‘பாபா’ ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு விரதமும், பானுமதியின் வறுமை ஒழிப்புப் பாடலும்
ஊழலுக்கு எதிரான பாபாராம்தேவ் உண்ணாவிரதம் பாராட்டுக்குரியதுதானே?
-அப்துல்காதர், திருநெல்வேலி.
எம்.ஜி.ஆர். நடிந்து, இயக்கிய நாடோடி மன்னன் திரைப்படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல், ‘காடு வெளைஞ்சென்ன மச்சா(ன்), நமக்கு கையும், காலும்தானே மிச்சம்’ அதாவது விவசாயம் எல்லா நல்லதான் நடக்குது, ஆனால் விவசாயிதான் பட்டினியா கிடக்கிறான், என்பதை மிகத் துல்லியமாக சொன்ன வரி.
படத்தில் இந்த வரிய பாடுகிற பானுமதி காதுல ரெண்டு தங்க லோலாக்கு, மூக்குத்தி அதுக்கு கீழ ஒரு தங்கத் தொங்கட்டான், கழுத்துல நெக்லசு, தங்கம் ஆரம், தங்க வளையல், அதுக்கு மேல ரெண்டு தங்க கைப்புடி, தங்க ஒட்டியானம் இதையெல்லாம் போட்டுக்கிட்டு அந்தம்மா, பாடுவாங்க, ‘காடு வெளைஞ்சென்ன மச்சா(ன்), நமக்கு கையும், காலும்தானே மிச்சம்’ அப்படின்னு.
பலருக்கு வாய் முற்போக்காக பேசும், வாழ்க்கை அதற்கு நேர் எதிரா இருக்கும். அடுத்தவர்களின் ஊழல், ஜாதிவெறி, பகட்டு, மோசடி இவைகளை சுட்டிக் காட்டுகிறவர்களே, அவைகளுக்கான நேர் எதிர் உதாரணமாக இருப்பார்கள்.
அதுபோல், ராம்தேவ் ஆச்சாரமும், கார்ப்பரேட் தனமும் கலந்து செய்த கலவை. அதாவது இந்துமதத்தையும், முதலாளித்துவத்தையும் மிக்சியில் போட்டு அரைத்த ஒரு கலவைதான் ராம்தேவ். இந்தக் கலவைதான் இன்றைய எல்லா சாமியார்களின் மூலதனம்.
மாட்டுக்கறியை சாப்பிடக்கூடாதுன்னு உபதேசிக்கிற, இந்த பசு நேசன்தான் மனிதக் கறியை மிக்சியில் போட்டு அரைத்து லேகியமாக விற்றார்.
யோக பயிற்சி எடுப்பவர்ளுக்கு தந்த ஆயுர் வேத லேகியத்தில், மாடு, மனித எலும்புத்தூள்களை கலப்படம் செய்து ஊழல் புரிந்தவர்தான் இந்த அக்மார்க் அவதாரப் புருசன் ராம்தேவ். இதை சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பிருந்தா கரத் போன்றவர்கள் அம்பலப்படுத்தியிருக்கிறா்கள்.
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் மாறி, மாறி ஊழல் குற்றச்சாட்களை அள்ளி விசுவதைப்போல், ராம்தேவின் ஊழல் எதிர்ப்பு, பிஜேபி,காங்கிரசைப் பார்த்து ஊழல் கட்சி என்று சொல்வதைப்போல்தான். அதாவது ஒரு கேவலம், கழிசடையை குற்றம் சொல்வதுபோல்.
இவர்களின் ஊழல் எதிர்ப்பு, நகைக்கடை மாடல் போல் இருந்துக் கொண்டு வறுமையால் வாடுவதுபோல் பாடுன பானுமதி பாட்டு மாதிரி வேடிக்கையானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட.
*
திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூன் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.
தொடர்புடையவை:
மாட்றவரைக்கும் சாமியார் மாட்டிக்கிட்டா போலிச்சாமியாரா?
ஊதாரி ஓஷோவும் – நரமாமிச மோடியும்
சாருநிவேதிதா சாமியாராகி விட்டாரா?
‘கதவைத் திற’-பக்தர்களுக்கு, ‘கதவை மூடு’-நடிகைகளுக்கு-இளமைத்துள்ளும் ஆன்மீக அருள் ஒளி காஞ்சி மகா ஸ்வாமிகளின் 116 ஜெயந்தி. இவுரு ரொம்ப… நல்லவரு… ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா? பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு ! மாட்றவரைக்கும் சாமியார் மாட்டிக்கிட்டா போலிச்சாமியாரா? துறவிகள்
indha punniavangalai tholurikavittal,idhu mattum alla innum atagasam seivargal.nandri madivanan
அட்டகாசம் போங்கள்…சரியான செருப்படி சாமியாருக்கும்…அவன் அடிவருடிகளுக்கும்…தொடரட்டும்.