வடிவேலு பாணி தமிழ்த் தேசியமும்; புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தியாகமும்

நம்புங்கள் காவல் துறை மக்களின் நண்பன்

‘சமச்சீர் கல்வி எதிர்ப்பு, தமிழ்ப்புத்தாண்டு மாற்றம், அரசு சார்பாக பார்ப்பன முறைப்படி சமஸ்கிருத மந்திரம் ஓதி திருமணங்கள் நடத்தி வைப்பது’ என்பது போன்ற அதிமுக அரசின் தமிழ் விரோத, பார்ப்பன ஆதரவு போக்கை கண்டித்து போராடாமல்,

இலங்கை தமிழர்களுக்கான போராட்டம், அணு உலை எதிர்ப்பு போன்ற மிக முக்கியமான போராட்டங்களையும்கூட, முதல்வர் ஜெயலலிதா ஆதரவு போராட்டமாக மாற்றி நீர்த்து போக செய்தும்,

தமிழக அரசை எதிர்த்து நேரடியாக போராட தயங்கி தந்திரமாக, வேறு வேறு பிரச்சினைகளை எடுத்து தீவிரமாக தமிழர்களை குழப்பி வருகிற, அரசு சார்பு பெற்ற இயக்கங்கள், அமைப்புகள்; வின்னர் பட வடிவேலு பாணியில் வீரமாக ‘போராடி’ வரும் சூழலில்,

ஜெயலலிதா அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தொடர்ந்து சமரசமின்றி போராடி வருகிற புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்களுக்கு மீண்டும் நமது நன்றியையும், வணக்கத்தையும் தெரவித்துக் கொள்வோம்.

தொடர்புடையவை:

நன்றியும் வணக்கமும்

கவுண்டமணியும் கம்யூனிஸ்ட்டுகளும்

‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க?’-அது அவுங்க தலவிதி

உலகக்கோப்பை கிரிக்கெட்; கவுண்டமணி, செந்திலை நினைவூட்டுகிறது

சுந்தரராமசாமி நூல்கள் நாட்டுடமை-`நாராயணா, இந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலடா’

“அண்ணே நீங்க எவ்ளோ.. நல்லவரு…” கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு

‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்.. இவன் ரொம்ப… நல்லவன்’

2 thoughts on “வடிவேலு பாணி தமிழ்த் தேசியமும்; புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தியாகமும்

  1. மிக சரியான ஒப்பீடு… புமாஇமு இதனை தியாகம் என்று சொல்லி கொள்ள போவதில்லை… அவர்கள் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையாக இதனை செய்கின்றனர்.

    தமிழ் தேசியம் என சொல்லி கொண்டு, கருணாநிதியை மட்டுமே திட்டுவது சர்வரோக நிவாரணி என திரிபவர்கள் ஒரு நாளும் சமச்சீர் கல்வி, பார்ப்பன புத்தாண்டு போன்ற தமிழ், தமிழர் விரோத செயல்களை கண்டு கொள்ளாமல், இந்திய சேவை முடித்து தமிழ் தேசியம் பேசி பிழைத்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

%d