அமாவாசையில் மட்டன் பிரியாணி விருந்து-தர்கா இந்துக்கள்

தர்கா இந்து மதத்திற்கு எதிரானதல்ல இஸ்லாத்திற்கு எதிரானது.
இறந்தவர்களை வழிபடுகிற இந்து முறையில் கோடான கோடி கடவுள்களுடன் இஸ்லாமியப் பெரியவர்களையும் சேர்த்துக் கொள்வது எளிய பாட்டாளி இந்துக்களின் இறைவழிபாட்டு முறை.
தர்கா – இந்துக்கள் வழிபடுகிற இஸ்லாமியப் பெரியவர்களின் கல்லறைகள்.
உழைக்கும் இந்து + முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளம்.
தர்கா வழிபாட்டு முறையைத் தகர்த்துவிட்டால் எளிதாக முஸ்லிம்களை தனிமை படுத்திவிடலாம்.
அதை ஒருபோதும் மாரியம்மன் அய்யனார் கருப்புசாமிக்கு ஆடு, கோழிகளைப் பலியிட்டு வழிபடுகிற உழைக்கும் மிகப் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். உதைத்து விரட்டுவார்கள்.
படத்தில் இருப்பவர் பேராசிரியர் ஈஸ்வரராவ். ஆந்திர ஸ்ரீசைத்ன்யா கல்லூரியின் Dean.
கொண்டப்பள்ளி மலையில் Killa fort ல் உள்ள தர்காவிற்கு அமாவாசையை முன்னிட்டு வழிபாட்டிற்காக இவர் தலைமையில் இந்துக்கள் வந்திருந்தார்கள்.
ஒவ்வொரு அமாவாசையிலும் தொடரும் பயணம் அது. (அமாவாசையில் மட்டன் பிரியாணி விருந்து) இவரின் சிறிய பேட்டி விரைவில்.