ஈழத்தமிழர்களின் துயரம் தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது
‘ஈழத்தில் நடக்கிற போரை நிறுத்து‘ என்று காங்கிரசில் இருந்து திமுக வரை, சோனியாவிலிருந்து கருணாநிதிவரை எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். ராஜபக்சே ஒரு ஆள்தான் பாக்கி. இதைதான் புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறான் என்று சொல்லுவார்களோ!
ஈழத்தில் நடப்பது போர் அல்ல தாக்குதல். அதை போர் என்று சொல்வதே ஈழத்தமிழர்களுக்கு எதிரானது. குழந்தைகள், பெண்கள், முதியவர்களை விஷ குண்டு வீசி கொல்கிறது இந்தியாவின் ஆதரவு பெற்ற இலங்கை அரசு. இது எப்படி போர் ஆகும்? அது ஈழ மக்கள் மீது இலங்கை அரசு நடத்தும் தாக்குதல். ‘ஈழ மக்கள் மீது நடக்கும் தாக்குதலை நிறுத்து‘ என்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும்.
ஈழ மக்கள் இதுகாறும் இல்லாத அளவிற்கு மிக மோசமான நிலைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அநேகமாக ஈழத்தில் தமிழர்களே இல்லாமல் செய்துவிட வேண்டும் என்ற வேகத்தில் ‘தேர்தலுக்குள் முடித்துவிடவேண்டும்‘ என்கிற நோக்கத்தில் இந்தத் தாக்குதல் தீவிரமாகி இருக்கிறது.
ஈழமக்களின் படுகொலையால் தமிழகத்து தமிழர்களிடம், காங்கிரஸ்–திமுக கூட்டணி மீது ஏற்பட்டிருக்கும் வெறுப்பை, எப்படி தனக்கு சாதகமான ஓட்டாக மாற்றிக்கொள்வது என்பதில் கவனமாக இருக்கிறார் ஜெயலலிதா. தினம் தினம் ஈழ ஆதரவு அதிரடி அறிக்கைகளால் ஓட்டை அள்ளிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. தேர்தலுக்குள் முடித்துவிட எண்ணுகிற இந்திய இலங்கை அரசுகளிடமிருந்து ஈழ மக்களை காப்பாற்றுகிற எந்த முயற்சியையும் செய்யாமல், இதை காரணமாக கொண்டு தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது? என்று தீவிரமாக, தமிழர்களின் துயரங்களை ஓட்டாக்க அலைகின்றன ஜெயலலிதா தலைமயிலானக் கூட்டணி.
‘ஈழப்பிரச்சினையை தீவிரமாக பேசினால் ஓட்டாக்க முடியும்‘ என்று ஜெயலலிதாவிற்கு ஆலோசனை தருகிற ஈழ மற்றும் விடுதலைப் புலிகள் ஆதரவு தலைவர்கள், உடனடியாக ஈழத்தமிழர்களை காப்பதற்கு ஒன்றிணைந்து தமிழகத்தையே நிலைகுலைய செய்கிற, இந்திய அரசை பணிய வைக்கிற போராட்டத்தை செய்யலாம் என்று முயற்சிப்பதில்லை. ஏனென்றால் ஜெயலலிதா–கருணாநிதி–காங்கரசை போன்றே இவர்களின் நோக்கமும் தேர்தல் மட்டுமே. அதனால்தான் இந்தப் பிரச்சினையை தமிழகத்தை தாண்டி பக்கத்து மாநிலத்திற்கு கூட இவர்கள் கொண்டு செல்லவில்லை.
தமிழகத்தில் தீவிரமாக ஈழப்பிரச்சினையை முழங்குகிற தேசிய கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியாவின் பிற பகுதிகளில் இது பற்றி வாய்திறப்பதில்லை. இவர்கள் நினைத்தால் தமிழக எம்.பிகளோடு (பா.ம.க., ம.தி.மு.க) இணைந்து நாடளுமன்றத்தையே நிலைகுலைய செய்திருக்க முடியும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிற மாநில எம்.பிகள் யாரும் ஈழமக்களின துயரத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. தமிழகத்தில்தான் மூச்சு பிடித்து பேசுகிறார் தா. பாண்டியன், தனது அகில இந்திய தலைவர்களிடம் இதை ஒரு அகில இந்திய பிரச்சினையாக மாற்ற முயற்சிக்கவில்லை. அவர் ஜெயலலிதாவைதான் மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தார். அவர் முயற்சி ஓரளவுக்கு அவர்களுக்கு ஓட்டாக மாறியிருக்கிறது. அது போதாதா?
ஈழமக்களின் துயரம், தமிழக அரசியில் சூழலில் தமிழர்களுக்கு தந்த செய்தி, அல்லது தமிழ் நாட்டில் அது அம்பலப்படுத்தியது எதை என்று பார்த்தால், துரோகிகளை.
இதுவரை, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, சிபிஎம் போன்ற கட்சிகள் ஈழத்தமிழர்களின் துயரங்களின்போது நடந்து கொண்டதை நாடறியும்.
ஈழத்தமிழர்களுக்காகவே–விடுதலைப் புலிகளுக்காகவே கட்சி நடத்துவதாக–பேசுவதாக சொன்ன இயக்கங்கள், பிரபலங்கள், பகுத்தறிவாளர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள் ஈழ மக்களின் மிகப் பெரிய துயரத்தின் போது எவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள், அப்படி நடந்து கொள்வதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள் என்பதையும் நாம் அறிவோம்.
உலகிலேயே மிக மோசமான முறையில் ஈழமக்களை கேவலப்படுத்தி ஜெயலலிதா பேசிய போது, அதை கண்டும் காணமல் தன் கூட்டணியை தக்க வைத்துக் கொள்வதிலேயே கவனமாக இருந்தார் வைகோ. ஈழ பிரச்சினையில் கருணாநிதி எதிர்ப்பில் காட்டிய ஆர்வத்தை, ஈழத் தமிழர்களின் மீது நடக்கிற தாக்குதலை தடுத்த நிறுத்த எந்த தீவிரமான செயலையும் செய்யவில்லை பழ. நெடுமாறன். முத்துக்குமார் தியாகம் – கொளத்தூர் மணி, சீமான் கைது இவைகளை ஒட்டி எதிர்கட்சிகளை ஒன்றிணைந்து தீவிரமாக ஈழத்தமிழர்களுக்கான ஒரு மாபெரும் மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டிய வேலையை நெடுமாறன் தலைமையிலான இலங்கை தமிழர் பாதுகாப்பு அமைப்பு தீவிரமாக செய்யவில்லை.
தேர்தலில் ஜெயலலிதாவோடு இணைந்து செயல்படுவதில் காட்டுகிற வேகத்தில ஒரு பங்கை கூட அதில் ஒருவரும் காட்டவில்லை.
காங்கிரசோடு இணைந்து மத்திய அமைச்சரவையில் பங்கெடுத்து ஈழமக்களுக்கு எதிராக போர் புரிந்தது பாமக. ஈழமக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும்போதும் மதவாத எதிர்ப்பு என்ற முலம் பூசிக் கொண்டு, மிகவும் கம்பீரமாக காங்கிரசுக்கு ஓட்டு கேட்கும் வீரமணி.
ஈழமக்களையும் விடுதலைப் புலிகளையும் ஆதரித்து பேசியதற்காகவே ஈழ மக்களின் பணத்தில் உலகம் முழுக்க இன்ப சுற்றுலா சுற்றி வந்த உதிரிகள், இன்று கருணாநிதி – காங்கிரசின் ஈழத்தமிழர்களின் எதிர்ப்பை நியாயப்டுத்திக் கொண்டிருக்கிறர்கள். இதுபோன்ற தமிழ் உணர்வாளர்களின் துரோகத்தை அம்பலப்படுத்தியது ஈழத்தமிழர்களின துயரம்.
இதில் பெரியார் திராவிடர் கழகம்தான் தொடர்ந்து, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஈழமக்களுக்காக சமரசமற்று தினம் ஒரு போராட்டம் என்று அர்ப்பணிப்போடு போராடி வருகிறது. அதன் தலைவர் கௌத்தூர் மணி அதன் காரணத்திற்காகவே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு அண்ணன் ராமகிருட்டினண் தடா கைதியாக 3 ஆண்டுகள் கொடுஞ் சிறையில் இருந்தார். இப்படி எல்லாம் தியாகங்கள் செய்தபோதும் கூட அவர்கள் ஈழமக்கள் பணத்தில் உலகம் சுற்றி வந்ததில்லை.
ஈழப் பிரச்சினையில் பெரியார் திராவிடர் கழகத்தின் அர்ப்பணிப்பு, ‘அதிமுகவை ஆதரிப்பது‘ என்ற அவர்களின் தேர்தல் நிலைபாட்டில் விரயம் ஆகியிருக்கிறது. காங்கிரசைப் போல் திமுகவை போல் ஜெயலலிதாவும் ஈழ மக்களுக்கு எதிரானவர்தான். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் வரை இந்து ராமைபோல், அவர் ராஜபக்சேவின் நிலைபாட்டில்தான் இருந்தார். தேர்தல் தேதி அவரை இன உணர்வாளராக மாற்றியிருக்கிறது.
‘எங்களுககு அது பிரச்சினையில்லை. நேரடி எதிரியான காங்கிரசை தோற்கடிப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகிறோம். அதிமுகவிற்கு அளிக்கிற வாக்கு காங்கிரசுக்கு எதிரான் வாக்கு‘ என்று அவர்கள் சொல்லலாம்.
தமிழக அரசியில் கட்சிகளிலேயே, ஈழப் பிரச்சினையில் அதிக உயிர் தியாகமும், தொடர்ந்து ஈழமக்களுக்காக காங்கிரசை கண்டித்து பல போராட்டகங்ளை நடத்திய ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அதன் தலைவர் தொல். திருமாவளவன் காங்கிரஸ் அரசை கண்டித்து, சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து உண்ணாவிரதம் இருந்தார். பிறகு பலரின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, “தமிழகத்தில் காங்கிரசை, வேரோடும் வேரடி மண்ணோடும் பிடிங்கி எரிவதே என் லட்சியம்” என்று சபதம் செய்துதான் முடித்தார்.
அவரே காங்கிசுககு ஆதரவா போயிட்டாரு. ஜெயலலிதா போமாட்டாங்களா?
சிறப்பு. சிறப்பான கட்டுரை.
அடப்போங்கடா……………………….
நீங்கள் எழுதிய கட்டுரைதான் இன்றைய உண்மை நிலவரம்.
ஈழப்பிரச்சினையில் ஒருவன் கூட உண்மையாயில்லை என்பதை இன்றைய சூழலில் வெட்ட வெளிச்சமாக அறிய முடிகிறது.
அவருக்கு எதிரணியில் ஈழப்பிரச்சினையை பேசி ஓட்டாக்க முயலும் மற்றவர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்.
இன்றோ, நாளையோ, அடுத்த 2 மணி நேரங்களிலோ முற்றிலுமாக அழித்துவிடுவோம் என அறிக்கை விடுகிறான் ராஜபக்சே.. காலையில் இருந்து ’டைம்ஸ் நவ்’ பிரபாகரன் உயிருடன் பிடிபடுவாரா , பிடிதால் என்ன செய்யலாம் என செய்தியை போட்டுக்கொண்டே இருக்கிறான்.
கருணாநிதி கூட தன்னுடைய நடிப்பிற்காக ஒரு பேரணியை வைத்தார்.
இன்னும் புலிகளிடமும், ஈழத்தமிழர்களிடமும் வாங்கி தின்ற கூட்டம் என்ன செய்கிறது என்று தெரியவில்லை.
ஒரு வேலை இந்தநேரத்தில் அழிந்தால் நாம் சுலபமாக தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என தேர்தல் கணக்கு பார்க்கிறார்களோ.
\\ஈழப் பிரச்சினையில் பெரியார் திராவிடர் கழகத்தின் அர்ப்பணிப்பு, ‘அதிமுகவை ஆதரிப்பது‘ என்ற அவர்களின் தேர்தல் நிலைபாட்டில் விரயம் ஆகியிருக்கிறது. காங்கிரசைப் போல் திமுகவை போல் ஜெயலலிதாவும் ஈழ மக்களுக்கு எதிரானவர்தான். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் வரை இந்து ராமைபோல், அவர் ராஜபக்சேவின் நிலைபாட்டில்தான் இருந்தார். தேர்தல் தேதி அவரை இன உணர்வாளராக மாற்றியிருக்கிறது.
‘எங்களுககு அது பிரச்சினையில்லை. நேரடி எதிரியான காங்கிரசை தோற்கடிப்பதற்கு இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகிறோம். அதிமுகவிற்கு அளிக்கிற வாக்கு காங்கிரசுக்கு எதிரான் வாக்கு‘ என்று அவர்கள் சொல்லலாம்.\\
காங்கிரசுக்கு ஓட்டுப்போடக்கூடாது எனில் யாருக்கு போட வேண்டும்.காங்கிரஸ் இத்தேர்தலில் தோற்றூ செயா ஜெயித்தால் காங்,திமுக திருந்துமா.இது என்ன சாமி கதையைப்போல அல்லவா இருக்கிறது.மேலும் சொல்கிறார். அதிமுக வுக்கு வாக்களிக்க சொல்லவில்லை ஆனால் இணையாண எதிர் வேட்பாளருக்கு ஓட்டுப்போட சொல்லுகிறார்.யார் அந்த வேட்பாளர்? அதிமுகவா பாசாகவா?
ஈழத்தில் மக்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டு வரும் வேளையில் இந்திய தேசியத்தையே முறியடிக்க வேண்டும் ஆனால் மறைமுகமாக ஈழஎதிரிகளுக்கு ஆதரவாய் சப்பை கட்டு கட்டுவது எவ்விதத்தில் நியாயம்.இவருக்கு ஓட்டுப்போடாதே எனில் யாருக்கு போட வேண்டும் என சொல்லுவது கடமை அல்லவா?
காங்-கு மட்டும் போடாதே எனபது தீர்வல்ல அது மாற்றாக செயா,பாச.க வினை பலப்படுத்தும் என்பதுதான் உண்மை.
இந்தியத்துக்கு தரவேண்டிய செருப்படி தேர்தல் புறக்கணிப்பே.
மணி சொல்வது போல உப்புகண்ண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி கருணா மட்டுமல்ல செயா ராமதாசு திருமா நெடுமாறன் என பல பட்டாளங்கள் உண்டல்லவா.
தோழமையுடன்
கலகம்
தமிழகமே, நீ தர வேண்டிய செருப்படி – தேர்தல் புறக்கணிப்பு!
http://suunapaana.blogspot.com/2009/04/blog-post.html
என்னனு சொல்றது இவங்க ஓட்டு அரசியல? வெறுத்து போச்சுங்க. இவங்கள வேரறுக்க ஆளே இல்லையா?
அருமையான கட்டுரை என்பதைவிட மிகவும் நேர்மையான கட்டுரை என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.இன்றைய தமிழக ஓட்டு பொறுக்கி கட்சிகளின்,இயக்கங்களின் நடவடிக்கைகளை தெளிவாக விளக்கயுள்ளார். இன்றைய தமிழக ஓட்டு பொறுக்கி
கட்சிகள் ஈழத்தில் நடக்கும் தாக்குதலை தனக்கு சாதகமாக,அதை ஓட்டாக மாற்ற,ஈழ தமிழரின் பிணத்தின் மீது ஏறி வாக்கு கேட்டு வருகிறார்கள். அப்பாவி தமிழரின் ரத்தத்தில், ஒவ்வொரு அரசியல் கட்சியும் பிணத்தின் மீது மொய்க்கும் ஈயை போல் தன் சுயலாபத்திற்காக மட்டும் ஈழ தமிழர் பிரச்னையை மொய்க்கின்றன.
அப்பாவி தமிழரின் ரத்தத்தில் நம் கைகள் படியாமல் இருக்க,ஒட்டு பொறுக்கி கட்சிகளுக்கு பாடம் கற்பிக்க, பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.
தோழமையுடன்,
உங்களின் தோழன்.
கொத்து கொத்தாய் கொல்லப்படும் அப்பாவித் தமிழர்களின் உயிரையும், ஏதுமறியா பிஞ்சுக் குழந்தைகளின் உயிரையும் எம்தமிழ் பெண்களின் மானத்தையும் வைத்து மிகக் கீழ்த்தரமான போறுக்கி தின்னும் இந்திய அரசியல்வாதிகளை விட சாக்கடையில் உழலும் பன்றிகள் எவ்வளவோ மேல், அப்படி பதவியையும் பணத்தையும் சேர்த்து என்னடா செய்யப்போகிறீர்கள் ச்சீ த்தூ………………
பலரது பொய் முகங்களை கிழித்தெறிந்த ஓர் மிகச் சிறந்த ஆய்வு கட்டுரையாக கொள்லாம். பாராட்டுகள் வே. மதிமாறன்.
காங்கிரசை தோற்கடிக்க அனத்துசக்திகளையும் திரட்டவேண்டியநேரத்தில் தேர்தல் புறக்கணிப்பு காங்கிரசின் கரத்தை பலப்படுத்தும்…..ஈழாஆதரவும் சக்திகள் வெல்லவேண்டும்
பெரியார் தி. க. வின் அ.தி.மு.க. ஆதரவுக் கொள்கை மிகவும் வருத்தமளிக்கிறது. கி. வீரமணியும் ஜெயலலிதாவை ஆதரித்தவர் தானே!
பாரப்பனீயம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறது. இவர்களைக் கைது செய்யச் சொன்னதே, இந்த பாரப்பனக் கும்பல் தான். இப்போது ஈழ ஆதரவென்பதாலும் (?), கைது செய்த கருணாநிதிக்கெதிராக என்றும், அதே பார்பனக் கும்பலுக்கு நம்மை வேலை செய்ய வைத்துவிட்டனர் பாருங்கள். அவன் தானய்யா பார்ப்பான்.
ஈழச்சிக்கலில், பேராசை கருணாநிதியை மாட்ட வைத்து, அவரைம், அக்கட்சியையும் அழித்துவிட்டு, தமிழகத்தில் ஒரே பெருங்கட்சியாக அ. தி. மு. க. வை மீண்டும் நிலை நிறுத்த பார்ப்பனீயம், மிகவும் பலமான திட்டத்தில் உள்ளது.
இவர்களது சூழ்ச்சியை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். சூழ்ச்சியில், உலகிலேயே, அசகாய சூரர்கள் இவர்கள்.
படித்தவர்கள் இனியும் பொது வாழ்க்கையில் இருந்து விலகி வாழாதீர்கள். ஒவ்வொரு சிற்றூரையும் தத்தெடுங்கள். அம்மக்களின் சிக்கல்கள் தீர துணையாயிருங்கள். அவர்களுக்கு தமிழரது வரலாற்றையும், அரசியலையும் கற்பியுங்கள்.
மனமிருந்தால் வழியுண்டு!
தோழர் பாண்டியன் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.
ஈழப்பிரச்சனையில் பெரியார் திராவிடர் கழகத்தின் அர்ப்பணிப்பு தேர்தல் நிலைப்பாட்டால் விரயமாகிவிடும் என்று கவலைப்பட வேண்டாம். விதைத்தவனுக்கு வெள்ளாமையை வீடுகொண்டு போய் சேர்க்கத் தெரியும். ஊருக்கு நடுவே கோயில் திண்ணையில் தாயம் உருட்டிக் கிடப்பவர்களுக்கு அந்தக் கவலை வேண்டாம்.
தோழா… தமிழின உணர்வாளர்கள் என்ற வரிசையில் யார் யாரை எல்லாம் சேர்த்துள்ளீர்…
குறைந்த பட்சம் ஈழ விசயத்திலாவது நம் ஒற்றுமையை நிலைநிறுத்துவோமே….
உங்கள் விமர்சனம் சரி என்றே வைத்து கொள்வோம்..
இதற்கு தீர்வு என்ன சொல்லுங்கள்..
இல்லை விமர்சிப்பது மட்டும் உஙகள் வேலை என்றால் பட்டிமன்ற தீர்ப்பு
சொல்லும் பாப்பையாவுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்…
///ஈழப்பிரச்சனையில் பெரியார் திராவிடர் கழகத்தின் அர்ப்பணிப்பு தேர்தல் நிலைப்பாட்டால் விரயமாகிவிடும் என்று கவலைப்பட வேண்டாம். விதைத்தவனுக்கு வெள்ளாமையை வீடுகொண்டு போய் சேர்க்கத் தெரியும். ஊருக்கு நடுவே கோயில் திண்ணையில் தாயம் உருட்டிக் கிடப்பவர்களுக்கு அந்தக் கவலை வேண்டாம். ///
தோழர் அசுரன் சொல்லில் எனக்கு முற்றும் உடன்பாடு இல்லையென்றாலும்
அவரின் கோபம் நியாயமே..
பெரியார் தி.க தலைவர்களும் சரி தொண்டர்களும் சரி விவாதங்களை
வரவேற்பவர்களே..
தீர்வு சொல்லுங்கள் தோழா செயல்படுவோம்…..
//ஊருக்கு நடுவே கோயில் திண்ணையில் தாயம் உருட்டிக் கிடப்பவர்களுக்கு அந்தக் கவலை வேண்டாம். /////
//எனக்கு முற்றும் உடன்பாடு இல்லையென்றாலும்//
அ. ப. சிவா நீங்கள் சொல்ல விரும்பிய செய்தி மேலே சரியாக வந்துள்ளதா?
தோழர் பெரியார் பிளாக் ஸ்பாட்டில் உங்களைப் பற்றி சகட்டுமேனிக்கு கச்சா முச்சா என்று எழுதியிருக்கிறார் அதி அசுரன். உங்களுக்கும் அவருக்கும் எதாவது தனிப்பட்ட முறையில் தகறாறு உண்டா?
ஈழவிடுதலைப் போரை விடுதலைப்புலிகளை கொச்சை படுத்தி எழுதுகிற ஷோபாசக்தி, அ.மார்க்ஸ் போன்றவர்களுககு அடியாள் வேலை பார்க்கிற தனது பதவில் அவர்களுககு வக்காலத்து வாங்கி எழுதுகிற சுகுணா திவாகர் போன்றவர்களுககு இணைப்பு( மிதக்கும் வெளி) வைத்திருக்கிறஅதி அசுரன் என்கிற தாமரைக் கண்ணன் உங்கள் மீது ஏதோ காழ்ப்புண்ர்ச்சியில்தான் அந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார்.
இவ்வளவு மட்டமானவராக அவர் இருப்பார் என்று நான் நினைக்கவில்லை.
//காங்கிரசோடு இணைந்து மத்திய அமைச்சரவையில் பங்கெடுத்து ஈழமக்களுக்கு எதிராக போர் புரிந்தது பாமக//
மதிமாறனின் இவ்வரிகள் தான் செந்தாமரைக்கண்ணன் என்கிற அதிஅசுரனுக்கு கொதிப்பை ஏற்படுத்தி மட்டரகமாக எழுத வைத்திருக்குமோ 🙂 .
கண்ணன் சொல்லியிருப்பது உண்மைதான். பலரை விமர்ச்சித்திருக்கிற அதிஅசுரன் என்கிற செந்தாமரைக்கண்ன் தன்னுடைய பெரியார் பிளாக்ஸ்பாட்டில் இதுவரை ராமதாசை பற்றியோ பாமகாவை பற்றியோ விமர்ச்சித்ததில்லை.
ஈழப்பிரச்சினைக்காக மட்டுமல்ல ராமதாஸ் ஒரு திராவிட இயக்க எதிர்ப்பாளர் அந்த பார்வையில் கூட பாமகவை விமர்சிக்கவில்லை. குஷ்பு விவகாரத்தில் திருமாவளவனை கண்டித்த அதி அசுரன் குஷ்பு பற்றி அதுபோலவே அபிப்பிராயம் கொண்ட தமிழ்தேசியம் பெயரில் பெண்களுக்கு எதிரான கருத்துக் கொண்ட பாமகவையோ ராமதாசையோ கண்டிக்கவில்லை. இதுதான் பெரியார் பார்வையா?
கண்ணன் சொல்லியிருப்பது உண்மைதான். பலரை விமர்ச்சித்திருக்கிற அதிஅசுரன் என்கிற செந்தாமரைக்கண்ன் தன்னுடைய பெரியார் பிளாக்ஸ்பாட்டில் இதுவரை ராமதாசை பற்றியோ பாமகாவை பற்றியோ விமர்ச்சித்ததில்லை.
ஈழப்பிரச்சினைக்காக மட்டுமல்ல ராமதாஸ் ஒரு திராவிட இயக்க எதிர்ப்பாளர் அந்த பார்வையில் கூட பாமகவை விமர்சிக்கவில்லை. குஷ்பு விவகாரத்தில் திருமாவளவனை கண்டித்த அதி அசுரன் குஷ்பு பற்றி அதுபோலவே அபிப்பிராயம் கொண்ட தமிழ்தேசியம் பெயரில் பெண்களுக்கு எதிரான கருத்துக் கொண்ட பாமகவையோ ராமதாசையோ கண்டிக்கவில்லை. இதுதான் பெரியார் பார்வையா?
காங்கிரசை ஒழிக்க வேண்டும் சரி ஒழித்து விட்டு மதவாத BJP யிடம் ஆட்சியை ஒப்படைக்கவேண்டும் என்கிற தோரணையில் பெரும்பாலானவர்களின் கருத்துகள் உள்ளன.BJP ஆட்சியில் இலங்கைக்கு ரூபாய் 300 கோடி மற்றும் பிற ஆயுத தளவாடங்களும் வழங்கப்பட்டதே …இந்திய ஆயுதம் அழிக்க விட்டால் ராஜபக்ச போரை நிறுத்தி விடுவாரா …..மாறாக சீனாவும் மற்றும் பாகிஸ்தானும் ராஜபக்சேவுக்கு ஆயுதம் வழங்கி வருகின்றனர் ….இந்தியா அனைத்து உதவிகளையும் நிறுத்தினாலும் அங்கு எந்த மாற்றமும் வரப்போவது இல்லை …ராஜபக்சேவை ஒழித்தால் மட்டுமே ஈழத்தமிழர்களுக்கு நிம்மதி ஏற்படுத்த முடியும் … அதை விடுத்தது இந்தியாவையும் கருணாநிதியையும் மற்றும் கூட்டணி தலைவர்களயும் இழிவு படுதுவதுவதால் தமிழ் ஈழமும் தமிழர்கள் கொல்லபடுவதும் நின்று விடாது …..வேண்டுமென்றால் அவ்வாறு குறை கூறுவது திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கொஞ்ச நஞ்ச விடுதலை புலிகளின் ஆதரவாளர்களையும் விடுதலை புலிகளின் எதிர்ப்பாளர்களாக மாற்றும் …
ஈழபிரச்சனை இந்தியா தேர்தலோடு முடிந்து விடாது ….
ஆட்சியாளர்களை முடிந்த வரையில் நமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் ….அதை விடுத்து அவர்களை எதிர்பதால் தனி ஈழம் அமைந்து விடாது …வேண்டுமால் அவ்வாறு எதிர்ப்பவர்கள் தங்களை ஈழ தமிழர்களின் பிரதிநிதிகள் போல காட்டி கொள்ளலாம் .
//துரோகம் செய்த தி.மு.கவை தண்டிக்க நமக்குக்கிடைத்த ஒரு எளிய எதிர்வினைதான் இந்த அ.தி.மு.க ஆதரவுநிலை. அவ்வளவுதான்//
‘ஈழத்தமிழர்களின் துயரம் தமிழிண உணர்வாளர்களை அம்பலபடுத்தியது’
என்ற கட்டுரையில் இன்றைய ஈழ போராட்டத்தின் நிலமையை மதிமாறன் அவர்கள் வெளியிட்டிருந்தார் அதற்கு எதிவினையாக தோழர் பெரியார் தளத்தில் அதி அசுரன் என்பவர் ம.க.இ.கவை பற்றிய அவதூறு கட்டுரையை எழுதியுள்ளார். ம.க.இ.கவின் நடைமுறைகளை பார்த்தவன் என்பதாலும் ம.க.இ.கவின் சமரசமற்ற பார்ப்பனிய எதிர்ப்பு கொள்கையை ஆதரிப்பவன் என்பதாலும் இதற்கு பதில்களும் சில கேள்விகளும்.
முதலில் முத்துகுமர் மரண்த்தில் ம.க.இ.க வினர் ஆள் பிடிக்க போனார்கள் என்பதே உங்களுடைய வயிற்றெரிச்சலை காட்டுகிறது. இன்றைய இளைஞர்கள் ஈழத்தில் நமது உறவுகள் கொடுரமான முறையில் கொன்றொழிக்கபடுவது பற்றி அக்கறையில்லாமல் சினிமா, பொறுக்கி கலாச்சாரம் போன்ற சுயநலங்களில் மூழ்கி இருக்கும்போது அவர்களை தட்டி எழுப்ப தன்னுயிரையே நெருப்புக்கு தந்தாரே தியாகி முத்துகுமார் அவருடை இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வது ஆள் பிடிக்கும் வேலையா? ம.க.இ.க.வின் பேனர்கள் முத்துக்குமரை கௌரவபடுத்து விதமாகத்தான் வந்தன ஏனென்றால் ம.க.இ.க. எங்கும் ஓட்டு பிச்சைக்காக் எவனையும் ஆதரித்து பொறுக்கி திங்கவில்லை. அதனால் ம.க.இ.க.வின் பேனர்களால் முத்துக்குமரின் தியாகத்துக்கு பெருமையே!
உழைக்கும் மக்கள் அதிகாரம் , சாதி, மதமற்ற அரசு, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு ஆள் பிடித்தால் பெ.தி.கவிற்கு என்ன நஷ்டம் வந்துவிடபோகிறாது தந்தை பெரியாரின் கொள்கைக்கு அதில் என்ன மாற்று கருத்து உள்ளது. ம.க.இ.க.வை பார்ப்பன பண்டார பரதேசி கூட்டம் முக்கிய எதிரியாகவே அறிவித்துள்ளது (கடந்த வருடம் பயங்கரவாதி இராமகோபால்ன் அறிக்கை விட்டுள்ளான்) இப்போது நீங்களும் அதே போன்ற கருத்தை கூறியுள்ளிர்கள் இப்போது யார் அக்ரகார அடுப்படியி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியும். அதே போல் ‘ஆ ஊனா’ முத்துகுமார் ஊர்வலத்தி கலந்து கொண்டதை குற்றமாக சொல்லுகிறீர்களே நீங்கள் எதற்கு கலந்து கொண்டீர்கள் முத்துகுமார் என்ன பெ.தி.க மெம்பரா? உங்களுக்கு முத்துகுமார் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு எங்களுக்கும் முக்கியம் என்னமோ தியாகி முத்துகுமாரை மொத்தமா குத்தகைக்கு எடுத்தது போல கதறுவதை இனி நிறுத்தி கொள்ளுங்கள் ! மற்றபடி பழைய கதையெல்லம் வேண்டாம் இப்போது போய் ஈழத்தில் ஆயுதம் எடுத்து போராடுவேண்டியது தானே எந்த் மாமி தடுத்தாள்? வாய் கிழியா பேசி உங்கள் பிழைப்புவாதத்தை மறைக்கமுடியாது! ஏதொ பார்ப்பன எதிர்ப்பு போராட்ட்தையாவது செய்கிறார்களே என்று தான் பெரியார் திக மீது நேரடி விமர்சனம் செய்யாமல் தோழமை சக்தியாக
நினைத்தோம் ஆனல் ஈழ பிரச்சன்யை சாக்காக வைத்து ஐய்யங்கார் மாமியிடம் சரணடைந்து விட்டபிறகு கடுமையான விமர்சனத்தை வைக்கிறோம்
//துரோகம் செய்த தி.மு.கவை தண்டிக்க நமக்குக்கிடைத்த ஒரு எளிய எதிர்வினைதான் இந்த அ.தி.மு.க ஆதரவுநிலை. அவ்வளவுதான்//
இது எவ்வளவு கேவலமான பிழைப்புவாதம் , போரை நடத்துவதே இந்தியாதான்
அப்படிபட்ட இந்தியாவை எதிர்த்து தேர்தலை புறக்க்ணித்திருக்கவேண்டும் கொடூர இந்தியா அரசை அம்பலபடுத்தியிருக்கவேண்டும் அதை விட்டுவிட்டு செயா மாமி காலி
விழுந்துள்ளீர்கள்
சரி செயா ஆட்சியில் வாயை திறந்தாலே சிறை தான் , அதெல்லாம் மறந்துவிட்டதா?
வரும் 5 வருடம் தமிழகத்தை செயா கையில் ஒப்படைக்க துணிந்த உங்களின் தமிழ்நாட்டு மக்களின் மீதான அக்கறை சிலிர்க்கவைக்கிறது
//ரன்வீர் சேனையை எதிர்த்து களம் காண்கிறோம், இதோ வருகிறது செம்பாதை, நேபாளத்தைப் பாரீர் என்றெல்லாம் அகில இந்தியம், அகில உலக தேசியம் பேசும் ம.க.இ.க தோழர்கள் ஈழச்சிக்கலுக்காக பீகாரில், ஜார்கண்ட்டில், சட்டீஸ்கரில், ஆந்திராவில் ஏதாவது ஒரு கண்டனக் கூட்டமாவது நடத்தினார்களா?
படித்துறைப் பாண்டி கணக்கா நேபாளம் பற்றி பீலா விட்டுத் திரிகிறார்களே மகஇக வினர். அந்த நேபாளத்தில் ஈழத்தமிழினப் படுகொலையைக் கண்டித்து ஒரு போஸ்டராவது உண்டா? //
ம.க.இகவினர் என்றைக்காவது பீகாரில், ஜார்கண்டில், ஆந்திரத்தில் செயல் படுகிறோம் என்று எப்போது சொன்னார்கள் ஆதார இருக்கிறதா? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கள் அவதூறு என்று ஆன பின்பு பொய்யாவது மொய்யாவது…
நேபாளத்தில் போஸ்டர் ஒட்டுவது என்ற விதண்டாவத கேள்வி எழுப்புகிறீர்களே
பதிலுக்கு நாமும் தமிழ்நாட்டின் தாழ்த்தப்பட்டோர் பிரச்சனைக்காக ஈழத்தில் போஸ்டர் ஒட்டினீர்களா என்று கேள்வி கேட்கமுடியும். ஆனால் அது அறிவு வளர்ச்சிக்கு உதவாது !
‘கட்டிலில் கவுந்தடிச்சு படுத்துகொண்டிருப்பவர்களுக்கு இதெல்லாம் புரியாது”
சிறு பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது…..
அண்ணன் சீமானை பற்றி ஒரு கட்டுரை கூட வெளியிடவில்லை. இந்த பாமக தாசன் அதிஅசுரன். அவர் கைது செய்யப்பட்டதை கூட கண்டித்து தனி கட்டுரை வெளியிடவில்லை. பெரியார் திரவிடர் கழக கூட்டங்களில் ஏராளமாக பேசியிருக்கிறார். அப்படியிருந்தும் பாமக தாசன் தாமரைக்கண்ணன் அண்ணன் சீமான் பற்றிய செய்திகளை தனது பெரியார் பிளாக்ஸ்பாட்டில் எழுதவில்லை.
மதிமாறன் கட்டுரைகளை பெரியார் பற்றிய கவிதைகள் உட்டபட பலவற்றை பலபேர் எடுத்து தங்கள் பக்கங்களில் வெளியிட்டு இருக்கிறார்கள். பெதிக தோழர்கள் பலர் மதிமாறன் பிளாக்க்கு இணைப்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் பாமக தாசன் அதை செய்யவில்லை. கீற்றுவில் வந்த ஏ.எஸ். பன்னீர் செல்வம் போன்ற திமுக கூஜாக்கள் பேட்டியை பிரசுரித்திருக்கிறார் பாமக தாசன் அதிஅசுரன்.
அண்ணன் சீமான் மதிமறான் மீது உண்மையிலேயெ காழ்ப்புண்ர்ச்சியோடுதான் இருக்கிறார் அதிஅசுரன்.
அதிஅசுரைன கண்டித்து அவர் பிளாக்கில் போடுகிற எந்த பின்னுட்டத்தையும் பிரசுரிக்க மறுக்கிறார் போலி பெரியாரி்ஸ்ட் தாமரைக் கண்ணன். அதனால் இங்கே வந்திருக்கிற பின்னுட்டங்களை காப்பி செய்து பல பெரியார் தொண்டர்கள் வைத்திருக்கிற பிளாக்கி்ல் நாம் பின்னுட்டமாக வெளியிட்டு இந்த பாமக காரரை அம்பலப்படுத்த வேண்டும்.
அதி அசூரனுக்கு பதிலடியாக கலகத்தில் வெளிவந்துள்ளது அதிலும் பின்னூட்டங்களை அனுப்பவும்
http://kalagam.wordpress.com/
என்னையும் ஒரு பொருட்டாக மதித்து, என்னையெல்லாம் ஒரு மனிதனாக நினைத்து இவ்வளவு கமெண்ட்டுகளை விடாமல் அனுப்பிவரும் கண்ணன், சுந்தரம், தனி பதிவே போட்டுள்ள கலகத்துக்கும், சில அனானிகள் மற்றும் இவற்றையெல்லாம் வெளியிட்டு பிரச்சனையை தனிநபர் சிக்கலாக மாற்ற முனையும் மதிமாறன் ஆகியோருக்கும் முதலில் நன்றி.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் எழுதிய பதிவுகள் அனைத்தையும் ஆய்வு செய்ததற்கு இரண்டாவது நன்றி. கருத்துக்குருடும் கண்குருடும் சிலருக்கு சேர்ந்தே வந்துவிடும் போலிருக்கிறது.
என்னைப் பற்றியும், தோழர் மதிமாறன் அவர்களைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் வந்துள்ள பல கமென்ட்டுகளை பிரசரிக்காமல் வைத்துள்ளேன். அது என் விருப்பம். என்னை அம்பலப்படுத்தியே ஆக வேண்டும் என்பவர்கள் கலகத்தைப் போல தனி பதிவு போடுங்க சார்.
அதுசரி, யார் அது செந்தாமரைக்கண்ணன்?
உங்கள் மீது வைத்த எந்த குற்றங்களுக்கு பதில் சொல்லாமல் சிறுபிள்ளைத் தனமாக ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறீர்கள். இதிலிருந்தே மேல் சொன்னபடி நீங்கள் ஒரு சாதி வெறியர், காழ்ப்பிணர்ச்சிகாரர் என்று நிருபிக்கப்பட்டிருக்கிறது.
உங்களை போன்றோரை எல்லாம் எப்படி அவ்வியக்கத்தில் வைத்துள்ளார்கள்??
///என்னைப் பற்றியும், தோழர் மதிமாறன் அவர்களைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் வந்துள்ள பல கமென்ட்டுகளை பிரசரிக்காமல் வைத்துள்ளேன்.////
’மேயிர மாட்ட நக்கர மாடு’ ந்னு அதிஅசுரன் மதிமாறனை கண்டித்து வைத்த தலைப்பை வச்சிட்டு அடுத்தவன பற்றி யோக்கியத பேசுராரு.
அதி அசுரன் அவர்களே,
கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாது ஓட வேண்டாம், தமிழ்த்தேசியம் தானே பேசுகிறீர்கள், அப்புறம் ஏன் இந்த மானங்கெட்ட இந்தியத்துக்கு மேக்கப் போடுகிறீர்கள்
காங்க்கு போடாதே வேறு யாருக்கு வேண்டுமானாலும் போடு என்பது(நீங்கள் சொன்னது போல அதிமுகவுக்கு).
நீங்கள் கருத்துரிமையில் அராஜகவாதியாக நடந்து கொள்கிறீர்கள் என குற்றம் சாட்டுகிறேன், ம க இ கவினை பார்ப்பன அமைப்பு என்கிறீர்கள் அதற்கான விளக்கத்தினை தர வேண்டும்.ம க இ க வில் யார் பார்ப்பன சாதியத்தின் விழுமியங்களோடு வாழ்கிறார்கள். அது எப்படி பார்ப்பனராய் பிறந்து அதை எதிர்த்து வாழ்ந்தாலும் பார்ப்பனர் என்றே சொல்லுவீர்கள்.உங்கள் தலைவர் கொளத்தூர் மணி பிற்படுத்த பட்ட சாதியில் பிறந்து தற்போது பார்ப்பன செயாவுக்கு ஓட்டு போட சொன்னால் என்ன வென்று சொல்லவேண்டும்.
மணியை பற்றி உங்களுக்கு தெரியுமா என கிளைகதை ஓட்ட வேண்டாம்.அவர் சாதிய விழுமியங்களை ஒழித்து வாழ்பவர் என்பதும் சாதிஎதிர்ப்பு போராட்டத்தில் முன்னணியில் இருப்பவர் என்பதும் தெரியும்.
1.இப்போது பார்ப்பன பாஸிஸ்டு செயாவுக்கு வால் பிடிப்பதால் அவரை என்ன வென்று கூற வேண்டும்.
2.ஈழத்தில் வாழும் தமிழர்களளை இந்துக்களாக அடையாளம் காட்டிய நெடுமாறனைப்பற்றிய உங்கள் அமைப்பின் கருத்து என்ன?
3.தனக்கு மட்டும் கேள்வி கேட்கும் உரிமை இருப்பதாக அராஜக வாதியாய் நடந்து கொள்ளாது கலகத்தை போல் தனி பதிவு போடுங்க என மழுப்பாது பதில் சொல்ல வேண்டும்
4. நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு போரில் போரிடும் ம க இ க வினை தரந்தாழ்ந்த அரசியலற்ற முறையில் விமர்சித்த தாங்கள் கண்டிப்பாய் பதில் சொல்ல வேண்டும்
5.இல்லை தேர்தல் புறக்கணிப்பு எப்படி சாத்தியமில்லை என்பதையும் அல்லது உங்கள் அதி முக ஆதரவு எப்படி ஈழமக்களுக்கு தோதாக இருக்கும் என்பதனையும் விளக்க வேண்டும்
நாம் பொறுமையாக ஒவ்வொன்றாக விவாதம் செய்யலாம்
என்ன தயாரா
முதலில் (தமிழச்சி சொன்னது போல ரொம்ப முக்கிய பிரமுகர்) நீங்களே ஒரு பாயிண்ட்ட எடுத்து ஆரம்பிங்க பார்க்கலாம்
எப்படி யோசித்தாலும் பெரியார் திக எடுத்த முடிவு தவறானது என்று தோன்றுகிறது.
பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் பார்ப்பானை அடி என்றார் பெரியார். மேலும் ஒரு ஆட்டு மூளை கூட தமிழனுக்காக சிந்திக்கும் , ஆனால் பார்ப்பான் எப்போதும் தமிழனுக்காக சிந்திக்க மாட்டான் என்றார்.
காங்கிரஸ் கட்சிக்கு வோட்டு போடாதே என்று மட்டும் கூறி இருக்கலாம். ஜெ வின் ஓநாய் குணம் தெரிந்தே என் அவரை வளர்க வேண்டும். ஜெயித்த பின் இங்கே உள்ள நெடுமாறன், வைகோவை உள்ளே போட்டது போல் தமிழ் மக்களுக்கு எதிராக செயல் படுவார். வரும் முன் காக்க வேண்டும். வைகோ போல் வெறும் உணர்ச்சி பேச்சு மட்டும் பேசி விட்டு பின்னால் ஜெ வுக்கு துதி பாடும் பேடி வாழ்க்கை எல்லோராலும் எள்ளபடுகிறது, அது போல் ஆகி விட கூடாது பெரியார் தி.க . எந்த காலத்திலும் பார்பனுக்கு துணை போவது, நம் தலையில் நாமே நெருப்பு வைப்பதற்கு சமம். பெரியார் தி க , நிறைய தெரிந்தவர்கள். பெரியார் கொள்கையை முன் நிறுத்துவார்களா?
பெரியார் பெயரில் இயக்கம் நடத்தும் பலருக்கும் இடையில் ஒற்றுமை இல்லையே என்பதை நினைத்தால் வருத்தமாகத்தான் உள்ளது.
வீரமணி அய்யா அவர்கள் 1996இல் பார்ப்பனப் பெண்மணியை ஆதரிப்பதைப் பொறுக்காமல்தான் பெரியார் திகவே பிறந்தது. அது ஒன்று மட்டும்தான் தமிழர் தலைவரின் கொள்கையோடு பெரியார் திக வேறுபட்ட விசயம்.
இப்போதுதான் அய்யா வீரமணி அவர்கள் சூத்திர அரசை ஆதரிக்க ஆரம்பித்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டனவே!
அப்புறம் என்ன கொள்கை வேறுபாடுகள் பெரியார் திகவுக்கு இருக்கின்றன என்று என்னைப்போன்ற சாமானியர்களுக்குப் புரியவே இல்லை.
வீரமணியின் ஆதரவு = பாப்பாத்திக்கு இப்ப இல்லை. இது பெரியார் திகவின் கொள்கை (அது மட்டும்தானே கொள்கை)தானே..
எதுக்கு பெ.திக என்ற தனி அமைப்பு இருக்கணும்? திகவிலேயே மீண்டும் சேர்ந்துவிடலாமே..
அய்யா வீரமணி 1996இல் பாப்பாத்தியை ஆதரிச்ச குத்தத்தை நீங்க மட்டும் 2009 இல் செய்தால் அது சரியாகுமா?
தாமரைக்கண்ணன் என்று அறியப்படும் அதிஅசுரன் இதை விளக்கினால் எம் போன்ற சாமானியர்கள் தெளிவடைய வாய்ப்புக் கிடைக்கும்.. என் விருப்பம் எல்லாம் பெரியார் பேரைச் சொல்லி இயங்கும் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து சூத்திர ஆட்சியைக் காப்பாத்தணும்.
பெரியார்பித்தன்
//நீங்கள் ஒரு சாதி வெறியர், காழ்ப்பிணர்ச்சிகாரர் என்று நிருபிக்கப்பட்டிருக்கிறது//
இதை நான் ஒத்துக்கொள்கிறேன். வழிமொழிகிறேன். வன்மையாக ஆதரிக்கிறேன். பாராட்டுகிறேன்.
//நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு போரில் போரிடும் ம க இ க வினை தரந்தாழ்ந்த அரசியலற்ற முறையில் விமர்சித்த தாங்கள் கண்டிப்பாய் பதில் சொல்ல வேண்டும்//
ம.க.இ.க ஒரு வெளிப்படையான பார்ப்பனக் கட்சியே! என்ற தலைப்பில்
http://karunthinai.blogspot.com/2009/04/blog-post_22.html என்ற இணைப்பில் பார்ப்பன மடமான மகஇக வை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். அதில் இருக்கும் கருத்துக்கள் முழுக்க முழுக்க எனது கருத்தாகக் கொண்டு படித்து பதில் தரவும். பதிலை அதிகாரப் பூர்வமாக மகஇக விலிருந்து ஏதாவது ஒரு பொறுப்பாளர் வெளிப்படையாக பொறுப்பேற்று பதில் தரவும். மகஇக வின் வழக்கமான மொட்டைக்கடுதாசி, அனானி கமெண்ட்டுகளை புறந்தள்ளுவோம். கண்டுகொள்ள மாட்டோம்.
//நாம் பொறுமையாக ஒவ்வொன்றாக விவாதம் செய்யலாம்
என்ன தயாரா//
உங்களைப் போன்ற பார்ப்பன தாசர்களிடம் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உங்கள் தலைமைப் பார்ப்பானை வரச்சொல்லுங்கள் நேரடியாக பொறுமையாக அவரிடம் பேசிக்கொள்கிறோம்.
தலைமைப்பார்ப்பான் தயாரா? சாக்கு போக்கு சொல்லி ஓட வேண்டாம்.
தோழர் பெரியார் பித்தன் அவர்களுக்கு
1996 இல் ஜெயலலிதாவை ஆதரித்து நானும் பிரச்சாரம் செய்தவன்தான். தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்ததற்காக நான் தி.க வை விட்டு வெளியேறவில்லை.
இங்கு நடப்பது பெரியார் பேரைச் சொல்லும் ஆட்சி. பெரியார் சொல்வதைச் செய்யும் ஆட்சியும் அல்ல. சூத்திர ஆட்சியும் அல்ல.
அற்புதமான வரலாற்று களஞ்சியமான வால்கா முதல் கங்கையை எழுதிய ராகுல் சாங்கிருத்தியாயனையும் பார்ப்பான் என்று புறந்தள்ளிவிடுவீர்களா?
அடுத்து தலைமை வரவேண்டுமா? நீர் எந்த அமைப்பின் தலைமை ?
உங்கள் அமைப்பின் தலைமை வரட்டும் பிறகு பார்க்கலாம் !
பிறப்பால் பார்ப்பானாய் பிறந்ததை வைத்தே ஒருவருக்கு பார்ப்பன முத்திரை குத்தும் உம்மை போன்ற பார்ப்பன அடிமைகளை என்னவென்று சொல்லுவது?
அம்பேத்கரையும் உம்மால் தாழ்த்தபட்டவராகத்தான் பார்க்கமுடியும்.
தந்தை பெரியாரின் கருத்துக்களை வைத்து பிழைப்பு நடத்தும் (இது அதி அஜீரணுக்கு மட்டும்தான்)உம்மை போன்ற அக்கிரகார பூனைகளுடன் விவாதம் நடத்துவது எமக்கு ஒன்றும் புதிதல்ல !
அடுத்தாக உம்முடைய இத்துபோன ‘பார்ப்பான்’ ‘பார்ப்பான்’ என்ற பிதற்றல்களுக்கு ஏற்கனவே பல முறை
(தோழர் ஏகலைவன் பிளாக்ஸ்பாட்டில் பார்க்கவும்)
பதில் சொல்லியாகிவிட்டது. ஆனல் அவையெல்லாம் சில்லரைகளின் மண்டையில் ஏறப்போவதே இல்லை!
எமக்கு பதில் சொல்ல உம்மால் முடியாது ! மறுபடியும்
அவதூறுதான் பதிலாய் அமையும்.
அதீ அஜீரணம் ! எம் ஜீ ஆர் பாட்டை மனப்பாடம் செய்து கொள்ளவும் ! பிரச்சாரத்திற்கு உதவும்
அதி அசுரன் அய்யா அவர்களே,
கீழ்க்கண்ட குற்றச்சாடுக்களுடன் சேர்த்து 15 கேள்விகளால் மாவீரன் நெடுமாறனைத் துளைத்தெடுத்தது பெ.தி.க.தான்.
//10. ஈ.வெ.கி. சம்பத் அவர்கள் கண்ட தமிழ்த் தேசியக் கட்சி, தமிழ்த் தேசியம் பேசியது. அது ‘இல்லாத இந்தி தேசியம்’ பேசுகிற காங்கிரசில் இணைந்த போது இப்போது ‘மாயையான திராவிட தேசியம்’ என பேசுகிற – மரபினம், தேசிய இனம் பற்றி அறிவியல் பூர்வமான உண்மையை உணர்ந்த அய்யா நெடுமாறன் போன்றவர்கள் சம்பத்துடன் சென்றனர். அது தமிழ்த் தேசியத்துக்கு இழைக்கப்பட்ட துரோமில்லையா?
11. நெடுமாறன் காங்கிரசில் இருந்து வெளியேறிய காலம் வரை இந்திய தேசியம் பேசியதும், அவசர நிலை காலத்தில் தி.மு.க.வை பிரிவினை சக்திகள் என குற்றஞ்சாட்டி நடவடிக்கை மேற்கொண்டபோது அதற்குத் துணை நின்றதும், காங்கிரசில் சம்பத் அவர்கள் இணைவதைக் கண்டித்து சம்பத்திடமிருந்து விலகிப்போன ஆசான், கோவை செழியன் போன்றோரைப் போல சம்பத்தின் தவறான (இந்திய தேசிய) வழிகட்டுதலை புறந்தள்ளாமல் இருந்ததும் நெடுமாறன் அய்யா அவர்கள் தமிழ்த் தேசியத்துக்கு இழைத்த துரோகமல்லவா?
//
ஆதாரம்: பெரியார் திகவின் அதிகாரப்பூர்வமான வலைத்தளம்: http://periyardk.org/articles.php
எனக்கு இருக்கும் சந்தேகம் இதுதான். எப்போதுமே பெரியார் இயக்கங்களின் மீது குதிரை சவாரி செய்துவரும் நெடுமாறன் போன்ற புல்லுருவிகளை சரியாகவே இதில் அம்பலப்படுத்தி இருக்கிறீர்கள்.. பாராட்ட வேண்டிய விசயம்தான்.
இருப்பினும், அந்த ஆசாமி மாமா வேலை பார்த்து பாப்பாத்திக்கு கூட்டணி சேர்த்தபோது அவர் கைகாட்டிய வேலையை பெதிக ஏன் மேற்கொண்டது?
அவர்மீது வைத்த விமர்சனமெல்லாம் சும்மாச்சுக்குமா?
அவர் கருணாநிதியை, இழிவுபடுத்தப்பட்ட சாதிக்காரர் எனும் கண்ணோட்டம் ஒன்றை வைத்தே வன்மையாக எதிர்த்துவருகிறார். அவர் சாதிப்பற்றாளராகவும், மேல்சாதித்திமிரோடும் இருப்பவர் என்பது பெதிகவுக்கு தெரியும்.
இருப்பினும் அவரை ஏன் பெதிக தலையில்வைத்துக் கூத்தாடுகிறது?
அவர் ஏற்பாடு செய்த அதிமுக ஆதரவுக் கூட்டணிக்குட்டையில் பெதிக போய் விழுந்தது?
இதற்கெல்லாம் பதில் சொன்னால் பெரியார் கொள்கையைப் பின்பற்றும் எங்களைப் போன்றவர்கள் அறிவுத்தெளிவு பெறமுடியும்..
எல்லா இடத்திலும் கேட்கிறார்கள்.. “என்னங்க..நேத்துவரை பாப்பாத்தின்னீங்க.. இன்னிக்கு இரட்டை எலைக்கு ஓட்டுப் போடச் சொல்றீங்க..” என்று… அவர்களிடம் பதில் பேசமுடியலைங்க..
“இல்லைங்க.. நான் பெதிக. இல்லை”ன்னா.. “அப்ப வீரமணி ஆளா?”ங்கிறாங்க.. “இதுக்கு நீங்க என்னை செருப்பால அடிச்சிருக்கலாம்னு” சொல்லிட்டு தப்பிச்சு வரவேண்டி இருக்குது..
அய்யா அதிஅசுரன்.. பாப்பாத்தியை ஆதரிச்சதுக்கு வலுவான காரணம் சொன்னீங்கன்னா எங்களுக்கு உதவியா இருக்கும்.
–பெரியார்பித்தன்
கடை திறந்திருக்கிறதா???
அதி அசுரன் என்ற பெயரை உடைய அனானி கழிசடையே, முதலில் நீ யார்? உன் பெயர் என்ன, உன் அமைப்பு என்ன? அதில் உன தகுதி என்ன? இதேயெல்லாம் சொல்ல துணிவில்லாமல் அனானியாக எழுதி வரும் உன்னிடம் எதற்காக ம.க.இ.க பொறுப்பில் இருப்பவர் பதில் செல்ல வேண்டும்.
நீயும் கருந்தினையும் வேறு வேறு ஆள் என்றே நம்புவோம் இருந்தாலும் அந்த கருந்தினை எடுத்த வாந்தியை அள்ளி உன்னுடைய தளத்தில் கொட்டியிருக்கும்
http://thozharperiyar.blogspot.com/2009/04/blog-post.html
பதிவில் உன்னைப்போல ஒரு அனானி உன்னை அம்மணமாக்கி ஓட ஓட விரட்டியடித்ததும், அந்த அனானி எழுப்பிய கேள்விகளுக்கு நீ பதில் சொல்ல முடியாமல் பின்னங்கால் முன்னால் ஓடுபவனின் பிடரியில இடிக்க நீ ஓடியதும்தான் உண்மை,
அதே போல உங்களை விமர்சனம் செய்த ஒரே காரணத்துக்காக தோழர் மதிமாறனை கீழ்தரமான முறையில் விமர்சனம் செய்து நீ வெளியிட்ட கட்டுரையிலும்
http://thozharperiyar.blogspot.com/2009/04/blog-post_21.html
உன்னைப்போல ஒரு அனானி எழுப்பிய கேள்விகளுக்கு
பதிலிளிக்க முடியாமல் நீ தவிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது
முதலில் உன் தளத்திலேயே பதிலிளிக்க முயற்சி செய் அதை விடுத்து
இங்கே வந்து மீசையில் மண் ஒட்டவில்லை என்பது பொறுப்பில் இருப்பவர் பதிலளிக்க வேண்டும் என்பதெல்லாம் ஏற்கனவே கேவலமான உன் நிலையை மிகக் கேவலமாகவே காட்டுகிறது.
பின் குறிப்பு 1) தோழர் விடுதலை ராஜேந்திரனின் முறையான அவதூறு கட்டுரைக்கு முறையாக பு.ஜ. பதலளித்ததை மறந்து விடலாம். அங்கும் பதிலிளிக்க முடியாமல் ஓடி ஓளிந்தவன் இந்த அதி அசுரன் என்பதையும் மறந்து விடலாம். இந்த அதி அசுரனால் ‘அசுரன்’ என்ற பெயருக்கே கேவலம் என்பதையும் மறந்துவிடலாம்.
பின் குறிப்பு 2) பெரியார் கையில் ஒரு விளக்குடன் கிராமம் கிராமமாக சுய மரியாதை பிரச்சாரம் செய்தார். நீங்களும் கையில் விளக்குடன் போயசு தோட்டத்திற்காக பிரச்சாரம் செய்கிறீர்கள். உங்களுக்கும் பெரியாருக்குமான ஒற்றுமை கையில் இருக்கும் விளக்கோடு முடிந்து விடுகிறது. பெரியார் அதை அவமான இருள் அகற்ற பிடித்தார்…. நீங்களோ….?
தோழர் கலம்
///ம.க.இ.க ஒரு வெளிப்படையான பார்ப்பனக் கட்சியே! என்ற தலைப்பில்
http://karunthinai.blogspot.com/2009/04/blog-post_22.html என்ற இணைப்பில் பார்ப்பன மடமான மகஇக வை அம்பலப்படுத்தியிருக்கிறார்கள். ////
இதுகுறித்து ஏன் நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை. இதற்கு முறையான பதில் சொல்லாவிடின் இதில் சொல்லபட்டிருப்பது எல்லாம் உண்மை என்று ஆகும். இந்த பதிவில் மகஇகவை பற்றி நிறைய கட்டுரை வந்திருக்கிறது. அதற்கு உங்கள் தரப்பில் இருந்து யாரும் முறையான பதில் சொல்லவில்லை.
ஆழக்கரையான், அதி அசுரன், ஈரோட்டுக் கண்ணாடி போன்ற அரை வேக்காடுகளுக்கு ஆர்வமாக பதில் சொல்லும் அசுரன், ஏகலைவன், மாசே, நீங்கள் எல்லாம் ஏன் இந்தக் கருந்திணைக்கு பதில் சொல்வதில்லை. இதுவரை அதற்கு நீங்கள் யாரும் ஒரு பின்னூட்டம் கூட கண்டித்துப் போடவில்லை. இதுதான் CPIML SOC – மக இக வின் அறிவா? நீங்களோ இல்லை ஊர் நியாயம் பேசுகிற வினவுவோ அவசியம் பதில் சொல்லவேண்டும்.
ஐயா கருப்பன்,
மேலே எனது பின்னூட்டத்தில் அந்த கட்டரையை மறுபதிப்பு செய்திருக்கும் அதி அசுரனின் தளத்தில் உரிய பதில்கள் எழுதப்பட்டிருக்கிறது என்று தானே குறிப்பிட்டிருக்கிறேன்… அது எப்படி உங்கள் பார்வையில் படாமல் போயிற்று..
ம.க.இ.க வை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளிக்கலாம் ஆனால் பெரும்பாலும் செய்யப்படுவது அவதூறுகளே… அவதூறுகளுக்கு மதிப்பு கொடுப்பதும் கொடுக்காததும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது.
ஒரு வேளை இந்த அதி அசுரன் செய்வதைப் போல கீழ் தரமான எதிர்தாக்குதலை நீங்கள் எதிர் பார்தீர்களோ என்னவோ. உங்களை ஏமாற்றியதர்க்கு வருத்தப்படுகிறேன்
கருந்திணையை அப்பயே பிச்சி பிசிரெடுத்தாச்சு சந்தேகம் இருந்தா பழைய வினவு கட்டுரைய பாருங்கள் கருப்பன் (எ) கருந்திணை (எ) அதி அஜீரணம் (எ) செந்தாமரைக்கண்ணன் (எ) பா.மா.கா.காரன்
என்னங்க ஒரு மாதத்துக்கு முன் வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்தவங்க எல்லாம் ரொம்ப அமைதியாகவே இருக்காங்களே.
ஒன்னுமே புரியலீயே……….
பாவம் அதிக்கு யாருமே சப்போர்ட் பண்ண மாட்டேங்குறாங்களாம்.
இனி அதிஅசுரனார் அவர்கள் தன் பேரை மாமிக்கு பிடித்த மாதிரி சமஸ்கிருதத்தில் வைத்துக்கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை….
அதி அசுரனின் ….க்கு தோழர் இரயாகரன் எதிர்வினை
தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங்கங்கள்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5670:2009-04-23-18-31-42&catid=240:2008-11-18-10-48-47
தோழர் மதி சொன்ன தமிழின உணர்வாளர்களை அம்பலப்படுத்தியது என்பது
மறு மொழிகளில் தங்களின் அறிவை நிருபிப்பதாக காட்டிக்கொள்ளும் உங்களுக்கே பொருந்தும்
பார்ப்பன பரதேசிகள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதைசரியா செய்யும்
நீங்கள் எல்லாம்———— எதை இட்டு வேண்டுமானலும் நிரப்புங்கள்……….
போதும் நிறுத்துங்கள் இதோடு…….
கோவம் வோண்டாம் நண்பர் சிவா,
அதி அசுரனின் எனும் அந்த அனானியின் கழிசடை பதிவுக்கும், பின்னூட்டங்களுக்கும் இதைவிட நாகரீகமாக யாரும் பதில் சொல்ல முடியாது.. மறந்துவிடாதீர்கள்
தோழர் மதிமாறன் ஒரு வரி விமர்சனம் செய்யதற்கே எவ்வளவு கீழ்தரமாக அவர் எழுதினார் என எண்ணப்பாருங்கள்!
சிவா ஏன் இவ்வளவு டென்ஷனாகுறீங்க,
ஒண்ணு கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லுங்க அதை விட்டுவிட்டு ஏசாதீர்கள்.மேலே பெரியார் பித்தன் என்பவர் ஒரு நியாயமான கேள்வி கேட்டிருக்கிறாரே பதில் சொல்லுங்கள். பார்ப்பன எதிர்ப்பை தந்தை பெரியார் தமிழகத்தில் விதைத்தார் ” மலமள்ளும் பாப்பாத்தியை கண்டதுண்டா என்ற வரிகள் எத்தனை பேரை பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பாளராக மாற்றியிருக்கிறது .ஆனால் தற்போது பாப்பாத்திக்கு ஏன் ஆதரவு அளிக்க வேண்டும்.ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள். பார்ப்பனபயங்கரவாதத்தை எதிர்க்கும் ம க இ க பார்ப்பன கட்சி ,பாப்பாத்தி செயாவுக்கு ஒட்டு போட சொல்பவர்கள் பெரியார் வாரிசுகளா?
தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங்கங்கள் கட்டுரை
தோழர் கலகம் எழுதியது.
அதன் சுட்டி
http://tinyurl.com/cnej5a
தவறான தகவலுக்கு வருந்துகிறேன்!!
இங்கே இருக்க வேண்டிய தோழர் விடுதலையின் பின்னூட்டம் கலகம் தளத்தில் இருக்கிறது….
………………………………………………………………………………………………
‘ஈழத்தமிழர்களின் துயரம் தமிழிண உணர்வாளர்களை அம்பலபடுத்தியது’
என்ற கட்டுரையில் இன்றைய ஈழ போராட்டத்தின் நிலமையை மதிமாறன் அவர்கள் வெளியிட்டிருந்தார் அதற்கு எதிவினையாக தோழர் பெரியார் தளத்தில் அதி அசுரன் என்பவர் ம.க.இ.கவை பற்றிய அவதூறு கட்டுரையை எழுதியுள்ளார்.
ம.க.இ.கவின் நடைமுறைகளை பார்த்தவன் என்பதாலும் ம.க.இ.கவின் சமரசமற்ற பார்ப்பனிய எதிர்ப்பு கொள்கையை ஆதரிப்பவன் என்பதாலும் இதற்கு பதில்களும் சில கேள்விகளும்.
முதலில் முத்துகுமர் மரண்த்தில் ம.க.இ.க வினர் ஆள் பிடிக்க போனார்கள் என்பதே உங்களுடைய வயிற்றெரிச்சலை காட்டுகிறது. இன்றைய இளைஞர்கள் ஈழத்தில் நமது உறவுகள் கொடுரமான முறையில் கொன்றொழிக்கபடுவது பற்றி அக்கறையில்லாமல் சினிமா, பொறுக்கி கலாச்சாரம் போன்ற சுயநலங்களில் மூழ்கி இருக்கும்போது அவர்களை தட்டி எழுப்ப தன்னுயிரையே நெருப்புக்கு தந்தாரே தியாகி முத்துகுமார் அவருடை இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வது ஆள் பிடிக்கும் வேலையா?
ம.க.இ.க.வின் பேனர்கள் முத்துக்குமரை கௌரவபடுத்து விதமாகத்தான் வந்தன ஏனென்றால் ம.க.இ.க. எங்கும் ஓட்டு பிச்சைக்காக் எவனையும் ஆதரித்து பொறுக்கி திங்கவில்லை. அதனால் ம.க.இ.க.வின் பேனர்களால் முத்துக்குமரின் தியாகத்துக்கு பெருமையே!
உழைக்கும் மக்கள் அதிகாரம் , சாதி, மதமற்ற அரசு, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் ஆகியவற்றுக்கு ஆள் பிடித்தால் பெ.தி.கவிற்கு என்ன நஷ்டம் வந்துவிடபோகிறாது தந்தை பெரியாரின் கொள்கைக்கு அதில் என்ன மாற்று கருத்து உள்ளது. ம.க.இ.க.வை பார்ப்பன பண்டார பரதேசி கூட்டம் முக்கிய எதிரியாகவே அறிவித்துள்ளது (கடந்த வருடம் பயங்கரவாதி இராமகோபால்ன் அறிக்கை விட்டுள்ளான்) இப்போது நீங்களும் அதே போன்ற கருத்தை கூறியுள்ளிர்கள் இப்போது யார் அக்ரகார அடுப்படியி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியும்.
அதே போல் ‘ஆ ஊனா’ முத்துகுமார் ஊர்வலத்தி கலந்து கொண்டதை குற்றமாக சொல்லுகிறீர்களே நீங்கள் எதற்கு கலந்து கொண்டீர்கள் முத்துகுமார் என்ன பெ.தி.க மெம்பரா? உங்களுக்கு முத்துகுமார் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு எங்களுக்கும் முக்கியம் என்னமோ தியாகி முத்துகுமாரை மொத்தமா குத்தகைக்கு எடுத்தது போல கதறுவதை இனி நிறுத்தி கொள்ளுங்கள் !
மற்றபடி பழைய கதையெல்லம் வேண்டாம் இப்போது போய் ஈழத்தில் ஆயுதம் எடுத்து போராடுவேண்டியது தானே எந்த் மாமி தடுத்தாள்? வாய் கிழிய பேசி உங்கள் பிழைப்புவாதத்தை மறைக்கமுடியாது! ஏதொ பார்ப்பன எதிர்ப்பு போராட்ட்தையாவது செய்கிறார்களே என்று தான் பெரியார் திக மீது நேரடி விமர்சனம் செய்யாமல் தோழமை சக்தியாக
நினைத்தோம் ஆனல் ஈழ பிரச்சன்யை சாக்காக வைத்து ஐய்யங்கார் மாமியிடம் சரணடைந்து விட்டபிறகு கடுமையான விமர்சனத்தை வைக்கிறோம்
//துரோகம் செய்த தி.மு.கவை தண்டிக்க நமக்குக்கிடைத்த ஒரு எளிய எதிர்வினைதான் இந்த அ.தி.மு.க ஆதரவுநிலை. அவ்வளவுதான்//
இது எவ்வளவு கேவலமான பிழைப்புவாதம் ,
போரை நடத்துவதே இந்தியாதான் அப்படிபட்ட இந்தியாவை எதிர்த்து தேர்தலை புறக்க்ணித்திருக்கவேண்டும். கொடூர இந்தியா அரசை அம்பலபடுத்தியிருக்கவேண்டும் அதை விட்டுவிட்டு
செயா மாமி காலி விழுந்துள்ளீர்கள்.
சரி செயா ஆட்சியில் வாயை திறந்தாலே சிறை தான் , அதெல்லாம் மறந்துவிட்டதா?
வரும் 5 வருடம் தமிழகத்தை செயா கையில் ஒப்படைக்க துணிந்த உங்களின் தமிழ்நாட்டு மக்களின் மீதான அக்கறை சிலிர்க்கவைக்கிறது.
//ரன்வீர் சேனையை எதிர்த்து களம் காண்கிறோம், இதோ வருகிறது செம்பாதை, நேபாளத்தைப் பாரீர் என்றெல்லாம் அகில இந்தியம், அகில உலக தேசியம் பேசும் ம.க.இ.க தோழர்கள் ஈழச்சிக்கலுக்காக பீகாரில், ஜார்கண்ட்டில், சட்டீஸ்கரில், ஆந்திராவில் ஏதாவது ஒரு கண்டனக் கூட்டமாவது நடத்தினார்களா?
படித்துறைப் பாண்டி கணக்கா நேபாளம் பற்றி பீலா விட்டுத் திரிகிறார்களே மகஇக வினர். அந்த நேபாளத்தில் ஈழத்தமிழினப் படுகொலையைக் கண்டித்து ஒரு போஸ்டராவது உண்டா? //
ம.க.இகவினர் என்றைக்காவது பீகாரில், ஜார்கண்டில், ஆந்திரத்தில் செயல் படுகிறோம் என்று எப்போது சொன்னார்கள்
ஆதார இருக்கிறதா? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கள் அவதூறு என்று ஆன பின்பு பொய்யாவது மொய்யாவது…
நேபாளத்தில் போஸ்டர் ஒட்டுவது என்ற விதண்டாவத
கேள்வி எழுப்புகிறீர்களே பதிலுக்கு நாமும் தமிழ்நாட்டின் தாழ்த்தப்பட்டோர் பிரச்சனைக்காக ஈழத்தில் போஸ்டர் ஒட்டினீர்களா என்று கேள்வி கேட்கமுடியும். ஆனால் அது அறிவு வளர்ச்சிக்கு உதவாது !
‘கட்டிலில் கவுந்தடிச்சு படுத்துகொண்டிருப்பவர்களுக்கு இதெல்லாம் புரியாது”
சிறு பிள்ளை வெள்ளாமை வீடு வந்து சேராது…
……………………………………………………………………………………….
போன தேர்தலில் மதச்சார்பற்ற (!!) காங்கிரசின் வேட்பாளர் ‘மணி சங்கர்’ அய்யர் ஐ பெரியாரின் பேரால் ஆதரித்த பெதிக தோழர்களே!
இந்தத் தேர்தலில் ‘அய்யங்கார்’ மாமிக்கு ஆதரவு திரட்டுவதுதான் கொள்கைத் தெளிவா?
அய்யரைத் தோற்கடிக்க அய்யங்காருடன் கூட்டு சேர்ந்து கொண்டு பெரியார் பேரைக் கொச்சைப்படுத்தும் வேலை பார்த்துக்கொண்டு
இனிமேலும் நீங்கள் பார்ப்பன எதிர்ப்பு என்று பேச முடியுமா?
பெரியார் பெயரைத் தயவு செய்து பயன்படுத்தி அந்தப் போராட்டவீரனைக் கொச்சைப்படுத்தாதீர்கள்.
பெரியார் பித்தன்
அய்யா அதி அசுரன் அவர்களே!
இதே பதிவில் நான் இட்டிருந்த பின்னூட்டம் ஒன்றை
(அதாவது //அதி அசுரன் அய்யா அவர்களே,
கீழ்க்கண்ட குற்றச்சாடுக்களுடன் சேர்த்து 15 கேள்விகளால் மாவீரன் நெடுமாறனைத் துளைத்தெடுத்தது பெ.தி.க.தான்.// எனத் தொடங்கும் பின்னூட்டம்)
உங்கள் பதிவிலும் நான் இட்டிருந்தேன். அதனை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்வது நேர்மையா?
அல்லது அதற்குக் காரணம், அக்கேள்விகளை எதிர்கொள்ள இயலாத அரசியல் ஓட்டாண்டித்தனமா?
பாப்பாத்தியோடு கூட்டு சேந்த உடனேயே அரசியல் நேர்மையைக் கூட கைகழுவ ஆரம்பித்து விட்டீங்களா?
–பெரியார்பித்தன்
//ம.க.இகவினர் என்றைக்காவது பீகாரில், ஜார்கண்டில், ஆந்திரத்தில் செயல் படுகிறோம் என்று எப்போது சொன்னார்கள்
ஆதார இருக்கிறதா? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கள்//
புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2009 இதழில் தான் மகஇக அப்படி பந்தா பண்ணியுள்ளது. socml என்பது தானே உங்கள் ஒரிஜினல் பெயர். அதாவது மாநில அமைப்புக் கமிட்டி என்பது. அப்படியானால் உங்கள் அகில இந்தியக் கமிட்டி என்று ஒன்று இருக்கிறது என்பதைத் தானே சொல்ல வருகிறீர்கள். அந்த அகில இந்தியக் கமிட்டி என்ன செய்கிறது அகில இந்தியாவில்? அல்லது யாரை எமாற்ற மாநில அமைப்புக் கமிட்டி என வைத்துள்ளீர்கள்?
அதி அசுரன் அவர்களே!
நீங்கள் சொல்வது போல
“முதலமைச்சர் கருணாநிதி அவர்கள், புலிகள் சகோதரயுத்தம் நடத்துகிறார்கள் – பிரபாகரன் சர்வாதிகாரி- அவர் ஒரு தீவிரவாதி என்று வாந்தி எடுத்து வருகிறார்” என்பது உண்மைதான்.
ஆனால் நீங்கள் இப்போது ஆதரித்துக் கொண்டிருக்கும் புர்ரச்சித் தலைவி பிரபாகரனை என்ன போராளி என்றா சொல்கிறார்? அவரும் பிரபாகரனை ‘பயங்கரவாதி’ என்றுதானே சொல்கிறார்?
அதிஅசுரன் இதனை வெளியிடாது இருட்டடிப்பு செய்வார் என்பதால் இங்கு பின்னூட்டமிடுகிறேன்.
–பெரியார் பித்தன்
///////////விடுதலை சொல்வதென்னவென்றால்:
1:54 பிற்பகல் இல் ஏப்ரல் 24, 2009 | பதில்
மேலே நான் வெளியிட்டுள்ள பின்னூட்டத்தை தோழர் மதிமாறன் தளத்தில் நேற்று வெளியிட்டிருந்தேன் அவர் ஏனோ வெளியிடவில்லை அதனால் இங்கு வெளியிட்டுள்ளேன்.////////////////
தோழர் விடுதலை,
தோழர் மதிமாறனுக்கு பெ.தி.க.விடம் வாங்கிக்கட்டிக்கொண்டது போதவில்லை என்று கருதுகிறேன். பின்னூட்டங்களை போடத் தயங்குகிற அவரது நிலையை வைத்து பார்த்தாலே எளிதில் புரிகிறது.
ஜெயலலிதா, கருணாநிதி என்று ஓட்டுப்பொறுக்கிகளை மாறிமாறி தேர்தலுக்குத் தேர்தல் சொறிந்துவிட்டு(ஆனால் தேர்தலில் பங்கெடுக்காமல்…) பிழைப்புவாத அரசியல் நடத்தும் தி.க., பெ.தி.க., யோக்கியர்கள் தோழர் மதிமாறனைக் கேள்வி கேட்கும் அருகதையற்றவர்கள்.
இவர்கள் அ.தி.முக. அணியை ஆதரிப்பது ஈழ நிலைப்பாடுகளிலிருந்து அல்ல. இவரது பங்காளியான வீரமணி கருணாநிதியை ஆதரிப்பதால் அவனுக்கு எதிரான நிலைப்பாடு கொள்ள வேண்டிய நிலையில்தான் இவர்கள் ஜெயாமாமியை ஆதரிக்கிறார்கள். இதற்கு பெரியாரியல் ரீதியிலான விளக்கமெல்லாம் கொடுத்துவருவது, நம்மையும் பெ.தி.க.வின் நேர்மையான ஊழியர்களையும் தோழர் மதிமாறன் போன்ற தீவிரமான ஆதரவாளர்களையும் ஏமாற்றத்தான்.
ஈழத்தில் நடைபெற்று வரும் இன அழிப்பு போர் குறித்து இந்து நாளேடு வெளியிடும் மோசடியான செய்திகளைக் கண்டித்து பெ.தி.க. தோழர்கள் கோவையிலும் ஈரோட்டிலும் போராட்டம் நடத்தியபோது, அந்த நியாயமான போராட்டத்தைக் கண்டித்து சி.பி.எம். என்கிற போலி கம்யூனிச நிறுவணத்தின் செய்தி ஏடான தீக்கதிர் தலையங்கம் எழுதி பெ.தி.க.வின் போராட்டத்தைக் கண்டித்தது.
பார்ப்பனக் கொழுப்போடு ஈழம் குறித்து செய்திகளை வெளியிட்டு வரும் சிங்கள அடிவருடிக் கூட்டமான இந்துராம், சோ, மதன் போன்றோருடைய கருத்தில் சிறிதும் பிறழாத பார்வை கொண்டவர்கள்தான் சி.பி.எம். என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இருப்பினும் பெ.தி.க.வின் ஈழ நிலைப்பாடும் கருணாநிதிக்கு மாற்றாக ஜெயாவையும் காங்கிரசின் துரோகத்துக்கு மாற்றாக பார்ப்பன பயங்கரவாத பா.ஜ.க.வையும் ஆதரித்து பெ.தி.க. செய்துவரும் பிரச்சாரங்களும் சி.பி.எம். கட்சியின் மோசடியான நிலைப்பாட்டைப் போன்றதுதான்.
ம.க.இ.க.வின் பார்ப்பனிய / ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை கருத்து கூறுவதற்கும் விமர்சிப்பதற்கும் பெ.தி.க.வுக்கு உரிமை உண்டு. அதனை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வதினால்தான் கடைசியாக வெளிவந்த விடுதலை ராசேந்திரனின் அவதூறுகள் வரை அனைத்திற்கும் எமது தோழர்கள் கருத்தியல் ரீதியிலான எதிர்விணையைப் பதிந்து வருகின்றனர். அந்த பதில்கள் எதையும் முறையாகப் பரிசீலிக்காமல் அல்லது அறவே புறக்கணிக்கும் நடைமுறையோடு தொடர்ந்து தமது அவதூறுகளை பெ.தி.க. செய்துவருகிறது.
நான் மேலே குறிப்பிட்டது போல ம.க.இ.க.வை விமர்சிக்க பெ.தி.க.வுக்கு உரிமையுண்டேயொழிய எமது பார்ப்பன எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தரச்சான்றிதழ் வழங்குவதற்கு பெ.தி.க.விற்கு எந்த அருகதையுமில்லை. பார்ப்பன பயங்கரவாதிகளுல் முக்கியமானவரான ஜெயலலிதாவை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு எமது பார்ப்பன எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்வியெழுப்ப ஏதேனும் தகுதியிருக்கிறதா என்று பெ.தி.க.வின் ஊழியர்கள் யோசித்துப் பார்க்கவேண்டும். அதி அசுரன் போன்ற மண்டைவீங்கிகளின் அறிவு முதிர்ச்சியற்ற வெளிப்பாடுகளை தோழர் மதிமாறன் போன்றவர்கள் இனியாவது முறையாக மதிப்பிட்டு புரிந்துகொள்ளவேண்டும்.
தோழர் மதிமாறனை விமர்சிக்க அதிஅசுரனுக்கோ அல்லது பெ.தி.க.வின் சார்பான வேறெவருக்கோ அருகதையில்லை என்பதை மிகவும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏகலைவன்
Comedy!!! 🙂 🙂
***
Ofcourse its not about the post and I assume anyone can post anything here, hey!