தலித்தல்லாதவர் கூட்டணியின் யோக்கியதை..

dead-stick-figure-face-png

 கவுண்டவர் ஜாதி அமைப்பான கொமு பேரவை, ஈரோடு மாவட்டம், பவானி எலவம்பாளையம் பகுதியில் இருக்கும் பொதுசுடுகாட்டில் வன்னியர் பெண் பிணத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு. அங்கு திவிக, பாமக , ஆதித்தமிழர் பேரவை,விசி கட்சி தோழர்கள் பேச்சு வார்த்தை (தகவல் தோழர் பரிமள ராசன்)

*
தலித்தல்லாதவர் கூட்டணியின் யோக்கியதை இதுதான்.

ஒரு வன்னியர் பிணத்தை புதைப்பதற்கு அனுமதி இல்லை. வன்னியர்களின் ஒப்பற்றத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் என்ன செய்கிறார்?

தாழ்தப்பட்டவர் வன்னியப் பெண்ணை காதலித்தால்… கொதிக்கிற ஜாதி உணர்வு, இப்போ எங்கே பதுங்கி இருக்கிறது?

தாழ்த்தப்பட்டவர்களை எதிர்ப்பதற்கு மட்டும் ஒன்று சேருவது… மற்றபடி அவர்கள் ஒருபோதும் வேறு காரணங்களுக்காக ஒன்று சேரவே முடியாது என்கிற இந்து ஜாதி படிநிலை முறையை இது வலுவாக அம்பலப்படுத்துகிறது.

நாயுடு, பிள்ளை, தேவர், முதலியார், வன்னியர் இடுகாடு மற்றும் சுடு காட்டில் பறையர் பிணத்தையும் பறையர் இடுகாட்டில் சக்கிலியர் பிணத்தையும் புதைக்க அனுமதிக்கவும் அதற்காக போராடவும் செய்கிறவர்களுக்கு மட்டுமே இதைக்கேட்பதற்கு யோக்யதை இருக்கிறது.

June 20 அன்று facebook ல் எழுதியது

தமிழ் உணர்வாளரின் தெலுங்கு டப்பிங்

ஜாதியை துண்டாக்கினால் அதற்குள்ளும் ஜாதி..

தெனாலிராமனா-வடிவேலா?; கிருஷ்ணதேவராயனை கூ முட்டையாக்கியது

2 thoughts on “தலித்தல்லாதவர் கூட்டணியின் யோக்கியதை..

  1. சவக்குழிவரை சாதியை கொண்டுவந்து இவர்கள் சாதிக்கபோவதுதான் என்ன?
    ஓட்டு பிச்சை கேட்டு வரும்போது இவர்களது சாதி உணர்வு எங்கே போய்விடுகிறது?
    என் சாதிக்காரன் மட்டும் எனக்கு ஓட்டுபோட்டால் போதும் .தாழ்த்தப்பட்டவர் ஓட்டு எனக்கு தேவை இல்லை என கூற இங்கே ஒருத்தனுக்காவது திராணி இருக்கிறதா?

    இந்த விசயத்தில் உங்களது வாதத்தை ஏற்கிறேன் திரு.மதிமாறன்.

    ஆனாலும் நீங்களும் மேல் சாதியில் உங்களுக்காக குரல்கொடுத்த ஒருத்தரையாவது மதித்திருந்தால் உங்களுக்கு அங்கிருந்து ஆதரவு கை நீண்டிருக்கும்.
    ஆனால் நீங்களோ சகட்டு மேனிக்கு சாணி எறிவதாயிற்றே?பின்னர் எங்கிருந்துவரும் சமநிலை.
    அவர்களில் உங்களை ஒத்த கருத்துகொண்டிருப்பவர்கள் கூட உங்களது சாணி எறிதலுக்கு அருவருப்படைந்து ஒதுங்கிதான் இருப்பார்கள்.
    நீங்களும் காலமெல்லாம் கத்திகொண்டே சாணி எறிந்துகொண்டே இருக்கவேண்டியதுதான் திரு.மதிமாறன்.

  2. அடப்பாவிகளா, எனக்கு இது இவ்வளவு நாளும் தெரியாதே. தமிழ்நாட்டில் இந்தகாலத்திலும் சாதிக்கொரு சுடுகாட்டை வைத்துக் கொண்டா, சில பன்னாடைகள், இலங்கையில் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் எப்பவோ நடந்த சாதிப்பிரச்சனைகளைப் பெரிது படுத்தி பதிவுகள் போட்டார்கள். 🙂

Leave a Reply

%d bloggers like this: