எல்லோருக்கும் நல்லவனாக இருக்க கடவுளால் கூட முடியாது..
ஏழை–பணக்கரான், உயர்ந்த ஜாதி–தாழ்ந்த ஜாதி எல்லோரும் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க முடியாதா?
–டி. அப்துல்ரசாக், திருவள்ளூர்.
பணக்காரர்களால்தான் ஏழைகள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். தாழ்ந்த ஜாதி ஆனதே உயர் ஜாதிக்காரர்களால்தான்.
பணக்காரர்களின் செல்வத்தை எடுத்துதான் ஏழைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உயர் ஜாதிக்காரர்களின் ஜாதி ஆணவத்தை ஒழித்தால்தான், தாழ்ந்த ஜாதி தன்மை ஒழியும். ஜாதியும் ஒழியும்.
யாருக்கும் இழப்பு ஏற்படாமல் எல்லோருக்கும் நன்மை செய்ய, கடவுளால் கூட முடியாது.
கடவுள் புலிக்கு நன்மை செய்தால் மானை கொன்றுதான் ஆக வேண்டும்; மானுக்கு நன்மை செய்தால் புலியை பட்டினி போட்டு சாகடித்துதான் தீர வேண்டும்.
*
2007 ஆம் ஆண்டு எழுதியது..
வழக்கறிஞர் கு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு மாத இதழுக்ககாக ஜூலை
2007 ஆம் ஆண்டு எழுதியது.
தொடர்புடையது:
திருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்
எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கின்றது
ஜெயேந்திரனா? பங்காருவா? ஜாதியா? வர்க்கமா?
தன்னைத்தானே சுரண்டிக் கொள்ளும் நடுத்தர வர்க்கம்
கர்ணன், துரியோதனன்-மார்க்ஸ், எங்கல்ஸ்; அடியாளும், நண்பனும்
தமிழன்; வர்க்க உணர்வும் – ஜாதி உணர்வும் கலந்து செய்த கலவை
வே. மதிமாறன் பதில்கள் புத்தகத்திலிருந்து
தொடர்புக்கு:
‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.
பேச: 9444 337384
தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
//கடவுள் புலிக்கு நன்மை செய்தால் மானை கொன்றுதான் ஆக வேண்டும்; மானுக்கு நன்மை செய்தால் புலியை பட்டினி போட்டு சாகடித்துதான் தீர வேண்டும்.//
சூப்பர் பாஸ். அருமை