கொள்ளுவான்.

  காமத்தைக்காட்டி, கோயிலுக்குள் மக்களை வரவழைத்தனர் பிராமணர்கள். அவர்களது பிழைப்பிற்காக!

  அதனால் தான் தாசிகளையும் பயன்படுத்தினர். பெரியார் தான் இந்த முறையை ஒழித்தார்.

  ஆரியன் என்று இம்மண்ணிலே அடி எடுத்து வைத்தானோ, அன்று பிடித்தது ‘தருத்திரம்’ நம்மக்களுக்கு! நிற்க.

  மதிமாறன் அவர்களே! ஒருவனுக்கு சொந்த புத்தியே இருக்கக்கூடாதா? புத்தன் தான் திருவள்ளுவனுக்கு ஆசானா!

  புத்தத்திற்கு முன்பே ஆசீவகம் என்ற கொள்கை தமிழகத்தில் நிலவி வந்தது. தமழிர்களுடைய தெல்லாவற்றையும் ஆரியர்கள் காழப்பால் அழித்தனர்.

  தமிழகத்திலே மேட்டுக்குடி மக்கள் புத்தம், ஜைனம் போன்ற வட மதங்களையும், உழைக்கும் மக்கள் தமிழர் கொள்கையான ஆசிவகத்தையும் பேணினர்.

  வள்ளுவனை அனைவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர். ஆனால், தமிழரின் பழம்பெரும் நல்லெண்ணங்களின் பிழிவுதான் ஆசீவகம், வள்ளுவம் ஏன் புத்தமும் கூட. இது ஒரு மிகவும் பழமையான பூமி! உலகின் அணுக்கொள்கை பிறந்த இடம் கூட தமிழ் நிலம் தான்!

 5. எனக்கு புரியாத விஷயம் ஒண்ணே ஒண்ணுதான்.அதென்னமோ எல்லா புத்துசாலிகளும் ‘இந்து’ பத்தி மட்டும்தான் பேசறான்(!)கள்; வேற மதமான கிறிஸ்டின்,துளுக்கம் பத்தி கருத்து ஏதும் சொல்லாம மூடிக்கிட்டிருக்காண்க? மும்பையில் நடந்த சம்பவம் பத்தி முஸ்லிம்களால்தான்னு வாய்மேல பல் போட்டு சொல்ல வக்கு இல்ல ! மத மாற்றத்தை தொழிலாவே பண்ணிட்டிருக்கிற கிறித்துவம் பற்றி ஏதும் பேசுவதும் இல்லை. ஆனா இந்து பத்தி இந்தியாவிலே வாய் கிழியுது! தலிபான்கள் மாதிரி மதப் போலிஸ் உருவானாத்தான் வெட்டி வாய் பேசும் உங்களை மாதிரி ஆளுங்க எல்லாம் திருந்துவீங்க! முதலில் ஒண்ணு தெரிஞ்சுக்கங்க ! ‘இந்து’ என்பது ஒரு மதமே கிடையாது! அது ஒரு நெறிமுறை! அவ்வளவுதான்!!!!!

  Because, being a Hindu allows me to think independently and objectively, without conditioning. I remain as a Hindu never by force, but choice.’ I told her that Hinduism is not a religion, but a set of beliefs and practices. It is not a religion like Christianity or Islam because it is not founded by any one person or does not have an organized controlling body like the Church or the Order, I added. There is no institution or authority.

  ‘Hinduism is a religion of the individual, for the individual and by the individual with its roots in the Vedas and the Bhagavad-Gita. It is all about an individual approaching a personal God in an individual way according to his temperament and inner evolution – it is as simple as that.’

  I am a Hindu primarily because it professes Non-violence-‘Ahimsa Paramo Dharma’ – Non violence is the highest duty. I am a Hindu because it doesn’t conditions my mind with any faith system.

  Enough ?????????????????????????????????

 6. தோழர் வேலுமணி,
  மிகவும் சிரத்தையோடு, இந்துக்கள் முட்டாள்கள் என்பதை நிறுவியிருக்கிறார். மேற்சொன்ன மேற்கோள்களுக்கு பதில் கூறாமல், அவனை ஏன் திட்டலை, இவனை ஏன் திட்டலை என்று அழுதிருக்கிறார்.

  இந்துங்கிறவனுக்கு அஹிம்சை போதிக்கபட்டதென்றால், கீதை தோன்றியது எதனால் என்று ஒரு புழுகினி கதை எழுதி வைத்திருக்கிறார்கள் அதை கொஞ்சம் தோண்டி துறுவட்டும்.

  மனிதர்களுள் ஏற்றத்தாழ்வு இவைகளை வலிமையோடு கடைபிடிக்கும்/ கடைபிடிக்க பிரச்சாரம் செய்யும் கொள்கைதான் பார்ப்பனீயம்தான், வெங்காய இந்து மதம்.

  அடிவருடிகள் இந்துச்சாமியார்களின் கால் கழுவிக்குடிக்கிறார்கள், இந்துக்கள் என்று பெருமையோடு பீற்றிக் கொண்டு திரிகிறார்கள்!!

 7. //எனக்கு புரியாத விஷயம் ஒண்ணே ஒண்ணுதான்.அதென்னமோ எல்லா புத்துசாலிகளும் ‘இந்து’ பத்தி மட்டும்தான் பேசறான்(!)கள்; வேற மதமான கிறிஸ்டின்,துளுக்கம் பத்தி கருத்து ஏதும் சொல்லாம மூடிக்கிட்டிருக்காண்க?//

  தோழர் வேலுமணி அவர்களுக்கு,

  பார்ப்பனரல்லாதவர் வேசி மகன் என்று உங்கள் கழிசடையான,சாக்கடையான இந்து மதம் மட்டுமே சொல்கிறது.

  அதனால் தான் இந்த வெங்காய இந்து மதம் பற்றி மட்டுமே விமர்சிக்கிறோம்.

  நீங்கள் பார்ப்பனரல்லாதவர் என்றால் வர்ணாசிரம, மனுதர்ம மற்றும் வேதங்களை முழுவதும் தெரிந்து கொண்டு பிறகு பேசுங்கள்

  ஆரியர்கள் வந்தேறிகள் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
  ஆரிய, பார்ப்பனீய மதம் தான் இந்து மதம். ஒரு திராவிடனோ அல்லது தமிழனோ நிச்சயமாக இந்துவாக இருக்க முடியாது,

  ஒரு வேளை தன்னை அவன் ஒரு இந்து என்று சொல்லிக்கொண்டால் அவனை விட மூடன் வேறு எவனும் இல்லை.

 8. சரியான பதிலை யாரும் சொல்லவில்லை என்றே தோன்றுகிறது.
  பார்ப்பனீயம்,வந்தேறிகள், இந்துத்வம்…………..இதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான்.ஒ.கே.

  மற்ற மதம் பற்றிப் பேச நம்மில் யாருக்கும் துணிவு இருக்கிறதா என்பதே என் கேள்வி.

  நான் பெரியார் பிறந்த மண்ணில் பிறந்தவன்தான்.

Leave a Reply

%d bloggers like this: