‘நேத்து வச்ச மீன் குழம்பு..’

கங்கை அமரன் வைரமுத்துவின் ‘அந்தி மழை பொழிகிறது

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.. அவன் குருடன் எப்படிப் பார்ப்பான்? எனக் கேட்கும் அவர்,

அதே பாத்திரத்திற்குக் கண்ணதாசன் எழுதிய ‘அழகே அழகு.. தேவதை’ பாடலை சிலாகிக்கிறார்.

அந்திமழை பாடல் பாத்திரத்தின் குரல் அல்ல. இயக்குநரின் பார்வையாக உதட்டு அசைவு இல்லாமல் ஒலிக்கும். இதில் பொருத்தமில்லாமல் எழுதியது கண்ணதாசன்தான்.

இளையராஜாவும் கங்கை அமரனும் கண்ணதாசனைப் புகழ்வதே வைரமுத்துவை மட்டம் தட்ட வாய்ப்பாகதான்.

கண்ணதாசனின் அழகே அழகு பாடலில் “சிப்பி போல இதழ்கள் இரண்டும் மின்னுகின்றன. சேர்ந்த பல் வரிசையாவும் முல்லை போன்றன” என்று நெற்றிக்கண்ணோடு சேர்ந்து மூன்று கண்களும் தெளிவாகத் தெரிகிற சிவபெருமான் பாடுவது போல் எழுதியிருப்பார்.

‘நெஞ்சில் ஒர் ஆலயம்’ படத்தில், “ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா? ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா?” என்று தன்னை மறுமணம் செய்து கொள்ளச் சொன்ன நோய்வாய்ப்பட்ட கணவனைப் பார்த்து மனைவி பாடுவது போல் உள்ள பாடல்.

ஆனால் கதையின்படி அந்தப் பெண்ணுக்குக் கணவன் இரண்டாவதாக மலர்ந்த மலர். முதல் மலர் டாக்டர்.

16 வயதினிலே படத்தில், கல்வி அறிவற்ற சப்பாணி, “இது வள்ளுவனின் ஏட்டில் உண்டு.. பரம்பரை பாட்டில் உண்டு.. தவறில்லை மகாராணி” என்று பெரிய பண்டிதனைப் போல் பாடியிருப்பார்.

(2007 ஆண்டு சமூக விழிப்புணர்வு இதழில் நான் எழுதியது)

தமிழ் சினிமாவில் எளிய கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமாக ‘நேத்து வச்ச மீன் குழம்பு..’ போல் எளிய வாழ்வியல் உதாரணங்களோடு எழுதியது கங்கை அமரன் மட்டும்தான்.

‘கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணம் ஆகவில்லையே?’ – கன்னி என்றாலே கல்யாணம் ஆகாதவள். அப்புறம் கழுத்த ஏன் பார்க்க வேண்டும்?

க விறகு க வில் உள்ள கவனம் கருத்தில் இல்லை.

வைரமுத்துவின் இந்தப் பாடலை கங்கை அமரன் குறிப்பிட்டிருக்கலாம்

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading