பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) உடல் தானமும் இஸ்லாமியர்களின் மதஉணர்வும்

20130726_160240சென்னை குளோபல் மருத்துவமனையில் 26-07-2013 அன்று முதல் சிகிச்சை முடிந்து, ‘நான் குணமாகிவிட்டேன்’ என்று மகிழ்ச்சியோடு பேராசிரியர் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டபோது, அவருடன் நான். செல்போனில் படம் எடுத்தது அவரின் மகன் சுரதா.

*

பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களின் மரணத்தை ஒட்டி அவர் உடல் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைப்பது என்ற அவரின் குடும்பத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், இஸ்லாமியர்களும் இஸ்லாமிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் நடந்து கொண்ட விதம், மிகுந்த மரியாதைக்குரியது.

‘எங்கள் தந்தை மருத்துவக் கல்லூரிக்கு தன் உடலை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார்’ என்று அவரின் மகன்கள் வளவனும் சுரதாவும் கேட்டுக் கொண்டதை சந்தேகிக்கமால் முழுமையாக நம்பி,

‘குடும்பத்தின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்’ என்று இஸ்லாமியர்கள் நடந்து கொண்ட விதமும் ‘எங்களுக்குத் தொழுகை நடத்துவதற்கு மட்டுமாவது அனுமதி கொடுங்கள்’ என்று கேட்டுக் கொண்ட முறையும் ‘இஸ்லாமியர்களிடம் ஜனநாயகம் என்பதே துளியும் இல்லை’ என்று அவதூறு பேசுகிற இஸ்லாமிய எதிர்ப்பு அறிவாளிகளை அம்பலப்படுத்தியது.

25 ஆண்டுகளாகப் பேராசிரியர் அப்துல்லாஹ் குடும்பத்து நண்பன், இதை நேரிலிருந்து பார்த்தவன், இந்தப் பிரச்சினைக்கு இடையில் பயணித்தவன் என்கிற முறையில் இதை நான் பதிவு செய்கிறேன்.

அண்ணாசாலையில் அமைந்த மெக்கா மசூதியில் ஆயிரக்கணக்காணவர்கள் கூடி நடத்திய சிறப்புத் தொழுகை மற்றும் இரங்கல் கூட்டத்தில், பேராசிரியர் அப்துல்லாஹ் குறித்துப் பேசியதும், அவருக்காகவும் அவரின் குடும்பத்தின் மன அமைதிக்காவும் அவர்கள், அல்லாவிடம் வேண்டிக் கொண்ட விதமும் எல்லையற்ற அன்பால் நிறைந்து வழிந்தது.

பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களுக்காக நடந்த அந்தத் தொழுகை அனுமதிக்கப்படாமல் இருந்திருந்தால், அங்கிருந்த இஸ்லாமியர்களின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதைப் புரிந்து கொள்வதாக இருந்தது, அன்பால் நிறைந்த அந்தத் தொழுகை.

தொடர்புடையவை:

விஸ்வரூபம் நான் சொன்னபடிதான் இருக்கிறதா? பார்த்துச் சொல்லுங்கள்

‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம்

58 thoughts on “பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) உடல் தானமும் இஸ்லாமியர்களின் மதஉணர்வும்

  1. மிக உணர்வு பூர்வ பதிவு .

    என்றென்றும்அன்புடன்
    *கிருஷ்ணமூர்த்தி*

  2. சஹோதரர் கிருஷ்ணமூர்த்தி உங்களை போல் தோழர்கள் இருக்கும் வரையில் நாம் என்றும் அண்ணன் தம்பிகள்தான்

  3. இஸ்லாமியர் எப்போது மதிக்க தக்கவர்கள் அரசியல்வாதிகளின் சாக்கடை அரசியலுக்காக பரப்பட்ட துவேஷம் இஸ்ஸலாமியர் தீவிரவாதிகள் என்கிற அவதூரு.

  4. //பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களின் மரணத்தை ஒட்டி அவர் உடல் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைப்பது என்ற அவரின் குடும்பத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், இஸ்லாமியர்களும் இஸ்லாமிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் நடந்து கொண்ட விதம், மிகுந்த மரியாதைக்குரியது.//

    மதிமாறனின் அதிகமான கருத்துகளில் உடன்படாதவன் நான். இந்த வரிகள் பெரியார்தாசன் அவர்களுக்கு மரியாதை அளித்ததாகவே எண்ண வைத்தது. மீண்டும் நன்றி.

  5. //பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களின்…//
    —–என்று நீங்கள் பதிவை மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் வித்தியாசமாக துவக்கியதை வைத்தே… ‘இனி வரும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையும் நேர்மையும் பின்னிப்பிணைந்து கிடக்கும்’ என்ற புரிதல் தொற்றிக்கொண்டவனாக தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். உளப்பூர்வமான இடுகை தந்தமைக்கு மனநிறைவுடன் தங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் சகோ.மதிமாறன்.

  6. //பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களின்…//
    —–என்று நீங்கள் பதிவை மற்றவர்களிடம் இருந்து முற்றிலும் வித்தியாசமாக துவக்கியதை வைத்தே… ‘இனி வரும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையும் நேர்மையும் பின்னிப்பிணைந்து கிடக்கும்’ என்ற புரிதல் தொற்றிக்கொண்டவனாக தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். உளப்பூர்வமான இடுகை தந்தமைக்கு மனநிறைவுடன் தங்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் சகோ.மதிமாறன்.

  7. பதிவுக்கு நன்றி மதிமாறன்.
    சில நண்பர்கள் பேரா.அப்துல்லாஹ் அவர்களின் மரணத்தில் கூட இஸ்லாமிய வெறுப்பைக் காட்டி பதிவு போட்டார்கள் இப்படிப்பட்டவர்களை ஒரு காலத்திலும் திருந்தப் போவதில்லை.
    தங்களது இந்த பதிவை ஒரு தளத்தில் பின்னுடமாக போட்டுள்ளேன் நாணயமானவராக இருந்தால் பின்னூடம் வரும் . பார்போம். தாங்கள் பெருந்தன்மையுடன் அனுமதிப்பீர்கள் என்று நம்பி உபயயோகபடுத்தியுள்ளேன். அநத தொழுகையை விடியோவாக எடுத்திருந்தால் லிங்க் தரவும்.

    நன்றி மதிமாறன்.

    மை.செய்யது
    துபாய்

  8. உயர்வான விளக்கம் தந்தமைக்கு நன்றி .

    மருத்துவர் விரும்பி வந்த மார்க்கம்
    மருத்துவரின் குடும்ப மக்களின் மனதை நோகடிக்க யார் விரும்புவார் !
    முஸ்லிமாக ஒருவர் இறந்தார் .இதனை இறைவன் அறிவான் . அவருக்கு இஸ்லாமிய முறைப்படி ஜனாசா தொழுகை நடத்தப்பட்டு விட்டது . அந்த அளவுக்கு நம்மால் முடிந்ததனை இறைவன் அருளால் செய்தோம். .அதன் பிறகு இறந்த உடலுக்கு நம்மால் பாதகம் வராமல் குடும்பத்தாரின் விருப்பதற்கு இணங்க செயல்படுத்தினோம் .எவராவது விருப்பத்தை உயில் எழுதி கொடுத்திருந்தால் நாம் அதன்ப்படி செய்திருக்கலாம் . இம்மாதிரி நிலை யாருக்கும் வர யாரும் நினைக்க மாட்டார்கள் .அவரே நினைத்திருக்க மாட்டார் . இதனால் இறந்தவர் உடலை நாம் பிரச்சனைக்கு உள்ளதாக ஆக்குவது நாம் செய்வது சிறப்பாக ஆக முடியாது . அனைத்தும் அறிந்தவன் இறைவன் . நமது கடமை இறந்தவருக்காக ‘துவா’ வேண்டுதல் செய்வதுதான் .
    அவருடன் அவர் செய்த நன்மைகள் உடன் போகும் அதனை இறைவன் ஏற்றுக் கொள்வான் .
    ————————————————–
    ‘குடும்பத்தின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்’ என்று இஸ்லாமியர்கள் நடந்து கொண்ட விதமும் ‘எங்களுக்கு தொழுகை நடத்துவதற்கு மட்டுமாவது அனுமதி கொடுங்கள்’ என்று கேட்டுக் கொண்ட முறையும் ‘இஸ்லாமியர்களிடம் ஜனநாயகம் என்பதே துளியும் இல்லை’ என்று அவதூறு பேசுகிற இஸ்லாமிய எதிர்ப்பு அறிவாளிகளை அம்பலப்படுத்தியது.
    ‘அண்ணாசாலையில் அமைந்த மெக்கா மசூதியில் ஆயிரக்கணக்காணவர்கள் கூடி நடத்திய சிறப்பு தொழுகை மற்றும் இரங்கல் கூட்டத்தில், பேராசிரியர் அப்துல்லாஹ் குறித்து பேசியதும், அவருக்காகவும் அவரின் குடும்பத்தின் மன அமைதிக்காவும் அவர்கள், அல்லாவிடம் வேண்டிக் கொண்ட விதமும் எல்லையற்ற அன்பால் நிறைந்து வழிந்தது.

    பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களுக்காக நடந்த அந்த தொழுகை அனுமதிக்கப்படாமல் இருந்திருந்தால், அங்கிருந்த இஸ்லாமியர்களின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்வதாக இருந்தது, அன்பால் நிறைந்த அந்த தொழுகை.’ அருமையான வரிகள்

  9. ஒரு குழப்பமான சூழலில் உண்மையை உரத்துச் சொன்ன உங்கள் நேர்மையான எழுத்துக்களுக்கு ஒரு சல்யூட் சகோதரரே!

  10. அன்னாரின் இலட்சியங்கள் நிறைவேரட்டும், அல்லாஹ் அவரை சுவர்க்கத்தில் நல்லடியார் கூட்டத்தில் இடமளிப்பானாக, இந்த உலகம் உள்ளளவும் அன்னாரின் புகழ் நிலைத்து நிற்க்கவும், அவரின் குடும்பத்தாருக்கு அன்னாரின் பேரிழப்பை போருத்துக் கொள்ளும் மனநிலையை அருள எல்லாம் வல்லஅல்லாஹ்வை இறைஞ்சுகிரேன்.

  11. முகமது மாறன் அவர்களே, மன்னிக்கவும் மதிமாறன் அவர்களே . . . பெரியார்தாசனுக்கு பிறகு நாங்கள் உங்களைத்தான் நம்பி இருந்தோம், இருக்கிறோம், இருக்க ஆசைப்படுகிறோம்.
    கப்பல் பாதி தரையை தட்டிவிட்டது போல் இருப்பதால், எங்களுக்குள் ஒரு சின்ன பதட்டம். எங்களுக்கு என்று இப்போது இருக்கும் ஒரே மெய்ப்பனும் குச்சியை போட்டுவிட்டு ஐயா பெரியார்தாசன் தற்சமயம் 72 கன்னிப்பெண்களுடன் சுவனத்தில் சளைக்காத ஆண்மையோடு இருப்பது போல் இருக்கவேண்டும் என்று போட்டிருக்கும் கருப்பு சட்டையை கழற்றிவிடாதீர்கள். மந்தையாகிய நாங்கள் கதி கலங்கிவிடுவோம். நீங்கள் இளமையாக தோன்றுவதால், இப்போதைக்கு பயப்பட வேண்டாம் என நன்பர்களிடம் ஆறுதல் கூறி வருகிறோம்.
    நன்றி.

  12. ஜசாகல்லாஹ், நல்லவிதமாக நடந்துக் கொண்டவர்களுக்கும், அதை நல்லவிதாமாக விளங்கிக் கொண்ட உங்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரியட்டும். இஸ்லாமியர் ஒருவர் மரணித்த பிறகு தனது உடல் உறுப்புகளை பிறர் பயன்பெறும் விதமாக உறுப்பு தானம் செய்வது ஒன்றும் தடுக்கப்பட்ட ஒன்று இல்லை.

    மறுவுலகில் எழுப்பப்படும் போது மரணித்தவரை தான் எழுப்புவானே தவிர மரணித்த சடலத்தை அல்ல.

    படைக்க தெரிந்த அவனுக்கு மீண்டும் ஒருமுறை எழுப்பவும் தெரியும் அதுக்கு அந்த சடலம் தேவை என்ற நிலை அவனுக்கு இல்லை என்பது எனது நம்பிக்கை….

    என்னங்க இம்புட்டு பெரிய எண்ணிக்கையில் அடங்கா galaxy யை படைத்த அவனுக்கு கடுகை விடவும் பில்லியன் பில்லியன் மடங்கு அற்பமான இந்த சிறிய ஒன்றை மீண்டும் எழுப்ப தெரியாதா என்ன……

    He (Allaah) the magnificent power is beyond your and our imagination….

  13. இங்கே பல பகுத்தறிவாளர்களுக்கு இந்துக்களின் மட சடங்குகள் மட்டும் மூடதனமானதாகவும் ,காட்டுமிராண்டித்தனமாகவும் தெரிகிறது.இந்துக்களுக்கு மட்டும் திருடன் எனும் ஒரு அர்த்தம் இருப்பதாக அறிக்கை விடமுடிகிறது. அத்தகையோருக்கு அதுபோன்ற சடங்குகளை மற்ற மதத்தினர் செய்யும்போது அதிலே ஒரு பண்பாட்டையும்,பக்குவத்தையும்,அறிவியலையும் உணர்ந்துகொள்ளும் கண்ணியம் வந்துவிடுகிறது.
    உண்மையில் தீவிர மதப்பற்றாளர்களைவிட முட்டாள்தனமான பகுத்தறிவாலர்களால்தான் சமூகத்தில் மத துவேசங்கள் வளருகின்றன.

  14. தீவிர மத பற்றாளன்கூட தன்னளவோடு தனது மதத்தை இருத்திகொள்கின்றான். அதிகார போதையோடு மதப்பற்றை கலப்பவன் மட்டுமே தனது மதத்தை மற்றவர்களின் மீது திணிக்கிறான்.அதேபோல்தான் முட்டாள் பகுத்தறிவாளர்களுக்கு மட்டுமே தான் ஒதுக்க நினைத்த மதத்தைதவிர மற்ற அனைத்து மதங்களிலும் ஆன்மீக உணர்வும்,பக்தி மற்றும் ஒழுக்க உணர்வும் இறை உணர்வும் மேலோங்கி நிற்ப்பதை உணந்தவர்களாக இருப்பார்கள்.தனது அதிகாரத்தில் தான் விரும்பிய மதத்தை கலப்பவனாலும்,தான் நிர்ணயித்த இலக்கிற்கேட்ப பொருள் புரிந்துகொள்ளும் பகுதறிவாலர்களுமே சமுதாயத்தில் ஆபத்தானவர்கள்.

  15. //முகமது மாறன் அவர்களே, மன்னிக்கவும் மதிமாறன் அவர்களே . . . //

    நண்பர் காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்களுக்கு,

    இது போன்று வேறு யாரேனும் எழுதியிருந்தால் அது 100 விழுக்காடு புறந்தள்ளத் தக்கதாகக் கருதி ஒதுங்கிச் சென்றிருக்கலாம். ஆனால் பகுத்தறிவு சார்ந்த புலத்தில் உங்களது பங்களிப்பை அறிந்தவன் என்ற வகையில் உங்களது கருத்து வருத்தமளிக்கிறது.

    தோழருடன் தனிப்பட்ட அறிமுகம் உள்ளவன் என்ற வகையில் பேராசிரியர் பெரியார்தாசன் அவர்களின் சறுக்கல்களுக்கு அவர் எப்போதும் சப்பைக்கட்டு கட்டியதில்லை. மாறாக பெரியார்தாசன் அவர்கள் தன் மீதான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கக் கடப்பாடு உடையவர் என்பது தான் தோழர் மதிமாறனின் கருத்தாகவும் இருந்து வந்துள்ளது.

    அவர் மதம் மாறியது குறித்து யாரும் அவரைக் குற்றம் சொல்வதற்கில்லை. அது நம் நாட்டின் அரசியலமைப்பு அவருக்குக் கொடுத்திருக்கிற சுதந்திரம். ஆனால் ராசிக்கல், நேமாலஜி வகையான நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றமை குறித்து எனக்கும் வருத்தம் உண்டு. இதைக் குறித்தும் ஒரு நிகழ்வில் பேசும் போது தான் பேசியவற்றில் எடிட் செய்யப்பட்ட சில பகுதிகளை மட்டும் ஒளிபரப்பியுள்ளனர் என்றும் விளக்கம் தந்திருக்கிறார். இதை நிரூபிக்க பேராசிரியர் பெரியார்தாசன் அவர்கள் இப்போது உயிருடன் இல்லை. நிகழ்ச்சியைத் தயாரித்தவர்களும் அதற்கு முன்வருவார்களா என்பது உறுதியில்லை.

    எனக்கு அண்ணல் அம்பேத்கர் மீது ஈடுபாடு ஏற்படக் காரணம் தோழர் மதிமாறன் அவர்கள். அவரை அண்ணல் அம்பேத்கரிடம் மடைமாற்றியவர்களுள் பெரியார்தாசன் அவர்களும் ஒருவர். பெரியார்தாசன் அவர்களுக்கும் மதிமாறன் அவர்களுக்குமான நட்பு குறித்து தெரிந்திருந்தால் உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் பெரியார்தாசன் அவர்களின் மறைவைத் தோழர் மதிமாறனின் தனிப்பட்ட இழப்பாகவே கருதுகிறேன். ஆழ்ந்த இரங்கல்கள்.

    ——————————
    நண்பர் வேலுமணி அவர்களே,

    தோழர் மதிமாறன் இந்தப் பதிவில் ஒரு வரியில் கூட இஸ்லாமியச் சடங்குகளை வியந்தோதவில்லை. இஸ்லாத்தை ஏற்றிருந்த பெரியார்தாசன் அவர்களின் உடலை குடும்பத்தினரின் விருப்பத்திற்கிணங்க மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக வழங்கியமை குறித்தும், குடும்பத்தினரின் அனுமதி பெற்று தொழுகை நடத்திய பண்பையும் தான் பாராட்டியிருக்கிறார்.

    (அப்துல்லா என்ற பெயரைத் தவிர்க்கும் உள்நோக்கம் கிடையாது. அவரைப் பெரியார்தாசனாகத் தான் அறிந்திருக்கிறேன். அதனால் பெரியார்தாசன் என்று விளிப்பது தான் வசதியாக இருக்கிறது)

  16. உண்மையை உரத்துச் சொன்ன உங்கள் நேர்மையான எழுத்துக்களுக்கு நன்றி சகோதரர் mathimaran
    //இஸ்லாமியர் எப்போது மதிக்க தக்கவர்கள் அரசியல்வாதிகளின் சாக்கடை அரசியலுக்காக பரப்பட்ட துவேஷம் இஸ்ஸலாமியர் தீவிரவாதிகள் என்கிற அவதூரு.//-நன்றி சகோதரர் tamil selvan
    அல்லாஹ் அப்துல்லாஅவர்களுக்கு சுவர்க்கத்தில் உயர்பதவியாம் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை வழங்குவானாக.
    அவரது பிரிவால் துயருற்றுள்ள அவரின் அன்பு குடும்பத்தார் அனைவருக்கும் அழகிய பொறுமையைக் தந்தருள்வானாக

  17. நண்பர்களே… இங்கு கருத்துரைத்திருக்கும் இந்து(?)மதத்தைச் சேர்ந்த நண்பர்கள் ஒன்றை மனதில் இருத்தி தெளிவடையுங்கள்…! நண்பர் மதிமாறனின் இடுகையில் இசுலாமிய சகோதரர்கள் நிகழ்விடத்தில் பெருந்தன்மையாக நடந்து கொண்டதையே குறிப்பிட்டு அவர்களை தீவிரவாதி என்று அவதூறு செய்து, பரப்புரை செய்யும் இந்திய அரசை அம்பலப்படுத்துகிறார். தவிர, பேராசிரியர் பெரியார்தாசன் என்கின்ற அப்துல்லா அவர்கள் ஒரு இசுலாமியராகத்தான் இறுதி நாட்களில் வாழ்ந்தார், அந்த முறைப்படியே தன்னுடைய இறுதி நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்று பதிவும் செய்துள்ளார், பலமுறை! இந்த நிலையில் இசுலாமிய சகோதரர்கள், இசுலாமிய முறைப்படியேதான் செய்யவேண்டும் என்றால் அது நியாயமானதும் உரிமையானதும் கூட! ஆனால், குடும்பத்தினரின் விருப்பத்துக்கே விட்டது, ஒரு மிகப்பெரிய பெருந்தன்மையான குணம்! இந்து மதத்தவனோ, கிறித்தவனோ இப்படி விட்டுக் கொடுப்பது என்பது அரிதினும் அரிது! அப்படி பெருந்தன்மையோடு நடந்த இசுலாமியர்கள் மற்ற மதத்தினரை விட உயர்வானவர்களே, நியாயமாக சிந்தித்தோமென்றால்!
    இசுலாமியர்களின் மதச்சடங்கு சரியா தவறா என்ற அலசல் இப்போது எழவில்லையே நம்மிடம்? அவர்களது சடங்கு முறைகளை அப்படியே ஏற்றுக் கொண்டோம் என்று எப்படி முடிவுகட்டினீர்கள் நண்பர்களே? எந்த மதச்சடங்குகளையுமே ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாங்கள்! அதைப்பற்றிய ஒரு விவாதம் வரும்போது அப்போது அலசுவோமே நாம்! பெரியார் தொண்டார்களாகிய நாங்கள், நிகழ்விடத்தில் இசுலாமிய சகோதரர்கள் நடந்துகொண்ட இந்த உயர்ந்த போற்றுதலுக்குரிய செயலுக்காகவே அவர்களை உயர்வாகப் பேசுகிறோமேயல்லாது வேறு என்ன இருக்கிறது? காசிமேடுமன்னாரு.

  18. இந்து மதவெறி தலைவிரித்து ஆட்டம் போடும் மராட்டிய மண்ணில், மூடத்தனத்தின் ஊற்றுக்கண்ணும், முட்டாள்தனத்தை விதைப்பதும், கிறித்தவ, இசுலாம் மதங்களை இந்து மதத்தின் கிளை மதங்களாக்கி, மூடநம்பிக்கை சாக்கடையில் கிறித்தவர்களை தள்ளி சீரழித்த இந்துமதம் கொலைவெறியோடு ஆட்டம் போடும் மராட்டிய மண்ணிலே, மூடத்தனத்திலிருந்து மக்களை வெளியே கொண்டு வரப் பாடுபட்ட பகுத்தறிவுவாளர், இந்து மதத்தின் மூடத்தனத்திற்கு எதிராக சட்டம் ஒன்றை இயற்ற மராட்டிய அரசைத் தூண்டியவர்…! பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார், ஆந்திரத்தின் பகுத்தறிவாளர் டாக்டர் கோவூர், கேரளத்தின் பகுத்தறிவாளர் ஜோசப் இடமருகு இவர்கள் வரிசையில் மராட்டியத்தில் தோழர் டாக்டர். நரேந்திர தபோல்கர்!
    கடவுள் போதையில் வெறிபிடித்துத் திரிபவர்களின் துப்பாக்கிக் குண்டு அவரது உடலைத் துளைத்தாலும், மதவெறியர்களுக்கு எதிராக பூனா நகரில் உருவான மக்களின் தன்எழுச்சியான போராட்டங்கள்.. ஊர்வலங்கள்.. இவை மதவெறியர்களின் மூஞ்சியில் காறி உமிழ்வதான ஒரு அடையாளமே! மத வெறிபிடித்த மூடர்கள் மீண்டும் மக்களிடம் அம்பலப்பட்டுப் போனார்கள்!
    தன்மக்களுக்காக அல்லாமல், பொது மக்களுக்காக, மக்களை மூடத்தனத்திலிருந்து விடுக்கப் போராடிக் களப்பலியான தோழர் டாக்டர். நரேந்திர தபோல்கர் அவர்களுக்கு, தந்தைப் பெரியாரின் தொண்டர்கள் சார்பாக, பகுத்தறிவாளர்கள் சார்பாக வீரவணக்கம் செலுத்துகிறோம்.

    மதங்களே, கடவுள்களே…
    உங்களது ஒரே வேலை மனிதனைக் கொல்வதுதானா?
    மக்களை முட்டாள்களாக்குவதுதானா?

  19. ஒரு அருமையான அறிஜரை இஸ்லாமிய சமுதாயமும், தமிழ் சமுதாயமும் இழந்திருக்கிறது.

    அவருடைய இழைப்பைக் கண்டு அவர் குடும்பத்தார், அவருடைய நண்பர்கள் போலவே ஒட்டு மொத்த தமிழ் இஸ்லாமிய சமுதாயமும் சொல்லனா துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது. முகநூலில் பரவலாக அவரின் படத்தை போட்டு ப்ரோபைல் படங்களும், அவரைப் பற்றிய பதிவுகளும் அரங்கேறியிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் அவருக்காக நாங்கள் பலரும் இறைவனிடம் அவருக்கு மறுமை வாழ்க்கை வெற்றியடையவும், அவரை பரிந்து வாழும் அவர் குடும்பத்தினர்க்கும் அமைதி வேண்டியும் பிரார்த்தனை செய்துள்ளோம்.

    உங்களின் இந்த பதிவு.. இஸ்லாமியர்கள் இறுதி சடங்கில் நடந்துகொண்ட விதத்தைக கண்ட உணர்வின் பிரதிபலிப்பே என்று தெரிகிறது. அதை நீங்கள் இங்கு வந்து தெரியப்படுத்தியதும் உங்கள் நல்ல உள்ளத்தையே காட்டுகிறது. அதற்காக இறைவன் உங்களுக்கு கூலி வழங்குவானாக தோழரே.

    ஒரு நல்ல செயலைக் கண்டு அதை கூறினால் கூட. அதில் கூட சிலர் “முகமது மாறன் அவர்களே”, என்று கேலி செய்யும் விதத்தைக் காணும்போது அவர்களை நினைத்து பரிதாபப் படாமல் இருக்க முடியவில்லை. அனைவருக்கும் இறைவன் நேர்வழி காட்டட்டும்.

  20. எந்த இந்து,கிறிஸ்தவர்கள் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு விரோதமாய் உடலை கைப்பற்றி உள்ளனர்?

  21. சஹோதரர் கிருஷ்ணமூர்த்தி உங்களை போல் தோழர்கள் இருக்கும் வரையில் நாம் என்றும் அண்ணன் தம்பிகள்தான்

  22. “பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களுக்காக நடந்த அந்த தொழுகை அனுமதிக்கப்படாமல் இருந்திருந்தால், அங்கிருந்த இஸ்லாமியர்களின் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்வதாக இருந்தது, அன்பால் நிறைந்த அந்த தொழுகை.”
    அவர்களது நம்பிக்கைக்கு, திருப்திக்கு, அவர்கள் மனதிற்கு தோன்றிய தொழுகை உணர்வை உங்களால் ஆராதிக்கமுடிகிறது.அதை தடுத்திருந்தால் அவர்கள் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை உங்களால் உணரமுடிகிறது.
    ஆனால் இதே உணர்வுகொண்ட மாற்றுமதத்தினர் எத்தனை பேரை முட்டாள்,காட்டுமிராண்டி என தூற்றி இருக்கிறீர்கள்?,அது அவர்களது உணர்வுகளை நம்பிக்கைகளை எப்படி பாதித்திருக்கும் என்பதை நீங்கள் என்றேனும் எண்ணி பார்த்திருப்பீர்களா நண்பரே ?அவர்களது உணர்வுகளை நீங்கள் உணரமுடியாமல் போனதுதான் வேடிக்கையாக தெரிகிறது.
    ஒரு சாரரின் உணர்வுகளை புரிந்து மதிக்கதேரிந்த தங்களுக்கு இன்னொரு சாரரின் அதே உணர்வுகள்,நம்பிக்கைகள் மட்டும் ஏன் வேறுவிதமாக தெரிகிறது என தெரியவில்லை.
    ஒரு மதத்தின் சில மூடத்தனங்களையும்,சிலரின் சுயனலப்போக்குகளையும் மொத்த மதத்தின் அடையாளமாக உணர்ந்துகொண்டு (அதேபோக்குகள் மற்ற மதத்திலும் இருக்கையிலும்) கேலிபேசி வருவதுதான் உங்களை நடுநிலையாளராக உணர தடையாக இருக்கிறது.

  23. வேலுமணி அதுதான் பெரியார் கற்றுத்தந்த வழியோ?

  24. இதுவே இந்து மதத்திற்கு வந்து உயிர் துறந்த வேற்று மததைசார்ந்த ஒரு நபரின் மரண நிகழ்வின்போது நிகழ்ந்திருந்தால் உங்கள் விமர்சனம் பின்வருமாறுதான் இருந்திருக்கும்,
    ” அவரை இழந்து அவரது குடும்பத்தினர்களும் உற்றார் உறவினர்களும் கலங்கி நிற்கையில் மதவெறி பிடித்த கூட்டம் ஒன்று அங்குவந்து தங்கள் மத பிராத்தனை சடங்குகளை நிறைவேற்றவேண்டுமென கூசலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தது.சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் செய்வதறியாது நிற்க உடன் இருந்த உறவினர் கூட்டம் அந்த கலவர காட்டுமிராண்டிகளிடம் கெஞ்சிகொண்டிருந்தது. பின்னர் அக்காட்டு மிராண்டி கூட்டதை சேர்ந்த ஒருவர் யாரோ ஒருவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி “சரி,இவ்விடத்தில் நாங்கள் எங்கள் மத பிராத்தனை பாடல்களைஏனும் பாடித்தான் செல்வோம்” என மல்லுக்கு நின்றது.வந்த கொடுமை இந்த அளவோடு நின்றதே என கருதி இறந்த நபரின் குடும்பத்தார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஒதுங்கி வெளியில் நின்று கொள்ள முட்டாள் தனமான,பொருளற்ற செய்கைகளை சடங்குகள் எனும் பெயரில் செய்ய தொடங்கியது.அந்த செயல்கள் சடங்குகளாக கூட இல்லாமல் தமது மதத்தை பிரதிபலிக்க செய்யப்படும் ஆகிரமிப்பு செயல்களாகவே எங்களுக்கு தோன்றியது.நாகரிகமும் விஞ்ஞானமும் வளந்துவரும் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய செயல்கள் நம்மை உலக அரங்கில் தலை குனியசெய்பவைகலாக இருப்பதை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை .அங்கே இறந்து இருந்தது நம் நண்பராக தெரியவில்லை , பெரியார் பாடுபட்ட வளர்த்த பகுத்தறிவுதான் அங்கே அந்த நிலைமையில் இருந்ததாக தெரிந்தது.இந்த காட்டுமிராண்டிசெயல்கள்,முட்டாள்தனமான செயல்களிலிருந்து இந்த சமுகம் வெளிவர இன்னமும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ என்பதை எண்ணியபடியே என்மனம் இந்த சமுதாயதிற்க்காய் கண்ணீர்விட்டது.
    பெரியார் மறுபிறப்பு எடுத்துவரவேண்டுமென என் பகுத்தறிவு பெரியாருக்கு கோரிக்கைவிடுத்தவண்ணம் இருந்தது”.
    இப்படிதான் இருந்திருக்கும்.
    பிராத்தனையை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுதியிருப்பீர்கள் .தாங்கள் ஆள்பார்த்து விமர்சிப்பவர் ஆனால் நடுநிலையாக விமர்சிப்பவர்போல காட்டிகொள்வீர்கள் என்பதே என் குற்றசாட்டு.

    அதிகாரவெறிபிடித்தவர்களும்,பொருளறியாபகுத்தறிவாளர்களையும் தவிர உண்மையில் எந்த ஒரு மதத்தை சார்ந்தவனும் மாற்று மததினனுக்கு எதிரியாயில்லை. இதை உணர்ந்துகொள்ளுங்கள்.
    மூடதனமென்றால் அதை காணுமிடமெல்லாம் துணிவோடு சொல்லுங்கள்.மதம் சாதி பாராது நடுநிலையோடு அனைவருக்குமான விழிப்புணர்வு வேண்டி உழையுங்கள்.ஒரு படைப்பாளனாக உங்களிடம் எதிர்பார்ப்பது இதுவே.

  25. பேராசிரியரின் இளைய மகன் சுரதா என்னுடைய facebook பக்கத்தில் எழுதியது:

    Suradha Siddartha : Thanks mathimaran for your honest opinion. Thanks for hospitalizing my dad at the right time and extending his life for about a month. We were not pleased when you asked us “What are you planning to do to him?” after seeing my dad’s condition in July mid week. Now we realize that but for your prompt & correct action we would have lost him a month ago. We owe it to you for making my family to spend a month exclusively with my dad which has never ever happened earlier in my 34 years of age and which will never ever happen again. I could learn a lot from you in a very short span of time. The most important thing i learned is the maturity which you have shown in the last one and half month which i shall imbibe. I am depressed for the heavy loss which cannot be reciprocated but i am happy to know that at least I have you to guide me like father would have guided me if he was alive. I thank you from the bottom of my heart for amicably handling the situation in the last week of my dad’s life. I know for sure that there were many issues in which you and my dad had difference of

    Suradha Siddartha : “continuation to the previous comment “- opiniion and it went to such a high situation where you both didn’t exchange words for about 2 months before we came to know that he was suffering from final stage of cancer which was fatal which killed him in 48 days from the day of diagnosis. I respect you much more now than ever for your understanding, compassion and love that you have given us during the relationship of our family for 25 years.

  26. வேற்று மதத்திலிருந்து யார் இந்து மதத்திற்கு வருகிறார் வேலு?

  27. நன்றி சகோதரர் வே.மதிமாறன் அவர்களே. தீவிரவாதிகள் என்று முஸ்லீம்களை வர்னிக்கும் தேச துரோகிகள் இருக்கும் இக்காலத்தில் உண்மையை உணர்ந்து பாராட்டும் உங்களின் தூய எண்ணமும், இதை வெளிப்படுத்திய இதயமும் உங்களை சிறந்த மனிதர் என்பதை காட்டுகிறது. சிறந்த மனிதரிடம் (பேராசிரியடிடம்) நட்பு வைத்திருப்பவருடைய குணமும் சிறந்ததாகவே இருக்கும் என்பதை நிரூபிப்பதாக இருக்கிறது. மீண்டும் நன்றி.

  28. \\எந்த ஒரு மதத்தை சார்ந்தவனும் மாற்று மததினனுக்கு எதிரியாயில்லை. இதை உணர்ந்துகொள்ளுங்கள்.\\
    குசராத் கலவரத்தில் இசுலாமியர்கள் தங்களைத் தாங்களே தாக்கிக் கொண்டு மாற்று மதத்தவர் கொன்று விட்டதாகப் பொய் சொன்னார்கள்! கோவையில் போலீசுமாமாவைக் கொன்றதற்காக இசுலாமியர்களே தங்களை தாங்களே குத்திச் செத்துப் போனார்கள்! மருத்துவமனைக்குக் குற்றுயிராய்க் கொண்டு வந்த இசுலாமியர்களை மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே அவர்கள் தங்களைத் தாங்களே தீயிட்டுக் கொளுத்தி கொண்டார்கள்! இசுலாமியப் பெண்ணின் வயிற்றை அந்தப் பெண்ணே கிழித்து சிசுவை வெளியே எடுத்து தீயிலிட்டுக் கொழுத்திக் கொண்டார்கள்! குமரி மண்டைக்காட்டில் கிறித்தவர்களே போலீசு துப்பாக்கியை வாங்கி தங்களைச் சுட்டுக்கொண்டார்கள்! இப்படி நடந்ததைவைகளை, ஒன்றுமறியாத, அப்பாவியான இந்துக்களின் மேல் பழியைப் போட்டு இந்துக்கள் வெறியாட்டம் போட்டார்கள் என்று அரசியல் செய்கிறார்கள் மாற்றுமதத்தினர்! இப்படிப்பட்ட கருத்துக்களை இன்னும் சற்று நாட்களில் இவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம்!

  29. மிகவும் நெகிழ்வான பதிவு !!

  30. இசுலாமியர்களை எதிர்ப்பவர்களுக்கான உணர்வுப் பூர்வமான பதிவு. பேராசிரியரின் இறுதி நிகழ்வில் அங்கு இருக்க முடியாத்தற்கு வருந்துகிறேன்.

  31. இங்கே இஸ்லாமியர்களை பற்றியோ, மத பழக்க வழக்கங்கள் பற்றியோநண்பர் ,மதிமாறனின் செயல்கள் பற்றியோ நான் ஏதும் விமர்சிக்கவில்லை.
    பிராத்தனையைபற்றியும் ,அல்லாவிடம் வேண்டிகொண்டதுபற்றியும்,அது மறுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அவர்கள் அடைந்திருக்கும் வேதனைபற்றியும் நண்பர் மிகுந்த மதிப்புடனும் மரியாதையுடனும் தேரிவித்ததுதான் மிகுந்த வியப்பிற்குரியதாக இருந்தது.
    இங்கே விமர்சனதிர்க்குரியது அவரின் இந்த அணுகுமுறைதான்.
    திரு,மதிமாறன் தன்னை ஒரு இந்துமத வெறுப்பாளராக அறிவித்துகொண்டால் பின்னூட்டமிட எனக்கு அவசியமிருந்திருக்காது.ஆனால் தன்னை ஒரு பகுத்தறிவாளராக அறிமுகபடுத்தியதால் தான் நான் பின்னூட்டமிட நேர்ந்தது.
    வழிபாடு காட்டுமிராண்டித்தனமானது என்றால் அது எந்த மதத்தினன் செய்தால் என்ன ?அதை காட்டுமிராண்டிதனமேன்றே விமர்சிக்கவேண்டியதுதானே?
    பிறரின் வழிபாட்டை மறுத்தால் அது அவர்களின் உணர்வுகளை வருத்தமடைய வைக்கும் எனில் அத்தகைய உணர்வு அனைவருக்கும் பொதுவானதுதானே.அதைதான் நான் சுட்டிகாட்டுகிறேன்.
    (உங்களது இதற்க்கு முந்தைய கருத்துரையின் தலைப்பு இங்கே பொருத்தமாக இருக்கும்.ஒப்புநோக்கி பார்க்க )
    அவன் கும்பிட்டால் அது வழிபாடு இவன் கும்பிட்டால் அது மூடத்தனம் .பலே.பகுத்தறிவு..பலே.பகுத்தறிவு.

  32. விடுங்க வேலு. இந்துமதம், இந்துமதத்தவர் என்று ஒரு எதிர்தரப்பாக வைத்துக்கொண்டு தங்களது தரப்பை உருவாக்கி கொள்வது இவர்கள் வழி

  33. சகோ மதிமாறன் அவர்களே …..
    // அன்பால் நிறைந்த அந்த தொழுகை.’ //
    பதிவை படித்துக்கொண்டிருக்கும் போதே கண்கள்
    குளமாகிவிட்டன …உணர்வுபூர்வமான பதிவு .

  34. // பெரியார்தாசன் அவர்களுக்கும் மதிமாறன் அவர்களுக்குமான நட்பு குறித்து தெரிந்திருந்தால் உங்களுக்கு இப்படி ஒரு சந்தேகம் வந்திருக்க வாய்ப்பில்லை //

    இதில் சந்தேகப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. ஐயா பெரியார்தாசன் இன்னும் பத்து மதங்களைத் தழுவி இருந்தாலும், அவர் மீதுள்ள மதிப்பு ஒரு இம்மியும் எனக்கு ஒருபோதும் குறையப்போவதில்லை. பெரியார்தாசன் அவர்களை விமர்சிக்கும் அளவிற்கு யாருக்கும் தகுதி இல்லை. அவரது கல்வியின் ஆழம் அப்படி. அவரது “இந்திய தத்துவ மரபு” எனும் உரைவீச்சில், உயிர்த்தவர்களில் நானும் ஒருவன்.
    அடுத்து அவர் ஆற்றிய உரை. “இராமர் பாலம் என்பது ஒரு புரட்டு, பார்பனிய மதவெறி கும்பலை விரட்டு” என்று பெரியார்தாசன் உருமியது எமக்கு இன்னும் உரம் ஏற்றியது என்று சொல்லலாம்.
    தில்லை தீக்‌ஷித ரௌடிகளுக்கு அவர் கொடுத்த செருப்படி, அவரது அத்துனை உரைகளுக்கும் முத்தாய்ப்பு வைத்தார் போல் என் போன்றவர்களுக்கு மேலும் வலுவ்வேற்றியது.
    அவரது மத மாற்றம் எதோ ஒரு கட்டாயத்தின் பெயரில் தான் நடந்திருக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். திடீரென்று தந்தையை இழந்த பிள்ளைகளாக என்னைப் போன்றவர்கள் கவலையுற்று இருக்கும் வேளையில் தான் மெல்ல மெல்ல, ஐயா பெரியார்தாசனையும் மிஞ்சும் அளவிற்கு மதிமாறன் எனும் ஒரு வீச்சு எங்களை மீண்டும் உயிர்பிழைக்க வைத்தது எனலாம்.
    அம்பேத்கார் மட்டுமல்ல, எம்மண்ணின் மைந்தனான இளையராஜவையும் எனக்கு சரியாக படம் பிடித்துகாட்டியவர் ஐயா மதிமாறனே. இசையில் மட்டுமல்ல பெரியார் சினிமா படத்திற்கு ஏன் இசைஞாநி இசையமைக்க மறுத்தார் என்பதனை அவர் விளக்கிய அழகேத் தனி.
    மிகத் துள்ளியமாக பார்ப்பனிய பூச்சு எங்கெல்லாம் நாற்றம் அடித்துக் கொண்டிருக்கிறது என்று அவ்வப்போது சரியாக வெளிச்சம் போட்டுக் காட்டும் இவருக்கு எப்படி ஒரு மதத் தொழுகை, அன்பால் நிறைந்த தொழுகையாக விளங்கியது என்பது புதிராக உள்ளது.
    கடவுள் மனிதனிடம் பேசுவதும், மனிதன் கடவுளிடம் பேசுவதும் என்பவைகளை மிக அழகாக கூறுவதென்றால், அது ஒரு மனப் பிழற்வு நிலை தான். அதாவது, நான் நேற்று இரவு முருகப்பெருமானிடம் பேசிக்கொண்டிருந்தேன், அப்போது அல்லாவும் வந்து பல கதைகளை பெசிக்கொண்டிருந்தார். என்ன இருந்தாலும் மார்க்க நெறிகளுக்கு புறம்பாக அப்துல்லா தன் உடலை தானம் கொடுத்தது தவறென்றார், என்று நான் சொன்னால் நீங்கள் என்னை என்னவென்று நினைப்பீர்கள். காஞ்சி பிலிம்ஸ் அன்பாக இறைவனோடு பேசிக்கொண்டிருந்தார் என்றா சொல்வீர்கள் ? அவனுக்கு மர கழண்டு விட்டது என்று தானே கூறுவீர்கள் ? அதைத்தான் நான் தமிழில் மனப்பிழற்வு என்கிறேன். ஐயா மதிமாறன் அன்புத்தொழுகை என்கிறார்.
    ஐயா பெரியார்தாசன், இறப்பிற்கு பிறகு தன்னுடைய உடலை தானம் செய்து, தனது உடலை மசூதியில் வைத்து பிரார்த்தனை செய்யவிடாமல், இஸ்லாத்தை தான் மனதார ஏற்கவில்லை என்ற செய்தியைத் தான், இவ்வுலகிற்கு பறைசாற்றி, தான் ஒரு மார்க்சிஸ்டாகாவே சென்றிருக்கிறார் என்றல்லவா மதிமாறன் ஐயா எழுத வேண்டும் ?
    ஏன் அப்படி ஐயா மதிமாறனுக்கு தோன்றவில்லை என்பதே, சரி அடுத்த பெரியார் தாசன் இவர் தான் என்றாகிவிட்டது. எது எப்படியாக இருந்தாலும் ஐயா மதிமாறனின் எழுத்துக்களை வாசிக்கும் வாசகர்களில் முதல் வரிசையில் என்றுமே நான் இருப்பேன் என்பது உறுதி.
    யார் மனதையேனும் புண்படுத்தி இருப்பின் மன்னிக்கவும்.
    நன்றி

  35. \\அடுத்த பெரியார் தாசன் இவர் தான் என்றாகிவிட்டது.\\
    இந்த வரிகள் சற்று நெருடுகிறதே தோழர் காஞ்சி பிலிம்சு அவர்களே! உள்குத்து எதுவும் இல்லையே?

  36. உடல் உறுப்பு தானத்தையும் உடல் தானத்தையும் எதிர்கும் இந்துமத தலைவரோ , கிருத்துவ பாதிரியாரோ இருக்கிறார்களா ?

    பிரியாணி க்காக இம்புட்டு பாசமா ?

  37. “பிரியாணிக்காக இம்புட்டு பாசமா”
    ஹாஹாஹா

  38. tx 4 the honest articl bro mathi maaran.
    Ippo enne solliddingannu inthe vayitterichal kaaddu thee pidikuthu ivangaluku..?
    Naasthihathilum padipilum kodikaddi paranthavarai vimarsanam seyye thahuthi enre onnu vaenum. Muthal athai poai pidingappa! Dr.Abdullahve padichi vilangittaar. Mathavangaluku y thaan porukaliyo! Mudincha tired illame sathiyathai vaayaal oothi anaiyungo! Cogratz

  39. சிறப்பாக பதிவு செய்திருக்கிறீர்கள் தோழர். மதிமாறன்,

    பேராசிரியர் இறந்த ஓரிரு தினங்களுக்குப் பிறகு நெருங்கிய நண்பரொருவர் இந்த உடல்தான பிரச்சனையும் அதற்கான இஸ்லாமிய வேத விளக்கங்களையும் வைத்து ஒரு பதிவை எழுத வேண்டும் என என்னை வற்புறுத்தினார். “இந்தப் பிரச்சனையில் இஸ்லாமியர்கள் நடந்து கொண்டது நிச்சயம் முன்மாதிரியான ஒரு விசயம். இதை காழ்ப்புணர்வோடு அணுகாதீர்கள். அவர் எதனால் இஸ்லாத்திற்கு மாறினார், மாறிய பிறகு அவர் என்ன பேசினார் போன்றவைகளும் இந்த உடல்தான பிரச்சனையும் வேறுவேறானவை. எனவே நீங்கள் கூறுவது போன்ற கட்டுரை எழுதுவது தேவையற்றது” என்று கூறினேன். உங்களின் இந்தப் பதிவு அதை நெகிழ்ச்சியாக விளக்குகிறது.

  40. சகோதரர் மணிமாறன் அவர்களே .ஆயிரம் நன்றிகள் உங்களுக்கு .உண்மையான பதிவு .உங்களைப்போல் நல்ல உள்ளங்கள் இருக்கும்வரை நாம் என்றும் அண்ணன் தம்பிகள்தான் .வாழ்க நீங்களும் உங்களை போல் உள்ள நல்ல உள்ளங்களும்..நன்றி

  41. பெரியார்தாசன் இப்போ தெரிந்திருப்பார் சுவனம் என்று ஒன்று இல்லைஎன்று

  42. இஸ்லாத்தைத் தழுவிய உலகப்புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் கமலா சுரய்யா மரணமடைந்தபோது இதுபோன்ற மற்றொரு அனுபவம் அவரது மகனுக்கு ஏற்பட்டது. உன் தாயின் உடலைப் பார்க்கவும்கூட முஸ்லிம்கள் உன்னை அனுமதிக்கமாட்டார்கள். ஆகவே, உடல் அவர்களது பொறுப்பில் போய் விட அனுமதிக்காதே என்று அவருக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அவர் இதை கண்டுகொள்ளவில்லை. ஜனாஸா தொழுகையின்போது முன்வரிசையில் இந்துவாக இருக்கும் அவரும் அவரது குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

  43. சரி சரி. வெற்றிகரமாக காதலைப்பிரித்த சேரன்.பார்ப்பன சதி வென்றது அப்படின்னு அடுத்த பதிவ போடுங்க…

  44. சரி சரி. வெற்றிகரமாக காதலைப்பிரித்த சேரன்.பார்ப்பன சதி வென்றது அப்படின்னு அடுத்த பதிவ போடுங்க…மதிமாறன்

  45. இறைநம்பிக்கையுள்ள மாற்று மதத்தைச் சார்ந்த ஒருவன் மதம் மாறுவதென் பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஏகத்துவக் கோட்பாடு அவனை வசீகரித்திருக் கலாம். கொடிக்கால் ஷேக் அப்துல்லாபோல் ”என்மீது சுமத்தப்பட்ட சாதிய இழிவைப் போக்குவதற்காக மதம் மாறினேன்” என்றாலும் புரிந்துகொள்ள முடிகிறது. வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள (பொருளாதாரத்தில் மிகவும் கீழ்நிலை யிலுள்ள ஒரு சமூகத்தில் இது சாத்தியமில்லை என்றாலும்) மதம் மாறியதாக ஒருவன் சொன்னாலும் புரிந்துகொள்ள முடிகிறது. பெரியார் தாசனின் மாற்றம் மட்டும் எனக்குப் புதிராகவே இருந்தது.

  46. மதிமாறன் அய்யா அவர்களுக்கு என் முதற்கண் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் !

    காஞ்சி பிலிம்ஸ் ஐயா அவர்களுக்கு , தாங்களே கூறுகிறீர்கள் ஐயா பெரியார் தாசன் மீதும் அவர் கூறிய கருத்துகள் மீதும் தங்களுக்கு தீராத பற்றும் நன் மதிப்பும் உண்டென்று மேலும் அவரின் கல்வி ஆழத்தில் சிறந்தவர் என்றும் குறிபிட்டு இருந்தீர்கள்.. இவ்வளவு புகழுக்கும் காரனமவன்ர் ஏற்கனவே பல மதங்களுக்கு மாரி இருந்தாலும் அவர் கடைச்யில் இஸ்லாம் மதத்தை ஏன் தழுவினர் …? அவருக்கு யாருடைய வற்புறுத்தல் இருந்ததா ..? இல்லையே..? நன்கு அறிந்தவர் பகுத்தறிவு பெற்றவர் அவர் அலசி ஆறாயாமல் இருந்து இருப்பார ..? மேலும் இந்திய முசிலிம்கள் அனைவரும் ஒரு காலத்தில் இந்துகள் ஆக இருந்தனர் என்றும் பிறகாலத்தில் பாரசிககர் ,மேலும் சிலர் , வருகை க்கு பிறகு மத மாற்றம் உருவானதாக கூரப்படுகிறது இது உண்மையாக இருந்தாலும் அன்று என் சகோதரன் மற்றும் என்னை போன்றவர்கள் பல கற்சிலைகளையும்,மூட நம்பிக்கைகளையும் கடைபிடித்து வந்தோம்.இது தவறு என்று அவர்கள் உணர்த்தினார்கள் இறைவன் ஒருவனே என்று கூறினார்கள் அந்த கோட்பாட்டில் நாங்கள் ஈர்க்கப்பட்டு அன்றுமுதல் நாங்கள் அனைவரும் இஸ்லாமியராக உள்ளளோம் இன்னும் எளிதாக விளங்க சொன்னால் இரு சகோதர்கள் அவரவர் விருபதிற்கு மாறாக நடந்தாலும் அவர்கள் என்றும் சகோதரர்களே ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் ( நான் சகோதரர் என்று குறிபிடுவது உங்களை,இங்கு தாய் என்று குறிபிடுவது நம் நாட்டை ).இஸ்லாமும் சரி இஸ்லாமியனும் சரி யாரையும் கட்டயபடுதவில்லை உண்மையை உணர்தவர்களும் ,நம்பிக்கை கொண்டோரும் தான் அந்த இஸ்லாமியர்கள் , தங்களுக்கு தெரியாதது அல்ல உலகமே “நம்பிக்கை என்ற அச்சாணியில் தான் சுழல்கிறது என்று .paiya : ஒரு” பிரியணிய “வைத்து உங்கள் சக தோழரை நீங்களே குறைத்து மதிப்பிடலாம…? நான் தங்களை போன்று மிகுந்த படிதவன் இல்லை

    உங்கள் அன்பு சகோதரன்
    முகமது ரபி
    புதுவையிலிருந்து

  47. இதை பெருந்தன்மை என்று பாராட்ட ஒன்றும் இல்லை, இடம் பொருள் ஏவல் இவை அறிந்து நடந்து கொண்ட விதம் என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம், பேராசிரியரின் அப்துல்லாவின் மரணம் சென்னையில் இல்லாமல் கீழக்கரையிலோ அல்லது இஸ்லாமிய பெரும்பான்மையாக வசிக்கும் இடத்திலோ நடந்திருந்தால் நீங்கள் பாராட்டும் வண்ணம் இருந்திருக்க வாய்ப்பில்லை, மனைவியை பழிவாங்க இஸ்லாமுக்கு மாறிய கணவன் இறந்ததும் அவர்களது இரண்டு குழந்தைகளையும் இஸ்லாமியர்களாக அறிவித்த கொடுமையெல்லாம் கூட அவ்ர்கள் பெரும்பான்மையாக இருக்கும் மலேசிய நாட்டில் நடந்திருக்கிறது, தன்னுடைய குழந்தைகளை மீட்கவும் கணவனுக்கு இறுதி சடங்கு நடத்த அனுமதி கோரியும் போராடிய பெண்ணின் ஞாயம் பெரும் போராட்டத்திற்கு பின்பே நீதிமன்றம் மூலம் சாத்தியம் ஆகியது.

    வலைப்பதிவர் செங்கொடிக்கு அரபு நாட்டில் வேலை பார்த்த பொழுது அங்கு நடந்தவை அவர் தப்பி பிழைத்து சென்னை வந்து தான் பெருமூச்சு விட்டார் என்று அவரே எழுதினார் இந்த தகவலெல்லாம் உங்களுக்கு தெரியாதா ?

    Hindu mother wins legal fight to also decide children’s faith after husband converts them to Islam

    http://www.themalaysianinsider.com/malaysia/article/hindu-mother-wins-legal-fight-to-also-decide-childrens-faith-after-husband

    Malaysia releases woman in Hindu marriage case

    http://news.asiaone.com/News/AsiaOne+News/Asia/Story/A1Story20070811-21606.html

    எல்லாம் இருக்கும் இடத்தைப் பொருத்து தான் நடந்து கொள்ளும் விதம் என்று தமிழர்கள் பழமொழி சொல்லுவார்கள். அதையும் கொஞ்சம் நினைவு கூறவும்.

  48. ஹஹஹ்ஹா மிக்க சரி ஐயா .. பாராட்ட ஒன்றும் இல்லைதான்
    அதற்காக்க நீங்க ஏன் மலேசிய மற்றும் அரபு ஆண்டுகளுக்கு செல்ல வேண்டும் உங்களுடைய பெருந்தன்மையதான் இளவரசன் விவகாரத்தில் உலகமே கண்டதே…. …அழகான தென் கூட்டில் தேனீ போல நாம் இருக்க சில நயவஞ்சகர்கள் விட்டெரியும் கல்லினால் தேனிக்கள் சிதறுவது போல்.. இன்று நடக்கிறது

Leave a Reply

%d bloggers like this: