கண்ணதாசனுக்காக தமிழர்கள் செய்த ‘தியாகம்’
‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு..
ஒன்று மனசாட்சி.. ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா.. ’ – கண்ணதாசன்.
-இந்த ரெண்டுமே எந்தக் கோர்ட்டுலேயும் செல்லாது. கண்டிப்பா தூக்குதான்.
‘நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்
தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா’ – கண்ணதாசன்.
confirm அதேதான். இல்லாததை இருக்கிறதா நினைக்கிற வியாதி.
முத்துனா mental.
எவ்வளவுப் பெரிய குடிகாரனாக இருந்தாலும் நம்பிக்கை வைச்சி மினரல் வாட்டரை குடிச்சா போதையாகிடுமா?
இத தெளிவா புரிஞவரு., அத குழப்பறதுக்குக் காரணம்.. இதுல போதை லாபம். அதில் போதைக்கான பணம் லாபம்.
‘நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா’ – கண்ணதாசன்
நதியுமில்ல.. விதியுமில்ல.. வெய்யிலு.
அது குற்றமல்ல. காரணம்.
அதிகமான வெப்பமும் மழை இல்லாததும்.
குற்றம் காடுகளை சூறையாடியது. குற்றவாளிகள் லாபவெறி கொண்ட நிறுவனங்கள். அவர்களுக்கு ஆதரவான அரசுகள்.
‘பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்’ – கண்ணதாசன்.
மப்புல மட்டையாகி கெடக்கும்போது.. காதுகிட்ட லாரி போனாலே கேக்காது… இதுல பறவை பேசுறது தான் இவருக்கு‘ டான்’னு கேக்கப்போது..
ஏற்கனவே.. சைடிசா.. சாப்பிட்ட காடையும் கவுதாரியும் வயித்துல சமாதியாகி இருக்கு.. ,இதுல அது வேற பேசுனுமாம்? ஆவி அமுதாவல கூட முடியாது. பேச வைக்க.
‘மனதிற்கு மனதை கொஞ்சம்
தூது செல்லுங்கள்’ – கண்ணதாசன்.
மக்களே, கவியரசு எவ்வளவு தெளிவா எழுதியிருக்கார்..அப்படின்னா அவரு எவ்வளவு தெளிவா இருந்திருப்பார்?
இந்த வரிக்கு சரியான விளக்கம் தருபவர்களுக்கு 1000 பொற்காசுகளை, அவர் ரசிகர்கள் தருவார்கள்.
/ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை/-கண்ணதாசன்.
அத ஆண்டவன் தானே சொல்லனும்.
/மனிதனம்மா மயங்குகிறேன் /
full ஆ தண்ணி அடிச்சா.. அப்டிதான்.
/தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே/ – கண்ணதாசன்.
‘வானம் இல்லை.. இல்லாத வானத்தை.. தவறி மண்ணில் விழவைக்கவும் முடியாது’ என்கிற அறிவியல் விளக்கத்தை எல்லாம் தள்ளி வைத்து விட்டு பார்த்தாலும்…
முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்கும எதவாது தொடர்பு இருக்கா?
‘தவறுக்கு’ ‘தவறியும்’ ‘த’ வுக்கு ‘த’ என்பதைத் தவிர எந்த வகையிலும் சம்பந்தமில்லாமல் இருக்கு.
இந்த தொடர்பற்ற உதாரணத்திற்கு ரெம்ப தூரத்து உறவுப்போல் சின்னதாக ஒரு தொடர்பிருந்தால்.. யாராவது சொல்லுங்களேன்.
கண்ணதாசன் வரிகளை வாசித்து கல்லடி கிடைத்தால்; கண்ணதாசனோ, நானோ பொறுப்பல்ல..
ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்
கண்ணதாசன் நன்றாக கவிதை எழுதுபவர் என்று பெற்றவர். நீங்கள் இப்படி நக்கல் அப்படிப்பதைப் பார்க்கும்போது ஒருவேளை இளையராஜாவின் இசை என்பதால் இதுபோன்று கேலித்தனமாக எழுதியிருப்பாரோ என்று தோன்றுகிறது. இளையராஜாவின் பாடல்களில் கவிதைக்குத்தான் எந்த சிறப்புமே கிடையாதே. அதையும் நீங்கள் எழுதியிருக்கலாம்.
“தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே” – தவறு செய்வதற்கு துணிவு பெற்றவன், தான் செய்த அந்தத் தவறை நினைத்து அழ மாட்டான்.‘
“தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே” – தவறு செய்யக் கூடாது என்பதில் உறுதியாய் இருப்பவன், எப்படி வானம் தவறி மண்ணில் விழாதோ, அதுபோலவே தவறு செய்யக் கூடாது என்பதில் உறுதியாய் இருப்பான்.
ஊமை பெண்ணொரு கனவு கண்டாள் என்ற வானம்பாடி பட பாடலில் “குழந்தைகள் எண்ணத்தை யாரறிவார் ,அந்த பரம்பொருள் இதயத்தை யாரறிவார் “என்று கண்ணதாசன் எழுதியிருப்பார்,இப்படியெல்லாம் கற்பனை பட்டுகோட்டைகெல்லாம் வராது,அவரெல்லாம் வெறும் பிரச்சார பீரங்கி.கண்ணதாசனுக்கு அடுத்தது என்றால் மாயவநாதனை சொல்லலாம்.
முதலிலாவது தமிழன், ஆரியன், திராவிடன்,ஆதிக்க சாதி,அவா,இவா என்று சுமாராக பினாத்திகொண்டிருந்தீர்கள்.
தற்பொழுதோ ஒரு திரைப்பட பாடலை எடுத்துகொண்டு சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பிதற்றிகொண்டுள்ளீர்கள்.
தண்ணி அடித்தவனுக்கும் பித்து பிடித்தவனுக்கும் தான் அந்த பாடல் என்பதுபோல உள்ளது உங்களின் உளறல்.
வெயில் அதிகமெனில் அதற்க்கு தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொண்டு தங்களை காத்துகொள்ளவும்.
குறிப்பாக அந்த சமயங்களில் இணையம் பக்கமோ காகிதம் பக்கமோ போகவேண்டாம் நண்பர் திரு.மதிமாறன்.
Reblogged this on vadivelkannu (வடிவேல்கண்ணு).