கமல் படத்தை விட ரஜினி படத்தைதான் மக்கள் விரும்புகிறார்கள், காரணம்..

உலக மகா நடிகருடன் ரஜினியும் கமலும்
off the record

கமல் எவ்வளவோ சிரமப்பட்டு நடிக்கிறார். ஆனால் எந்த சிரமமும் படாமல் கமல் படங்களை விட ரஜினியின் படங்களை மக்கள் விரும்புகிறார்கள்?

டி.ரமேஷ்சென்னை.

அதற்குக் காரணம் இருக்கிறது. கமல் தனது படங்களில் தன்னுடைய ‘ஆண்மை’யை பார்வையாளர்களுக்கு “நிரூபிப்பது”போல் காட்சிகளை வைப்பதுதான். ஜட்டி போடுவது, ஜட்டியை கழட்டுவது போன்றவகளை வலிந்து காட்சியாக்குவது.

சிட்டுக்குருவி லேகியத்திற்கான விளம்பரப்படம் மாதிரியான அவரின் உடலுறவு காட்சிகள்தான், குழந்தைகள் உட்பட குடுபம்பத்தோடு அவரின் படங்களை பார்ப்பதற்கு நடுத்தரவர்க்கத்திற்கு பெரும் தடையாக இருக்கிறது.

நடுத்தரவர்க்கதில் குடும்பத்தோடு சினிமாவிற்கு போவதை தீர்மானிப்பவன் ஆண். அவன் இப்படிப்பட்ட காட்சிகளை தன் மனைவி பார்ப்பதைக்கூட விரும்பமாட்டான்.

கதாசிரியர் ஆர்.கே.நாரயணனிடம் “நீங்கள் ஏன் உங்கள் கதைகளில் செக்ஸ் எழுதுவதில்லை” என்று கேட்டபோது-அவர் சொன்னார், “என் கதாநாயகனும், நாயகியும் தனியறையில் இருக்கும்போது நான் அந்த அறையை விட்டு வெளியே வந்து விடுவேன்.” இந்த நாகரீகம் கேமராவுக்கும் பொருந்தும்.

திரைப்படத்தில்,  யாரும் தொட அஞ்சுகிற காந்தி கொலை வழக்கை, மிகச் சிறந்த தொழில் நுட்பத்தோடு, துணிச்சலோடு ‘காந்தியை கொன்றது பார்ப்பனிய இந்து அமைப்புதான். பிரிவினையின் போது காந்தி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டதுதான் அந்தக் கொலைக்குக் காரணம்’ என்ற உண்மையை சொன்ன படம்‘ஹேராம்’.

கமல்ஹாசனின் இயக்கத்தில் வந்த முதல் படம் அது. இந்தியாவின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று என்று‘ஹேராமை’ உறுதியாகச் சொல்லலாம். ஆனால் அந்தப் படம் படுதோல்வி அடைந்தற்கான காரணங்களில் ஒரு முக்கிய காரணம், கதைக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத உடலுறவு காட்சிகள்தான். சாகேத்ராமன் தனது இரு மனைவிகளிடமும் எப்படி விதவிதமாக உறவு கொள்கிறார் என்பது பார்வையாளர்களுக்கு தேவையற்ற ஒன்று.

கலவரம் நடந்து கொண்டிருக்கிற கல்கத்தா வீதிகளில் தப்பி, வீட்டில் தனியாக இருக்கிற தன் மனைவியை  பல மாதங்களுக்குப் பிறகு பார்க்க வருகிற சாகேத்ராமன், கலவரத்தில் இருந்து வீட்டின் கதவுக்கு வந்த  அடுத்த வினாடியே ரொமாண்டிக்கில் ஈடுபடுவது ஒரு மனநோயாகவே இருக்கிறது.

நகரம் முழுக்க கலவரம் பரவி கிடக்கும் போது, கணவனின் மனது வீட்டில் தனியாக இருக்கிற மனைவியின் பாதுகாப்பு குறித்துதான் யோசிக்குமே தவிர, உடலுறவு குறித்தல்ல.

சிறந்த நடிகரும், மோசமான இயக்குரும்,கமல்ஹாசனின் ரசிகருமான நடிகர் நாசர், இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியின் போது தனது நண்பர்களிடம் இப்படி சொல்லிக் கொண்டு வந்தார், “செக்ஸ் எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறதுதாங்க. யாதார்த்தமா அதை காண்பிக்கிறதுல என்ன தப்பு?”

மலம் கழிப்பதுக் கூட எல்லோரும் செய்யிறதுதான். அதையும் யதார்த்தமா காட்லாமே? கமல்ஹாசன் கக்குஸ் போறத தத்ரூபமான காட்சியா வைச்சா, அதுக்கப்புறம் அவருடைய காதாநாயக அந்தஸ்து எவ்வளவுமுக்குனாலும் திரும்பி வராது.

ரஜினி தன் படத்துல ஸ்டைலா சிகெரட்டை போடுவாரு. ஆனா, ஸ்டைலா ஜட்டி போட மாட்டாரு. அதனால்தான் அவரு படம் பைத்தியக்காரத்தனமா இருந்தாக்கூட குழந்தைகள் உட்பட குடும்பத்தோடு அனைவரும் விரும்பி பாக்கிறாங்க.

*

2007 ஆம் ஆண்டு எழுதியது..

வழக்கறிஞர் கு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு மாத இதழுக்ககாக செப்டம்பர் 2007 ஆம் ஆண்டு எழுதியது.

தொடர்புடையது:

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?

 

வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து

தொடர்புக்கு:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 337384

19 thoughts on “கமல் படத்தை விட ரஜினி படத்தைதான் மக்கள் விரும்புகிறார்கள், காரணம்..

 1. நீங்கள் குறிப்பிட்ட சில குறைகள் இருந்தாலும் கமல் ரஜினியை விட சிறந்த நடிகர் என்பது உண்மை .கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவுவாதி என்பதால் கமலை எனக்குப் பிடிக்கும் .தசாவதாரம் படம் ரஜினி நடித்து இருந்தால் எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள் .

 2. கமல் படம் என்றாலே sex – over ரொமான்டிக் சீன் இருக்கும்… இதனாலே கமல் படங்களை மிகுதியானவர்கள் ரசித்து பார்ப்பதில்லை. கமலின் நடிப்பிற்கு குறைவில்லை. ஆனால் குடும்பத்துடன் பார்க்க முடிவதில்லை…

 3. Yes Kamal is good actor …………… he is not a rationalist.
  His daughters name in sanskrit (Sruthi),After 90’s he changed his spelling for his name as Kassan from Kasan (See Titles).
  His flims always spoke about muslims terror,Caste feelings eg;see unnai pol oruvan,viswaroopam trailer.

 4. Yes Kamal is good actor …………… he is not a rationalist.
  His daughters name in sanskrit (Sruthi),After 90′s he changed his spelling for his name as Kassan from Kasan (See Titles).
  His flims always spoke about muslims terror,Caste feelings eg;see unnai pol oruvan,viswaroopam trailer.

  Sorry that is AS Hassan from Kassan

 5. கடைசியாக கமல் படத்தில் முத்தக்காட்சி வந்தது விருமான்டியில், அது 2004. பின்பு வசூல்ராஜா குடும்பத்துடன் பார்க்கும் வண்ணம் இருந்தது. பின்னர் வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் கூட அப்படித்தான். உன்னைப்போல் ஒருவனில் கமலுக்கு ஜோடியே இல்லை. மன்மதன் அம்புவும் எந்த ரொமான்ஸும் இல்லை.

  ஆனால் ரஜினி படமான சந்திரமுகியில் ரெட்டை அர்த்த வசனம் ஓப்பனாக பல இடங்களில் பேசுவார்கள். சிவாஜியில் ச்ரேயா காட்டு காட்டு என காட்டியிருப்பார் பாடல்களில். குசேலனில் நயந்தாராக்கு ஒரு ஐட்டம் சாங்கே உண்டு, மழையில் ஆடுவடு போல இருக்கும்..எந்திரனில் சற்று ஓகே தான் என்றாலும் அதிலும் முத்தக்காட்சி இருக்கும்.

  ஆக ரஜினி படங்கள்தான் ‘ஒரு மாதிரி’ ஆகிக்கொண்டு வருகிறன, கமல் படங்கள் குடும்பத்துடன் பார்க்கும் வண்ணம் இருக்கின்றன.

 6. கமல் ரஜினியைவிட திறமையானவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதையும் தாண்டி ஏதோ ஒன்று ரஜினியிடம் இருக்கிறது.

 7. In acting He is the No 1. Respected Kamal Sir ah kurai solla Intha world la yarukum thaguthi illa. He is great . He is good . but i am not kamal fan.

 8. தனக்காக கதையை மாத்துறவர் ரஜனி கதைக்காக தன்னை மாத்துறவர் கமல் அவர்தான் சிறந்த நடிகர்

 9. ஒரு சிறந்த நடிகனது நோக்கம் ரசிகர்களை உருவாக்குவது அல்ல சிறந்த படைப்பை உருவாக்குவது அதுதான் கமல் செய்யும் வேலை

 10. கமல் சிறந்த நடிகர் என்பது உண்மை எல்லோருக்கும் தெரியும் ஆனால் ந‌ல்ல ம‌னிதர் என்று அதிகமாக பலபேர்க்கு தெரியாவில்லை ஏன்? ஒரு வேலை நெஜவாழ்க்கையில்லும் சிறப்பு நடித்தால்தான் அந்த பலபேர்க்கு தெரியும்மா

 11. கமல் சிறந்த நடிகர் என்பது உண்மை எல்லோருக்கும் தெரியும் ஆனால் ந‌ல்ல ம‌னிதர் என்று அதிகமாக பலபேர்க்கு தெரியாவில்லை ஏன்? ஒரு வேலை நெஜவாழ்க்கையில்லும் சிறப்பு நடித்தால்தான் அந்த பலபேர்க்கு தெரியும்மா…? கமல் சிறந்த நடிகர் என்பது உண்மை எல்லோருக்கும் தெரியும் ஆனால் ந‌ல்ல ம‌னிதர் மா…..?என்று அதிகமாக பலபேர்க்கு தெரியாவில்லை ஏன்? ஒரு வேலை நெஜவாழ்க்கையில்லும் சிறப்பு நடித்தால்தான் அந்த பலபேர்க்கு தெரியும்
  அவரை எவ்வளவு பேரு அவரை குறை சொன்னாலும் அவருடை வளர்ச்சிய யாராலும் தடுக்க முடியாது மேலும் மேலும் உயர்ந்து அவருடை ரசிகர்களையும் உயரத்திற்கு கொண்டு சொல்வார்,

 12. The answer is simple.Kamal tries to create scenes that he likes in his movies.He creates scenes that shows his talents and scene where he can self boast about himself.But whereas in rajini movies, rajini hard works to create scenes and dialogues that his fans will like.Every single word or mannerism is aimed towards pleasing his fans/audience.where as with kamal the scenes are kept to please himself and some pseudo tam bram intellectuals.

 13. கமல் பாவம் படம் எதுவும் இல்லாம அவரே கதை எழுதி நடிக்கிராரு சன்டிவியில ஏதாவது நாடகம் நடிக்க சான்ஸ் கேக்கலாமே

Leave a Reply

%d bloggers like this: