சத்தியமா நான் தமிழனே இல்லிங்க..
ஜாதி அடிப்படையில் இனவாத அரசியல் பேசுகிற கும்பல், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அம்பேத்கரால் தீர்வு காண முடியாது என்ற தொனியில்,
‘அம்பேத்கர் தமிழரல்ல. மராட்டியர்’ என்று அவதூறு வீசி அவரை புறக்கணித்தபோது, கமுக்கமாக அந்த கும்பலோடு இணைந்து கொண்டு இனவாதிகளைப்போலவே ஈழ விடுதலை, விடுதலை புலி ஆதரவு, மலையாளி எதிர்ப்பு, கன்னடர் எதிர்ப்பு என்று தமிழ் உணர்வோடு முழங்கியவர்கள்;
இப்போது இனவாதத்திற்கு எதிராக சீறுகிறார்கள்.
வைகோ விற்கு கொடுத்த, கொடுக்கிற மரியாதையைக் கூட பலர் டாக்டர் அம்பேத்கருக்கும் தந்தை பெரியாருக்கும் கொடுப்பதில்லை. (தந்தை பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று ஒருவன் சொன்னபோதும்கூட)
தமிழர்கள் உட்பட்ட இந்த மண்ணின் மானங்கெட்டத் தனத்திற்கு எதிராக போராடிய தலைவர் டாக்டர் அம்பேத்கர் மராட்டியர் என்றால்.. நிச்சயம் நானும் மராட்டியன்தான்.
தமிழர்களின் இழிவுக்காக தன் வாழ்நாளையே அர்பணித்த தந்தை பெரியார் கன்னடர் என்றால் நானும் கன்னடன்தான்.
இப்படி சொல்லிக் கொள்வதில் நான் அளவற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்.
தந்தை பெரியாரே தமிழர் இல்லை என்றால்.. சத்தியமா நான் தமிழனே இல்லிங்க..
August 21
காரல் மார்க்ஸ் தமிழரில்லை அதனால் மார்க்சியம் தீர்வாகாது
Should it be mathimaran naidu ??
“ஜாதி அடிப்படையில் இனவாத அரசியல் பேசுகிற கும்பல்”, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,நீங்கள் சாடுவது உங்களை சேர்த்த கும்பலையா? இல்லை தவிர்த்த கும்பலையா ? நண்பரே ?
“தமிழர்கள் உட்பட்ட இந்த மண்ணின் மானங்கெட்டத் தனத்திற்கு எதிராக போராடிய தலைவர் டாக்டர் அம்பேத்கர் மராட்டியர் என்றால்.. நிச்சயம் நானும் மராட்டியன்தான்”.
{இதை குறிப்பாக (மறைந்த) பால் தாக்கரேவின் தொண்டர்களிடம் சொல்லுங்கள்}.
தமிழகத்திலேயே நீங்கள் சொன்ன விசயத்திற்காக பாடுபட்ட பலரை சாதியை காரணம் காட்டி நீங்கள் உதாசீனம் செய்யும் நிலையில் அம்பேத்காரை போற்றிபேசுவது பலருக்கும் நகைப்பையே தரும் நண்பரே !
அந்த நகைப்பு அம்பேத்கார் குறித்ததல்ல தங்களை குறித்ததே.
நாங்க எல்லாம் எப்போவோ மலையாளி ஆயிட்டோம். கலிஞர் புரட்சி தலைவரை என்னிக்கு மலையாளின்னு எள்ளி நகையாடினாரோ அப்ப. அதனால் நீர் எதுவா ஆனா எமக்கென்ன.