விஸ்வரூபம் படத்தின் டிரைலரும் கவுண்டமணி வசனமும்

விஸ்வரூபம் திரைப்படத்தின் முதல் டிரைலரைப் பார்த்துவிட்டு நீங்கள் எழுதிய விமர்சனம் உண்மைதான் என்ற எண்ணத்தை, அதற்கடுத்து வந்த டிரைலர்களும் கமலஹாசன் பேட்டியும் ஏற்படுத்தியது.

உங்களுக்கு படத்தின் கதையை யாராவது முன்பே சொல்லிவிட்டார்களா? எப்படி எழுதினீர்கள்?

-சையது அலி.

கவுண்டமணி அடிக்கடி பேசுற வசனம், “மொச புடிக்கிற நாய் மூஞ்ச பாத்தா தெரியாதா ”.

அதுபோல் ஒரு படத்தோட டிரைலரை பார்த்த அந்தப் படத்தின் கதைய சொல்றது பெரிய விசயமா?

ஆனாலும் விஸ்வரூபம் படத்தின் முதல் டிரைலரை வழக்கு எண் 18/9 படத்தை பார்த்த  திரையரங்கில்தான் பார்த்தேன்.

முக்காடிட்ட கமல், அரபி வடிவத்தில் விஸ்வரூம், பின்னணியில் அமெரிக்கா, இதைத் தவிர வேறு ஒன்று இல்லை.

அதற்கு முன்பே, தினத்தந்தியில் வந்த விஸ்வரூபம் முதல் விளம்பரத்தை பார்த்தபோதே அந்தக் கதை இதுவாகத்தான் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தது.

காரணம், கமல்ஹாசனின் முந்தைய படமான ‘உன்னைப் போல் ஒருவன்’.

தொடர்புடையது:

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; யாருக்கு எதிராய்?

விஸ்வரூபம் வெளியீடு; பிரியாணி கிடைக்குமா?

9 thoughts on “விஸ்வரூபம் படத்தின் டிரைலரும் கவுண்டமணி வசனமும்

  1. உன்னைபோல் ஒருவன் நிச்சயம் விமர்சனத்துகுரிய படம் தான்..ஆனால் அதை வைத்துகொண்டு கமலை இந்துத்துவாதி என்று விமர்சிப்பதும் சரியில்லை…HEY RAM திரைப்படத்தில RSSன் கொடூரத்தை தோலுரித்து காட்டினாரே!

  2. i think you are so obsessed with your casteism.atleast kamal is ok in that sense but you are worst.

Leave a Reply

%d bloggers like this: