ஜாதி ஓதுக்கீடு ஜாதியை வளர்க்கும்; பெண்களுக்கான ஒதுக்கீடு அடிமைத்தனத்தை நீக்குமா?

how-to-draw-a-hindu-god-hindu-goddess-step-7_1_000000078077_5

மைதிலி யாருடனும் எப்போதும் பொறுப்போடு தான் பேசுவாள். அந்த பொறுப்பில் அன்பும் அக்கறையும் நிரம்பி வழியும். சில நேரங்களில் அந்த அன்பின் வடிவம் கோபமாகவும் இருக்கும். அந்தக் கோபம் நன்மையே செய்யும்.

என்னால் அவளுக்கு ஆன உதவியை விட அவளால் எனக்கான உதவிகளே அதிகம்.

அவளை எனக்கு 20 ஆண்டுகளாக தெரியும். நேரில் பேசிக் கொள்ளும்போது நீ, வா, போ என்றும் 3 வது நபர்களிடம் பேசும்போது
என்னை அவள் ‘அவன்’ என்பதும் அவளை நான் இதுபோல் ‘அவள்’ என்று சொல்வதும் தோழமையின் பொருட்டே.

இப்படி தனி மனித உணர்வுகளில் மென்மையான, அன்பான, அக்கறையான மைதிலி; சமூக விசயங்களில் அப்படியே நேர் எதிர்.
அவளின் பெண்ணியக் கருத்துக்களைத் தவிர வேறு எதுவும் அவளுக்கும் எனக்கும் ஒத்துப் போனதே இல்லை. அதிலும் சில நேரங்களில் பிரச்சினை தான்.

அதுவும் இட ஒதுக்கீடு என்றால் அவளுக்குக் கொலைவெறியே வந்துவிடும். இந்த நாட்டை கெடுப்பதே அதுதான். ஜாதி யை ஒழிப்பதற்கு அது தான் தடையாக இருக்கிறது என்று கொந்தளிப்பாள். இத்தனைக்கும் அவள் ஜாதி மறுப்புத் திருமணத்தை தீவிரமாக ஆதரிப்பவள் தான்.

நானும் எவ்வளவோ விளக்கமெல்லாம் கொடுத்திருக்கிறேன். ஆனாலும் அவளின் முன் முடிவு, எப்போதோ முடிவான ஒன்று. குடும்ப சூழல் அவள் வளர்ந்த முறை அதற்குக் காரணம்.

இட ஒதுக்கீட்டினால் தகுதி, திறமை போய் விடும், போய் விட்டது என்று பொங்குகிற அவள் தான். இப்போதெல்லாம் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக பேசுகிறாள்.

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனே அமல் படுத்த வேண்டும். ஆணாதிக்க அரசுகள் அதை வேண்டுமென்றே கிடப்பில் போட்டு விடுகின்றன என்று கடுமையாக பேசுகிறாள்.

இதே நியாயம் தானே ஜாதி ரீதியான இட ஒதுக்கீட்டிற்கும் என்றோ பெண்களுக்கான ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றோலோ துவங்கி விடும் சண்டை.

சரி. உள்ஒதுக்கீடே வேண்டாம்.
பெண்களுக்கான ஒதுக்கீட்டை 100 சதவீதம் செய்ய வேண்டும். அதை கோயில்களில் இருந்து துவங்க வேண்டும். எல்லாக் கோயில்களிலும் பெண்கள் அர்ச்சகராக வேண்டும். குறைந்த பட்சம் பெண் தெய்வங்கள் உள்ள கோயில்களிலாவது, பெண்களை மட்டும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்று சொன்னால்;

குருக்களாக, அர்ச்சகர்களாக இருக்கிற ஆண்களைப் போல் செம கடுப்பாகிறாள் மைதிலி.

June 26 அன்று facebook ல் எழுதியது

பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

பெண்களைப் புரிந்து கொள்ளவே முடியாது!

பெண்ணியவாதிகளின் பெரியார் எதிர்ப்பு

3 thoughts on “ஜாதி ஓதுக்கீடு ஜாதியை வளர்க்கும்; பெண்களுக்கான ஒதுக்கீடு அடிமைத்தனத்தை நீக்குமா?

  1. இட ஒதுக்கீடு விசயத்தில் எனக்கும் பலவிதமான கருத்துக்கள் உண்டு.
    பல நேரங்களில் பலவிதமான கருத்துக்கள் தலை தூக்குவதுண்டு.

    ஆனால் என் தீர்க்கமான தேடல் என்னவென்றால் இந்த இட ஒதுக்கீட்டு முறையே தேவைப்படாத நிலையை எப்படி அடைவது என்பதை பற்றியதாகவே இருக்கிறது.

    ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் பட்டினிசாவுகள் நிரம்பிய வறுமையான நாடுகள் முதல் தின்றே சாகும் அளவுக்கு வளமும் வல்லமையும் கொண்ட நாடுகள்வரை அனைத்தும் ஒரே போட்டிவிதிமுறைகளுக்கு உட்பட்டே பங்கேற்கின்றன.
    வசதியும் வாய்ப்பும் குறைந்த நாடுகள் விதிமுறைகளை தளர்தகோரி தனிப்பட்ட எந்த வேண்டுதல்களும் வைப்பதில்லை.

    ஆனால் இங்கு உலகத்திலேயே சிறந்தவர்கள் என தங்கள் சாதிமாநாட்டில் சாதிபெருமை பேசி மார்தட்டிகொள்ளும் சாதிசங்கங்கள் மறுநாள் தத்தம் சாதிக்கு சலுகைகள் வேண்டி ஊர்வலம் செல்கிறார்கள்.
    தங்களை பெருமைபடுத்திகொண்டே பிச்சையும் எடுக்கிறார்கள்.

    ஊனமுற்றவனுக்கு உதவிகள் செய்யலாம், சலுகைகள் காட்டலாம்.
    ஆனால் பரம்பரை பரம்பரையாக அக்குடும்பத்திற்கு அந்த சலுகைகள் தொடரப்படவேண்டுமா? என்பதில் தான் எனக்கு குழப்பம்.
    ஊனமுற்றவன் ஒதுக்கப்பட்டுவிடக்கூடாதுதான்.
    அனால் அதே சமயத்தில் ஊனமுற்றவனுக்கு தரப்படும் சலுகைகளைப்பார்த்து ஊனமற்ற ஒருவன் தானும் ஊனமானவனாகப் பிறந்திருக்காலாகாதா? என என்னும்படி வைக்ககுடாதல்லவா?
    அப்படி நேரும் பட்சத்தில் இட ஒதுக்கீட்டின் நோக்கம் தலைகீழாக அல்லவா போய்விடுகிறது?

    நம் நாட்டில் பேருந்துகளிலும் திரை அரங்குகளிலும் இன்னமும் இட ஒதுக்கீடும் சிறுபான்மையினருக்கான சலுகைகளும் கேட்டு கோரிக்கை விடப்படாமல் இருப்பதே ஒரு அதிசயம்தான்.

    ” இந்துவாக இருந்தாலும் தனது ஜாதியாக இருந்தால் ஒரு கிறிஸ்த்துவர் இந்துவிற்கு பெண் தர தயங்குவதில்லை என்பதைவிட; அந்த சம்மந்தத்தை அவர்களே முன்னின்று பேசி முடிக்கிறார்கள்”
    இயேசு கிறிஸ்த்துவிற்கே தெரியாது இப்படி ஒரு கிறிஸ்த்துவ முறை இருப்பது என கண்டிக்கிறவர் நிச்சயம் மதம் மாறினாலும் தங்களுக்கான இட ஒதுக்கீடு தொடரவேண்டும் எனும் கோரிக்கையை (திரு.மதிமாரனே) ஏற்றுக்கொள்ளமாட்டார் என்றுதான் நினைக்கிறேன்.

    அவரைபோன்றே மதம் மாறினாலும் சலுகைகள் தொடரவேண்டும் என சலுகைகள் கேட்பதை நானும் எதிர்க்கிறேன்.

    மேலும் பண்டைய புராணங்கள் இன்றைய வாழ்வுக்கு உதவாது எனும் கருத்து சிலரால் சொல்லப்படுகையில் அன்று கூறிய இட ஒதுக்கீட்டு முறை இன்றைக்கும் பொருந்துமா என்பதுவும் கேள்விக்குள்ளானதே.

    இடஒதுக்கீட்டு முறையில் அடுத்தகட்டம் அல்லது ஒரு முன்னேறிய நிலை என்றால் என்ன ?அல்லது இடஒதுக்கீடு தளர்தப்படுவதற்க்கான சூழ்நிலை எது என்பதுபற்றி யாரேனும் ஒரு முன்வரைவு வைத்திருக்கிறார்களா என்பது பற்றி அறிய ஆவலாக இருக்கிறேன்.

  2. // குறைந்த பட்சம் பெண் தெய்வங்கள் உள்ள கோயில்களிலாவது, பெண்களை மட்டும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் //

    நல்ல ஐடியா. அப்படியே பிள்ளையார் கோவிலில் யானை, அனுமார் கோவிலில் குரங்கு என அர்ச்சகர் ஆக்கிவிடலாம்!

  3. அதிகரித்துவரும் ஆட்கள் பற்றாக்குறை ,மற்றும் அர்ச்சகர்களுகான ஊதியம் போன்ற பல காரணிகளால் பெண் அர்ச்சகர்கள் வருவது காலத்தின் கட்டாயமாகிவிடும் என்பதில் ஐயமேதும் இல்லை.
    அறிவாலயத்திற்கு என்மகன் தான் தலைவனாக வரவேண்டும் என்பவர்கள் அர்ச்சகர்களாக யார் வேண்டுமானாலும் வரலாம் என சட்டம் கொண்டுவருவதுதான் ஏற்க்கதக்கதாக இல்லை.

Leave a Reply

%d bloggers like this: