சோசலிச ரஷ்யாவின் வீழ்ச்சியும் கடாபி படுகொலையும்

கடாபி படுகொலை செய்யப்பட்டிருக்கிறாரே?

ஜான்சன், நெல்லை.

மவ்மார் அல் கடாபி கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

ஆனால். பாலைவனப் பகுதியில் புதைக்கப்பட்டதோ அமெரிக்க எதிர்ப்பு.

‘முஸ்லிம் எல்லாம் ஒத்துமையா இருப்பாங்க தெரியுமா?’ என்பது பச்சைப் பொய் என்று ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய நாடுகள் நிரூபித்து வருகிறன்றன.

இஸ்லாமிய மதக் கருத்துக்களுக்கு எதிராக ஒரு இஸ்லாமியர் கருத்துக் கூறினால், அவரை எதிர்ப்பதிலும், ஒழித்துக் கட்டுவதிலும்தான் இஸ்லாமிய நாடுகளும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்களே தவிர, ஏகாதிபத்திய எதிர்ப்பிலோ, இஸ்லாத்திற்கு எதிரான இந்துமதவெறி எதிர்ப்பிலும் மதசார்ற்றவர்களோடு இணைந்து செயலாற்றுதில் அந்த ஒற்றுமையை காட்டமாட்டார்கள்.

அப்பாவி பெண்ணை ‘ஒழுக்கக் கெடு’ என்று குற்றம் சாட்டி, கல் எறிந்து கொன்று தங்கள் வீரத்தை காட்டுகிற சவூதி அரேபிய மாவீர்கள்தான், இஸ்லாமிய நாடுகளை அமெரிக்காவிற்கு காட்டிக்கொடுக்கிற சுப்பிரமணிய சுவாமிகளாக இருக்கிறார்கள்.

அமெரிக்கா போன்ற ஏகாபதிபத்திய நாடுகளை போலவே, இஸ்லாமிய நாடுகளும், ‘கம்யுனிசம் மிக மோசமானது’ என்ற கருத்துக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

உண்மையில், ரஷ்யாவில் ஏற்பட்ட சோசலிசத்திற்கு எதிரான முதலாளித்துத்தின் மாற்றம், ரஷ்யாவை விட, சர்வதேச அரசியலில் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளானது, அரபு நாடுகள்தான்.

ரஷ்யாவில் சோசலிச ஆட்சி நடந்தவரை, பெட்ரோலுக்காக அமெரிக்க மற்றும் அய்ரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள், அரபு நாடுகளை தாக்கமால் இருந்ததன. ஒட்டுமொத்த ஏகாபதிபத்திய நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்தது ஒற்றை நாடான சோசலிச ரஷ்யா.

சோசலித்தின் வீழ்ச்சிதான், அரபு நாடுகளின் மீது ஏகாபத்திய நாடுகள் நடத்தும் தாக்குதலுக்குக் காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சோசலித்தின் வீழ்ச்சியிலிருந்துதான் அரபு நாடுகளின் அழிவும் ஆரம்பமானது.

இங்கும்கூட மதசார்ப்பற்ற முற்போக்காளர்களின் வீழ்ச்சி, இஸ்லாமியர்களின் வீழ்ச்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மதசார்ப்பற்ற முற்போக்காளர்கள் வீழ்ந்தால், மோடிகள்தான் முளைப்பார்கள்.

இஸ்லாமிய தீவிரவாதம், தேர்தல் சந்தர்ப்பவாத அரசியலில் இருந்து விலகி மதசார்ப்பற்ற முற்போக்காளர்களோடு இணைந்தால்தான் இந்துமதவெறி தாக்குதலில் இருந்து இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். இல்லையேல், இஸ்லாமிய பெயரையே தீவிரவாதத்தின் குறியீடாக மாற்றிவிடுவார்கள்.

எவ்வளவு தீவிரமான இந்து அபிமானியாக. அமெரிக்க அடிமையாக இருந்தாலும், ‘அப்துல் கலாம்’ என்று பெயர் வைத்திருந்தாலே போதும் அவமானப்படுத்துவதற்கு.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் 2011 நவம்பர் மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

அமெரிக்காவின் ராஜகுரு போப்பும், கிறிஸ்துவ தமிழ்த் தேசியவாதிகளின் மதவெறியும், ஈழமக்களின் துயரமும்

ஒபாமா; அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளைமாளிகையில் ஓர் கறுப்பு புஷ்

5 thoughts on “சோசலிச ரஷ்யாவின் வீழ்ச்சியும் கடாபி படுகொலையும்

  1. இங்கும்கூட மதசார்ப்பற்ற முற்போக்காளர்களின் வீழ்ச்சி, இஸ்லாமியர்களின் வீழ்ச்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மதசார்ப்பற்ற முற்போக்காளர்கள் வீழ்ந்தால், மோடிகள்தான் முளைப்பார்கள்.

    எத்தனை தடவை சொன்னாலும் இஸ்லாமியர்களுக்கு புரியவேதேயில்லை.தாம் மட்டும் முன்னேறி விடுவோம் என்பது போல..

  2. எவ்வளவு தீவிரமான இந்து அபிமானியாக. அமெரிக்க அடிமையாக இருந்தாலும், ‘அப்துல் கலாம்’ என்று பெயர் வைத்திருந்தாலே போதும் அவமானப்படுத்துவதற்கு.///

    Nethi adi ithu….

Leave a Reply

%d bloggers like this: