ஒண்ணுமே புரியலைங்க டாக்டர்..

‘டாக்டர் நமக்கு என்ன மருந்து எழுதியிருக்கார். அதை தான் மருந்துக் கடைக்காரர் கொடுத்தாரா?’ என்பதே தெரியாமல் தான் பல நோயாளிகள் தங்கள் நோய்க்கான மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வருகிறார்கள்.
‘ஆங்கிலம் எழுதப்படிக்க தெரிஞ்சவுங்களுக்குக் கூட புரியக் கூடாது. மருந்து கடைக்காரருக்கு மட்டும் புரிஞ்சா போதும்.’ என்ற பரந்த மனப்பான்மையோடு பொறுப்பாக மருந்து எழுதும் மருத்துவர்கள்;
மற்றவர்களை மதிக்காத, பொது ஒழுங்கற்ற, பொறுப்பற்ற சமூகத்தின் மீதும்; படித்த, படிக்காதவர்களின் பொது சுகாதாரமின்மை குறித்தும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். நியாயந்தானே.
August 7
தனது பெயரை தொடர்ந்து MBBS ல் ஆரம்பித்து MD அதற்கு மேலும் தனது படிப்புகளையும் தனது முகவரி, போன் நம்பர் உட்பட தன்னை தொடர்பு கொள்தவற்கான அனைத்து விளம்பரங்களையும் மிகத் தெளிவாக அச்சிட்டு நோயாளிகளுக்கு எளிதில் புரிவதுபோல் தருகிற மருத்துவர்கள்….
அதே prescription paper ல அந்த அளவுக்குக்கூட வேணாம்.. சுமாரா புரிவதுபோல் மருந்துபேரையும் எழுதுனா.. எவ்வளவு உதவியா இருக்கும் எங்களுக்கு.
‘கிட்னி. லிவர்.. ஹார்ட்.. ரெண்டு வாங்குனா ஒன்னு Free
போலி மருந்து:பிசாசை ஒழிச்சிட்டு, கொள்ளிவாய் பிசாசை குடி வைச்சக் கதை
Prescriptionகளை புரியும் படி எழுத வேண்டும். இல்லையெனில் தட்டச்சு செய்து தரவேண்டும் என்றே நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது!