ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்

killer1உண்மையான தமிழன்தான் ஈழமக்களின் துயரங்களுக்காக போராடுவான். பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை அவர்களால் எப்படி தமிழர்களுக்கு உண்மையாக இருக்கமுடியும்?

-கு. தமிழ்ச்செல்வன்

‘தமிழர்களுக்கு என்று ஒரு தனிநாடு வேண்டும், அல்லது விடுதலைப் புலிகளை ஆதரிப்பது தமிழர்களின் கடமை’ என்று கோரி பொதுமக்கள் யாரும், தமிழக வீதியில் போராடவில்லை.

‘சிங்கள அரசு, ஒருபாவம் அறியாத குழந்தைகள், பெண்கள், முதியவர்களை கொன்று குவிக்கிறது. இந்திய அரசே அதற்குத் துணைபோகாதே’ என்கிற மையமானப் பிரச்சினையை வைத்துத்துதான் போராடுகிறார்கள். இதற்குத் தமிழனாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல, மனிதனாக இருந்தாலே போதும். மனிதாபிமானம் இருக்கிற யாரும் சிங்கள அரசின் கொடுமையை, இந்திய அரசின் துரோகத்தை எதிர்ப்பார்கள்.

இந்த மனிதாபிமான உணர்வோடுகூட பார்ப்பனர்கள் பெருமளவில் தங்கள் பங்களிப்பை செய்யவில்லை, அவர்கள் எதையும் பார்ப்பன, இந்துக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள், என்பதுதான் வருத்தற்குரியது.

மற்றபடி, தனக்கென்று சுயஅரசியலும், மனிதாபிமானமும் இல்லாதவன் பச்சைத் தமிழனாக இருந்தால்கூட அவனால் எந்த உபயோகமும் இல்லை. கெடுதல்தான்.

‘சிங்கள அரசு தமிழர்களைக் கொன்று குவிக்கிறது’ என்று ஆதாரத்தோடு எழுதிய, சிங்களப் பத்திரிகையாளர்களை சிங்கள அரசு கொன்றது. தமிழர்களுக்காக மனிதாபிமானம் கொண்ட அந்த ‘சிங்களவர்கள்’ தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள்.

ஆனால், இங்கு பச்சைத் தமிழர்களான தமிழ் பத்திரிகையாளர்கள் சிங்கள அரசிடம் பணம் வாங்கிக் கொண்டு, ‘விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிங்கள அரசின் போர்’ என்ற பெயரில், தமிழர்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தி செய்திகள் வெளியிடுகிறார்கள்.

bloody

சிங்களப் பத்திரிகையாளர்களுக்கு இருக்கிற நேர்மை, துணிவு ஏன் பச்சைத் தமிழர்களான, தமிழ் பத்திரிகையாளர்களிடம் இல்லை?

காரணம், கொலை செய்யப்பட்ட, அந்த சிங்களப் பத்திரிகையாளர்கள் யார் பாதிக்கப்படுகிறார்களோ, யார் தரப்பில் நியாயம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவாக, தங்கள் கொள்கைகளுக்கு உண்மையாக நடந்து கொண்டார்கள். அதனால்தான் தங்கள் இனம் தாண்டி, எது உண்மையோ அதன் பக்கம் நின்றார்கள். சிங்கள அரசின் கொலைவெறியை துணிந்து உலகத்திற்கு அம்பலப் படுத்தினார்கள்.

ஆனால், பல தமிழ் பத்திரிகையாளர்களுக்கு கொள்கை என்று எதுவும் இல்லை. பணம்தான் முக்கியம். அதனால்தான் யாரெல்லாம் பணம் தருகிறானோ அவர்களுக்கெல்லாம் ஆதரவாகவும், பணம் தருகிறவர்களுக்கு யாரரெல்லாம் எதிரியோ, அவர்களுககு எதிராகவும் செய்திகள் வெளியிடுகிறார்கள். சில நேரங்களில் பணம் தரமறுத்தாலும், அதுவரை தந்துக் கொண்டிருந்தவனைப் பற்றியே எதையாவது அவதூறு எழுதி விடுவார்கள். 50 ரூபா கொடுத்தால் தன்னையே திட்டி எழுதிகொள்கிற பத்திரிகையாளர்களும் இருக்கிறர்கள்.

நிர்வாகத்திற்கு எதிராக இல்லாத வகையில் அந்த எல்லைக்குள் ஊழல் செய்கிற, ( எங்கிட்ட சம்பள உயர்வு கேக்காத, ஆபிஸ் பொருளை திருடி விக்காத,  எவன் கிட்டயாவது வாங்கி தின்னுக்க) இதுபோன்ற பத்திரிகையாளர்களைத்தான் பத்திரிகை முதலாளிகளும் விரும்புகிறார்கள் அவர்களுக்குத்தான் முக்கிய பொறுப்புகளையும் கொடுக்கிறார்கள். ஏனென்றால், இவர்களின் ஊழல் சில ஆயிரம், முதலாளிகளின் ஊழல் பலகோடி.

ஜாடிக்கேத்த மூடி.

குறிப்பு:

* சிங்களப் பத்திரிகையாளர்களைப் போல் தமிழ் பத்திரிகையாளர்களை உயிரை தியாகம் பண்ணச் சொல்லவில்லை. வீதியில் இறங்கி ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாவிட்டாலும், ஆதரவாக செய்திகள் வெளியிட முடியாவிட்டாலும் கூட பரவயில்லை. பச்சைத் துரோகத்தையாது நிறுத்தக்கூடாதா?

* ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட்டுவரும் ‘நக்கீரன்’ பத்திரிகையை மிரட்டுகிற தொனியில் கடிதம் எழுதியிருக்கிற ராஜபக்சேவின் தூதுவர் அம்சாவிற்கு கண்டத்தை தெரிவிப்பது தமிழர்களின் கடமை.

* ‘தமிழிலேயே தான்தான் பெரிய எழுத்தாளப் புடுங்கி, நீயெல்லாம் ஒன்னும்கிடையாது’ என்று தெருநாயைப் போல் சண்டைப் போட்டுக்கொள்கிற ‘ஊதாரி-உதவாக்கரை-தரமான’ எழுத்தாளன்களில் பலபேர், ஈழமக்கள் படுகொலையைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்லாமல் இருக்கிறார்கள். எருமாடு மேல மழை பெய்தது போல்.

12 thoughts on “ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சிங்களவர்களும், எதிராக துரோகத் தமிழர்களும்”

 1. அரச பயங்கரவாதத்தைத் துணிவுடன் எதிர்கொண்டு உயிரை ஈகம் செய்த லசந்த விகரமதுங்க உள்ளிட்ட சிங்களப் பத்திரிகையாளர்களுக்கு அஞ்சலிகளும், நாடு தாண்டி வந்து அராஜகம் செய்யும் இலங்கைத் தூதர் அம்சாவுக்குக் கண்டனங்களும் தெரிவிப்போம்.

  இது குறித்த எனது பதிவு

 2. அரச பயங்கரவாதத்தைத் துணிவுடன் எதிர்கொண்டு உயிரை ஈகம் செய்த லசந்த விகரமதுங்க உள்ளிட்ட சிங்களப் பத்திரிகையாளர்களுக்கு அஞ்சலிகளும், நாடு தாண்டி வந்து அராஜகம் செய்யும் இலங்கைத் தூதர் அம்சாவுக்குக் கண்டனங்களும் தெரிவிப்போம்.

  நக்கீரனுக்கு இலங்கைத் தூதர் விடுத்த மிரட்டல் குறித்த எனது பதிவு

 3. சிங்கள இரானுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மனிதாபிமானம் மிக்க சிங்கள பத்திரிக்கையாளர்களுக்கு எனது அஞ்சலிகள். அதே சமயம் விஐய்கோபால்சுவாமி கூறியது போல அராஜகம் செய்யும் இலங்கைத் தூதர் அம்சாவுக்குக் கண்டனங்கள், (நக்கீரன் கோபால் எழுதியது சரியா, தவறா என்ற விவாதத்திற்கு செல்லாமல்).

  நித்தில்

 4. ஒடுக்கியழிக்கப்படும் ஈழத் தமிழினத்தின் அவலநிலையை நேர்மையாகப் பதிவு செய்து அதனாலேயே சிங்கள பேரினவாத பாசிஸ்டுகளால் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் லசந்தா விக்கிரமதுங்கவிற்கு எனது வீரவணக்கத்தை இதனூடாகப் பதிகிறேன்.

  சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் வீசியெறியும் எலும்புத்துண்டுகளை நக்கிப் பிழைத்துக் கொள்வதற்காக சிங்கள இனவெறியை ஆதரித்து, அப்பாவி ஈழ மக்களுக்கு எதிராக செய்திவெளியிட்டு வரும் மயிலாப்பூர் பத்திரிக்கா மூர்த்திகள், மவுண்ட்ரோடு மா(மா)மணிகள் ஆகியோரின் எழுத்து விபச்சாரத்தை முற்றாகத் தடை செய்யவேண்டிய போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.

  பார்ப்பன நச்சுப்பாம்புகளின் ’பத்திரிக்கா’ நாக்குகளை அறுத்தெறிவோம்.

  – கலைவேந்தன்.

 5. இதற்கெல்லாம் தமிழனின் நினைவு கோளாறும் உனர்சியின்றி கிடக்கும் “எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானே இவன் ரொம்ப நல்லவன்” மனமே காரணம்.

  சிங்கள ரத்னாக்களும் பாரத ரத்னாக்களும் நடத்தும் ஊடகங்களில் சிங்கள குண்டுகளுக்கு பலியானதை விவரிக்கும் உக்தி

  “இலங்கை தாக்குதலில் உயிரிழந்த பரிதாபம்”

  என்னவோ, சலை விபத்து ஏற்பட்டது போல “உயிரிழந்த பரிதாபம்” என்று எழுதுகிறது.

  இரண்டு நாட்களுக்கு முன்னர், ஒரு பென் புலியின் தற்கொலை தாக்குதலை அடுத்து இலங்கை ரானுவமும் பொதுமக்களும் கொல்லப்பட்டதாக வந்த செய்தியை எப்படி எழுதுகிறார்கள்?

  “பென் புலியின் கொலைவெறி தாக்குதலில் 20 பேர் பலி”

  இரட்டை நாக்குடையாய் போற்றி போற்றி!!!

 6. ஈழத்தமிழர்களுக்கு எதிராக பார்ப்பன ஊடகங்களில் வரும் செய்திகளை புறக்கணிப்பதும் தமிழர் தம்கடமை.

  ஆனால் தமிழின துரோகிகள் இவற்றை ஊக்குவிக்கின்றனர். எனவே முதலில் நமக்குள் களை எடுக்கப்பட வேண்டும்.

 7. இப்படி தமிழ் இனவாத சார்பு கதைகளால் தான் உலகத்தில் யாரும் திரும்பியும் பார்க்கிறார்களில்லை. தமிழனத்திற்கு தீங்கு விளைவிக்கும் இது போன்ற செயல்களும் இலங்கை அரசிற்கு சாதகமாகவே அமையும்.

  நக்கீரன் ஒரு முறை பிரபாகரன் மின்னஞ்சல் கிடைத்தாக ஒரு கடிதத்தை பிரசுரித்தது. பின்னர் அது போலி கடிதம் என்று புலிகளின் புதினம் தெரிவித்தது. நக்கீரன் ஆசிரியருக்கு இது ஒரு மிரட்டலாக தெரியவில்லையா?

 8. உண்மைதான் மிக நல்ல பதிவு, போலீஸ்காரர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள். இந்த மூன்று பிரிவினருக்கும் மக்களிடம் என்ன மரியாதை இன்று இருக்கிறது. நான் பார்த்த வரையில் பெரும்பாலான பத்த்ரிகையாளர்கள் வடி கட்டிய முட்டாள்கள், அறிவிவே இல்லாத அரைவேக்காடுகள். பத்திரிகையளர்கள் அறிவானவர்கள் நன்றாக் எழுதுகிறவர்கள் என நம்பப்பட்டவ்ர்கள் சாதி வெறியர்காளாக இருப்பதுண்டு. அதை சட்டக் கல்லூரி விவாகரத்தில் பார்த்தோம்.

  இதை எல்லாம் விட முக்கியமாக காசு வாங்கிக் கொண்டு எழுதுவதை ஏற்க மறுக்கும் மனம் ஒரு பக்கம். தொடர்ந்து அந்தச் செய்லை செய்யும் துணிவு இந்த இரண்டுமே அறிவின்மையாலும் சுயமரியாதையாக வாழ வேண்டும் என்கிற உணர்வின்மையினாலும் விளையும் ஒன்று. குறைவான சம்பளத்தில் வேலை பார்க்கும் பத்திரிகையாளர்கள் கவர் வாங்கினால்தான் வாழ்க்கை என்கிற நிலையில்தான் முதலாளிகள் வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் பல நிறூவனங்களில் பத்திர்கையாளர்களி அதன் முதலாளிகள் வீட்டில் காய்கறி, நாப்கின் வரை வாங்கும் வேலைக்கு பயன் படுத்துகிறார்கள். முதலாளி விட்டுக்கு கரண்ட் பில் கட்டுகிற பத்திரிகையாளர்களைக் கூட எனக்குத் தெரியும்.

  காலையில் கமிஷனர் அலுவலகத்திற்குப் போய் போலிஸ் காரன் சொல்வதை அலுவலகத்தில் வந்து வாந்தி எடுத்து எழுதுவதுதான் இன்றைய தம்ழி பத்திரிகையிசம். இவர்களை மேட்ய்ப்பதற்காக பத்திரிகையாளார் மனறம் வேறு அதன் பெயர் என்ன தெரியுமா? எஸ். ஆர். எம் மாளிகை. எஸ், ஆர், எம் கல்லூரியின் அதிபர் அவரது சொந்தப் பணத்தில் கட்டிக் கொடுத்ததால் அவரது பெயரையே அந்த கட்டிடத்துக்க்கு வைத்து விட்டார்கள்,நேற்றைய சாராய அதிபர்கள்தான் இன்று கல்வி வள்ளல்கள் ஆனார்கள் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அப்படி இருக்க எப்படி ஒரு தப்பானவனின் பணத்தில் பத்திரிகை சங்கம் கட்டிடம் கட்டிக் கொள்கிறது., நாளை இவர்கள் எப்படி இந்த முதலாளி விஷயத்தில் நடந்து கொள்வார்கள்.

  நான் எழுதியுள்ளது சேம்பிள்தான். உண்மையில் தமிழ் பத்திரிகைச் சூழல் முழுக்க புரட்டிப் போட பட வேண்டியது. இதை புரட்டியாக வேண்டும். தலைகீழாக…

  தொம்பன்

Leave a Reply