டீக் கடை, பூங்கா, ரயில், fast food கடைகள்

காலையில park ல walking முடிச்சிட்டு ஒரு ஓரமா உட்கார்திருந்தேன்.
பக்கத்தில் வந்து உட்கார்ந்த 35 வயது மதிக்கத் தக்க ஒருவர், தன் செல்போனில் திமுகவைத் திட்டிப் பேசியவர்களின் youtube பேச்சுகளைச் சத்தமாக வைத்தார்.
நாம சும்மா இருப்பமா? பதிலுக்கு திமுக சாதனைகளைச் சொல்லும் பேச்சை சத்தமாக வைத்தோம். நாம யாருக்கிட்ட கடன் வாங்கனும். நம்ம பேச்சைத்தான்.
இதுபோல் அடிக்கடி பல வேடிக்கையானவர்களைப் பொதுவெளியில் சந்திக்கிறேன்.
என்னை யாரென்றே தெரியாததுபோல், அவர்கள் தங்களுக்குள் என் அரசியலுக்கு எதிராக எனக்குக் கேட்க வேண்டும் என உரத்துப் பேசுவதும்,
பதிலுக்கு நானும் மிஸ்டர் பொதுஜனமாகவே அவசரமாக யாராவது நண்பருக்கு போன் பண்ணி அவரிடம் பேசுவதுபோல், அவர்களுக்கு உரைப்பதுபோன்று உரத்துப் பேசிவிட்டு தான் வருகிறேன்.
BPயை குறைக்க parkக்கு போனால் BPயைஏத்தி உடுறாங்க. பதிலுக்கு அவங்கள நாம சும்மா அனுப்பலமா?
ஆமாம், மேடைகளைவிட பலமான பிரச்சார களங்கள் டீக் கடை, பூங்கா, ரயில், fast food கடைகள்தான்.