கூலிப்படை

‘ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு பிரமுகர்’ போஸ்டர் அடித்து புகழ்பாடி ஆள் பிடித்த அந்தத் தமிழ்தேசிய சங்கி,

இஸ்லாமியரிடம் பழனிபாபா புகழ்பாடி ஆள்பிடித்தார்.

சங்கிகளின் தமிழ் வடிவம்தான் அது. இப்ப நேரடியா இஸ்லாமியர் எதிர்ப்பு பேசுது.

பாஜககாரர்கள் கூட இந்துக்களில் சிலரைதான் சங்கிகளாக உருவாக்கினார்கள்.

இவர் இஸ்லாமியர்கள் சிலரையே சங்கிகளாக உருவாக்கிய ஆபத்தானவர் என்று பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன்.

முஸ்லிம்களில்கூட பெரியார் – திராவிடம் குறித்து இழிவாக பேசும் இஸ்லாமியர் நாம் தமிழர் கும்பலில் உள்ளவர்கள்தான்.

இஸ்லாமிய இயக்கங்கள் இன்று தெரிவிக்கிற எதிர்ப்பை, திராவிடம் – பெரியார் குறித்து, சங்கிகளின் கூலிப்படைத் தலைவன் பேசும்போதே தெரிவித்திருந்தால் இன்று இவ்வளவு சவடால் இருக்காது.

இஸ்லாம், நபிகள் நாயகம், இஸ்லாமியர் குறித்து இழிவாக பேசினால் அதற்கு கடுமையான எதிர்வினையை பெரியாரிஸ்டுகள் எப்போதும் செய்கிறோம்.

அதுபோல் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசினாலும், பெரியார் குறித்து இழிவாக பேசுகிற நபர்களை எப்போதும் எதிர்நிலையில் இஸ்லாமிய இயக்கங்கள் பார்க்க வேண்டும்.

அது பெரியாரிஸ்ட்டுகளை விட முஸ்லிம்களின் அரசியலுக்கு மிக முக்கியமானது. பெரியாருக்கு எதிரான கண்ணோட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரான எச்சரிக்கை மணி.

இழிவான கருத்துக்களைச் சொல்வதின் மூலம் புகழ் அடைகிற சங்கி பாணி கட்சி அது. நம் எதிர்ப்பை தன் புகழுக்கு பயன்படுத்துகிறவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள்.

இவர்களை எதிர்க்கும்போது புறக்கணிக்கும் தன்மையோடு செயல்படுவது சிறந்தது. திக தலைவர் ஆசிரியர் வீரமணி இந்தக் கும்பலை அப்படிதான் கையாள்வார்

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading