பெரியாரின் சொல்படி பார்ப்பனர்கள்தான் நடக்கிறார்கள்!
–
ஈழத்தமிழர்களுக்கு எதிராக பார்ப்பன ஊடகங்கள் சொல்லி வைத்தாற்போல் ஒன்றுபோலவே செயல்படுகின்றனவே?
-கு. தமிழ்ச்செல்வன்
ஒருமுறை தந்தை பெரியார், பார்ப்பனர்களின் சுயநலத்தை விளக்கி சொல்லும்போது:
“நம்ம ஆளுங்களுக்கு பைத்தியம் பிடித்தால், வீட்டுக்குள்ள இருக்கிறதை எல்லாம் தூக்கி வெளியில் அடிப்பான். பாப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் வெளியில் இருக்கிறத எல்லாம் தூக்கி வீட்டுக்குள்ள அடிப்பான்” என்று சொன்னார்.
‘என்னடா இது பைத்தியத்துலக் கூடவா பார்ப்பனப் பைத்தியம், பார்ப்பனரல்லாத பைத்தியம் இது கொஞ்ச ஓவரா தெரியுதே’ என்கிற எண்ணம் அதை படித்தபோது எனக்கு தோன்றியது.
ஆனால், இந்த சுப்பிரமணிய சுவாமி, சோ, தினமலர் கிருஷ்ணமூர்த்தி, இந்து ராம் போன்றவர்களின் செயல்களைப் பார்க்கும்போது, பெரியார் எவ்வளவு தெளிவா, தீர்க்கமா சிந்திச்சிருக்காருன்னு புரியுது.
‘பார்ப்பனர்கள் தமிழர்கள் இல்லை’ என்று பெரியார் சொன்னார்.
தமிழ்த்தேசியவாதிகள், ‘பெரியார்தான் தமிழர் இல்லை. பார்ப்பனர்கள் பச்சைத் தமிழர்கள்’ என்று திருப்பிப் போட்டனர்.
ஆனால், தமிழர்களுக்குப் பிரச்சினை வரும்போது, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்குப் பிரச்சினை வரும்போதெல்லாம், பார்ப்பனர்கள் தமிழ்தேசியவாதிகளின் கூற்றைப் பொய்யாக்கி, பெரியாரின் வார்த்தையை மெய்யாக்குகிறார்கள்.
‘ஈழத்தமிழர்களை குவியல் குவியலாக கொலை செய்கிறான் சிங்கள ராஜபக்சே. இந்திய அரசே, அதை தடுத்து நிறுத்து’ என்று தமிழகத் தெருக்களில் மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் என மக்கள் போராடிக் கொண்டிருந்தபோது, ‘டிசம்பர் மாத கச்சேரி’ என்று சபாக்களில் கர்நாடக சங்கீத ஆலாபனைகளில் தாளம்போட்டு ‘ச்சூ’ கொட்டி ரசித்துக் கொண்டிருந்தார்கள் பார்ப்பனர்கள்.
அவர்களின் ‘ச்சூ’, ஒலி ரசனையின் அடிப்படையில்தான் எழுகிறதே தவிர, தமிழர்களின் மீதான இரக்கத்தின் அடிப்படையில் ஒருநாளும் எழுவதில்லை.
(வீதியில் இறங்கி போராடுவதை கேவலமாக, பொது மக்களுக்கு இடைஞ்சலாக கருதுகிற இவர்கள்தான், கொலை செய்த ஜெயேந்திரனுக்கு ஆதரவாக, வீதியில் இறங்கி போராடினார்கள்.)
ஈழத்தமிழர்களின் துயரங்களில் அக்கறையற்று இருக்கிறார்கள், என்பதுகூட பிரச்சினை இல்லை. அவர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதுதான் வருந்ததக்கது. அதையும்மீறி, ஒன்றிரண்டு பார்ப்பனர்கள் ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறையோடு பேசுகிறார்கள். ‘பரவாயில்லையே’ என்று நாம் புருவம் உயர்த்தினால், ஈழத்தமிழர்கள் பிரச்சினையில், மாவரைக்கிற கருணாநிதியை திட்டுவதற்கான ஒரு நல்வாய்ப்பாகத்தான் ஈழத்தமிழர்களின் துயரங்களைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள், ஞாநியைப் போல.
‘தங்கபாலு, ப. சிதம்பரம், இளங்கோவன், திருநாவுக்கரசு, குமரி அனந்தன், ஓ. பன்னீர்செல்வம், தமிழிசை சவுந்தரராஜன் போன்றவர்கள் பச்சைத் தமிழர்கள்தான். அவர்கள் என்ன ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவா இருக்கிறார்கள்?’ என்று நீங்கள் கேட்கலாம்.
இவர்கள் தங்கள் சொந்தக் கருத்தைவிடவும் தாங்கள் சார்ந்திருக்கிற கட்சியின் நிலைபாட்டை பிரதிபலிக்கிறார்கள். அல்லது இவர்களுக்கு சொந்தக் கருத்து என்பதே கிடையாது. எது அவர்களுக்கு லாபமாக இருக்கிறதோ அதை செய்கிறார்கள். ஆக, இவர்களை தமிழர்கள் என்றோ, இல்லை அவர்கள் சார்ந்திருக்கிற ஜாதிகளின் பிரதிநிதிகள் என்றோகூட முடிவு செய்யமுடியாது.
ஆனால், கட்சி சாராத பார்ப்பனர்கள்கூட பெரும்பாலும், ஈழத்தமிழர்கள் விவகாரங்களில் எதிராக இருக்கிறார்கள். அல்லது அக்கறையற்று இருக்கிறார்கள்.
பத்திரிகைகளில்கூட, பார்ப்பனரல்லாத பத்திரிகைகளில் வருகிற இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகளுக்கு பின்புலமாக, இலங்கை அரசின் ‘விருந்தாளி’யாக இன்ப சுற்றுலா சென்று வந்த பத்திரிகையாளர்கள், தாங்கள் வாங்கிய காசுக்கு விசுவாசமாக செய்திகள் வெளியிடுகிறார்கள்.
ஆனால், துக்ளக், தினமலர், இந்து நாளிதழ்கள் இன்ப சுற்றுலாவிற்கு முன்பிருந்தே, ஈழத்தமிழர்களுக்கு எதிராகத்தான் இயங்குகிறார்கள்.
“நம்ம ஆளுங்களுக்கு பைத்தியம் பிடித்தால், வீட்டுக்குள்ள இருக்கிறத எல்லாம் தூக்கி வெளியில் அடிப்பான். பாப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் வெளியில் இருக்கிறத எல்லாம் தூக்கி வீட்டுக்குள்ள அடிப்பான்” என்று பெரியார் சொன்னது எவ்வளவு தீர்க்க தரிசனம்.
தேசப்பற்றாளரைப்போல், ‘பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு’ என்று தீவிரமாக எழுதிய சுப்பிரமணிய பாரதி, ‘பார்ப்பன எதிர்ப்பு’ அல்லது ‘பார்ப்பனரல்லாதார் உரிமை’ என்று சிலர் முயன்றபோது, அவர்கள் மீது சரமாரியாக கல்லை விட்டெறிந்தைப் போல்,
சுற்றுசூழல் பாதுகாப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, இயற்கை வேளாண்மை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, பன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம், அமெரிக்காவின் அட்டூழியம் என்று எழுதினால் ஓடி வந்து அதற்கு ஆதரவாக ஒரு நக்சலைட்டைப் போல் கருத்து சொல்கிற பார்ப்பனர்களில் பலர்,
பெரியார் – அம்பேத்கர் நிலையில் இருந்து இந்து மத எதிர்ப்பு, இட ஓதுக்கீடு ஆதரவு, பார்ப்பன எதிர்ப்பு, பாரதியின் பார்ப்பன பாசம் என்று நாம் எழுதினால், அதில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ளாமல், ஒரு வெறிப்பிடித்த தெருநாய் பாய்ந்து வந்து கடிப்பதுபோல், நம்மை கடித்து குதுறுகிறார்கள் பார்ப்பன அறிவாளிகளில் பலர்.
ஆக, பெரியார் சொன்னபடி பெரியார் கட்சிக்காரர்கள் நடந்துகொள்கிறார்களோ இல்லையோ, பார்ப்பனர்கள்தான் பெரியார் சொன்னபடி நடந்து கொள்கிறார்கள்.
குறிப்பு:
ஈழத்தமிழர்களின் துயரங்களுக்காக தன் வருத்தத்தைத் தீவிரமாக பதிவு செய்கிற, மிகச் சிறுபான்மையான ஒன்று, இரண்டு பார்ப்பனர்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மற்றபடி, எந்த நேரமும் நான் என்ன எழுதுகிறேன் என்பதையே கண்காணித்து, என்னை பாய்ந்து புடுங்குகிற அறிவாளிகளே… ஆரம்பிங்க உங்க வேலையை…
வாசிக்கும் ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கி ,விசாலமாக மூளையை செயல்படவிட்டு எழுத்துருவாக்கும் உங்கள் திறமை வியப்பளிக்கிறது.அருகில் இருந்து கற்றுக்கொள்ள அநேகம் உள்ளது ..
மற்றபடிக்கு …..”எந்த நேரமும் நான் என்ன எழுதுகிறேன் என்பதையே கண்காணித்து, என்னை பாய்ந்து புடுங்குகிற அறிவாளிகளே… ஆரம்பிங்க உங்க வேலையை…”
இந்த வார்த்தைகள் கொஞ்சம் நெருடலை ஊட்டுகிறது.இத்தகைய தூசிகளின் பாதிப்பு தொடருமாயின் …அது உங்கள் கருத்தின் திசையை மாற்றகூடுமோ என்ற ஐயத்தை உண்டு பண்ணுகிறது ..
சிறப்பான பதிவு.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory – http://www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
மதிமாறன் அவர்களே!
தமிழ்த்தேசிய வாதிகள் பெரியாரை வேறு மனிதராக பார்க்கவில்லை. ஒரு சிலரின் செயல்களை வைத்து அனைவரையும் பழிதீர்க்காதீர்.
பெரியாரின் மீது மாறா நன்றியுணர்வு கொண்டுள்ளவர்கள் தாம் தமிழர்கள்.
தமிழர்கள், நீண்டகாலமாக தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களையும் தமது உறவுகளாகத்தான் பார்க்கின்றனர்.
தமிழ் என்று பேசினாலேயே சிலருக்கு தாம் அன்னியப்பட்டு வட்டதைப்போல உணர்கின்றனர். அது தேவையில்லை!
(சிதம்பரம் பேசுவதற்கும், தங்கபாலு, இளங்கோவன் போன்றோர் பேசுவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசம் எந்த அடிப்படையில் வருகிறது என்று நீங்கள் உணரவில்லையானால், உங்களின் நேர்மையை நான் சந்தேகிக்க நேரும்.நாம் பகுத்தறிவாளராயிருந்தால் மட்டும் போதாது!)
நாமெல்லாம் இனரீதியாக தமிழர்களே!
பார்ப்பான் நம்மை பிறப்பின் அடிப்படையில் பிறத்தான், அவனது பாதுகாப்பிற்காக! இது பிறித்தாளும் சூழ்ச்சி!
அதேபோல, நம்மை மொழியாலும் பிறித்தான்! வட்டார வழக்குகளாக இருந்த தமிழை சமஸ்கிருதம் கலந்து திட்டமிட்டு, தென்னிந்திய மொழிகளை உருவாக்கினான். அவற்றின் முதல் இலக்கண நூல்கள் வடமொழியில் இருப்பதே அதன் சாட்சி!
ஆக, நாம் நம்மை சூத்திரன் என்று அழைப்பது எப்படி கேவலமோ, அதேபோல தான், நாம் நம்மை தமிழரல்லாதவராக அழைத்துக்கொள்வது!
தமிழகத்தில் தமிழே பேசுவோம்! தமிழராக நம்மை இனம்காண்போம்! சுய மரியாதையுடன் வாழ்வோம்!
தோழர் மதி, அருமையான பதிவு. நடப்பு நிகழ்வுகளோடு அய்யாவின் அண்ணலின் கருத்துக்களை சிறப்பாக ஒப்பு மைப்படுத்தி எழுதுகிறீர்கள்.இந்திய பார்ப்பன ஆளும் வர்க்கத்தை எதிர்க்க வீழ்த்த அய்யா, அண்ணலின் கருத்துக்கள் அவசியம்.
உடன்பிறப்பே! ஈழம் ஒருபுறம் எரிய, தமிழகம் ஒருபுறம் கொதிக்க, தங்களை தமிழின தலைவர்கள் என சொல்லித்திரிபவர்கள் தங்கள் நாடகங்களை அறங்கேற்ற, நானும் என் பங்குக்கு ஓரளவிற்கு செய்ய, ஒன்றுமே வேலைக்காகாமல் போய்விட்டது. நான் என்செய்வேன்? 40 MP களும் ராஜிணாமா செய்வார்கள் என்று நான் பிரதமரிடம் கூறிய போது அவர் ரிஸீவரை லைனிலேயே வைத்துவிட்டு தடாலென தரையில் வீழ்ந்து, புரண்டு புரண்டு சிரித்தாரே, அப்போது நான் அந்த அவமானங்களை தாங்கிக்கொண்டு அண்ணா வழியில் எதையும் தாங்கும் இதயமாக நின்றதெல்லாம் யாருக்காக ? உணக்காகத்தானே உடன்பிறப்பே!
இப்போது நீங்களெல்லாம் உசாராகி விட்டதால் வேறு வழியில்லாமல் இந்த முடிவு எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. ஆமாம் நானும் அழுது அழுது கண்கள் பொங்கி விட்டன. கடிதம் எழுதி எழுதி கை வீங்கிவிட்டது. உலகத்தமிழர்களின் அழுகையை நிறுத்த நான் எடுத்த சிறுமுயற்சி தான் இந்த செருப்பொலி, மன்னிக்க சிரிப்பொலி. இந்த காமெடி சேனலை நீங்கள் பார்ப்பது மூலம் உங்கள் கவலைகளை மறக்கலாம். இலங்கைத்தமிழர்கள் இனியும் கவலைப்படவேண்டா. “டயலாக் டிவி” வழியாக உங்களுக்கு சிரிப்பொலி கிடைக்கும். மக்கள் டிவியைப் பார்த்துப் பார்த்து மண்டையை சொரிந்து கொண்டிருக்கும் மலேய தமிழர்கள் இனி “அஸ்த்ரோ” வழியாக சிரிப்பொலியைக் காணலாம். தமிழகமே! இன்னும் இசையருவிக்கே இடமளிக்காமல் இழுத்தடிக்கும் என் இதயம் இனித்த இம்சைகளின் சன்குழுமம் சிரிப்பொலியை சிதைக்காமல் அளிக்குமா என்பது சந்தேகமே! நான் சிரிப்பொலியென்றால் அவர்கள் ஆதித்யா என்கிறார்கள். நான் என் செய்வேன்..,மாற்றச் சொல்ல முடியாது அந்தப் பெயரை. ஆதித்யா என்பது என் கண்மணி கணிமொழியின் மகனல்லவா? பாருங்கள் என்குடும்ப சிக்கலை, அது காய்ந்து போன இடியாப்பம் போன்றது, பிரிக்க நினைத்தால் உடைந்து விடும். எந்தமிழ்மக்களே! உங்கள் துயரங்களைப் போக்க சிரிப்பொலி வரும் 22ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. தமிழகம் இலங்கை மட்டுமின்றி உலகமே சிரிப்பாய் சிரிக்கட்டும். -கலைஞர்
தமிழர்கள் என்று சொல்லும்போதெ நமக்குள் ஒரு பிரிவினை வந்து விடுகிறது.
பெரியார் தொண்டராக இருந்தாலும் தமிழ் தேசியவாதியாக இருந்தாலும் நாம் அனைவரும் தமிழரே.
நமக்குள் பிரிவினை வரும்போது தான் பாப்பான்
தலை தூக்குகிறான் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.
உலகின் மூத்த குடி,கிரேக்கர்களுக்கு வணிகம் கற்று கொடுத்தவர்கள் அண்டை மாநிலத்தவர்க்கு விவசாயம் கற்று கொடுத்தவர்கள் எல்லாம் உண்மை தான்
ஆனால் இனிமேல் நமக்குள் ஒற்றுமை இல்லையெனில் ஈழத்தில் ஏற்பட்ட நிலை விரைவில் தமிழகத்துலும் ஏற்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
நமக்குள் பிரிவினை வரும்போது தான் பாப்பான்
தலை தூக்குகிறான் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.///
பார்ப்பனியமும் முதலாளித்துவத்தின் கூறு தான்.
மக்கள் வர்க்கரீதியாக அணிதிரலாமலிருக்க, அதிகாரமையங்கள் உருவாகிய கருத்தியல் கூறுகளையே நாம் பின்பற்றிக்கொண்டு, அவற்றையே எதிர்ப்பது எவ்விதம்?? தமிழர் தமிழரல்லாதோர் என்பதும் அவ்வகையான கருத்தியல்க்களே என்பது என் கருத்து!
தோழர்.மதிமாறன் விளக்குங்களேன்??
கலைஞர் அழைக்கிறார் வாருங்கள் தமிழ்ர்களே ஈழத்தின் அழுகையொலி மறக்க திராவிட இன பாதுகாவலர் கலைஞரின் சிரிப்பொலி தொலைக்காட்சி காண்போம்
melum ezhuthavum